இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Tuesday, 2 October 2012

சஞ்சீவி மூலிகை இரகசியம் -ஆய்வு விளக்கம் -பாம்பு விஷகடி - முறிவு -பாகம் -2

சஞ்சீவி மூலிகை இரகசியம் - ஆய்வு விளக்கம்                      பாம்பு விஷகடி - முறிவு  -பாகம் -2


சஞ்சீவி மூலிகையின் தேடுதலின் போது அதன் இன்னொரு பரிணாமத்தை எனக்கு ஒரு மகான் உபதேசித்தார். நமது புராண காவியங்களில் ஒன்றான ராமாயணத்தில் ஸ்ரீராம பிரான் சீதா தேவியை ராவணனிடமிருந்து மீட்கும் போது நடந்த போரில் ராவணனின் மகன் இந்திரஜித் நாகாஸ்திரம் ஏவியதில் ஸ்ரீராமர், லட்சுமணன் ஆகியோர் மூர்ச்சையாகி விட இதனால் மனம் கலங்கிய ஹனுமனிடம், ஜாம்பவான் சஞ்சீவி மலையினை பெயர்த்து வரச் செய்து இம் மூலிகையினைக் கொண்டு இருவரையும் உயிர் பெறச் செய்தார் என்று ராமாயணம் சஞ்சீவி மூலிகையின் மகிமையை பறை சாற்றுகிறது.

மேற்கண்ட ‘நாகாஸ்திரம்’ என்பது நாகப் பாம்பின் விஷத்தினால் தயார் செய்யப்பட்ட ஒரு ஆயுதம். இதன் விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்ட மூலிகையே ‘சஞ்சீவி’ என்பதாகும். இறைவனின் படைப்பில் எங்கெல்லாம் நஞ்சு உள்ளதோ, அதன் அருகிலேயே அமிர்தமும் படைக்கப்பட்டுள்ளது என்பது நிச்சயமான உண்மை. தேவர்கள் சாகாவரம் தரும் அமிர்தம் பெற திருப்பாற்கடலை கடைந்த போது முதலில் விஷம் தான் வெளி வந்தது.

 இதனை ஈசன் உண்டு திருநீலகண்டன் ஆனார். அதன் பிறகு தான் அமிர்தம் கிடைத்தது.

இந்த அடிப்படைத் தத்துவத்தின் படி பார்த்தால் எங்கெல்லாம் பாம்புகள், சர்ப்ப இனங்கள் உள்ளனவோ அதன் அருகிலேலே சஞ்சீவி மூலிகையை இறைவன் படைத்துள்ளார் என்பது தெரிய வரும். இம் மூலிகை சுலபமாக எங்கும் கிடைக்கக் கூடியது: அனைத்து காலநிலை மாறுபாடுகளுக்கும் உட்படாமல், அழியாமல் நிலைத்து நிற்பது. இதன் மகிமையை உணராமல் வேறு எங்கெங்கோ தேடி அலைகின்றனர். இந்த சஞ்சீவி மூலிகையின் உதவியால் பாம்பின் விஷத்தை ஐந்து நிமிடத்தில் முறிக்கலாம். இந்த அரிய மூலிகையை அறியாதவர் யாருமில்லை. இதுவரை குரு. சீட முறையில் போதிக்கப்பட்டு வந்த சஞ்சீவி மூலிகையின் கைபாகம், செய் பாகத்தினை உலக மக்களின் நலன் கருதி பதினெண் சித்தர்களின் திருவடியைப் போற்றி வெளியிடுகின்றேன்.

“பானு சதா புஷ்பம்” செடியே சஞ்சீவி மூலிகை என்பதாகும். இது இல்லாத இடமே இல்லை. எளிதில் கிடைக்கும் படியும் இறைவன் படைத்துள்ளார். இது வெயில் காலம், மழைக் காலம் போன்ற எல்லாவகையான பருவக்காலங்களி லும் கிடைக்கக் கூடியது.

 எவர் ஒருவர் பாம்பு கடித்து விஷத்தால் பாதிக்கப்பட்டு நம்மிடம் வந்தாலும், உடனே “பானு சதா புஷ்பம்” செடியின் மலராத மொட்டு மூன்றைப் பறித்து, அதன் கணுவை நீக்கி பின்னர் மூன்று வெற்றிலையை எடுத்து, ஒவ்வொன்றி லும் ஒரு மொட்டுவையும், 5-மிளகையும் வைத்து சுருட்டி, ஒவ்வொரு வெற்றிலை யாக கடிபட்டவரின் வாயிலிட்டு மென்று சுவைக்கச் செய்து சிறிது சிறிதாக உமிழ்நீரை விழுங்கச் செய்ய வேண்டும். 

 இப்படி மூன்று வெற்றிலையையும் தின்ன 5 நிமிடத்தில் விஷம் முறிந்து விடும். பிறகு குளிர்ந்த நீரில் குளிக்க வைத்து கரைத்த பழைய கஞ்சி கொடுக்கவும்.

இம் மூலிகையின் மகத்துவங்களையும், அனுபவ சூட்சும இரகசியங்களையும்,  எங்களின் ஆய்வாளர்கள் கூட்டமைப்பின் கருத்தரங்கில் முன்பு வெளியிட்டோம்.இதன்படி கையாண்டு பல மருத்துவர்கள் பாம்புக் கடியின் விசத்தை முறித்து பலரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

நன்றி !

இமயகிரி சித்தர் ...
siddharprapanjam@gmail.com
www.siddharprapanjam.org
சித்தர் பிரபஞ்சம் குழு -face book


6 comments:

aravin deepan said...

மதிப்பிற்குரிய ஐயா வணக்கம் !

மேற்கண்ட சஞ்சீவி மூலிகை இரகசியம் - ஆய்வு விளக்கம் பாம்பு விஷகடி - முறிவு -பாகம் -2 -ல் உள்ள சஞ்சீவி மூலிகையான "பானு சதா புஷ்பம்" எது என்ற பட விளக்கத்துடன் வெளியிட வேண்டுமென பலர் ஆர்வத்துடன் விரும்புகின்றனர்.

அடியேன் இதனைப் பற்றி அறிந்திருந்தாலும் தாங்களே இதன் விபரம் வெளிப்படுத்த வேண்டுகிறேன்.

நன்றி...

kuppusamy said...

அய்யா நானும் இதன் "பானு சதா புஷ்பம்" படம் பார்க்க ஆவலாக உள்ளேன். நன்றி.

jana said...

அய்யா நானும் இதன் "பானு சதா புஷ்பம்" படம் பார்க்க ஆவலாக உள்ளேன். நன்றி.

MUTHUVEL MAYA said...

anbaruku vanakam enathu peyar mayadevan nan oru vaithiyan ethuvarai yaridamun panam vangamal maruthuvam seikeren neengal tayauv seythu poiyuraika vendam sanjiveni mooligai enbathu 3 mooligai 1 alla 3 mooligai patriyum athan payan patupatriyum enathu ayya kuriyullar neengal sonna mooligaiyin unmai peyar penisutha puspam athu panu sata puspam ellai enave thappana tagaval tharavenam thavaru erunthal mannikkavum nanri vanakkam

mani k said...

Hai

vpm vikravandi said...

அய்யா நானும் இதன் "பானு சதா புஷ்பம்" படம் பார்க்க ஆவலாக உள்ளேன். நன்றி.

பதிவுகளின் வகைகள்