இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Wednesday, 6 March 2013

இரசமணி -இரசலிங்கம் -விளக்கம் - Rasamani -Rasalingam

இரசமணி -இரசலிங்கம் -விளக்கம் - Rasamani -Rasalingamஇரசமணி -இரசலிங்கம் -விளக்கம் - Rasamani -Rasalingam

இரசமணி என்பது திரவ நிலையில் உள்ள பாதரசத்தை (Mercury) மூலிகைகள்,உப்பு வகைகள்,பாஷாணங்கள் ஆகிய வைகளைக் கொண்டு திட ரூபமாகக் கட்டி புடமிட்டு சாரணைகள் ஏற்றி மணியாக்கி மந்திர உருவேற்றி தெய்வீக சக்தி மிக்கதாக மாற்றுவதே இரசமணி ஆகும்.

சித்தர் தத்துவத்தில் பாதரசம் சிவ விந்து என குறிப்பிடப்படுகின்றது.இதில் உஷ்ணமும்,குளிர்ச்சியும் சமமாக உள்ளது. சூடான பொருளோடு சேர்ந்தால் சூட்டின் குணத்தையும்,குளிர்ச்சியான பொருளோடு சேர்த்தால் குளிர்ச்சியையும் தரும் வேறு எந்தப் பொருளுக்கும் இந்த அரிய குணம் இல்லை.மேலும் பஞ்சபூத சக்தியின் ஐந்து குணங்களையும் கொண்ட ஒரே பொருள் பாதரசம் மட்டும் தான்.  

எனவேதான் சித்தர்கள் பாதரசம் ஒன்றை மூலப்பொருளாக வைத்து தெய்வீக மெய்ஞானம்,இரசவாதம்,அஷ்டமா சித்து போன்றவைகளை எளிதில் சித்தி அடைந்துள்ளனர்.இரசமணியில் ஒன்பது வகையான மணிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு அதிசய ஆற்றல்கள் கொண்டது.

உண்மையான இரசமணி என்பது நவபாஷாணங்களில் ஒன்றான "ஜாதிலிங்கம்" என்ற பாஷாணத்திலிருந்து பதங்கம் என்ற முறையில் எரித்து சூதம் என்ற பாதரசத்தை பிரித்து எடுப்பதே "வாலைரசம்" எனப்படும். இதிலிருந்து சுத்தி முறையில் ஏழு வித தோஷங்களை பிரித்து எடுத்து பின்பு இரசமணியாகக் கட்டினால் தெய்வீக இரசமணி ஆகும்.

இன்றைய காலகட்டத்தில் இப்படி முறைப்படி இரசமணி செய்து முடிக்க நாட்கள் பல ஆவதுடன் பணமும் ஏராளமாக  ஆகின்றது,ஆனால் பலன்களை முழுமையாகக் காணலாம்.

கருவூரார் சித்தரின் பாடல் :
"இருந்துபார் சூதத்தை எவ்வண்ணத் தாலும் 
இடுக்கினவன் தேவனடா ஆனால் இடுக்கமில்லை"

சூதம் என்ற பாதரசத்தை தெய்வீக சக்தி மிக்க இரசமணியாகக் கட்டுவதற்கு சித்தர்களின் அனுக்கிரகமும்,குருவின் ஆசி பெற்றவர்களால் மட்டுமே கட்ட முடியும்.இவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள்.    

இரசமணி பற்றி தேரையர் சித்தர் பாடல் :-
அந்த மாக்கும் அரசும் அளித்திடும் 
சுத்த மாக்கும் சுகத்தை மிகத்தரும்
புத்த மந்திர பூத பிசாசு பேய் 
இத்த னைக்கும் இயம னிதாமே                   

முறைப்படி கட்டிய இரசமணியை அணிவதாலும் ,பூஜிப்பதாலும் ஜனவசியம்,பெரிய பதவி,இரத்த விருத்தி -சுத்தி, உண்டாகும் தாது குறைவு,நரம்புத்தளர்ச்சி இவை நீங்கி உடல் வலுப்பெறும்.

சகல மந்திர ஏவல்,பூதம்,பேய்,பிசாசு இவைகளால் ஏற்ப்படும் வினைகளுக்கு இது யமன் போன்றது.மேலும் இந்த இரசமணி சகல அஷ்ட ஐஸ்வர்யங்களை யும் கொடுக்கும்.

தெய்வீக இரசமணியை அணிவதாலும் ,பூஜித்து வருவதாலும் உண்டாகும்  நன்மைகள் :

1 -இதனை அணிவதால் ஜனவசியம் ,தொழில் வசியம் உண்டாகும்.

2 -இரசமணியை முன்பக்கமாக அணிந்து செல்ல சகல காரிய வெற்றி உண்டாகும்.

3 -உடலில் துர்நீரைப் போக்கி இரத்தத்தை சுத்தி செய்யும்.

4 -மறதியை நீக்கி மூளைக்கு ஞாபக சக்தியை பெருக்கும்.

5 -மனதை ஒரு நிலையில் நிறுத்தி ஞானத்தை விருத்தி செய்யும்.

6 -எதிரிகளால் ஏவப்படும் பில்லி ,சூனியம்,ஏவல்,வைப்பு இவைகள் உங்களை அணுகாமல் எதிர்த்து காக்கும்.

7 -அறம் ,பொருள் ,இன்பம்,என்ற மூன்று வகை பேரினையும் தர வல்லது.

8 -இயற்கை சக்திகளான இடி,மின்னல்,மற்றும் வாகன விபத்துக்கள் போன்றவைகளிலிருந்து பாதுகாக்கும்.
9 -உடலில் அணிவதால் நரம்புகள் வலுப்பெற்று மூப்பை விளக்கி ஆயுளை பெருக செய்யும்.

10 -நவக்கிரகங்களின் தீய தோஷங்களைப் போக்கி நல்ல பலன்களை கிடைக்கச்செய்யும்.

11 -ஒருவருடைய ஜாதகத்தில் ஒரு தசாவோ,புத்தியோ பலன் அளிக்காது என்று இருந்தாலும் இந்த மணியை அணிந்து வருவதால் அவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைப்பது உறுதி.

12 -இரசமணியை அணிந்து வருவதாலும் பூஜித்து வருவதாலும் நினைத்த காரியம் நிறைவேறும்,சுப காரியங்கள் தடையின்றி நடக்கும்,கோர்ட் வழக்குகளில்  வெற்றி கிட்டும்,கல்வி மேன்மை பெரும்,புத்திர பாக்கியம் கிட்டும், வேலை வாய்ப்பு கிட்டும்,வெளிநாடு பயண யோகம் கிட்டும்,மேல் நிலை அதிகாரிகளிடம் மதிப்பும் மரியாதையும் கிட்டும்.

13 -இரசமணி அல்லது இரசவிநாயகர் உருவில்,இரசலிங்க உருவில்,வைத்து வீடுகளிலும் வியாபார ஸ்தலங்களில் முறைப்படி பூஜித்து வர கண்திருஷ்டி, ஓமலிப்பு,ஏவல்,பில்லி,சூன்யம்,முதலிய தோஷங்கள் விலகிவிடும்.அஷ்ட ஐஸ்வர்யம் கிட்டும்.குடும்பம் விருத்தியாகும்,தொழிலில் வியாபாரம் பெருகி அதிக லாபம் கிட்டும்.

14 -தெய்வீக மூலிகை ரட்சை ,மந்திர எந்திரங்கள் இவைகளை விட தெய்வீக ஆற்றலை முழுமையாகக் கிரகித்து கொடுக்கும் ஆற்றல் இரசமணி மற்றும் இரசலிங்கம் இவைகளுக்கு உண்டு.

[ தெய்வீக இரசமணி ,இரசலிங்கம் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும். ]

நன்றி !

மெய்திரு, இமயகிரி சித்தர்
சித்தர் வேதா குருகுலம்
22, புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் P.O – திருச்சி D.T - 620006
தமிழ்நாடு – இந்தியா

அகத்தியர் குருகுலம், யோக ஞான பீடம் 
அகஸ்தியர் புரம் , சிறுமலை புதூர்
திண்டுக்கல் – D.T - 624003
தமிழ்நாடு – இந்தியா

செல் :98654302359095590855 – 9655688786 – 8695455549

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கங்களை அறிந்தேன் ஐயா...

நன்றிகள் பல...

Net Coolers said...

ஐயா
பித்தப்பை கற்களுக்கு தீர்வு கூறவும், உங்களிடத்தில் மருந்து இருந்தாலும் கூறவும்.
நன்றி சுரேஷ்

imayagiri siddhar said...

திரு சுரேஷ்

பித்தப்பை கல் என்பது சிறுநீரகக்கல் போல் எளிதாகக் கரையக்
கூடியதல்ல.சித்த மருத்துவ முறையினில் மிகவும் அனுபவம்
உள்ள மருத்துவர்களின் மேற்ப் பார்வையில் சிகிச்சை பெற
வேண்டியவை ஆகும்.

தற்போது உங்கள் மனைவிக்கு வாந்தி, உணவு செரியாமை,
மலச்சிக்கல் போன்ற உபாதைகள் உள்ளதா என எமக்கு
தெரிவிக்கவும்.

இதனை அறுவை சிகிச்சையின்றி முழுமையாக குணப்படுத்த
முடியும்.எனவே இதற்கான சிகிச்சை பெற விரும்பினால்
செல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

செல் :-9865430235-
8695455549-

நன்றி!
இமயகிரி சித்தர்...
www.siddharprapanjam.org

இதற்கான பதில் your mail -feb -21-ம் தேதியில் முன்பே அளித்துள்ளேன்.

அரு.மாணிக்கம் said...

வணக்கம் ஐயா,
இரசமணி அசல் என்பதை எப்படி அறிந்துகொள்வது. தற்பொழுது தரித்துள்ளவர், அதை எப்படி பூஜை செய்வது மற்றும் cleasning செய்சவது. தயவு செய்து விளக்கவும்.
aru.manikam@gmail.com

karthi said...

அன்புள்ளம் கொண்ட இமயகிரிசித்தர் அவர்களுக்கு என் உளம்கனிந்த வணக்கங்கள்,
I Saw about RASAMANI, Now urgently I want that RASAMANI, what can i do sir? antha RASAMANI Anivathal nan ninaitha kaariyam udanea enakku nirai vearuma? nan entha oru kaariyam seithalum athu enakku avamanangal than micham.. ennai yarum mathikka maatranga.. nan oru ponnai virumbukirean. antha ponnu enakku ellorum sammathathodu enakku kidaikkanum..en aasai niraivearuma? pls comment sir..
"OM SIVAYA NAMA"

"OM SIVAYA NAMAHA"

Vinoth Kumar said...

Sir,

i would like to buy RASAMANI. please let me know cost of rasamani.
where i can come and collect it.

Thanks & Regards,
Vinoth

பதிவுகளின் வகைகள்