இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Monday, 1 April 2019

குழந்தைகள் பெண்கள் திருஷ்டி தோஷம் போக்கும் மூலிகை அஞ்சனம் செய்முறை -Thirushti Anjanam

குழந்தைகள் பெண்கள் திருஷ்டி தோஷம் போக்கும் வேங்கை மூலிகை அஞ்சனம் செய்முறை

நமது தமிழகத்தில் பண்டைய காலம் தொட்டு ஒரு பழமொழி வழக்கத்தில் உண்டு. “கல்லடி பட்டாலும் படலாம் ஆனால் கண்ணடி படக்கூடாது” என்பர். ஒருவர் நம் மீது கல்லை விட்டு எறிந்தால் கூட அந்த வலியையும் வேதனையையும் தாங்கிக் கொள்ளலாம்.ஆனால் கண்ணடி என்ற கண் திருஷ்டியினால் ஏற்படும் விளைவுகள் நாம் தாங்கிக்கொள்ள முடியாத அளவு பல்வேறு துன்பங்களும் வேதனைகளும் கொடுக்கக்கூடியது என்பதை உணர்ந்துதான் நம் முன்னோர்கள் இது போன்ற பழமொழிகளை கூறியுள்ளனர்.மேலும் இது போன்ற தீய விளைவுகளில் இருந்து காத்துக்கொள்வதற்கான உபாயங்களையும் நம் சித்தர் பெருமக்கள் தெளிவாக வகுத்துள்ளனர்.

சிறு குழந்தைகள் சரிவர பால் அருந்தாது,உணவு உண்ணாது,திடீர் திடீர் என வீரிட்டு அழும்,சரியாக தூங்காது.உடல் மெலியும்.  இதுபோல் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் மார்பில் பால் கட்டிவிடும் அல்லது பால் சுரக்காது.மேலும் பசியின்மை,அசதி, சோர்வு ஏற்படும்.இவைகள் அனைத்தும் கண் திருஷ்டி, கண்ணேறு, காற்று, கருப்பு, பூதப்பிரேத சேஷ்ட்டைகளால் ஏற்படுவதாகும். இவைகளை விரட்டும் அற்புத சக்தி வாய்ந்த அஞ்சனம் (மை) தான் உதிரவேங்கை சாந்து என்ற அஞ்சனம் ஆகும்.இதன் செய்முறையை இப்போது பார்ப்போம்.

உதிர வேங்கை மரத்தின் பட்டைகளை சேகரித்து உரலில் இட்டு இடித்து தூள் செய்து ஒரு படி அளவு எடுத்து ஒரு பானையில் போட்டு ஐந்து  படி நீர் விட்டு கலந்து பதினைந்து நாள் ஊறவைத்து பிழிந்து சக்கைகளை எடுத்துவிட்டு அந்த நீரை பெரிய தட்டுகளில் ஊற்றி வெயிலில் வைக்கவும்.சில நாட்களில் நீரெல்லாம் வற்றி கருஞ்சிவப்பும், நீலமும் கொண்ட நிறத்தில் மை போல் மாறும்.அதை தேங்காய் ஓட்டில் ஊற்றி வைத்துக்கொண்டு  தினமும் சில துளிகள் நீர் விட்டு குழைத்து சிறு குழந்தைகளுக்கும், பெண்களும் திலகமாக (பொட்டு) அணிந்தால் சகல கண் திருஷ்டிகளும், கண் திருஷ்டியினால்  வந்த தோஷங்களும்,பிரேத காற்று சேஷ்டைகள் விலகிப்போய் விடும்.

பேய், பூத கணங்கள் அருகில் வர அஞ்சும்.அற்புத சக்தி வாய்ந்த திலகம் இதுவாகும்.

குறிப்பு : தற்போது சில இடங்களில் இதுபோன்று ஒன்றை தேங்காய் ஓட்டில் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.அது உண்மையானதா என்பது கேள்விக்குரியது ஆகும்.உண்மையாய் தயாரித்த அஞ்சனம் மட்டுமே நாம் மேற்கூறிய அற்புத சக்தியை கொண்டதாக இருக்கும்.

உதிர வேங்கை மரத்தின் பட்டைகளை வெட்டி எடுக்கும் போது அதிலிருந்து நமது இரத்தம் போலவே சிவப்பு நிறத்தில் வடியும்.

நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர் 
அகத்தியர் குருகுலம் ஆன்மீக பீடம்
அகஸ்தியர் புரம், சிறுமலை புதூர்,
திண்டுக்கல் – 624003

சித்தர் வேதா குருகுலம்
NO,6,கன்னிகா காவேரி,
புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் – P.O          
திருச்சி – 620006
தமிழ்நாடு  இந்தியா
செல் -9865430235 – 9095590855 - 9655688786

பதிவுகளின் வகைகள்