இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Saturday, 16 March 2013

முப்பூ பற்றிய விளக்கம் - muppu

முப்பூ பற்றிய விளக்கம் - muppu

முப்பூ பற்றிய விளக்கம் 

          சித்தர்கள் தங்கள் ஞானத்தால் கண்டறிந்த கலைகள் ஏராளம் . அவற்றில் உயர்நிலைப்  பிரிவுகளான  மருத்துவம் ,மாந்திரீகம் ,இரசவாதம் , யோகம் ,ஞானம் ,காயகற்பம் போன்றவைகளாகும் 
        
இக்கலைகளை  எளிதில் சித்தி  அடைவதற்கு அதிசய சக்திகளை தன்னகத்தே கொண்ட மெய்பொருள் ஒன்று  இறைவனால் படைக்கப்பட்டு பூமியில்  வைக்கப்பட்டுள்ளதை , சித்தர்கள்  தங்கள்  மெய்யறிவால் இதனை கண்டறிந்து இவற்றின்  மூலமாக  மேற்கண்ட  கலைகளில் வெற்றியடைந்து பூரணத்துவம்  பெற்றனர் .இம் மகத்துவம்  வாய்ந்த  மெய்பொருளே முப்பூ  என்பதாகும் . இதில் ஐந்து வகைகள் உள்ளன.
          
1 -வைத்திய முப்பூ  :-
      அனைத்து சித்த மருந்துகளிலும் பத்தில் ஒரு  பங்கு முப்பூ   சேர்த்து கலந்து கொடுக்கும்போது பல மடங்கு வீரியத்துடன்  செயல்பட்டு  நாட்பட்ட நீடித்த  நோய்களும்  விரைவில்  குணமடையச்  செய்கின்றது . இந்த வைத்திய முப்பூவிலும் இரண்டு  வகை  உண்டு .ஒன்று “சூரண முப்பூ” , இன்னொன்று "வைத்திய குரு முப்பூ"என்பது இதனை பஸ்பம், செந்தூரம், லேகியம், போன்ற  மருந்துகளில் சிறிதுஅளவு மட்டுமே  கலந்து கொடுக்க வேண்டும்.சூரண முப்பூ பற்றிய விளக்கம் ஒரு பதிவாக இடப்பட்டுள்ளது.   

இதில் சொடுக்கி பார்க்கவும் – 
2 -மாந்திரீக முப்பூ :-
     மாந்திரீக அஷ்டகர்மப் பிரயோகங்களில் பயன்படும் மூலிகைகளில், மை வகைகளில், எந்திரங்கள் போன்றவற்றில் மாந்திரீக முப்பூவை ஒரு மிளகு வைத்து மந்திர உச்சாடணங்கள்  செய்யும் போது தெய்வ சக்தி , தேவதை சக்திகள்,மற்றும் பஞ்சபூத சக்திகள் முன்னின்று நாம்  கோரிய  காரியங்கள் , வசியம் , மோகனம் ,தம்பனம் ,போன்ற காரியங்கள் அஷ்ட கர்ம பிரயோகங்களை எளிதில் செய்து முடிக்கும். 
      
3 -வாத முப்பூ :-
       இரசவாத  ஆய்வுகளில்  பயன்படும் செம்பு ,வெள்ளி, பாதரசம், போன்றவைகளில் உள்ள கழிம்புகளை நீக்கி உயர்ந்த   உலோகமான  தங்கமாக  மாற்றும்  வல்லமை கொண்டது. இரசவாத முப்பூ வாகும்.

4 -கற்ப முப்பூ :-
      நமது உடலில் தினமும் பலகோடி செல்கள் தோன்றி,அழிந்து கொண்டுள்ளது.இப்படி அழியும் செல்களை காத்து உடலில் முதுமையை வரவிடாமல் என்றும் இளமையாக வாழ வகை செய்வது "காயகற்ப முப்பூ" வாகும்.மேலும் நோயெதிர்ப்பு செல்களை அதிகரித்து நோய்களே வரவிடாமல் காக்கும் வல்லமை கொண்டது இம் முப்பூவாகும்."ருத்திர முப்பூ"என்பது இந்த வகையை சார்ந்தது ஆகும்.

5 -ஞான முப்பூ :-
    பிரபஞ்ச இரகசிய விதிகளின் உண்மைகளை அறிந்து கொள்ளும் ஆற்றலையும்,பஞ்சபூத சக்திகளை கட்டுப் படுத்தும் வல்லமையும்,எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பேரருள் கொண்ட இறைவனை காணும் ஆற்றலை அளிக்க வல்லது ஞான முப்பூ வாகும்.

   மேற்கண்ட ஐந்து வித முப்பூ பற்றிய ஆய்வுகளை செய்து வரும் ஆய்வாளர்கள் நமது தமிழகத்தில் சிலர் மட்டுமே உள்ளனர். இவர்களில் ஒருவரும் தங்களை வெளியில் அடையாளம் காட்டிக்கொள்ள விரும்புவதில்லை.

   மேற்கண்ட ஐந்து வித முப்பூ செய்வதற்கு வெவ்வேறு வகையான மூலப்பொருள்கள் உள்ளன.மெய்ப்பொருள் என்னும் பிளாசபர் ஸ்டோன் [Philosophers stone] ஒன்று உள்ளது, இவைகளை தக்கதொரு குருவின் துணையுடன் கண்டறிந்து நியம விதிகளின்படி சேகரித்து சித்தர்கள் வழிமுறைப்படி தீட்சைகள் செய்து முடிப்பதே முப்பூ வாகும்,

   முப்பூ பற்றிய ஆய்வுகளை அனைவரும் எளிதாகச் செய்யக்கூடிய ஆய்வுகள் அல்ல.பூர்வஜென்ம விட்டகுறை, தொட்ட குறை உள்ளவர் களுக்கும், இறைவனின் கருணையும்,சித்தர்களின் ஆசியும்,குருவின் அருளும் பூரணமாய் கிடைக்கப் பெற்ற வர்களுக்கு மட்டுமே முப்பூ என்னும் மாயக்கலை சாத்தியமாகும்.


நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி 
www.siddharprapanjam.org
cell :09865430235 - 08695455549       3 comments:

JEEVA RASU said...

இமையகிரி அய்யா.............காலை வணக்கம்.
சித்தர்கள் மூலிகையை கருப்பு நீறமாக மாற
கரம்பை மண் மற்றும் செங்கொட்டை பயன்படுத்தி
மூலிகை கரும் மூலியாக மாற செய்தார்கள்.....
அதுபோல முப்புக்கு அதுபோல எதாவது செயற்கை
முறை இருகிறதா?அப்படி இருந்தால் அதனை விவரமாக
கூறுங்கள்???
!!!நன்றி ஜீவா!!!

imayagiri siddhar said...

ஜீவ ராசு !

முப்பூ செய்வதற்கு தேவைப்படும் மூலப்பொருள்கள் இறைவனின்
அருட்கொடையினால் இயற்கைப் பொருள்களாக பஞ்சபூத சக்திகளுடன்
இப் பூமியில் படைக்கப்பட்டுள்ளது அவற்றை குருவின் துணையுடன்
கண்டடைந்து இதிலுள்ள விஷம் என்னும் நஞ்சுவை நீக்கி தசதீட்சை
செய்தால் அமிர்தம் என்ற முப்பூ வாகும்.

இதனை நூல்கள் படிக்கும் அறிவை மட்டும் வைத்து கொண்டு சாதிக்க
முடியாது.நன்கு தேர்ச்சி பெற்ற ஒரு குருவின் துணையுடன் மட்டுமே
இவைகளை செய்து முடிக்க முடியும்.எனவே முதலில் மெய்யறிவைப்
பெற்ற குருவை அடையாளம் காட்ட வேண்டி இறைவனிடம் வேண்டி
வாருங்கள்.

"குருவும் தாரமும் வாய்ப்பது இறைவன் செயல்"என்பதற்கிணங்க அவர்
குரு யாரென உணர்த்துவார்.குருவின் திருவடியைப் பற்ற முப்பூ என்னும்
அரிய கலை எளிதில் சித்தியாகும்.

நன்றி !
இமயகிரி சித்தர்...
www.siddharprapanjam.org

JEEVA RASU said...

நன்றி அய்யா

பதிவுகளின் வகைகள்