இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Saturday, 23 May 2015

ஸ்ரீ சற்குரு நாத மாமுனிவரின் 100,ம் ஆண்டு மகா குருபூஜை பெருவிழா சிறப்பு மலர் வெளியீடு

ஸ்ரீ சற்குரு நாத மாமுனிவரின் 100,ம் ஆண்டு மகா குருபூஜை பெருவிழா அழைப்பிதழ் - விழா சிறப்பு மலர் வெளியீடுஅன்புடையீர் !

ஸ்ரீ அகத்தியர் மாமுனிவரின் மரபில் 9,வது முனிவராக அவதரித்த ஸ்ரீ பரபிரம்மா  சற்குரு நாத மாமுனிவரின் 100,ம் ஆண்டு மகா குரு பூஜை பெருவிழா தமிழகத்தின் திருச்சி மாநகரத்தில் திருவானைக்கோவில் தென்புறம்  ரயில்வே மேம்பாலத்தின் மேற்கு புறத்தில் அமைந்துள்ள ஸ்ரீ  சற்குரு இராஜயோகத் திருமடத்தில்,மன்மத ஆண்டு வைகாசி மாதம் 24,ம் நாள் [ 7 - 6 - 2015 ,ஞாயிற்றுக்கிழமை ] மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.


6 - 6 - 2015,சனிக்கிழமை அன்று மாலை 5, மணி அளவில் ஸ்ரீ பரப்ரம்மா சற்குரு சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு 100,ம் ஆண்டு மகா குருபூஜை விழா சிறப்பு மலர் வெளியீடு நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

விழா சிறப்பு மலர் வெளியிடுபவர் : மெய்திருஇமயகிரி சித்தர்      [ Dr.S.நாகராஜ்  R.M.P., D.S.M.S., பொதுச்செயலாளர் - இந்திய பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மற்றும் முப்பு ஆய்வாளர்கள் கூட்டமைப்பு ]

விழா சிறப்பு மலர் பெறுபவர் : திரு சற்குரு மல்லையா சாமி அவர்கள் - எடப்பள்ளி ஆஷ்ரமம் 7 - 6 - 2015 , ஞாயிறு காலை 10,மணி முதல் 12, மணி வரை சித்தி விநாயகப் பெருமானுக்கு 16,வகை அபிஷேக ஆராதனையும்,ஸ்ரீ பரபிரம்மா சற்குரு நாதர் 48,நாட்கள் தவம் இயற்றிய நிருவிகற்ப சமாதி குகையில் அர்ச்சனையும், ஆராதனையும் நடைபெறும். 

மதியம் 1,மணி முதல் 4,மணி வரை அடியார்களுக்கும் பக்தர்களுக்கும் உணவு வழங்குதல் நடைபெறும்.,


குறிப்பு : ஸ்ரீ பரபிரம்மா சற்குரு நாதர் 48,நாட்கள் தவம் இயற்றிய நிருவிகற்ப சமாதி குகை இன்று ஒருநாள் மட்டும் பக்தர்களின் பார்வைக்கு திறக்கப்பட்டு பூஜிக்கப்படும்.என்பது குறிப்பிடத்தக்கது.அருள்நெறி சார்ந்த அன்பு பெருமக்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து  ஸ்ரீ பரப்ரம்மா சற்குரு சுவாமிகளின் திருவருட்பேற்றினைப் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டுகிறோம்.


நன்றி !
மெய்திருஇமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் 
சிவராம் நகர், திருவானைக்கோவில்
திருச்சி - 620005
siddharprapanjam@gmail.com
mobile : 9865430235 - 9095590855  


Sunday, 3 May 2015

சித்தர் பொக்கிஷம் தொடர் - அதிசய சஞ்சீவி மூலிகை இரகசியம் - பாகம் 1 Sanjevi Herbal

சித்தர் பொக்கிஷம் தொடர் - அதிசய சஞ்சீவி மூலிகை இரகசியம் - பாகம் 1


சித்தர் பொக்கிஷம் தொடர் - அதிசய சஞ்சீவி மூலிகை இரகசியம் - பாகம் 1


இனிய நண்பர்களே !

நம் தமிழகத்தில் தோன்றிய தமிழ் சித்தர்கள் தங்களின் மெய்ஞானத்தால் கண்டறிந்த பிரபஞ்ச இரகசியங்கள் ஏராளம். இவைகளை மனிதகுலம் பயன்பெறும் வகையில் தங்களின் இணக்கமான சீடர்களுக்கு கற்பித்தும்,ஓலைச்சுவடிகளிலும் பல லட்சம் பாடல்கள் வடிவில் மறைபொருளாக பதிவு செய்துள்ளனர்.

சித்தர்களின் பாடல்களில் உள்ள மறைபொருள் இரகசியங்களின் விளக்கங்களையும்,எமது சித்தர் நிலை மெய்குருவிடம் தொண்டுகள் செய்து பெற்ற அரிய இரகசியங்களையும் லஞ்சம் என்ற சமுதாய விழிப்புணர்வு மாத இதழில் சித்தர் பொக்கிஷம் என்ற புதிய பகுதியில் ஒவ்வொரு மாதமும் வெவேறு தலைப்புகளில் தொடராக பதிவு செய்ய உள்ளேன்.

இம்மாத தலைப்பு : அதிசய சஞ்சீவி மூலிகை இரகசியம் - பாகம் 1

[ சஞ்சீவி மூலிகை பற்றி அனைவரும் அறிந்திராத அரிய விளக்கம் ]


கரூர்,ஈரோடு,நாமக்கல்,சேலம்,திருச்சி,திண்டுக்கல்,தஞ்சை,கோவை,மதுரை,தேனி,பெரியகுளம்,கம்பம்திருநெல்வேலி,சென்னை,பெங்களூர்,சிங்கபூர் ஆகிய அனைத்து ஊர்களிலும் கடைகளில் தற்போது விற்பனையாகின்றது. 

விலை ரூ - 10 -/   மட்டும். அனைவரும் படித்து பயன்பெறலாம்.


நன்றி !
மெய்திரு,இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம்
சிவராம் நகர், திருவானைக் கோவில் - P.O
திருச்சி - 620005
www.siddharprapanjam.org
siddharprapanjam@gmail.com
cell :9865430235 - 9095590855     


பதிவுகளின் வகைகள்