இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Sunday 2 June 2013

சாறு வராத மூலிகையில் சாறு எடுக்கும் அரிய செயல்முறை விளக்கம் - Siddha Medicine

சாறு வராத மூலிகையில் சாறு எடுக்கும் அரிய செயல்முறை விளக்கம் - Siddha Medicine



சாறு வராத மூலிகையில் சாறு எடுக்கும் அரிய செயல்முறை விளக்கம் - Siddha Medicine


சித்தர் பெருமக்கள் தங்கள் ஞானத்தால் கண்டறிந்த அதிசய ஆய்வுகள் ஏராளம்.அவைகளில் ஒன்றுதான் சாறு வராத மூலிகைகளில் சாறு எடுக்கும் அரிய இரகசிய முறைகள் ஆகும்.இன்றைய கால கட்டத்தில் இதன் இரகசியம் அறிந்தவர்கள் மிகச் சிலரே நம் தமிழகத்தில் உள்ளனர்.

இறைவனின் இயற்கை படைப்பினில் சிலவகை மூலிகைகள் மற்றும் தாவரங்களில் சாறு எடுக்க முடியாத அமைப்பில் உள்ளன.

சித்த மருத்துவ முறையினில்  பெருமருந்துகள் செய்முறைகளிலும், இரசவாத ஆய்வு மருந்துகள் செய்முறைகளிலும் இவ்வகை மூலிகைத் தாவரங்களில் எடுக்கப்படும் சாறுகளைக் கொண்டு அரைத்துப் புடமிடும் போது பாஷாண மருந்துகள், மற்றும் உலோக மருந்துகள் மிகுந்த வீரியத்துடன் செயல் பட்டு நீடித்த நாட்பட்ட நோய்களை எளிதில் குணமாகுகின்றது.

பொதுவாக சித்தமருந்துகள் ஆய்வுகளில் சாறுவராத மூலிகை என பிரதானமாகக் கூறும் ஒரு மூலிகை விராலி இலை ஆகும்.இந்த விராலி மூலிகையில் இருந்து எடுக்கப்படும் மூலிகைச்சாறு உயர்தரமான இரசமணி செய்முறைக்கு உதவுவது ஆகும்.இம்மணி இரசவாதத்திற்கு பயன்படும்.மேலும் 

சாறு வராத மூலிகைகள் எனக்குறிப்பிடும் போது விராலியிலை மட்டுமல்ல வேப்பிலை, விலவ இலை, மாவிலை, கருவேப்பிலை போன்றவைகளிலும் நீர் தெளிக்காமல் இடித்து சாறு எடுப்பது சுலபமல்ல.வீரமாமுனிவர் வாகடத் திரட்டு என்னும் நூலில் குறிப்பிடும் மால்தேவி செந்தூரம் செய்முறை யில் அரைப்பதற்கு தேவையான கருவேம்பின் சாறு என்ற கருவேப்பிலையின் சாறு எடுக்க இந்த இலைகளை இட்லி அவிப்பது போல் அவித்து பின் பிழிய வேண்டும் என கூறுகின் றார் மருத்துவர் அப்துல்லா சாயபு அவர்கள்.ஆனால் இம் மூலிகைகளில் நீர் சேர்க்காமல் சுயமாக எடுக்கும் சாறுகள் மட்டுமே உயர்ந்த பலனைக் கொடுக்கும்.

சாறு வராத மூலிகைகளில் சாறு எடுக்க நன்றாக முடிக்கப்பட்ட துருசு சுண்ணம் இருந்தால் மட்டுமே முடியும் என சித்த மருத்துவ ஆய்வாளர்கள் அனைவரும் கூறுவார்.ஆனால் முப்பூ சுண்ணம் மூலமாகவும் மூலிகைகளில் சுலபமாக சாறுகள் பிரிக்க முடியும்.இதன் இரகசியம் அறிந்தவர்கள் மிகச்சிலரே.

இவ்வகையில் சாறுவராத மூலிகையில் ஒன்றான கருவேப்பிலையை கையில் வைத்து கசக்கி முப்பூ சுண்ணம் மூலமாக சாறு பிழியும் செய்முறை விளக்கத்தினை மேற்கண்ட வீடியோவில் காணலாம்.அல்லது கீழே உள்ள  YouTube இணைப்பை கிளிக் செய்யவும்.



நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி - T.N 
cell : 9865430235 - 8695455549  

  
         




2 comments:

Unknown said...

Sir mooppu seivathu eppadi please tell me

Unknown said...

Aiyya indil née gal kooriyapadi thurusu sun am
Seyivathu yeppadi yendru vilakkungal..

பதிவுகளின் வகைகள்