இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Monday 10 December 2012

நத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1-Naththai choori herbal

நத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1

நத்தைச் சூரி - பெண்- இனம் -கொல்லிமலை





ஒரிஜினல் நத்தைச் சூரி




நத்தைசூரி இது ஒரு மூலிகை.இதனை எப்படி கண்டுபிடிப்பது இதன் உண்மையான பெயர் என்ன?இதற்கு தாருணி,குழிமிடான் என பெயர்கள் இருக்கு...சிரியநங்கை என்ற மூலிக்கும் தாருணி என்ற பெயர் இருக்கு.இதில் தான் குழப்பம்.இதனை சித்தர்கள் எது நத்தைசூரி என்று கூறினார்கள் "மச்சமுனி" இணைய தளம்( தாதார )என்று ஒரு செடி அதனை நத்தைசூரி என்று நிருபணம் செய்து புகை படம் காட்டிஇருகாங்க.இமயகிரி அய்யா நத்தைசூரி என்று "சித்தர் பிரபஞ்சம்"இணைய தளத்தில் (நீங்கள்) வேறு புகைப்படம் காட்டி இருக்கின்றீர்கள்.மேலும் "சித்தர் களஞ்சியம்"இணையத்தளம் அதில் நத்தைசூரி என்று வேறு புகைப்படம் இருக்கு இதனை தெளிவாகக் கூறும்படி வேண்டுகிறேன்...ஏன் என்றால் காயகல்பம் சாப்பிட முடியாதவர்கள் நத்தைசூரியை சாப்பிடட்டும்.எனவே அய்யா நீங்கள் மனம் கோணாமல் இதனை கூறும்படி வேண்டுகிறேன்.

நத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1

ஜீவ ராசு என்ற அன்பர் நமது "சித்தர் பிரபஞ்சம்"தளத்தில் மேற்க்கண்ட விபரங்கள் பதிவு செய்து "நத்தைச் சூரி"மூலிகையினைப் பற்றி  விளக்கங்கள் கேட்டிருந்தார்.முன்பு ஒரு பதிவில் மதுரை யிலிருந்து - .G.P கௌதம் என்ற அன்பரும் இதனைப் பற்றி கேட்டிருந்தார்.
       
சித்தர்கள் கண்டறிந்த அதிசய மூலிகைகளில் ஒன்றுதான் நத்தைச்சூரி ஆகும்.இம் மூலிகை மருத்துவப் பயன்பாட்டிற்கும்,அதிசய ஜாலங்கள்,மற்றும் சித்துக்கள் செய்வதற்கு உதவும் மூலிகையாகும்.

நத்தைச் சூரியின் வேறு பெயர்கள் :-
கடுகம், குழி மீட்டான், சூரி,தாருணி, தொலியா கரம்பை, நத்தை சுண்டி 

பொதுவாக இம் மூலிகையின் மகத்துவம் பற்றி கூறும் போது "எதைச் சொன்னாலும் செய்யும் நத்தைச்சூரி"எனும் அடை மொழி இதற்கு உண்டு.இம் மூலிகையின் இரகசிய செய்முறை விளக்கங்கள் குரு சீட பாரம்பரிய முறையில் தொன்று தொட்டு வந்துள்ளது.

நத்தைச்சூரி மூலிகையில் இரண்டு வகை உண்டு. ஒன்று "நத்தைச்சூரி" மற்றொன்று "நத்தை வராளி"இம்மூலிகை இரண்டிற்கும் வெவ்வேறு குணம் உண்டு.இதனைப் பரீட்சை செய்வது எப்படி என்றால் நத்தைச்சூரி மூலிகையின் சாற்றைப் பிழிந்து ஒரு நத்தையின் மேல் ஊற்றினால் நத்தையின் ஓடு சூரையிட்டது போல் தெறித்து உடைந்து விடும்.நத்தை வராளியின் சாற்றைப் பிழிந்து நத்தையின் மேல் ஊற்றினால் நத்தையின் ஓடு மட்டும் கழன்று விழும்.

மேற்கண்ட பரீட்சை இல்லாமல் இம்மூலிகைகளை நத்தையின் அருகில் காற்று வாட்டத்தில் வைத்தாலும் நத்தையின் ஓடு கழன்று,தெறித்து விடும்.இம் மூலிகையில் ஆண்,பெண் இனமும் உண்டு.இப் பரீட்சைகள்தான் இம் மூலிகையின் உண்மைத் தன்மையை கண்டறிய உதவுபவை.

கடந்த  சித்ரா பெளர்ணமி அன்று கொல்லிமலை யில் அதிசய மூலிகைகள் கண்டறியும் சிறப்பு பயிற்சிக்கு சித்த மருத்துவர்கள்,ஆய்வாளர்கள் -60,பேர்களை  அழைத்துச் சென்று இருந்தோம்.அதில் பல்வேறு அதிசய மூலிகைகளை கண்டறிந்து வீடியோ பதிவுகள் செய்து 3-பாகங்களாக வெளியிட்டுள் ளோம்.அதில் ஓரிடத்தில் "நத்தைச் சூரி - பெண்" இனம் ஒன்றைக்கண்டோம்.  அந்த மூலிகையைச் சுற்றி ஏராளமான நத்தை ஓடுகள் சிதறிக் கிடந்தன.அதைச்சுற்றிலும் உள்ள வேறு மூலிகைகளில் நத்தை ஓடுகள் இல்லை.அதனை அனைவரும் அதிசயமாகக் கண்டனர்.
அந்த மூலிகை மேலே உள்ள படத்தில் உள்ளது.
    
நத்தையின் ஓடுகளை சூரையிடுவதால் நத்தைச்சூரி என்று பெயர் வரக்காரணம் என கூறுவர்.எனது குரு வழி உபதேசத்தில் ஆசான் வேறு ஒரு விளக்கம் அளித்திருந்தார்.சூரி என்பது கத்தி என அர்த்தமாகும்."சித்தர் பிரபஞ்சம்"தளத்தில் முந்தைய ஒரு பதிவில் "ஒரிஜினல் நத்தைச் சூரி "என்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தோம்.இந்த மூலிகையின் இலைகளின் நடுவே காலி பிளவர் போன்று பூ மொட்டு இருக்கும்.இந்த மொட்டில் சூரி எனப்படும் கத்தியைப் போன்று நிறைய முட்கள் இருக்கின்றது.நமது உள்ளங்கையின் பின்புறம் திருப்பி இந்த பூவின் மொட்டு மீது வைக்க நிறைய ஊசிகள் குத்துவது போல் இருக்கும்.இந்த நத்தைச் சூரியை ஒரு சிலர் மாந்திரீகம்,ஜாலங்களுக்கு இரகசியமாய்க் கையாண்டு வருகின்றனர்.

நத்தைச்சூரி மூலிகையால் மாயாஜால வித்தை  செய்யும் முறை

ஆதி வாரம்  சுவாதி நட்சத்திரம்  கும்ப லக்கினம் இம்மூன்றும் கூடிய தினத்தில் தனது பட்சி அரசு வேளை  இருக்கும் போது மூலிகையைச் சுற்றிலும் சுத்தி செய்து முறைப்படி "கன்னி நூல் காப்புக் கட்டி" "சாப நிவர்த்தி" செய்து "உயிர் கொடுத்து"பொங்கலிட்டு, பலி கொடுத்து தூப தீபங்காட்டி வந்து விடவும்.

அடுத்த ஆதி வாரம் (ஞாயிற்றுக் கிழமை) சிம்ம லக்கினத்தில் சென்று மறுபடியும் தூப தீபம் பொங்கல் பூஜை செய்து மரக்கொம்பினால் கிளறி ஆணிவேர் அறாமல் பிடுங்கி வந்து ஒரு பொன்னினால் செய்த கடயத்தில் (வளையத்தில்)அடைத்து விநாயகர் முன் வைத்துப் பூஜை செய்து எடுத்து கையில் மாட்டிக் கொண்டு ஒரு இரும்புக் குண்டைக் கையில் எடுத்து ஆகாயத்தில் விட்டெறிந்து கையில் போட்டிருக்கும் கடயத்தை கழட்டி இடது கையில் பிடித்து பூமியை நோக்கி தாழ்த்திப் பிடிக்க இரும்புக் குண்டு கீழே விழாமல் ஆகாயத்திலேயே நிற்கும்.பின்பு மேலே உள்ள குண்டை நோக்கி வளையத்தைக் காண்பிக்க கீழே விழும்.

இதனையே கடிக்க வரும் ஒரு நாயை நோக்கிக் காண்பிக்க அடங்கி ஒடுங்கி ஸ்தம்பிக்கும்.
இது கையில் இருக்கும் வரை எதிரிகள் எதிர்க்காமல் அடங்கி இருப்பார்கள்.அஷ்ட கர்மத்தில் இது ஒரு தம்பன மூலிகையாகும்.

கண்ணில் மணல் கொட்டும் ஜாலம் 
நத்தைச் சூரி மூலிகையின் வேரை மேற்கண்டவாறு பறித்து வாயிலிட்டு மென்று அடக்கிக்கொண்டு மணலைக் கண்களில் கொட்டிகொண்டால் கண்ணறுகாது.பாதிக்காது.   

நத்தைச் சூரியின் மருத்துவ விளக்கங்கள் பாகம் - 2-ல்  வெளியிடுகிறோம்.

நன்றி !
இமயகிரி சித்தர்...
www.siddharprapanjam.org
siddharprapanjam@gmail.com
        


        



4 comments:

SABARI said...

use panni result konduvanthuteenkala sir. plz replay. i am iinterested in siththa kalai.

Unknown said...

அய்யா வணக்கம் ......
ஒன்பது திங்கள் கிழங்கு என்றால் என்ன?

Unknown said...

ayya vanakkam en pear s.ganesan enakku thalaisuruli mooligain padamum ubayogamum pattriyum sivanarvembu padamum ubayogamum patri vilakamaga sollungal.
nanri

Unknown said...

ஐயா நத்தை சூரி ஒவ்வெருத்தர் ஒவ்வெரு மாதுரி photo படுறாங்க உன்மையான நத்தை சூரி எது ஐயா தயவு செய்து கூரவும்

பதிவுகளின் வகைகள்