இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Monday, 13 May 2013

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம் - Sleepping Methods

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம் - 
Sleepping  Methods 


தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம் - Sleepping  Methods 

[ சித்தர்கள் கூறும் நோயில்லா நெறிமுறைகள் பாகம் - 2 ]

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும்.இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு  [Refresh] பெறவும்,உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று.பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.ஆனால்  இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்க ளில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்கு கின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக் 
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை 
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை 
நம்பிக் காண் 

இதன் விளக்கம் :-
இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம்,தெளிவின்மை, ஐம்புலன்களில்[உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவிக் கொள்ளும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.
உத்தமம் கிழக்கு  
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு  
மரணம் வடக்கு 

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு,அதிர்ச்சி உண்டாகும்.
வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.
இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன்,இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். 

மேலும் மல்லாந்து கால்களையும்,கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது.இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் [பிராண வாயு] உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.      

இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும்.இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும்.இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும்.மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும்.இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.

நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி -T.N
cell : 9865430235 - 8695455549   
10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கங்களுக்கு மிக்க நன்றி..

hmtmohan said...

Aiyya really fantastic. In this generation every one has to follow. Very very useful article. Please keep on sending useful article like this in future.
Thank you very much. I shall try to follow and inform to my family members also. Vazhga Valamudan.
K.Mohan
Chennai.
98404 50234.

zakeer hussain said...

aya nandry

zakeer hussain said...

aya nandry

Mark Lewis said...

superappuuuuuuuuuuu.........

RAJ kumar said...

guru nenga azhiyatha nilai adaiya vendum,,,naan kadavulai vendukiren

yaso Dharan said...

Thank u sir. Actually now a days we won't get such an information. Plz
Keep on sending such a useful information. FB is one of the easy way to reach such information. Once again thank:-):-):-)

yaso Dharan said...

Thank u sir. Actually now a days we won't get such an information. Plz
Keep on sending such a useful information. FB is one of the easy way to reach such information. Once again thank:-):-):-)

Rameshkrishnan said...

very use full details

sayan said...

mikavum avasiyamana karuththukkalai thantheerkal aiya. mikka nanri

பதிவுகளின் வகைகள்