இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Wednesday, 6 March 2013

பஞ்சபட்சி சாஸ்திரம் -பயிற்சி - Panjapatchi Sasthiram

பஞ்சபட்சி சாஸ்திரம்  - Panjapatchi Sasthiram  
பஞ்ச பட்சி சாஸ்திரம்

ஆய கலைகள் என போற்றப்படும் 64 -கலைகளை யும் விட மேன்மை பெற்ற கலைகளாக விளங்குவது நான்கு கலைகள் ஆகும் அதுவே சரகலை:பஞ்சபட்சி: கெவுளி சாஸ்திரம்: கொக்கோகம்: என்ற நான்கு வித சித்தர் கலைகள் ஆகும்.

இந்த அபூர்வ சாஸ்த்திரங்களை யோகிகள்"ஞானிகள்" முனிவர்கள்"சித்தர்களும் பல்லாயிரம் வருடங்களாக மிகவும் இரகசியமாக பயன்படுத்தியும் பாதுகாத்தும் பயிற்சி அளித்தும் வந்துள்ளனர்.

இவைகளை பல வருடம் தம்முடனே இருந்து தொண்டுகள் செய்து குருவின் திருப்பாதமே கதி என இருந்து வரும் விசுவாசமுள்ள சீடனுக்கு மட்டும் இக் கலைகளின் அரிய இரகசியங்களை உபதேசித்து வந்துள்ளனர்.

இதில் பஞ்சபட்சி சாஸ்திரம் எனப்படும்  மகத்துவம் வாய்ந்த இக்கலை ஆதியில் எம்பெருமான் ஈசன் அன்னை மகாசக்தி உமையவளுக்கு உபதேசித்த அபூர்வ கலையாகும்.

தமிழ்க் கடவுளாகிய சுப்பிரமணியர் சூரபத்மனுடன் போரிட்டு அவனை வெல்ல முடியாமல் போகவே அவனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு தாயாகிய மகாசக்தியால் சுப்பிரமணியருக்கு உபதேசித்த உன்னத கலையாகும் "பஞ்ச பட்சி சாஸ்திரம்" இதனையே சூரனை வதம்செய்ய  முருகனுக்கு அன்னை மகாசக்தி வேல் கொடுத்ததாக சொல்வர்.

சூரனை வதம் செய்து வெகு காலம் சென்ற பின்பு குருமுனி யாகிய அகத்திய முனிவருக்கு முருகப் பெருமான் பஞ்ச பட்சி சாஸ்த்திரத்தை உபதேசம் செய்தார்.


அகத்தியரும் மற்ற சித்தர்களுக்கு  உபதேசித்தார் இக்கலையைப் பயின்ற சித்தர்களும் தம்மிடம் உள்ள உண்மையான சீடர்களுக்கு மட்டும் குருவழி உபதேசம் அளித்து வந்துள்ளனர்.  


பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது ஜோதிடக்கலையிலும் மேலான மிகவும் துல்லியமான ஒரு காலக்கணிதம் ஆகும்.இது பஞ்ச பூத சக்திகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது ஆகும். 

நவக்கிரகங்கள்,பன்னிரு இராசிகள்,இருபத்தேழு நட்சத்திரங்கள் ஆக மொத்தம் - 48- இவை அனைத்தையும் ஐந்து பட்சிக்குள் (பறவைகள்)அடக்குவதே இதன் சூட்சும இரகசியமாகும்.

பஞ்சபூதம் எனப்படும் நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் எனப்படும் ஐந்து வித மாபெரும் பிரபஞ்ச சக்திகளை பஞ்சபட்சி எனப்படும் வல்லூறு,ஆந்தை,காகம்,கோழி,மயில்,என ஐந்து வித பறவைகளாக மாற்றி அமைத்து இக்கலையை உருவாக்கியது இறைவனின் வல்லமையாகும்.

சரம்  தெரிந்தவனிடம்  சரசமாடாதே 
பட்சி தெரிந்தவனிடம்  பகைகொள்ளாதே 
பல்லி சொல்பவனிடம் பதில் பேசாதே 
என்பது பெரியோர் வாக்குவாகும்.

மேற்கண்டபடி  பஞ்சபட்சி தெரிந்தவனை பகைத்துக் கொண்டால் பகைத்தவனை எளிதில் சாய்க்கும் வல்லமை அவனுக்கு உண்டு என்பதால்தான்.இன்றும் தென் தமிழகத்தில் இக்கலையின் இரகசியம்  அறிந்த ஆசான்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர்.இக்கலையினைப் பயன் படுத்தி சேவல் சண்டை, ஆட்டுகிடா சண்டை,சிலம்பம் ,பிரச்சனை வழக்குகள்,போன்றவற்றில் தன்னைச் சார்ந்தவர்களை மட்டும் வெற்றி பெற வைத்து வருகின்றனர். 

அதே சமயம் பஞ்சபட்சி கலையின் சூட்சும சக்தியைப் பயன்படுத்தி வாழ்வில் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவரை வாழ்வில் மிகவும் உச்ச நிலையில் உயர்த்தி பணம்,பதவி,புகழ், ஆகிய வற்றை  எளிதில் அடைய வைக்க முடியும்.மேலும் பஞ்சபட்சி நுட்பத்தினை அறிந்தவன் ஜெகத்தை ஆள்வான்,அவனை எவரும் வெல்ல முடியாது என்பது அறுதியிட்ட உண்மையாகும்.

இக்கலையை பயன்படுத்தி மாந்திரீக அஷ்ட கர்மம் ஆடலாம்,செய்தொழில்,காரியங்கள்,வாழ்க்கையில் முன்னேற புதுவித திட்டங்கள் போன்றவற்றை உடனே நடைமுறைக்கு கொண்டு வரவும், தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறவும் முடியும்.மேலும்

நவக்கிரகங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் வல்லமை இக்கலைக்கு உண்டு.நாள் ,திதி ,நட்சத்திரம் ,யோகம் ,கரணம் ,நேரம் ,லக்கினம் ,போன்ற அனைத்து தோஷங்களும் பஞ்சபட்சியினைக் கட்டுப் படுத்த இயலாது.

இன்று இத் தெய்வீகக் கலையின் அதிசூட்சும இரகசியங்கள் அறிந்த ஆசான்கள் வெகுசிலர் மட்டும் தான் உள்ளனர்.    

உண்மையான மெய்குருவிடம் சென்று பணிந்து இக்கலையை கற்கும் ஒருவனை பஞ்சபூத சக்திகள் துணை நின்று காக்கும்.அவன் வாழ்வில் மேன்மை பெற்று சீரும் சிறப்புடன் வாழ வகை செய்யும்.அதே சமயம் இக்கலையின் மூலமாக சத்ருக்களை துன்புறுத்தவோ,அழிக்கவோ நினைத்தால் ஏழு ஜென்ம பாவ வினைகள் வந்து சேரும். 

எனவே இந்த தெய்வீகக் கலையினை குருவின் வழியில் சென்று கற்று சித்திபெற்று தான் வாழ்வில் வளம் பெறுவதுடன், தன்னைச்சுற்றி உள்ளோரையும் வாழ்வில் வளம் பெறச்செய்யலாம். 


சித்தர்கள் இயற்றிய பஞ்சபட்சி சாஸ்திரம் பற்றிய நூல்கள் அனைத்தும் பூட்டு மட்டுமே,இவற்றின் "திறவுகோல்"ஒரு சில ஆசான்களிடம் மட்டுமே உள்ளது.அதில் குறிப்பிடப்படும் குருகுலமாக எமது "சித்தர் வேதா குருகுலம்"மட்டுமே இன்று உள்ளது.மேலும் இதன் வெளிவராத பல உண்மை இரகசியங்கள் இங்கு பயிற்றுவிக்கப் படுகின்றது.என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.1 -இன்றைய நடைமுறையில் உள்ள பஞ்சபட்சி சாஸ்த்திர நூல்கள் அனைத்தும் ஒரு மூலநூலைப் பார்த்து பிரதி எடுக்கப் பட்டவை என்ற உண்மை விளக்கம்.

2 -"பஞ்சபட்சி வசிய சித்தி" முறை இரகசியம்.இதனை சித்தி செய்தால் மட்டுமே பஞ்சபட்சி எனப்படும் இந்த பஞ்சபூத சாஸ்த்திரம் நமக்கு கட்டுப் பட்டு பூரணமாக வேலை செய்யும்.

3 -"நங்கிலி" என்னும் மூலிகையின் உண்மை இரகசியம். இதன் தெளிவான நேரடி விளக்கம். 

4 -"பஞ்சபட்சி திறவுகோல் இரகசியம்" இந்த இரகசியத் திறவு கோல் மூலமாகத்தான் சித்தர்கள் பஞ்சபட்சி சாஸ்த்திரத்தின் அந்தர நாழிகை,ஜாமம் கணக்கிடும் முறை,எதிரி பட்சியை   கணிப்பது, படுபட்சி அறிவது, வளர்பிறையில்,தேய்பிறையில் பட்சிகள் ஜாமம் மாறும் இரகசியம், போன்றவை களை கணித்தார்கள்.இந்த திறவுகோல் இதுவரை எந்த ஒரு சித்தர் நூலிலும் மற்றும் ஓலைச்சுவடி களிலும் பதிவு செய்யப்பட  வில்லை.சித்தர் குருகுல பாரம்பரிய முறையில் நேரடி உபதேசமாக மட்டுமே கொடுக்கப்பட்டு வரப்படுகின்றது.

5 - "சிதம்பர இரகசியம்" என்னும் பஞ்சாட்சர மாறல் இரகசிய பிரயோக முறை விளக்கங்கள்.

6 -பஞ்ச பட்சி சாஸ்த்திர முறையில் அஷ்ட கர்ம பிரயோக முறை இரகசிய விளக்கங்கள்.வசியம்,மோகனம்,தம்பனம்,ஆகர்ஷணம்,வித்துவேசனம், போன்றவைகளை அனுபவ முறையில் பிரயோகிக்கும் வழி முறைகள்.

 7 - பஞ்சபட்சி மூலிகைகளை உயிர் நிலை நிறுத்தி எடுக்கும் இரகசியம்.
  * கன்னிநூல் காப்பு கட்டி எடுக்கும் குருமுறை இரகசியம் இதில் 10 -வித செயல்கள் உள்ளன.இந்த 10 -வித நிலைகளையும் முறைப்படி கடைபிடித்து எடுத்தால் மட்டுமே  மூலிகைகள் உயிர்  நிலைநின்று மாந்திரீக அஷ்டகர்ம வேலைகளை செய்து முடிக்கும்.  


  "குருவும்   தாரமும்   வாய்ப்பது  இறைவன்  செயல்" என்பதற்கிணங்க சித்தர் கலைகளில் உள்ள சூட்சும இரகசியங்களை கற்பிக்கும் குரு கிடைக்க இறைவனின் பேரருள் வேண்டும்.    

           
தொட்டுக் காட்டாத வித்தை 
சுட்டுப் போட்டாலும் வராது   
என்பதற்கிணங்க இக்கலையின் அதிநுட்ப இரகசியங்களை குருமுறையில் கற்றுக்கொள்ளலாம். ஜோதிடர்கள் மற்றும் மாந்திரீகம் தொழில் புரிவோருக்கும் சித்தர் கலை ஆர்வலர்களுக்கும் இக்கலை யினைக் கற்க ஒரு அரிய வாய்ப்பு.


எமது அகத்திய மாமுனி பாரம்பரிய "சித்தர் வேதா குருகுலத்தில்"  பஞ்ச பட்சி சாஸ்த்திரத்தின் ஆதியந்த இரகசியங்களை அனுபவ முறைப் பிரயோகமாக குருகுல வழியில்  தீட்சை மற்றும் உபதேசம் அளிக்கின்றோம்.[குருகுல முறையில் பயிற்சி பெற விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.]

 நன்றி !
இமயகிரி சித்தர்...

சித்தர் வேதா குருகுலம்
www.siddharprapanjam.org

cell No:09865430235 - 08695455549 
                   

8 comments:

JEEVA RASU said...

வணக்கம் அய்யா நீண்டநாள் பிறகு வந்தமைக்கு நன்றி...........இந்த பஞ்சபட்சிக்கு மூலிகைகள் தனி தனியாக உண்ட இல்லை ஒரே மூலிகை தான் இருகிறதா..... ஏன் என்றால் நீங்கள் நங்கிலி என்று மூலிகை
கூறிநீங்க அதன் இதை நாங்க எப்படி கத்துகிறது.....ஒரு ரகசிய தீர்வு கூறுங்கள் நீங்கள் புத்தகம் வழி கூறுங்கள்..........

Thiyaga Rajan said...

வணக்கம்.

பஞ்ச பட்சி வசியம் கற்றுக்கொள்ள விளக்கம் தரவும்.
அன்புடன்
அ. தியாகராசன்
8903237464
uma01@rediffmail.com

imayagiri siddhar said...

Thiyaga Rajan

பஞ்சபட்சி கலையை அனுபவ முறையில் பிரயோகம் செய்யும்
இரகசியங்களை குருசீட வழியில் கற்க :

செல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்:
9865430235 - 8695455549

நன்றி !
இமயகிரி சித்தர்...

Sanjeivkrishnan said...

அய்யா வணக்கம், உங்கள் பிளாக் படித்தேன், மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்... குருகுல முறையில் பல பயிற்சிகள் கற்றுத் தருவதை அறிந்ததும் ஆனந்தமடைந்தேன். அய்யா அவர்களே, இந்த குருகுல பயிற்சிகள் பற்றி விரிவாக தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்... என்ன செய்வது???

Sanjeivkrishnan said...

அய்யா வணக்கம், உங்கள் பிளாக் படித்தேன், மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்... குருகுல முறையில் பல பயிற்சிகள் கற்றுத் தருவதை அறிந்ததும் ஆனந்தமடைந்தேன். அய்யா அவர்களே, இந்த குருகுல பயிற்சிகள் பற்றி விரிவாக தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்... என்ன செய்வது???

imayagiri siddhar said...

Sanjeivkrishnan

சித்தர் குருகுல பயிற்சிகள் மற்றும் அதன் இரகசியங்கள் சில நாட்களில் குரு சீட முறையில் நேரடி பயிற்சியில் கற்றுக்கொள்ள முடியும். இதன்

கட்டணம் மற்றும் விபரங்களுக்கு : Dr.நாகராஜ் அவர்கள் செல் எண்ணில் தொடர்பு கொள்ளவும். செல் :9865430235 - 8695455549

நன்றி ! இமயகிரி சித்தர்... www.siddharprapanjam.org on

testt said...

test

testt said...

Please list the people feedback who learned panja patchi sasthiram.

It will help more people to learn this art.

Thanks

பதிவுகளின் வகைகள்