இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Sunday, 19 January 2014

சஞ்சீவி மலை ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமம் பூமி பூஜை அழைப்பிதழ்

சஞ்சீவி மலை ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமம் பூமி பூஜை அழைப்பிதழ்


சஞ்சீவி மலை ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமம் பூமி பூஜை அழைப்பிதழ்


அன்புடையீர் !
நிகழும் மங்களகரமான விஜய வருடம் தை மாதம் 12 -ம் தேதி ( 25-01-2014 ) சனிக்கிழமை ,விசாக நட்சத்திரமும்,சித்த யோகமும் கூடிய சுபயோக சுப தினத்தில் அன்று காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் ஆச்சாரிய குடில் வாஸ்து பூஜை சீரும் சிறப்புமாக நடை பெற உள்ளதால் பக்தர்களும்அன்பர்களும் வருகை தந்து குருவரு ளும்திருவருளும்,சித்தர்கள் ஆசியும் பெற அன்புடன் அழைக்கின்றோம். 

ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை [சஞ்சீவி மலை] மேல் உள்ள வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒடுக்கம் தலச்சோலையில் வற்றாத ஜீவநதியாக தவழ்ந்தோடிவரும் சொர்ணதீர்த்தக் கரையில் அமைந்துள்ளது.

நமது ஆஸ்ரமத்தில் கட்டமைப்பை விரிவு படுத்தவும், இப்பிரபஞ்சத்தின் ஆற்றலை பரிபூரணமாக பெற பிரமீடு தியானக்குடில்,ஆச்சாரியக் குடில்,அன்னதானக் கூடம் போன்றவைகள் அமைய உள்ளது.

ஆகவே பக்தர்களும்,அன்பர்களும்,ஆன்மீகச் சான்றோர்களும் இந்த அரிய ஆன்மீக வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள, ஸ்ரீ அகத்தியர் பெருமானின் ஆஸ்ரமத்திற்குச் செய்யும் தொண்டாக தங்களால் முடிந்த கைங்கரியம் செய்து இறைவனின் திருவருளும், சித்தர்களின் ஆசியும்,ஆச்சாரியரின் குருவருளும், பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுகின்றோம்.

குறிப்பு : நமது "சித்தர் வேதா குருகுலம்" மூலமாக சித்தர் கலைகளின் உயர்நிலைப் பயிற்சிகள் ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமத்தில் இறைவன் அருளுடன்,சித்தர்கள் ஆசியுடன் வழங்கப்பட உள்ளது.மேலும் அகத்தியர் பெருமான் தனது உத்தம சீடராகிய புலஸ்தியருடன் தவம் செய்து வாழ்ந்த வனம் இங்குதான்  அமைந்துள்ளது.


நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி -T.N
cell : 9865430235 - 8695455549 


Wednesday, 15 January 2014

தெய்வீக மாந்திரீகப் பயிற்சி [ நன்மைக்கு மட்டும் ] - Manthrigam Training

தெய்வீக மாந்திரீகப் பயிற்சி [ நன்மைக்கு மட்டும் ]

தெய்வீக மாந்திரீகப் பயிற்சி [ நன்மைக்கு மட்டும் ] - Manthrigam Training


ஆண் வசியம்,பெண் வசியம், கணவன் மனைவி வசியம்,தொழில் வசியம், வசிய மை, எதிரிகளால் ஏவப்படும் ஏவல் பில்லி சூன்யம் இவைகள் நீங்க, நவகிரக வினைகள் நீங்க, மந்திரம், எந்திரம், அஞ்சனம், தேவதைகள் சித்தி, மூலிகை பிரயோகம், கர்ம வினைகள் நீங்க,பிறவி தோஷம் நீங்க, மற்றும் வசியம்,மோகனம்,தம்பனம், ஆகர்ஷணம்,வித்வேஷணம், போன்ற அஷ்டகர்மப்பிரயோகம் இரகசிய செய்முறை விளக்கங்கள்.மேலும் பல அரிய இரகசியங்கள் பயிற்றுவிக்கப் படுகின்றது.

பல தலைமுறைகளாக கையாண்டு வரும் அனுபவ முறை இரகசிய செய்முறைப் பயிற்சிகள்.[ ஓலைச்சுவடி அனுபவ செய்முறைகள் ]

1 – தெய்வீக மாந்திரீகம் - இளநிலைப் பயிற்சி

2 – தெய்வீக மாந்திரீகம் – முதுநிலைப் பயிற்சி

குருகுல முறையில் குரு சீட வழியில் தீட்சை மற்றும் பயிற்சி அளிக்கப் படுகின்றது.


நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் 
ஸ்ரீ சற்குரு இராஜயோகத்திருமடம் 
திருவானைக்கோவில் - p.o
திருச்சி –5 - T.N
cell : 09865430235 – 08695455549Sunday, 5 January 2014

இந்திரகோபம் வசியம், அதிசய ஜாலம் - Inthirakobam Vasiyam

இந்திரகோபம் வசியம், அதிசய ஜாலம் - Inthirakobam Vasiyam 


நாம் வாழும் பூமியில், இயற்கையில்  ஏராளமான அதிசயங்கள் அமைந்துள்ளது. குறிப்பாக மூலிகைகள், பறவைகள், பூச்சிகள் மற்றும் விலங்குகளிடம் ஏராளமான மர்மமான இரகசியங்கள் அடங்கி யுள்ளன. இவைகளை சித்தர்கள் தங்களின் ஞானத்தால் கண்டறிந்து அனுபவத்தில் கையாண்டு செயற்கரிய செயல்களை சாதித்துள்ளனர்.

அவ்வகை இனங்களில் ஒன்றுதான் இந்திரகோபம் என்னும் அதிசய பூச்சி வகையாகும்.சித்தர் நூல்களில் வசியம் [வசிய மருந்து]மற்றும் அஞ்சனங்கள் [வசிய மை] போன்றவற்றில் பயன்படும் மூலப் பொருள்களில் ஒன்றுதான் இந்திரகோபம் ஆகும்.இதன் உடலின் மேற்புறத்தில் வெல்வெட் பட்டுதுணி போல் சிவப்பு நிறத்தில் இருக்கும்.இவை மழை காலங்களில் பகலில் செம்மண் பூமியில் உலாவும்.இந்த நேரத்தில் மட்டுமே சேகரிக்க முடியும்.

புதையல் காணும் மை செய்முறை :- ஓலைச்சுவடி முறைகள் 

இந்திரகோபம், பாதாள கருடனும், பாதாள மூலியும், பச்சை கற்ப்பூரம் கூட்டி கருக்கி செப்புச் சிமிளில் அடைத்துக் கொண்டு புத்துத்தேனில் குழைத்துப் போட்டால்  பூமியில் [பாதாளத்தில்] உள்ளதெல்லாம் தெரியும். நல்லெண்ணை யில் குழைத்துப் போட்டால் களவு போன பொருள்களை கண்டு பிடிக்கலாம்.

இந்திர கோபமும்,ஓரிதழ் தாமரையும், சிறிது பச்சை கற்பூரம் கூட்டி சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு நெற்றியில் பொட்டு போல் வைத்துக் கொண்டு செல்ல பிசாசுகள் அலறி ஓடும்.   

இதன் வீடியோ இந்த லின்க்கில் உள்ளது :


நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி 
cell : 9865430235 – 8695455549

     பதிவுகளின் வகைகள்