இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Saturday, 5 January 2013

சித்தர் இரசவாத அதிசயங்கள் -Siddhar Miracle Alchemy

சித்தர் இரசவாத அதிசயங்கள் -Siddhar Miracle Alchemyசித்தர் இரசவாத அதிசயங்கள் -Siddhar Miracle Alchemy

இரசமணி -1
மகத்துவம் வாய்ந்த சித்தர் கலைகளில் ஒன்றுதான் இரசவாதம் ஆகும்.
இரசவாதத்தின் அடிப்படை சூத்திரங்களில் ஒன்றுதான் பாதரசத்தை -
(Mercury) நெருப்பில் வைத்து காய்ச்சும் போது அது ஆவியாகிவிடாமல்
நெருப்பை வென்று கட்டுப்பட்டு நிற்கும் "இரசமணி" நிலை. இப்படி
முறையாகக் கட்டிய இரசமணி "அஷ்டமா  சித்தி"களை கொடுக்கும் 
ஆற்றல் கொண்டது.இது சுயமாக பாதரசம் "வாலை ரசம்"இயற்கை 
பொருள்களிலிருந்து எடுக்கப் பட்டு பின் இரசமணி யாகக் கட்டியது.  

இரசவாதப் பொன் -2
பூமியில் இயற்கையாகத் தோன்றிய தாழ்ந்த நிலை உலோகங்களான 
இரும்பு,செம்பு,வெள்ளி,சிறுகண் நாகம் போன்றவைகளை இரசவாத 
செய்முறைகளின் மூலமாக உயர்ந்த உலோகமான தங்கமாகவும்,
தங்கத்திற்கு நிகரான மாற்று நிறைந்த உலோகமாக மாற்றும் நிலை.

அய செம்பு -3-   இரச செம்பு -4     நாக செம்பு -5
இயற்கையில் தோன்றிய உலோகங்களை அதன் அணுக் கூறுகளை
மாற்றி அமைத்து வேறு உலோகமாக மாற்றி அமைக்கும் "சித்தர் 
ரசவாத முறை"  நவீன விஞ்ஞானத்திற்கு சவால் விடும் முறைகள்.

இதன் விளக்கம் :-
3- அய செம்பு -அயம்(Iron) என்ற இரும்பை செம்பு (Copper)வாக மாற்றியது.
4- இரச செம்பு-பாதரசத்தை(Mercury)  செம்பு  (Copper)வாக மாற்றியது.
5- நாக செம்பு -சிறுகண் நாகத்தை (Zinc )  செம்பு  (Copper)வாக மாற்றியது.
மேலும் மயிலின் இறகு முடியிலிருந்து "மயில் ரோமச்செம்பு" பிரிப்பது 
துரிசு (Copper  sulphate )விலிருந்து     "துருசு  செம்பு"போன்றவைகளைப் 
பிரித்து எடுப்பது என்பது சித்தர் இரசவாத முறைகளில் அரிய செய்முறை
கள் ஆகும்.மேலும் தங்கத்தைக் கூட செம்பாக மாற்றுவதும் "தங்க செம்பு"
கூட சித்தர் இரசவாதத்தின் மிகப் பெரிய அம்சமாகும்.

சரி ஒரு உலோகத்தை மற்றோர் உலோகமாக மாற்றுவதில் செம்புவாக 
மாற்றுவதில் என்ன நன்மை உள்ளது.?

பொதுவாக சித்தர்கள் தாமிரம் எனப்படும் செம்புவை இறைவன் சிவனின்
அம்சமாகக் கருதுகின்றனர்.ஆனால் சாதாரண செம்புவில் களிம்பு உள்ளது 
இந்த களிம்பு இல்லாத செம்புவாக மாற்றுவது இரசவாதக் கலையாகும்.
களிம்பு இல்லாத செம்புவினால் செய்யப்படும் "இறைவனின் விக்ரகம்"
"சித்த மருந்துகள்"மிகப் பெரிய தெய்வீக ஆற்றலுடன் செயல்படும்.

உதாரணம், சிதம்பரத்தில் அருள் புரியும் பேரம்பலவனனாகிய நடராஜரின் 
திருமேனி "சித்தர் கருவூரார்" பெருமானால் சோழ மன்னன் இரணிய வர்மன்
கொடுத்த சொக்கத் தங்கத்தை செம்பாக மாற்றி விக்ரகம் வடிக்கப்பெற்றது.
இந்த தங்கச்செம்புவை ஒரு பங்கு எடுத்து நூறு பங்கு வெள்ளியில் உருக்கி
கொடுத்தால் நூறு பங்கு சொக்கத் தங்கமாகும்.இதுவே "சிதம்பர ரகசியம்"         

இது போன்ற அரிய செய்முறைகள் தமிழகத்தில் மிகச்சிலரிடம் மட்டுமே 
இரகசியமாக இருந்து வருகின்றது.பொருள் பேராசையினால் சித்தர் 
இரசவாத முறைகளில் ஆய்வு செய்வோருக்கு இக்கலை கைகூடாது 
என்பது சித்தர்கள் இட்ட சாபமாகும்.

நன்றி !
இமயகிரி சித்தர்...

No comments:

பதிவுகளின் வகைகள்