இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Thursday, 28 June 2012

சித்த மருத்துவ பழமொழிகள்-1

சித்த மருத்துவ பழமொழிகள்

தமிழர் மருத்துவமான சித்த மருத்துவத்தில் உள்ள கருத்துக்களை மக்களின் பயன்பாட்டிற்கு எளிதில் கொண்டு செல்ல சித்தர்கள் எளிய நடையில் மருத்துவ பழமொழிகளை உருவாக்கினர்

.

மருத்துவம் என்னும் கலையை மக்களுக்கான அறிவியலாக மாற்றவும் விரும்பினர் அவ்வழியில் தோன்றியதுதான் மருத்துவ பழமொழிகள். ஆனால் காலப்போக்கில் அவற்றின் அர்த்தங்கள் கற்பிக்கப்படாமல் வெறும் சிலேடைப்பேச்சுக்களாக வெறும் வார்த்தைகள் அளவில் இருந்து   வருகின்றன.


இவைகள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய மருத்துவ இரகசியங்களை உள்ள டக்கம் கொண்டவைகளாகும்.இவைகளை உலகெங்கும் வாழும் நம் தமிழ் மக்கள் அறிந்து கொண்டு பயன்பெற எமது "சித்தர் பிரபஞ்சம்"இன்றைய  நடைமுறை   பயன்பாட்டில் உள்ள அனுபவ முறைகளையும் தொகுத்து வெளியிடுகின்றது.


"வெட்டை முற்றினால் கட்டை"என கேள்விப்பட்டு இருப்பீர்கள் 


அதாவது "வெள்ளை வெட்டை"(V.D)நோய் முற்றினால் இறப்பு நேரிடும் பின் சுடுகாட்டில் கட்டையில் (விறகு) வைத்து எரிப்பார்கள் என விளக்கம் கூறுவர்.உண்மை அதுவல்ல.

முதலில் மேற்கண்ட பழமொழியே அரைகுறை ஆகும்.முழுமையான பழமொழி இதுதான்,

                                                                                                                                                                  

மேகம் முற்றினால் வெள்ளை,                                                                 வெள்ளை முற்றினால் வெட்டை,                                         வெட்டை முற்றினால் கட்டை.


மேகம் என்றால் சூடு, உஷ்ணம் என்று பொருள்.  உடலில் உஷ்ணம் அதிகரித்தால்  பெண்களுக்கு வெள்ளைப்படுதல் தோன்றும்.இந்நிலை நீடித்தால் வெள்ளை,வெட்டையாக மாறும். இந்நிலை நீடித்தால் உடல் மெலிந்து வேறு பல நோய்கள் தோன்றி இறக்கும் நிலை உருவாகும்

.

சரி இதற்கு பழமொழியில் உள்ள மருத்துவம் எது என்றால்,இதில் உள்ள கடைசி வார்த்தைதான் மருந்து,அதாவது கட்டை இது சந்தனக்கட்டையை  குறிப்பதாகும்.இன்று சராசரியாக அதிகமாக பெண்களிடம் காணப்படும் நோய்களில் இதுவும் ஒன்று ஆனால் பெண்கள் வெட்கம்,கூச்சம் காரண மாக இதை வெளியில் (அம்மாவிடம் கூட)சொல்ல தயங்குகின்றார்கள் 


இதை ஆரம்ப நிலையிலேயே சுலபமாக குணப்படுத்திக்கொள்ளலாம் சித்த மருத்துவ முறையில் ஏராளமான மருந்துகள் உள்ளன .முற்றிய நிலை வெள்ளை வெட்டைக்கு தரமான சந்தன கட்டையை சிறிது பன்னீர் விட்டு அம்மியில் தேய்க்க தேய்க்க விழுது போல் வரும்.அதில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து ஒரிஜினல் சந்தன அத்தர் மூன்று சொட்டு விட்டு ஒரு தம்ளர் பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும் 


இப்படி மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட அதிக நாள்பட்ட வெள்ளை வெட்டை நோய் குணமாகும் இது பாரம்பரிய சித்த மருத்துவர்கள் சிலர் கையாண்டு வரும் இரகசிய முறையாகும் நன்றி!


இமயகிரி சித்தர் 

www.siddharprapanjam.org            

          

No comments:

பதிவுகளின் வகைகள்