இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Monday, 1 April 2019

குழந்தைகள் பெண்கள் திருஷ்டி தோஷம் போக்கும் மூலிகை அஞ்சனம் செய்முறை -Thirushti Anjanam

குழந்தைகள் பெண்கள் திருஷ்டி தோஷம் போக்கும் வேங்கை மூலிகை அஞ்சனம் செய்முறை

நமது தமிழகத்தில் பண்டைய காலம் தொட்டு ஒரு பழமொழி வழக்கத்தில் உண்டு. “கல்லடி பட்டாலும் படலாம் ஆனால் கண்ணடி படக்கூடாது” என்பர். ஒருவர் நம் மீது கல்லை விட்டு எறிந்தால் கூட அந்த வலியையும் வேதனையையும் தாங்கிக் கொள்ளலாம்.ஆனால் கண்ணடி என்ற கண் திருஷ்டியினால் ஏற்படும் விளைவுகள் நாம் தாங்கிக்கொள்ள முடியாத அளவு பல்வேறு துன்பங்களும் வேதனைகளும் கொடுக்கக்கூடியது என்பதை உணர்ந்துதான் நம் முன்னோர்கள் இது போன்ற பழமொழிகளை கூறியுள்ளனர்.மேலும் இது போன்ற தீய விளைவுகளில் இருந்து காத்துக்கொள்வதற்கான உபாயங்களையும் நம் சித்தர் பெருமக்கள் தெளிவாக வகுத்துள்ளனர்.

சிறு குழந்தைகள் சரிவர பால் அருந்தாது,உணவு உண்ணாது,திடீர் திடீர் என வீரிட்டு அழும்,சரியாக தூங்காது.உடல் மெலியும்.  இதுபோல் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் மார்பில் பால் கட்டிவிடும் அல்லது பால் சுரக்காது.மேலும் பசியின்மை,அசதி, சோர்வு ஏற்படும்.இவைகள் அனைத்தும் கண் திருஷ்டி, கண்ணேறு, காற்று, கருப்பு, பூதப்பிரேத சேஷ்ட்டைகளால் ஏற்படுவதாகும். இவைகளை விரட்டும் அற்புத சக்தி வாய்ந்த அஞ்சனம் (மை) தான் உதிரவேங்கை சாந்து என்ற அஞ்சனம் ஆகும்.இதன் செய்முறையை இப்போது பார்ப்போம்.

உதிர வேங்கை மரத்தின் பட்டைகளை சேகரித்து உரலில் இட்டு இடித்து தூள் செய்து ஒரு படி அளவு எடுத்து ஒரு பானையில் போட்டு ஐந்து  படி நீர் விட்டு கலந்து பதினைந்து நாள் ஊறவைத்து பிழிந்து சக்கைகளை எடுத்துவிட்டு அந்த நீரை பெரிய தட்டுகளில் ஊற்றி வெயிலில் வைக்கவும்.சில நாட்களில் நீரெல்லாம் வற்றி கருஞ்சிவப்பும், நீலமும் கொண்ட நிறத்தில் மை போல் மாறும்.அதை தேங்காய் ஓட்டில் ஊற்றி வைத்துக்கொண்டு  தினமும் சில துளிகள் நீர் விட்டு குழைத்து சிறு குழந்தைகளுக்கும், பெண்களும் திலகமாக (பொட்டு) அணிந்தால் சகல கண் திருஷ்டிகளும், கண் திருஷ்டியினால்  வந்த தோஷங்களும்,பிரேத காற்று சேஷ்டைகள் விலகிப்போய் விடும்.

பேய், பூத கணங்கள் அருகில் வர அஞ்சும்.அற்புத சக்தி வாய்ந்த திலகம் இதுவாகும்.

குறிப்பு : தற்போது சில இடங்களில் இதுபோன்று ஒன்றை தேங்காய் ஓட்டில் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.அது உண்மையானதா என்பது கேள்விக்குரியது ஆகும்.உண்மையாய் தயாரித்த அஞ்சனம் மட்டுமே நாம் மேற்கூறிய அற்புத சக்தியை கொண்டதாக இருக்கும்.

உதிர வேங்கை மரத்தின் பட்டைகளை வெட்டி எடுக்கும் போது அதிலிருந்து நமது இரத்தம் போலவே சிவப்பு நிறத்தில் வடியும்.

நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர் 
அகத்தியர் குருகுலம் ஆன்மீக பீடம்
அகஸ்தியர் புரம், சிறுமலை புதூர்,
திண்டுக்கல் – 624003

சித்தர் வேதா குருகுலம்
NO,6,கன்னிகா காவேரி,
புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் – P.O          
திருச்சி – 620006
தமிழ்நாடு  இந்தியா
செல் -9865430235 – 9095590855 - 9655688786

Saturday, 9 March 2019

செய்வினை ஏவலை விரட்டும் அதிசய தூபம் செய்முறை - seivinai - yeval

செய்வினை ஏவலை விரட்டும் அதிசய தூபம் செய்முறை

ஓலைச்சுவடி அனுபவ முறைநாம் வாழும் இவவுலகில் நல்ல எண்ணமும்,நல்ல குணமும் கொண்டவர்களை விட சுயநலம், பொறாமை, வஞ்சகம், சூழ்ச்சி எண்ணம் கொண்டவர்கள் ஏராளம். இத்தகைய கொடூர எண்ணம் கொண்டவர்கள் மத்தியில் நல்ல எண்ணம் கொண்டவர்கள் நலமாகவும், வளமாகவும் வாழ்வது மிக கடினம்தான்.

பொறாமை காரணமாகவும், குடும்பப்பகை காரணமாகவும், தொழில் போட்டி காரணமாகவும், சொத்து பிரச்சனை காரணமாகவும் ஒருவரை அழிக்கவும், முடக்கவும் மாந்திரீக முறையில் செய்வினை, ஏவல் செய்வது இன்று சாதாரணமாகி விட்டது. இந்த துன்மார்க்க மாந்திரீக முறைகளை பணத்திற்க்காக செய்து கொடுக்கும் மாந்திரீகவாதிகள் பலர் இன்று நம்மிடையே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி எதிரிகளால் ஏவப்பட்ட செய்வினைகள் மூலம் உடல் நலம், குடும்பவளம், தொழில் வளம், மன நலம் பாதிப்படைந்தவர்களை அதிலிருந்து மீட்டு அனைத்து நல்ல வளங்களையும் கிடைக்கச் செய்யும் அற்புதமான ஒரு தூபமுறை உள்ளது.இது அனுபவத்தில் கையாண்டு வந்த ஓலைச்சுவடி அனுபவ முறையாகும்.

செய்வினை ஏவல் சம்ஹார தூபம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
 எட்டிவிதை, எட்டிப்பட்டை, எண்ணை பிழியும் செக்கு அடியில் உள்ள மண்,மஞ்சள், புங்கன்  கொட்டை, மாவிலங்கப்பட்டை, ஆயில்யப்பட்டை, வேப்ப மரத்தில் உள்ள காக்கை கூடு,  ஆமை ஓடு, குதிரைக்குளம்பு, பாம்பு சட்டை, மாட்டுக்கொம்பு, சிறுகீரை வேர், மூஞ்சூறு தோல், பழைய கம்பளி ரோமம், முசுருமுட்டை  இவைகளை  ஒரே அளவில் எடுத்து சேர்த்து உரலில் இட்டு நன்கு இடித்துக் கொள்ளவும். இதற்கு சம எடை வெண் குங்கிலியம் சேர்த்துக்கொள்ளவும்.

பில்லி, சூன்யம், செய்வினை , ஏவல் பாதித்தவரை முதலில் மஞ்சள் அரைத்துப் பூசி வெந்நீரில் குளித்த பின்னர் அவரை நிற்க வைத்து ஒரு தூப அகலில் அடுப்பு கரி நெருப்பு இட்டு அதில்  மேற்கண்ட செய்வினை ஏவல் சம்ஹார தூப சூரணத்தை தூவி  புகையை உடல் முழுவதும் காட்டவும்.

பில்லி, சூன்யம், செய்வினை , ஏவல், சக்கரம் கட்டுதல், ஓலை கட்டுதல், வேர் பிடுங்கல், முதலியவற்றால்  உண்டான  சூன்ய தொல்லைகள் அனைத்தும்  தீரும்.காலை  மாலை  என மூன்று  வேளைகள் போதும்.

இந்த தூபமுறை சூனியத்தால் பாதிக்கப்பட்ட  தனி மனிதர்க்கு மட்டுமின்றி சூனியத்தால் பாதிக்கப்பட்ட வீடு, தொழில்  ஸ்தாபனங்கள் வளம் பெறலாம்.

குறிப்பு : மேற்கண்ட பொருட்கள் சேகரிப்பதற்கு சற்று சிரமமாக இருந்தாலும் செய்வினை ஏவலை விரைவில் சுலபமாக விரட்டக்கூடிய வல்லமை கொண்டது.
நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்
அகத்தியர் குருகுலம் ஆன்மீக பீடம்
அகஸ்தியர் புரம் – சிறுமலை புதூர்
திண்டுக்கல் – 624003

சித்தர் வேதா குருகுலம்
NO. 6, புஷ்பக்நகர் – A.M ரோடு
ஸ்ரீரங்கம் – P.O  திருச்சி - 620006

Cell : 9865430235 – 9095590855 - 9655688786


Monday, 21 January 2019

வர்ம ஆசான் V.பிச்சைமணி ஐயா அவர்கள் மறைவு அஞ்சலி -Varma Master


வர்ம ஆசான் V.பிச்சைமணி ஐயா அவர்கள் மறைவு அஞ்சலி 

சிலம்பம். வர்மம்,  களரி பயிற்சியாளரும், வர்மக்கலை மருத்துவத்தில் தலை சிறந்தவரும், சித்த மருத்துவம், இரசவாதம், ஆன்மீக நெறியில் தேர்ச்சி பெற்றவரும், எங்கள் இந்திய பாரம்பரிய சித்தமருத்துவ ஆய்வாளர்கள் கூட்டமைப்பின் சித்தமருந்துகள் செய்முறைப் பயிற்சி குழு தலைவரும், ஏராளமான பட்டதாரி சித்தமருத்துவர்களுக்கு வர்ம மருத்துவ இரகசியங்களை ஒளிவு மறைவின்றி கற்பித்தவருமான மதிப்பிற்குரிய வர்ம ஆசான் V.பிச்சைமணி ஐயா அவர்கள் 20-1-2019 ம் தேதி அன்று திருச்செந்தூர் தைப்பூச பெருவிழாவில் பாதயாத்திரை சாலைவிபத்தில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஐயாவின் ஆன்மா இறைவன் ஈசனின் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கின்றோம். ஐயாவை பிரிந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரித்துக்கொள்கின்றோம்.

மெய்திரு,இமயகிரி சித்தர்
அகத்தியர் குருகுலம் யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம்,சிறுமலை புதூர்,
திண்டுக்கல் – 624003
சித்தர் வேதா குருகுலம்
புஷ்பக் நகர், A.M ரோடு,
ஸ்ரீரங்கம் – திருச்சி - 620006
செல் : 9865430235 – 9095590855 - 8695455549

பதிவுகளின் வகைகள்