இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Tuesday, 23 December 2014

சனி தோஷம் தீர சித்தர் வழி பரிகாரங்கள் - Sani Dhosham Pariharam

சனி தோஷம் தீர சித்தர் வழி பரிகாரங்கள் - Sani  Dhosham Pariharam

சனி தோஷம் தீர சித்தர் வழி பரிகாரங்கள் - Sani  Dhosham Pariharam

மனிதர்கள் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களையும் கண்டறிந்து அவைகளை இன்பமயமான வாழ்க்கையாக மாற்றுவதற்காக இறைவனின் அருளால் சித்தர்களாலும், முனிவர்களாலும், ரிஷிகளாலும், தங்கள் ஞானத் தால் கண்டறிநத தெய்வீக கலைகள்தான் மணி, மந்திரம், அவுஷதம் என்ற முப்பெரும் கலைகள் ஆகும்.

இவை
ஜோதிடம், மந்திரம், மருத்துவம் எனப்படும். இப்பெரும் கலைகளினால் மனிதகுலம் இன்று வரை மனம் உடல் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபட்டு பெரும் நன்மை அடைந்து வருகின்றது. மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு துன்பங்களுக்கு நவக்கிரகங்களின் பார்வை (கதிர் வீச்சு) ஒரு காரணம் என ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

நவகிரங்கள் எனப்படும் ஒன்பது கிரகங்களில் மூன்று கிரகங்கள் தீய பலன் கள் அளிப்பதில் வலிமை வாய்ந்தவை. அவை
ராகு, கேது, சனி ஆகும். இவை களில் முதன்மையானது சனி என்ற சனீஸ்வர பகவான்தான். சனீஸ்வர பகவானின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பர்.

இறைவனாகிய சிவ பெருமானையே ஒரு கணம் பிடித்ததால்தான் சனி ஈஸ்வர பட்டம் கிடைத்து சனீஸ்வரன் ஆனார். பனிரென்று ராசிகளில் உள்ள ராசிக்காரர்களுக்கு சுமார் ஏழு ராசிகளின் அமைப்பு உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில்
ஏழரை சனி, கண்ட சனி, அஷ்டமசனி போன்ற பாதிப்புஇருந்துகொண்டேஇருக்கும். 

இதனால்  அவர்களுக்கு வாழ்வில் எடுத்த  காரியங்களில் தோல்வி, பண முடக்கம், வம்பு, சண்டை, விரக்தி, தொழில் முன்னேற்றமின்மை எதிர் காலமே சூன்யமானது போன்ற இன்னல்களுக்கு ஆட்பட்ட வாழ்க்கையை மிகவும் சிரமமாக அனுபவித்து கொண்டிருப்பார்கள்.

சனீஸ்வர தோஷத்தின் பிடியில் உள்ளவர்கள் பல்வேறு கோவில்களுக்கு சென்று நவகிரங்களுக்கு தீபம் போட்டு அர்ச்சனை அபிஷேகம் செய்தும்
சரிவர பலன் காணாமல் மனம் நொந்த நிலையில் இருப்பார்கள். இதற்கு பரிகாரமாக சித்தர்கள் மிக எளிய வழிமுறைகள் வகுத்துள்ளனர்.


சனி தோஷ நிவர்த்தி பரிகாரம் : 1

சனி தோஷம் - பிடியிலிருந்து விலக அகத்திய பெருமான் கூறும் வழிமுறை பாடல் விளக்கம்.

கோனவனார் குடியிருந்த பிடரிதன்னில் 
கொள்கிநின்றார் சனியனெனும் பகவான்றானே
தானென்ற சனிபகவான் பிடரிமேலே 
தானேறி நின்றுகொண்டு தலைகால் வேறாய் 
கோனென்ற அறிவுதனை நிலைக்கொட்டாமல் 
குடிலமென்ற குடிலமெல்லாங் கூறாய்ச் செய்து 
நானென்ற ஆணுவமே நிலைக்கப்பண்ணி 
நன்னையென்ற வெளிகளெல்லா மிருளாய்க் கட்டி 

கானென்ற கபடமதுக் கேதுவாய் நின்று 
கரையேற வொட்டாமல் கருதுவானே 
கருதுகின்ற சனிபகவான் பிடரிமேலே 
கவிழ்ந்து நின்ற பாசமதைக் களையவேண்டி 
சுருதிபொரு ளானதொரு நாதன்பாதம் 
தொழுதுமன துறுதியினால் துகளறுத்து 
நிருதியெனுஞ் சாபமது நிவர்த்தியாக 
நீமகனே சொல்லுகிறே னன்றாய்க்கேளு

பருதிஎனும் ரவிதனையே நமஷ்கரித்து 
பாங்குடனே ஓம் கிலி சிவவென்று சொல்லே 
சொல்லிடுவாய் தினம்நூத்தி யிருபத்தெட்டு 
சோர்வின்றி மண்டலமே செபித்தாயாகில் 
வல்லுடும்பாய் நின்றசனி மாறிப்போகும் 
மகத்தான மந்திரமுஞ் சித்தியாகும்  

மேற்கண்ட பாடலின் விளக்கம் :

இறைவன் குடியிருக்கும் அறிவாகிய பிடரிதன்னில் சனி பகவான் ஏறி  நின்று கொண்டு அறிவுதனை தலைகீழாய் மாற்றி தான் என்ற ஆணவத்தை நிலைக்கச்செய்து, உண்மையை பொய்யாய் காட்டி,நல்ல வர்களை கெட்டவர்களாகவும்,கெட்டவர்களை நல்லவர்களாகக் காட்டி, புத்தியை மாற்றி, பொய் ,களவு ,மது ,மாது ,சூது ,போன்ற வைகளுக்கு புத்தியை அடிமையாக்கி வாழ்க்கையை கரையேற விடாமல் தடுப்பார்.
 
நீரில் பாசம் போல் படிந்து நின்றது போல் நம் மேல் படிந்துள்ள சனீஸ்வர தோஷத்தை நீக்கிக்கொள்ள இறைவனின் பாதம் தொழுது ஒரு உபாயம் கூறுகிறேன் .

அதிகாலை குளித்து முடித்து கிழக்கு நோக்கி நின்று கொண்டு பருதி எனும் சூரிய பகவானை வணங்கி "ஓம்  கிலி  சிவ" என்ற மந்திரத்தை  -128-முறை  செபிக்கவும்.இப்படி ஒரு மண்டலம் - 48-நாட்கள் தொடர்ந்து செபித்து வர உடும்பு போல் பற்றி நின்ற சனீஸ்வர தோஷம் விலகி விடும்.இது ஏராளமானோர் செய்து பயனடைந்த முறை.


சனி தோஷ நிவர்த்தி பரிகாரம் : 2  

சனி தோஷ நிவர்த்தி மூலிகை :

இந்த மூலிகை கொல்லிமலையில் ஆகாய நீர் வீழ்ச்சி அருகில் விளைந்துள்ளது.இம் மூலிகையை சாப நிவர்த்தி செய்து எடுத்து வந்து சனிக்கிழமை அன்று சனி ஓரையில் அரைத்து உடல் முழுதும் பூசி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். இது போல் மூன்று நாள் குளிக்க ஏழரை சனி, அஷ்டம சனி, கன்ட சனி, பாத சனி போன்ற அனைத்து தோஷமும் தீரும்.

சனி தோஷ மூலிகை விளக்க வீடியோ :

குறிப்பு : சனி தோஷம் தீர்வதற்கு பலவிதமான கோவில்கள், குளங்கள், தீர்த்தங்கள், பரிகாரங்கள் செய்தும் துன்பங்கள் தீராதவர்களுக்கு மேற்கண்ட முறைகள் மட்டுமில்லாமல் எமது சித்தர் வேதா குருகுலத்தில் அனைத்து வகையான சனி தோஷமும் முழுமையாக தீர்வதற்கான அற்புதமான வழிமுறைகள் உள்ளன.


நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம்
சிவராம் நகர்,
திருவானைக் கோவில் – P.O
திருச்சி – 620006
Cell No : 9865430235 - 9095590855

Wednesday, 10 December 2014

வேந்தர் T V மூன்றாவது கண்' ல் எமது நிகழ்ச்சி - சுருளிமலை அதிசயங்கள் - Moondravathu Kan

வேந்தர் T V மூன்றாவது கண்ல் எமது நிகழ்ச்சி - சுருளிமலை அதிசயங்கள்   - Moondravathu Kan  
வேந்தர் T V மூன்றாவது கண்' ல் எமது நிகழ்ச்சி - சுருளிமலை அதிசயங்கள்   - Moondravathu Kan  

சுருளிமலை பற்றிய எமது விளக்க உரையுடன் சுருளிமலை அதிசயங்களை தொகுத்து வேந்தர் டிவி யில் மூன்றாவது கண் நிகழ்ச்சியில் 3/12/2014 ம் தேதி அன்றும், 8/12/2014 ம் தேதி அன்றும் இரண்டு நாட்கள்,இரவு 9,30 மணிக்கு இரண்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியது.


இதில் 3/12/2014 ம் தேதி அன்று இரவு 9,30 மணிக்கு :

ராகு கேது காட்சி தரும் குகை...!
சித்தர்கள் தவம் செய்யும் குகை...!
பூர்வ ஜென்ம தோஷங்களை போக்கும் நள்ளிரவு யாகம்...!
சிவன் தவம் செய்த குகைக்கு ஓர் நேரடி விசிட்...!

காணக்கிடைக்காத அரிய காட்சிகள் என்ற தலைப்பில் உலகத் தொலைகாட்சி வரலாற்றில் முதல் முறையாக இறைவன் சிவபெருமான் தவம் செய்த குகையின் நேரடிக்காட்சிகளும்,பூர்வ ஜென்ம தோஷங்களை போக்கும் நள்ளிரவு யாகம் நடைபெற்ற அரிய காட்சிகளும் ஒளிபரப்பாகியது.


மேலும்  8/12/2014 ம் தேதி அன்று இரவு 9,30 மணிக்கு :

முனிவர்கள் சாபமிட பயன்படுத்திய உதக நீர் ...!
இந்த நீர் பட்டால் நீங்களும் கல்லாக மாறுவீர்கள்...!
இலைகளும் பிளாஸ்டிக் பொம்மைகளும் கல்லாக மாறிய அதிசயம்...!

என்ற தலைப்பில் அதிசய காட்சிகளும் உதக நீர் பற்றிய சித்தர்கள் கண்டறிந்த மெய்ஞான விளக்கங்களும், பறவைகள் விலங்குகள் கல்லாக மாறிய இன்றைய அறிவியல் ஆய்வு விளக்கங்களுடன் ஒளிபரப்பாகியது.  இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் எமது விளக்க உரையுடன் ஒளிபரப்பாகியது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது நடந்த அமானுஷ்ய சம்பவங்களையும், சுருளிமலை அதிசயங்களையும் நமது "சித்தர் பிரபஞ்சம்" தளத்தில் அடுத்த பதிவில் வெளியிடுகின்றோம். 


வேந்தர் டிவி யில், மூன்றாவது கண் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிய மேற்கண்ட இரண்டு நிகழ்ச்சிகளின் பதிவுகள் யூ டியூப் [You Tube] தளத்தில் விரைவில் வெளிவரும்.  


நன்றி : வேந்தர் T.V - மூன்றாவது கண் - Director & Team 


நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் 
சிவராம் நகர், திருவானைக்கோவில் - P.O
திருச்சி - 620005 
செல் : 9865430235 - 9095590855


   


பதிவுகளின் வகைகள்