இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Thursday 7 March 2013

மஞ்சள் காமாலை - JAUNDICE - நோயை குணப்படுத்தும் சித்தமருத்துவம்

மஞ்சள் காமாலை - JAUNDICE - நோயை குணப்படுத்தும் சித்தமருத்துவம் 








மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் சித்தமருத்துவம் 

மனிதர்களிடம் தோன்றும் நோய்களில் மிகவும் கொடியதாக கருதப்படும் நோய்களுள் ஒன்றுதான் மஞ்சள் காமாலை நோயாகும்.

இதனை ஆங்கில மருத்துவ முறையில் கல்லீரலை தாக்கும் நோய் (ஹெபடைடிஸ்  வைரஸ் A -B-C) என வகை பிரித்துள்ளனர்.நமது உடலில் கல்லீரல் மிக முக்கியமான உறுப்பு, இதன் சராசரி எடை1.36-1.86 கிலோ. கல்லீரல் வேதிப் பொருட்கள் உதவியுடன் உணவு பொருள்களை சிதைக்க செய்து கழிவுகளை சமநிலைப்படுத்துகிறது. ஹெபடைட்டிஸ் வைரஸ் கல்லீரல் திசுக்களை தாக்கி, செயலிழக்க செய்து உடனடியாக மரணத்தை ஏற்படுத்து கிறது.  இதன் அறிகுறியே மஞ்சள் காமாலை. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வைரஸ்களில் ஐந்தாவது இடத்தை ஹெபடைடிஸ்-பி வைரஸ் பெற்றுள்ளது. எய்ட்ஸ் வைரசை விட இது வேகமாக பரவி வருகிறது.


உலக மக்கள் தொகையில் 200 கோடி பேர் கல்லீரல் நோயால் (ஹெபடைடிஸ் பி)  பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 40 கோடி பேர் மிக நீண்ட காலமாக இந்த நோய் பாதிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் 50 லட்சம் பேருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆங்கில மருத்துவ முறையினில் மஞ்சள்காமாலை நோயினை முற்றிலும் குணப்படுத்த மருந்துகள் இல்லை.இதனை உலக சுகாதார மையம் (W.H.O)  அறிவித்துள்ளது.ஆனால் சித்தமருத்துவ முறையினில் இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியும்.

சித்தமருத்துவ முறையினில் மஞ்சள் காமாலை நோயினை 13 -வகைகளாக பிரித்துள்ளனர்.இவைகளில் 7 -வகை எளிதில் தீரும். மீதம் 6 - வகை சிறிது நாட்கள் கழித்து தொடர் சிகிச்சையில் குணமாகும்.இவற்றிற்கான மருந்துகளை மிகவும் தெளிவாக ஆராய்ந்து குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நோய் வரும் காரணங்கள் :
1 - சுகாதாரமற்ற குடி நீர்
2 - தவறான உணவு பழக்கங்கள் -(Fast Food)
3 - புகைபிடித்தல் மற்றும் மதுஅருந்துதல் 
4 - அதிகமான உடலுறவு 
5 - உடலில் தோன்றும் அதீத சூடு (உஷ்ணம்)
6 -வெயில் காலங்களில் அலைச்சல் 
போன்றவைகளினால் மஞ்சள்காமாலை நோய் தோன்றுகின்றது.

நோய் கண்டறியும் விதம் :
உடல்சோர்வு,நாவறட்சி,அதிகதாகம்,பசியின்மை தலைசுற்றல்,வாந்தி,காய்ச்சல், சிறுநீர் மஞ்சள் நிறமாகக் கழிதல்,கண்களில் மஞ்சள்நிறம்,வியர்வையில் மஞ்சள் நிறம்,மலம் வெளுத்து இறுகிய நிலையில் வெளியேறு தல்,மற்றும் வலது விலாப்பகுதியில் வீக்கம் ,வலி தோன்றுதல்.

மஞ்சள்காமாலை நோயினை சிறுநீர் பரிசோதனையிலும்,இரத்தப் பரிசோதனை யிலும் சுலபமாகக் கண்டறிய லாம்.இரத்தத்தில் பிலிரூபின் டெஸ்ட் (Billirubin Test) எடுத்துப் பார்த்து அது இரத்தத்தில் எவ்வளவு கலந்து பரவி யுள்ளது என கண்டறிந்து அதற்கேற்றார் போல் சித்தமருத்துவ முறையினில் மருந்துகளை தேர்வு செய்து குணப்படுத்தலாம்.

மஞ்சள்காமாலை நோயினை கண்டறிய  இரத்தத்தில் பிலிரூபின் டெஸ்ட் -  Billirubin Test -Total 
1 - 0.8 mg -இருந்தால் அது நார்மல் 
2 - 1,5 mg -இருந்தால் அது துவக்க நிலை 
3 - 4 mg  மற்றும் அதற்கு மேல் இருந்தால் நோய் முற்றிய நிலை 

தமிழகத்தில் மஞ்சள்காமாலை நோய்க்கு சித்தமருத்துவ முறையிலும், பரம்பரை வைத்திய முறையிலும் பல வித்தியாசமான முறைகள் கையாளப்பட்டு குணப் படுத்தப் படுகின்றது.

1 - மூலிகை மருந்துகளை அரைத்து தலையில் பூசுதல் (தப்பளம் இடுதல்)
2 -கண்களில் மூலிகைச்சாறு சொட்டு விடுதல்
3 - இளநீரில் மருந்து கலந்து காலையில் 3-நாள் கொடுத்தல் 
4 -வெற்றிலையில் மருந்து வைத்து சாப்பிட கொடுத்தல் (பீடா)
5 - கையின் மேற் புரத்தில் மருந்து வைத்து கட்டி விடுதல் 
6 - காய்ச்சாத பசும்பாலில் மூலிகைமருந்து கலந்து கொடுத்தல் 
7 - மூலிகை சரக்குகள் கசாயம் செய்து கொடுத்தல் 

போன்ற முறைகள் பல தலைமுறைகளாக இரகசியமாக கையாளப் படுகின்றது. இதன் மருத்துவ முறைகளைக் கையாண்டு வரும் பாரம்பரிய மருத்துவர்கள் தனது வாரிசுகள் தவிர வேறு யாருக்கும் கற்றுக்கொடுப்ப தில்லை.

மஞ்சள்காமாலை நோய் வந்து பாதித்த நிலையில் ஒரு அன்பர் சிகிச்சைக்கு எம்மிடம் வந்தார்.இரத்தத்தில் பில்லிரூபினை பரிசோதனை செய்து வந்து பார்த்தபோது அதில் 7.5 mg இருந்தது.அவருக்கு மேற்கண்ட தலைக்கு தப்பளம் இட்டு, உள் மருந்துகள் கொடுத்து தொடர்ந்து 45 -நாட்கள்   சாப்பிட்டதில் பில்லிரூபின் அளவு 0.8 ஆக குறைந்து முற்றிலும் குணமானார்.அவருக்கு தலையில் மூலிகை மருந்து தப்பளம் இட்டபோது எடுத்த படங்கள் மேலே உள்ளது.


நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் 
www.siddharprapanjam.org
cell :09865430235 - 08695455549     


2 comments:

பாவா ஷரீப் said...

அருமை சித்தர் அய்யா

என்ன மருந்து என்று அறியத் தாருங்கள் சித்தர் அய்யா

நன்றி

Unknown said...

Thanks sir

பதிவுகளின் வகைகள்