இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Thursday, 16 May 2013

கர்மவினை தான் நோய்கள் தோன்ற காரணம் - அகத்தியர் சித்தர் - Karmavinai Noikal

கர்மவினை தான் நோய்கள்  தோன்ற காரணம்  - அகத்தியர் சித்தர்
கர்மவினை தான் நோய்கள்  தோன்ற காரணம்  - அகத்தியர் சித்தர்

விதியைப் பற்றியும், கர்மவினை பற்றியும் உலகம் முழுவதும் பரவலான நம்பிக்கை மக்களிடையே இருந்து வருகின்றது.இதில் நோய்கள் தோன்றுவதே கர்மவினையால் தான் என்ற கருத்தை  பொதுவாக இன்றைய எந்த ஒரு மருத்துவ முறைகளிலும் ஏற்றுக் கொள்வதில்லை.ஆனால் சித்தமருத்துவ முறையில் மட்டும் விதி விலக்காக இதனை ஆதாரங்களுடன் விளக்குகின்றது.  

சித்தர் அகத்தியர் பெருமான் இயற்றிய பல லட்சம் பாடல்களில் "அகத்தியர் கன்ம காண்டம் -300" என்ற சிறப்பு வாய்ந்த நூலில் எந்த வித கர்ம வினையினால் என்னென்ன நோய்கள் தோன்றும் என மிகத்தெளிவாக விளக்கமளிக்கின்றார்.

ஒருவரிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காத பாபத்தால் "ஈளை நோய்" வரும். [ ஈளை, இளைப்பு, ஆஸ்த்மா ]

பசுமையாய் வளர்ந்த இளம் செடி,கொடிகளை வெட்டுவதும்,சிறு பூச்சிகளின் கை, கால்களை வெட்டினால் "வாதநோய் -  பக்கவாதம்"  வரும்.

பிறர் குடியை கெடுத்தல்,நல்லோர் மனதை நோகச் செய்தல், பிறர் பசியில் இருக்க அவர் பார்வையில் தான் உணவு உண்டால் வரும் நோய் "குன்மநோய் எட்டு" அதாவது அல்சர், குடற் புண்,இதில் எட்டு வகை நோய் வரும்.[இன்று ஏராளமான பேருக்கு இந்நோய் உள்ளது]

மலராத அரும்பு  பூக்களை கொய்தல், நந்தவனம் அழித்தல், பெற்றோர் மனம் நோகச்  செய்தல் இதனால் "குஷ்ட நோய்" வரும்.

ஊர்ந்து செல்லும் சிறு விலங்குகள்,பறவைகள் போன்றவைகளைக் கொன்றால் வரும் நோய் "வலிப்பு நோய்" ஆகும்.

பிஞ்சு காய்கறிகள், இலை தழை பறித்தல்,பட்டை வெட்டுதல்,வேர் மற்றும் கொடிகள் வெட்டுவதால் பீனிசம்,[சைனஸ்],"ஒற்றைத் தலை வலி, மண்டைக்குத்து, மண்டைக் கரப்பான்" போன்ற நோய்கள் வரும்.

இளம் பயிரை அழித்தல், விந்து அழித்தல், கன்றுக்குரிய பாலைக் குடித்தல்,இதனால் "குழந்தையின்மை" குழந்தை பிறக்காது.

வீண் வம்பு பேசுதல், பிறரைப் பழித்தல், பொய் பேசல், ஆங்காரம் , ஆணவம் போன்ற வற்றால் "சோகை ,பாண்டு" [இரத்த சோகை, கல்லீரல் மண்ணீரல் வீக்கம்] நோய் வரும்.

உயிர்களை வதைத்தல்,ஊன் தின்னல், நன் மங்கையரைக் கற்பழித்தல், பிறர் செய்யும் புண்ணிய காரியங்களைக் கெடுத்தல், குடிநீரைக் கெடுத்தல் போன்றவற்றால் "கிராணி, கழிச்சல்",[சீத பேதி] நோய் வரும்.

பொய் மிக பேசல், பிறரை திட்டுதல், வஞ்சகம் பேசுதல்,கொடுத்த வாக்கை மறுத்தல், விஷமிடல் போன்றவற்றால் "கண், கன்னம், வாய்" பல் போன்றவற்றில் பல வகை நோய் வரும்.

சற்குருவை தூற்றுதல், வழியிலே முள்ளிட்டு வைத்தல் இவற்றால் "வண்டுகடி, ஊறல், கரப்பான்" நோய் வரும்.

வெடி வைத்தல், கல்லெறிதல், சிவ யோகிக்கு சினம் உண்டாக்குதல் இதனால் பிளவை எனும் "இராஜபிளவை" முதுகு தண்டில் வரும்.

பெண்களை மோகக்கண் கொண்டு, காம எண்ணத்துடன் உற்றுப் பார்த்தல்,கோழி ,ஆடு போன்றவற்றை வெட்டும் போது பார்த்தல், ஆலயம் செல்ல விரும்பாமை,தெய்வ நிந்தனை போன்றவற்றால் "கண்நோய் 96" - வகைகள் தோன்றும். 

இதைப் போன்ற ஒற்றுமையான கருத்துக்களைக் கொண்ட வேறு சில சித்தர் பாடல்களை அடுத்த பதிவில் காணலாம்.


நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்
சித்தர் வேதா குருகுலம்
புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் P.O – திருச்சி D.T - 620006
தமிழ்நாடு – இந்தியா

அகத்தியர் குருகுலம் யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம் , சிறுமலை புதூர்
திண்டுக்கல் – D.T
தமிழ்நாடு – இந்தியா

செல் :98654302359095590855 - 9655688786


               2 comments:

கல்யாணகுமார் வீரபாண்டியன் said...

குருதேவர் பரிகாரம் ஏதேனும் கூறி உள்ளாரா?

Vivek Raj said...

will he/ she get these diseases in current birth or next birth?

or if we have these diseases, is it because of our sin what we made in our previous birth? more explanation please?

பதிவுகளின் வகைகள்