இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Wednesday, 26 November 2014

பித்தப்பை கல் குணமாக்கும் சித்த மருத்துவம் - Gallstone cure

பித்தப்பை கல் குணமாக்கும் சித்த மருத்துவம் -  Gallstone  cure
பித்தப்பை கற்கள்


பித்தப்பை கல் குணமாக்கும் சித்த மருத்துவம் -  Gallstone  cure


பித்தப்பை

பித்தப்பை உடலின் ஜீரண மண்டலத்தின் ஒரு உறுப்பு ஆகும். பேரிக்காய் போன்றது.  7 – 10 செ.மீ நீளமுள்ள, கல்லீரலின் வலதுபக்கத்தின்  கீழே தொங்கும் பை ஆகும்.


பித்தப்பை பித்த நீரை சேமித்து வைக்கிறது. பித்த நீரிலிருக்கும் தண்ணீர், 90 சதவிகிதம் பித்தப்பையிலிருந்து ரத்தத்தில் உறிஞ்சப்பட்டுவிடுகிறது.    இதனால்,  மீந்த பித்த நீர், கெட்டியாக இருக்கும்.பித்த நீர், கெட்டியான, காரத்தன்மை  உடைய திரவம். இது கல்லீரலால் சுரக்கப்படுகிறது.


பித்த நீரின் உபயோகம்

பித்த நீர் உடலின் சில நச்சு கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.
கொழுப்பு சத்துக்களை உடல் ஜீரணிக்க உதவுகிறது.
தவிர, கொழுப்பில் கரையும் விடமின்களை உடல் ஏற்றுக்கொள்ள உதவுகிறது.
முன்சிறுகுடல் ஏற்படும் அலை போன்ற தசை அசைவுகளை ஊக்குவிக்கிறது.
பித்த நீர், பெருங்குடலை தூண்டி, அதிக தண்ணீரை சுரக்க வைக்கிறது. இதனால் உணவுக் கூழை வெளியே தள்ளுகிறது, சுலபமாகிறது.


பித்த நீரின் வர்ணம், மஞ்சள், பச்சை, பழுப்பு நிறமாக மாறிவரும்.காரணம் எந்த வகை பித்த உப்புகள் அதிகமாக இருக்கின்றதோ, அதன் படி பித்த நீரின் நிறம் இருக்கும். பொதுவாக பைலீரூபின் ஆரஞ்ச் அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். பைலிவெர்டின் பச்சை நிறத்தில் இருக்கும்.


கல்லீரலிலிருந்து பித்த நீர், கல்லீரலின் வலது, இடது குழாய்கள் மூலம் வெளிவரும். இந்த இருகுழாய்களும் கல்லீரல் குழாயாக இணைந்து விடும். இந்த கல்லீரல் குழாய், பித்தப்பையிலிருந்து வரும் சிஸ்டிக் குழாயுடன்  சேர்ந்து பொதுவான பித்த நீர் குழாயாகும். கோலிசிஸ்டோகினின் என்ற ஹார்மோனின் உதவி, உந்துதலுடன் முன்சிறுகுடலை அடைகிறது.


முன்சிறுகுடலில் உணவு வந்தடையும் போது இந்த . கோலிசிஸ்டோகினின் ஹார்மோனை சுரக்கும். உணவு முன்சிறுகுடலை அடைந்தவுடன், பித்தப்பைக்கு செய்தி வரும். அது சுருங்கி ஒரு வால்வை திறந்து, சிறுகுடலில் பித்த நீரை கொட்டும். உணவும் பித்த நீர் கலந்து, ஜீரணமாகும். மீந்த பித்த நீர் உப்புக்கள் குடல் சுவர்களால் உறிஞ்சப்பட்டு மறுபடி சுழற்சியாக திரும்ப திரும்ப உபயோகப்படும் இந்த சுழற்சி ஒரு நாளில் உடலில் 10-12 தடவை நடக்கும்.


பித்தப்பை கற்கள் தோன்றுவதற்கான காரணங்கள்

பித்தப்பை கற்கள் ஏன் ஏற்படுகின்றன என்பது பற்றி துல்லியமாகக் கூறமுடியாத போதும் யார் யாருக்கு வரக் கூடும் என்பதை ஆய்வுகள் சில காரணங்களைத் தெரியப்படுத்துகின்றன.


பொதுவாக ஆண்களை விடப் பெண்கள் அதிகமாகப் பாதிப்படைகிறார்கள். வயதில் மூத்தவர்கள் அதாவது 60 வயதைத் தாண்டியவர்களில் அதிகம் ஏற்படுகிறது என சொல்லப்பட்ட போதும் இளம்  வயதினரிடையேயும் தோன்றலாம்.


ஒருவரது பித்த நீரில் கொலஸ்டரோல் அளவானது வழமையை விட அதிகம் இருந்தால் பித்தக் கற்கள் தோன்றலாம். பொதுவாக ஈரலானது நமது குருதியில் உள்ள கொலஸ்டரோலை உறிஞ்சி பித்த நீர் ஊடாக வெளியேற்று கிறது. அவ்வாறு பித்தத்தில் கலக்கும் கொலஸ்டரோலின் அளவு வழமை போலிருந்தால் அது பித்த நீரில் கரைந்து சுலபமாக வெளியேறிவிடும். ஆனால் அதன் செறிவு அதிகமாக இருந்தால் கட்டிபட்டு கற்களாக மாறுகிறது.


உணவு முறையைப் பொறுத்த வரையில் நார்ப்பொருள் குறைந்த,  கொழும்பும் கொலஸ்டரோலும் அதிகமுள்ள உணவு வகைகளை உண்பவர்களிடையே தோன்றுவதற்கான சாத்தியம் அதிகமாகும்.


நீரிழிவு நோய் உள்ளவர்களிடையேயும் அதிகமாகக் காண்கிறோம். அதே போல ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடையேயும் அதிகம் காணப் படுகிறது. பெண்களின் கர்ப்பகாலத்திலும் சாத்தியம் அதிகமாகும்.


நோய்கள் காரணமாகவோ அல்லது உடல் எடை குறைப்பு முயற்சியின் போது திடீரென அதிகளவு எடையைக் குறையும் போதும் தோன்றலாம்.


உணவுகளை வேளை தவறாமல் உண்ணுங்கள். நீண்ட நேரம் பட்டினி கிடப்பதும், உணவுகளை சில வேளைகளில் தவிர்ப்பதும் உபவாசம் இருப்பதும் கற்கள் தோன்றுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
 

பித்தப்பை கல் அறிகுறிகள்

பித்தப்பை கற்களுக்கு அறிகுறிகள் பல வருடங்கள் தெரியாமலே போகலாம். பலருக்கு பித்தப்பையில் கல் உருவாகியிருக்கும். ஆனால், எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. வேறு காரணத்துக்காக பரிசோதனை செய்யும்போதுதான் பித்தப்பையில் கல் இருப்பது தெரியவரும். பித்தப்பை கல், பித்தப்பை குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதுதான் அதன் பாதிப்புகள் வெளிப்படும். 


அறிகுறிகள் வலது பக்கம் மேல் வயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்படும். இந்த வலி, சில நிமிடங்கள் முதல், நான்கு மணி நேரம் கூட நீடிக்கும். பித்தநீர் குழாயை பெரிதாக அடைக்கும் போது வலி, பிரட்டல், வாந்தி ஏற்படும். இந்த வலி மிகவும் அதிகமாக இருக்கும். மேல் வயிற்றில் ஏற்படும். உணவு உண்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு இந்த வலி தாக்கலாம். பித்த நீர் அடைப்பட்டால், பேக்டீரியா உருவாகி பெருகி விடும். குழாய்களில் நோய் தொற்று ஏற்படும். கல்லீரலில் கட்டிகள், பிளவைகள் உண்டாகும். ஜுரம், குளிர் சுரம், காமாலை ஏற்படலாம். தொடர்ந்து  வலி, ஜுரம், தோள்பட்டை வலி இவை ஏற்படும்.


பித்தப்பை  கற்களால் எந்த அறிகுறியும் தென்படாத வரை, அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருக்கலாம். அறுவை சிகிச்சை மூலம் பித்தபையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரக் கோளறு, குடற்புண் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.


சித்த மருத்துவத்தில் சித்தர் நூல்களில் பித்தப்பை கற்களை குணப்படுத்தும் மருந்துகள் கூறப்பட வில்லை.மேலும் சித்த மருத்துவர்கள் பலர் பித்தப்பை கல் என்பதை சிறுநீரக கல் போன்ற வகையினை சார்ந்தது என நினைத்து சிறுநீரக கற்களை கரைக்கும் மருந்துகளான சிருநெருஞ்சில், சிறுபீளை, வெங்காரபற்பம், வெடியுப்பு பற்பம், கல்கரைச்சி மாத்திரை போன்றவைகளை கொடுத்து பித்தப்பை கல் குணமாகாமல் ஏமாற்றம் அடைகின்றனர்.


உண்மையில் பித்தப்பை கற்களை கரைக்கும் மருந்துகள் என்பது வேறு வகையானவை ஆகும். பித்தப்பை கற்களை கரைப்பதற்கான மருந்துகளை நமது சித்தர் வேதா குருகுலத்தில் எமது பிரத்யேக ஓலைச்சுவடிகள் மூலம் பல வருடங்களாக ஆய்வுகள் செய்து மூலிகைகள் மற்றும் இயற்கையான தாதுப்பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்ட மருந்துகள் மூலமாக எந்தவித பக்க விளைவுகள் இன்றி முழுமையாக குணப்படுத்துகின்றோம்.இந்த சிகிச்சை முறையில் பித்தப்பை கற்கள் கரைந்து வெளியேறுவதை நீங்களே நேரில் காணலாம்.மேலும் நமது சிகிச்சையில் பலர் குணமடைந்துள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.  முன் அனுமதி பெற்று வரவும்

நன்றி !

மெய்திரு, இமயகிரி சித்தர்
சித்தர் வேதா குருகுலம்
22, புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் P.O – திருச்சி D.T - 620006
தமிழ்நாடு – இந்தியா

அகத்தியர் குருகுலம், யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம் , சிறுமலை புதூர்
திண்டுக்கல் – D.T - 624003
தமிழ்நாடு – இந்தியா
செல் :98654302359095590855 – 9655688786 - 8695455549
பதிவுகளின் வகைகள்