இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Friday, 3 May 2013

மூலிகை சாப நிவர்த்தி விளக்கம் – Molikai Saba Nivarthi - Siddha Herbal Sabam Remove

 மூலிகை சாப நிவர்த்தி விளக்கம் – Molikai Saba Nivarthi
மூலிகை சாப நிவர்த்தி விளக்கம் – Molikai Saba Nivarthi

மூலிகைகள் பல்வேறு வித பரிமாணங்களில் செயல்படும் விளக்கம் 

சித்தர் கலைகளில் மூலிகைப் பிரயோகங்களும் மற்றும் பயன்படுத்தும்   விதங்கள் என்பது பல்வேறு நிலைகளில் கையாளப் படுகின்றது.

1 . நாட்பட்ட, கொடிய, கர்மவினை  நோய்களைத் தீர்க்கும் மருத்துவ மூலிகைகள்.

2 . மாந்திரீக அஷ்ட கர்மங்கள் எனப்படும் வசியம், மோகனம், தம்பனம், உச்சாடணம்      போன்றவைகளுக்குப் பயன்படும்  மாந்திரீக மூலிகைகள்.

3 . இரசவாதம் எனப்படும் செம்பு - வெள்ளி - இரும்பு போன்ற தாழ்ந்த உலோகங்களின் அணுக்களை மாற்றி அமைத்து உயர்ந்த உலோகமான தங்கமாக மாற்றும் இரசவாத மூலிகைகள்.

4 - மனிதர்களின் வாழ்க்கையில் நவக்கிரகங்கள் ஏற்படுத்தும் தீய - கொடிய பலன்களை விளக்கி  நற்பலன்களை கொடுக்கும் நவக்கிரக மூலிகைகள்.

5 - பஞ்சபட்சி சாஸ்த்திரத்தில் பயன்படும் மூலிகைகள், தீமை செய்யும் எதிரிகளை கட்டுக்குள் கொண்டு வரவும், எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறவும், செய் தொழிலில் அபாரமான விருத்தி அடையவும், கணவன் மனைவி உறவில் ஏற்ப்படும் வேற்றுமையில் ஒற்றுமை காணவும், உயர் பதவி, பெரும் புகழ், பொருளாதார வளர்ச்சி, வெளிநாடு உத்தியோகம், போன்றவைகளில்  பூர்த்திபெறச் செய்யும்  பஞ்சபட்சி மூலிகைகள்.

6 - பிறவிவினை தோஷம், கர்மவினை தோஷம் இவைகளை நீக்கும் வினை தோஷ நிவர்த்தி மூலிகைகள்.

7 - தொழில் வசியம், ஆண் வசியம், பெண் வசியம், இராஜ வசியம், உலக வசியம், போன்றவைகளுக்குப் பயன்படும் வசிய மூலிகைகள்.

8 - அதிசய மாயாஜாலங்களுக்குப் பயன்படும் அமானுஷ்ய மூலிகைகள்.

9 - திருமணத் தடங்களை சுலபமாக நிவர்த்தி செய்யும் மூலிகைகள், குழந்தைப் பேறு அளிக்கும் மூலிகைகள், சுகப்பிரசவம் வெற்றிபெற வகை செய்யும் தெய்வீக மூலிகைகள்.

10 - வசிய மை, களவு காணும் மை, புதையல் மை, இராஜவசிய மை, மாயாஜால மை, மாயமாய் மறையும் மறைவு மை, போன்றவைகளுக்கு பயன்படும் அமானுஷ்ய மூலிகைகள்.


11 - உடலின் செல்களையும், அணுக்களையும் அழியவிடாமல் காத்து  என்றும் இளமையுடன் வாழச்செய்யும்  காயகற்ப மூலிகைகள்.


இது போன்று பல்வேறு வகைகளில் மூலிகைகள் செயல் படுகின்றன.மேற்கண்ட முறைகள் அனைத்திற்கும் மூலிகைகளைப் பறிக்கும் போது முறைப்படி சாபநிவர்த்தி விதிகளைக் கடை பிடித்து எடுத்தால் மட்டுமே நாம் கோரிய அனைத்து காரியங்களிலும் மூலிகைகள் வெற்றிகரமான பலன்களை  அளிக்கும்...

மூலிகை சாபநிவர்த்தி செய்தல் என்பதில் பல்வேறு சூட்சும இரகசியங்கள் உள்ளன.இதன் உண்மைகளை அறிந்து இன்றைய காலகட்டத்தில் பிரயோகிப்பவர்கள் வெகு சிலரே.இன்றைய நடைமுறை யில் மூலிகைகளை மேற்கண்ட முறைகளுக்காக சேகரிக்கும் அனைவரும் சித்தர் நூல்களில் உள்ள முறைகளைப் படித்து அதன்படி கடைபிடித்து அம் மூலிகைகளின் உண்மையான நற்பலன்களை அடைய முடியாமல் தவிக்கின்றனர்.

எந்த ஒரு சித்தர் நூல்களிலும் "மூலிகை சாப நிவர்த்தி செய்யும் இரகசிய விதிகளை" முழுமையாக பதிவு செய்யவில்லை.இதன் சூட்சும இரகசிய விளக்கங்களை குரு சீட வழி முறையில் மட்டுமே தெளிவாக அறிந்து கொள்ள முடியும். 

உதாரணமாக :- கன்னிநூல் என்பதில் மூன்று வித இரகசியங்கள் உள்ளன.சாப நிவர்த்தி செய்வதில் ஒன்பது வித சாபங்கள் உண்டு.மேலும் சத்ரு மித்ரு விரல் படாமல் எடுப்பது [சுண்டு விரல் மட்டும் அல்ல] இது போன்று   ஏராளமான விளக்கங்கள் உள்ளன.

மூலிகைகளின் அதிசயமான குணங்களையும், அமானுஷ்ய செயல்பாடுகளைப் பற்றி அறிந்து கொள்ளும் சுயநலவாதிகள் மற்றும் துன்மார்க்க எண்ணம் கொண்டோர் இவைகளை மனிதகுல நலனிற்கு எதிராக பயன்படுத்தி விடக்கூடாது  எனக்கருதி மகத்துவம் மிக்க  சித்தர்களும், முனிவர்களும் மூலிகைகளுக்கு சாபமிட்டுள்ளனர்.மேலும் தெய்வீக இறைநிலை சாபங்களும் உண்டு.இவற்றை முறைப்படி சாபநிவர்த்தி செய்து, காப்பிட்டு, உயிர்கொடுத்து எடுத்தால் மட்டுமே மூலிகைகள் உயிர்ப்புடன் நின்று நாம் கோரிய காரியங்கள் அனைத்தும் சித்திக்கும்.

தற்போதைய நிலையில் மூலிகைகளை மேற்கண்ட அமானுஷ்ய செயல்பாடுகளுக்கு எடுக்கும் அனைவரும் சாபநிவர்த்தி விதிகளில் நான்கு அல்லது ஐந்து வித நிலைகளை மட்டுமே கடைபிடிக் கின்றனர்.இதில் மொத்தம் பனிரெண்டு வித நிலைகள் உள்ளன.இந்த பனிரெண்டு வித சூட்சும இரகசியங்களும் எமது சித்தர் வேதா குருகுலத்தில் குரு சீட வழி முறையில்  தகுதி அறிந்து  பயிற்றுவிக்கப் படுகின்றது.  

நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி 
Cell No: 9865430235 - 8695455549

     


7 comments:

kc mohan said...

வணக்கம். இவ்வாறான விடயங்களை உங்கலால் பொதுவில் வைக்கமுடியாத இல்லை தனிப்பட்ட ரீதிரக கூருவிங்கள

kcmohan1987@gmail.com

கவியாழி கண்ணதாசன் said...

எல்லோருக்கும் தெரிந்தால் தவறான நோக்கில் பார்பார்களே

தேடல் said...

அய்யா ,
வணக்கம்
தங்களின் இந்த பதிவை படித்தேன்
இது போன்ற பல சிக்கல்கள் எங்களை
போன்ற ஆர்வமுள்ள புதியவர்களுக்கு மிகபெரிய தடை கல்லாக உள்ளது .
நன்றி,
kumar

imayagiri siddhar said...

நமது தமிழகத்தில் பரவலாக ஒரு தவறான எண்ணம் சித்தர் கலை ஆர்வலர்களிடையே உள்ளது.அதாவது சித்தர் நூல்களைப் படித்து
அதில் குறிப்பிடும் கலைகளில் தேர்ச்சி பெற்று விடலாம் என்பது.

குருவில்லா வித்தை பாழ் !
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது !
தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது !

இந்த பழமொழிகளின் படி சித்தர் கலைகளில் நன்கு தேர்ச்சி பெற்ற
ஒரு குருவின் மூலம் மட்டுமே சீடனாக இருந்து கற்று சித்தி பெற
முடியும்.

எனவேதான் சித்தர்கள் தங்கள் நூல்களில் மருத்துவ முறைகளை
மட்டும் வெளிப்படையாக கூறியுள்ளனர்.

அமானுஷ்ய மூலிகைகள்,மாந்திரீகம்,இரசவாதம்,முப்பூ,யோகம்,
ஞானம்,காயகற்பம்,போன்ற கலைகளை பரிபாஷை சொற்களாக
பதிவு செய்துள்ளனர்.இவைகளை அனுபவமாக பிரயோகம் செய்ய
தக்கதொரு குருவின் துணை கண்டிப்பாக வேண்டும்.

"குருவும், தாரமும் வைப்பது இறைவன் செயல்"

எனவே அனைத்து சூட்சுமங்களையும் கற்றறிந்த ஒரு குருவை
அடையாளம் காட்ட இறைவனை வேண்டுங்கள்.நேரம் வரும்போது
அவரே குருவை உணர்த்துவார்.

நன்றி !
இமயகிரி சித்தர்...
www.siddharprapanjam.org

zakeer hussain said...

aya ungalidam sisyanaga sera yenna thgudi vendum. yevvalavu naal gurukkulattil thanga neridum adarkku guru dakshnai yenna naan mumbai l vasikren dayavu seidu vilakungal .09323589505. zakeerkr@gmail.com

imayagiri siddhar said...

சித்தர் குருகுல பயிற்சிகள் மற்றும் அதன் இரகசியங்கள் சில நாட்களில் குரு சீட முறையில் நேரடி பயிற்சியில் கற்றுக்கொள்ள முடியும்.

இதன் கட்டணம் மற்றும் விபரங்களுக்கு :

Dr.நாகராஜ் அவர்கள் செல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

செல் :9865430235 - 8695455549

நன்றி !
இமயகிரி சித்தர்...
www.siddharprapanjam.org


shankar said...

HI ALL THIS ARE BEEN WRITTEN BY AGATHIYAR.PLS REFER HIS BOOKS.TRY SOMETHING NEW.

M.SHANMUGAVEL.(08111885946)

பதிவுகளின் வகைகள்