இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Friday 31 August 2012

வர்ம இளக்கு முறை:முதுகு தண்டுவட வலி.




வர்ம இளக்கு முறை:  முதுகு தண்டுவட வலி – Back pain


இந்திய பாரம்பரிய சித்த மருத்துவர்கள் &

முப்பு,காயகற்ப ஆய்வாளர்கள் கூட்டமைப்பு .திருச்சி 

கருத்தரங்கம் -நிகழ்ச்சி 


வர்ம ஆசான் Dr.C.முருகேசன் .அவர்கள்.மயங்கியவரை எழுப்பும் வர்ம 

அடங்கல் தலங்கள் செயல் முறை விளக்கம்.பாரம்பரிய வர்ம மருத்துவ செயல் 

முறை விளக்கம், வர்ம ஆசானின் நேரடிவிளக்கம்.


நன்றி !

இமயகிரி சித்தர் ...

www.facebook.com/imayagiri siddhar

web: www.siddharprapanjam.org

blog: siddharprapanjam.blogspot.in

"siddhar vedha gurukulam in southindia"

"indian traditional siddha medicine and muppu,researcher organisation southindia"

channel:www.youyube.com/user/nagarajgurugi

email:siddharprapanjam@gmail.com 

siddharvedhagurukulam@gmail.com

Sunday 26 August 2012

கருத்தரங்கம் -நிகழ்ச்சி - 19 - 8 - 2012

இந்திய பாரம்பரிய சித்த மருத்துவர்கள் &
முப்பு,காயகற்ப ஆய்வாளர்கள் கூட்டமைப்பு .

கருத்தரங்கம் -நிகழ்ச்சி  

இடம்: பொதிகை சித்த மருத்துவ குடில் -நொச்சியம்

-திருச்சி 
நாள் :19 - 8 - 2012 -ஞாயிறு -காலை:10-30,மணிக்கு 



Dr.N.செல்வராஜ் ,B.S.M.S.,N.D.,- அவர்கள் 

Dr.S.நாகராஜ்,R.M.P.,D.S.M.S.,D.H.M.,H.P.T.,அவர்கள்         


 கருத்தரங்கில் கலந்து கொண்ட சித்த மருத்துவர்கள் மற்றும் ஆய்வாளர்கள். 





ஸ்டெம் செல் தெரபி -பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே சித்தர்கள்கூறிய "நஞ்சு கொடி"விளக்கம்.-M.லக்கன், B,Sc.,முப்பு ஆய்வாளர் 






இணையதளத்தில் சித்தர் கலை ஆய்வுகள்.- Dr.S.நாகராஜ் ,அவர்கள் 
பொதுச் செயலாளர் :(ஆய்வாளர்கள் கூட்டமைப்பு) ,மூட்டு வலியை நீக்கும் தைலம்,சர்க்கரை நோய் கட்டுப்படுத்தும் மருந்துகள்,ஒற்றைத் தலைவலி போக்கும் மருந்து,தீப்புண் தைலம்,செய்முறை விளக்கம்.   



மூலிகை முரசு Dr.தேவூர் மணிவாசகம் அவர்கள். ஆண்மைக்குறைவை நீக்கும் அனுபவ மருந்து செய்முறை விளக்கம்.










சரகலை இரகசியம் : நோய்கள் ,ஜோதிடத்தில் செயல்படும் விதம் மற்றும் 

பஸ்பம்,செந்தூரம் செய்யத்தேவையான திராவகம் செய்முறை விளக்கம். 

,அனுபவ முறை விளக்கம்.V.பிச்சைமணி, வர்ம ஆசான்,அவர்கள் 



ஜீவனுள்ள சித்த மருந்துகள் செய்முறை விளக்கம் மற்றும் ராஜ பிளவைக் கட்டியை அறுவைச்சிகிச்சை இல்லாமல் ஒரு மணி நேரத்தில் குணமாக்கும் அதிசய செய்முறை விளக்கம்..Dr. B.சிவசங்கர்,அவர்கள் மற்றும் வர்ம ஆசான் Dr.C.முருகேசன் .அவர்கள்.மயங்கியவரை எழுப்பும் வர்ம அடங்கல் தலங்கள் செயல் முறை விளக்கம்.

Friday 17 August 2012

கருத்தரங்கம்



இந்திய பாரம்பரிய சித்த மருத்துவர்கள் &
முப்பு,காயகற்ப ஆய்வாளர்கள் கூட்டமைப்பு .

கருத்தரங்கம்  

இடம்: பொதிகை சித்த மருத்துவ குடில் -நொச்சியம்

-திருச்சி
நாள் :19 - 8 - 2012 -ஞாயிறு -காலை:10-30,மணிக்கு 


தலைப்பு :


1, பாரம்பரிய வர்ம மருத்துவ செயல் முறை விளக்கம், வர்ம ஆசானின் நேரடி
விளக்கம். – C.முருகேசன் ,வர்ம ஆசான்,அவர்கள் 

2, சரகலை இரகசியம் : நோய்கள் ,ஜோதிடத்தில் செயல்படும் விதம்
,அனுபவ முறை விளக்கம்.V.பிச்சைமணி, வர்ம ஆசான்,அவர்கள் 

3, ஜீவனுள்ள சித்த மருந்துகள் செய்முறை விளக்கம். B.
சிவசங்கர், அவர்கள்

4, ஸ்டெம் செல் தெரபி -பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே சித்தர்கள்
கூறிய "நஞ்சு கொடி"விளக்கம்.-M.லக்கன், B,Sc முப்பு ஆய்வாளர், அவர்கள்  

5, இணையதளத்தில் சித்தர் கலை ஆய்வுகள்.- Dr.S.நாகராஜ் ,அவர்கள் 
பொதுச் செயலாளர் :(ஆய்வாளர்கள் கூட்டமைப்பு) 


இந்நிகழ்ச்சியில் சித்த மருத்துவர்கள்,

சித்தர் கலை ஆர்வலர்கள் கலந்து கொள்ளலாம்
. 
தொடர்புக்கு :08695455549


நண்பர்களே வேலைப் பளுவின் காரணமாய் தொடர்ந்து 
பதிவுகள் இட முடியவில்லை எனவே எமது தளத்தின் 
இணைப்பில் உள்ள நண்பர் "ரிசி" அவர்களின் பதிவில் வெளி
வரும் "சித்தர் களஞ்சியம்"பார்வையிட்டு கருத்துக்கள் கூறுங்கள்.

நன்றி !
இமயகிரி சித்தர்... 

Friday 10 August 2012

நீர் மேல் நெருப்பு- (Neer mel neruppu) நோய்கள்-வறுமை -சத்துரு நீங்கி வளம் பெற

நீர் மேல் நெருப்பு -(NEER MEL NERUPPU)
நோய்கள்-வறுமை -சத்துரு நீங்கி வளம் பெற

நிரசையுள்ள  நீர்மேல் நெருப்பு  வாங்க  
நீ மகனே கன்னிநூல் காப்புக் கட்டே 
பிரசையென்ற தினைமாவுந்தேனும் நல்கி  
பெலிஎன்ன செஞ்சேவல் மந்திரமோ கேளு 
சரசக்கினிரூபி அக்கினியுச்சாரி சர்வக்கிரக
வானி   சர்வேசுவரி சுவாதி நாமா வென்று சாத்தே 
                                         கருவூரார் பல திரட்டு...


நீர்மேல் நெருப்பு என்னும் இம்மூலிகைக்கு கன்னி நூல் காப்புக் கட்டி 
தினை மாவும்,தேனும் கலந்து வைத்து,சிகப்பு சேவலை பலி கொடுத்து

"அக்கினி ரூபி அக்கினியுச்சாரி சர்வக் கிரகவாணி  சர்வேசுவரி  சுவதி நாமா"

என மந்திரம் செபித்து "நீர் மேல் நெருப்பு" மூலிகையின் வேரை குளிசம்
செய்து கட்டிக் கொள்ள நோய்கள் நீங்கும்,சத்துருக்கள் அடங்கிப்போவர்,
வறுமை நீங்கி செல்வ வளம் வந்து சேரும்.

நன்றி !

இமயகிரி சித்தர்...

Friday 3 August 2012

கொல்லிமலை கலிங்கம் ஓலைச்சுவடி -பாகம்- 2,


கொல்லிமலை கலிங்கம் ஓலைச்சுவடி

இரசவாத,காயகற்ப,அதிசயமூலிகைகள் ஆய்வு -அடையாளம் 
செய்முறை   விபரம் -பாகம்- 2



கொல்லிமலை கலிங்கம் ஓலைச்சுவடி

இரசவாத,காயகற்ப,அதிசய, மூலிகைகள் ஆய்வு -அடையாளம் செய்முறை   விபரம் -பாகம்- 2

புலியடி மூலி

கொல்லிமலை கிரிகை அரியலாம், புலியடி மூலி விபரம் சொல்லக் கேளு அரப்பளீசுவர் கோவிலுக்குப் பின்புறமாய் தென்கிழக்கு மூலையில் வழியே ஒரு நாழிகை தூரம் போனால் அங்கே ரெட்டைக்குண்டு மேடு உள்ளது. அது ரெட்டைக்குண்டு ஓடையென்று சொல்லப்படும்.

அந்த மேட்டில் முலைத்ததெல்லாம் புலியடி மூலிதான் அது குத்துச்செடி போல் முளைத்து ஒரு முள உயரமாயிருக்கும் செடி சுற்றிலும் கிளைகள் படர்ந்து பூமியில் சுற்றி படாந்துயிருக்கும். இலைகள் புலிப்பாதம் போல் இருக்கம். இலையைத் திருப்பிப் பார்த்தால் புலியைப் போலவே சாரை சாரையாய் கோடுகள் இருக்கும் இந்த இலை வெள்ளை, பச்சையாய் இருக்கும்.

இந்த இலையைப் பறித்து சாறு பிழிந்து கொண்டு, இரும்பைத் தகடு தட்டி சுருட்டி பழுக்கக் காய்ச்சி சாற்றில் மூன்றுமுறை துவைக்க (சுருக்கு கொடுக்க) செல்லு அரித்தது போல் இருக்கும் மீண்டும் மூன்றுமுறை சுருக்கு கொடுக்க இரும்பு தகடு கொஞ்சம் சிவந்து இருக்கும் அதை எடுத்துக்கொண்டு வெட்டி மூசையில் போட்டு வெங்காரம் கொடுத்து உருக்கி எடுத்து தகடு தட்டி காட்டு வெற்றிலையை அரைத்து தகடுக்கு கவசம் செய்து ஏழு சீலை மண் செய்து கெஜபுடத்தில் போட பவுனுக்கு மேலாய் மாற்று தோன்றும்.


முப்பிரண்டை
அந்தயிடத்துக்கு கீழ்புறமாய் சுற்றிப் பார்த்தால் முப்பிரண்டை காணம் அதைக் கொண்டு வந்து இடித்துச் சூரணம் செய்து திரிகடி அளவு பசும்பாலில் (காலை-மாலை) இருவேளை உண்ண அழியாத காயமாயிருக்கும், இதனை இடித்துப் பிழிந்த சாற்றில் இருபத்தியோரு முறை வெள்ளீயத்தை உருக்கிச் சாய்க்க வெள்ளியாகும்.

பேரிலவ விருட்சம்
கலிங்கத்திற்கு வடபுறமாய் ஒரு நாழிகை வழி தூரம் போனால் கற்பூர ஊசிக்கல்லும், நெருஞ்சிக் கல்லுமாய் இருக்கும் அதற்கு நேராக வடக்கே போனால் இரண்டு நாழிகையில் வடக்கப் புறமாய் ஒரு பேரிலவ விருட்சம் உண்டு. அதைச் சற்றி பனியாய் இருக்கும். ஜலம் மிகுதியாயிருக்கும், பாறை போல் தோன்றும் அவ்விடத்தில் மாதாக்கள் இருப்பார்கள்.

அவர்கள் பேசமாட்டார்கள் அவர்களைப் பணிந்து வணங்கினால், ஏன் வந்தாய் என்று கேட்பார்கள். உங்களிடம் பணிந்து தொண்டு செய்ய வந்தேன் என கூறினால், அள் கூர்ந்து ஆசிர்வாதம் செய்வார்கள். அதனால் இறைநிலை பேரின்பம் கிட்டும். அந்த உணர்வுடன் பேரிலவ விருட்சத்தைத் தழுவினால் உடனே சடைவிழும்.

அந்த கணமே எல்லா பதவியும் கிட்டும். காயசித்தியாகும், அவர்கள் பேசுவார்கள், சித்தர்களின் இரகசியங்களை உபதேசிப்பார்கள். அங்கே ஊரிக் கொண்டிருக்கும் ஜலத்தை சாப்பிட்டால் முதுமை போய் இளமையாகம்.


மாயா கொல்லி புகழை” அந்த பேரிலவ விருட்சத்திற்கு மேற்கு புறம் ஒரு நாழிகை வழியில் செல்ல ஒரு கரடு உண்டு அதில்மாயா கொல்லி புகழை”: உண்டு. அது தங்க நிறமாய் கூர்சம் புல் செடியைப் போல் (தர்ப்பை புல்) ஊசி மூக்கிலையாய் இருக்கும். அவ்விடம் போனால் மாய்கை, மயக்கம் உண்டாகும். அப்போது “என் தாயே லக்ஷ்மி சுவாகா என்று ஆயிரம் உரு செபித்து அப்பால் இலையை உருவித் தின்றால் காயசித்தியாகும். அறுபது காதம் பயணிக்க சித்தியாகும். எந்த ஊரை நினைத்தாலும் அவ்விடம் போய்ச் சேரலாம். சகல காரியமும் சித்தியாகும்.


எருமைகணை விருட்சம்” அதற்க மேற்கே பாலாறு போல வடகிழக்காய் தோன்றும் அந்த ஆற்றுக்கு வடக்கே போனால் ஒரு மடு உண்டு, அதிலே எருமை மரம் வெகு கூட்டம் உண்டு, அதைக் கீறிப் பார்த்தால் கருமையாய் இருக்கம். கையில் ஒட்டும், அந்தப் பட்டையை ஒரு பலம் எடுத்து கோசலம் விட்டு, “சோ, வா, வாக்கு சுவாக என்று 1028 உரு போட்டு 217 – சுற்று இடம் வலமாக சுற்றி வந்து கரநியாசம், அங்கநியாசம், பிராணபிரதிஷ்டை செய்து, உடனே அந்த மரத்தை துளைத்து கலயம் வைத்து மரத்துடன் சீலை மண் செய்து கட்டி விடவும், மூன்று நாழிகைக்குள் அந்த கலயத்தைப் பிரித்து அதில் வடிந்துள்ள பாலை ஒரு துட்டு எடையும், தேன் ஒரு காசு எடையும் மிளகு பொடி ஒரு பண விடையும் இந்த மூன்று மத்தித்து சாப்பிடவும், பின்பு  27-நாள் ஆன பிறகு சீயும், கோ, வா” – என்று 1028 – உரு போட்டால் உலகம் உள்ளவரை காயத்தோடு வாழ்ந்து இருக்கலாம்.                     

இந்த ஓலைச்சுவடியில் "சதுரகிரி மலையில்" உள்ள அபூர்வ மூலிகைகள் பற்றிய விபரம் ஏராளமாக உள்ளதுஅதை பாகம்-3,ல் தொடர்வோம்... 
 



நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி 
Cell No: 9865430235 - 8695455549
         


பதிவுகளின் வகைகள்