இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Monday, 27 May 2013

மூன்று மூலிகை காயகற்பம் - அகத்தியர் - Herbal Kayakarpam


மூன்று மூலிகை காயகற்பம் - அகத்தியர் - Herbal Kayakarpam

வல்லாரை மூலிகை


சிறு செருப்படை மூலிகை


வெள்ளை கரிசலாங்கண்ணி மூலிகை


மூன்று மூலிகை காயகற்பம் - அகத்தியர் - Herbal Kayakarpam

பஞ்சபூத சக்திகளின் இயற்கை விதிகளுக்கு உட்பட்டு இயங்கும் மனித உடலில் நரை, திரை, மூப்பு என்னும் முப்பெரும் பிணிகளை அணுக விடாமல் காத்து என்றும் இளமையாய் வாழ வைக்கும் அதிசய மருந்துகள் தான் காயகற்ப மருந்துகள் ஆகும்.

மனிதன் நீண்ட நாட்கள் வாழ்வதற்கான காயகற்ப மருந்துகள் பற்றிய ஆய்வுகளை இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள ஞானிகள் [ Pilosophers ] பல்லாயிரம்  வருடங்களுக்கு  முன்பே  ஆய்வு  செய்துள்ள னர்.ஆனால் இந்தியாவில் தமிழகத்தில் சித்தர்கள் தங்கள் ஞானத்தால் கண்டறிந்து இவற்றை வகைப்படுத்தி எளிய வகையில் ஏராளமான முறைகளை நூல்களில் பதிவு செய்துள்ளனர்.

இவற்றில் மூலிகைகளைக் கொண்டு மிக எளிய முறையில் செய்து உண்ணக் கூடிய ஒரு காயகற்ப மருந்தைப் பற்றி அகத்தியர் பெருமான் தனது நூலில் விளக்கமளிக்கின்றார்.

போனபின்பு யின்னுமொரு கற்பங் கேளு
புகழான திருமேனி சிறுசெருப் படையும் 
மானகருங் கரிசாலை மூன்றும் வேறாய் 
அடைவாகச் சூரணித்துச் சமனாய் சேர்த்து 
கானில் வாழ் கற்கண்டு நாலத் தொன்று 
கலந்து வெருகடி தேனில் நெய்யிற் கொள்ளு 
மானமுட னிருகாலு மண்டலந்தான் கொள்ள 
மந்தமதி மந்தபுத்தி மயக்கம் போமே 

மயக்கம் போம் லோகமெல்லாம் வசியமாகும் 
மனமுண்டாங் குணமுண்டா மயக்கம் போகும் 
மயக்கபித்தம் சோகை யெரி பித்த நீர்க்கட்டு 
மலபந்தம் யாவற்றும் நீங்கிப் போகும் 
மயக்கு பித்த வெறிமூர்ச்சை மாறுமாறும் 
மூதறிவா மேனிகண்கள் சிவப்பு  மாகும் 
தியக்கம்போம் காமப்பால் மிகவுண்டாகும் 
ஸ்திரீகளுட வாசனையில் சேராமல் நில்லே 

மேற்கண்ட பாடல் விளக்கம் :
வல்லாரை, சிறுசெருப்படை, வெள்ளை கரிசலாங்கண்ணி இம் மூன்றும் வெவ்வேறாய் தேவையான அளவு சேகரித்து நிழலில் உலர்த்தி இடித்து சூரணம் செய்து மூன்றும் சம அளவில் ஒன்று சேர்த்து கலந்து இந்த எடையில் கால் பங்கு கல்கண்டு பொடி செய்து சேர்த்து கலந்து கொள்ளவும்.

காலை உணவிற்கு பின்பு  இந்த மூன்று மூலிகை சூரணம் வெருகடி அளவு எடுத்து தேனில் குழைத்து உண்ணவும்.இதே போல் இரவு உணவிற்கு பின்பு இதே போல் தேனில் குழைத்து உண்ணவும்.இந்த முறையில் 12 - நாட்கள் உண்ணவும்.

இதன் பின்பு 12 - நாட்களுக்கு இதே மூன்று மூலிகை சூரணத்தை காலை - மாலை நெய்யில் குழைத்து உண்ணவும்.

[வெருகடி என்பது - ஐந்து விரல் கூட்டி எடுப்பது - பூனையின் பாதம் அளவு ]  

இதனால் தீரும் நோய்கள் விபரம் :
அறிவு மந்தம், ஞாபக சக்தி குறைவு, பித்த மயக்கம், இரத்த சோகை, கைகால் எரிச்சல், நீர்க்கட்டு, மலச்சிக்கல்,பித்தவெறி, மூர்ச்சை இவைகள் நீங்கும்.

இரத்தம் பெருகி கண்கள் நன்கு சிவக்கும்.தெளிவான மனமும், இனிமையான குணமும் உண்டாகும்.ஆண்மைத் தன்மையும், காமம் பெருகும்.ஆனால் பெண்களுடன் சேராமல் இருந்தால் தேகம் காயகற்பமாக மாறும்.சில மாதங்கள் தொடர்ந்து உண்ணவும். 

நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்
சித்தர் வேதா குருகுலம்
புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் P.O – திருச்சி D.T - 620006
தமிழ்நாடு – இந்தியா

அகத்தியர் குருகுலம் யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம் , சிறுமலை புதூர்
திண்டுக்கல் – D.T
தமிழ்நாடு – இந்தியா

செல் :98654302359095590855 - 9655688786


4 comments:

ko prince said...

//மானகருங் கரிசாலை மூன்றும் வேறாய்// கருங் கரிசாலை என்று அகத்தியர் சொல்லி இருக்கிறார் என்று நினைக்கிறேன்... நீங்க வெள்ளை கரிசாலை என்று போட்டுருக்கீங்க!!!

imayagiri siddhar said...

இதற்கு எந்த மாதிரியான பதிலை எதிர் பார்க்கின்றீர்கள்.

உங்களுக்கு தகுந்த பதிலா அல்லது சித்தர்கள் பார்வையில் உண்மையான பதிலையா ?

நன்றி !
இமயகிரி சித்தர்...

West Gates said...
This comment has been removed by the author.
astro student said...

Imagayagiri sittharkku vannakam,

intha muligayin illai mattum sooranam seiyya venduma ?

illai veru thandu poo ellam serthu sooranam seiya venduma ?

naatu marunthu kadayil irrukum podikalai vangi use pannalama ?

ungal pathilai avolodu ethir parkirein

nanri

பதிவுகளின் வகைகள்