இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Thursday 14 March 2013

வள்ளலார் பெருமான் கூறும் முப்பூ செயல் விளக்கம் -Muppu

வள்ளலார் பெருமான் கூறும் முப்பூ செயல் விளக்கம் -Muppu

சித்தர்கள் நூல்களில் பல இடங்களில் முப்பூ பற்றிய விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் எந்த ஒரு நூலிலும் முப்பூ பற்றிய முழு விபரங்கள் மற்றும் செய்முறை விளக்கங்கள் முழுமையாக பதிவு செய்யப் படவில்லை.இவை அனைத்தும் ஏராளமான பரிபாஷை சொற்களாகவே உள்ளன.

முப்பூ என்பதில் பல வகைகள் உள்ளன.

1 - வைத்திய முப்பூ 
2 - இரசவாத முப்பூ 
3 - ஞான முப்பூ 
4 - காயகற்ப முப்பூ 
5 - மாந்திரீக முப்பூ

போன்ற ஐந்து வகை உள்ளன.ஆனால்  இதில் இரண்டு வகைதான் என வாதிடுவோரும் உண்டு.வைத்திய முப்பூ பற்றிய விபரம் நமது “சித்தர் பிரபஞ்சம்” தளத்தில் முன்பே பதிவு செய்துள்ளோம்.

பொதுவாக முப்பூ பற்றிய ஆய்வுகளை நமது இந்திய சித்தர் பெருமக்கள் மட்டும் ஆய்வு செய்யவில்லை,உலகம் முழுதும் மேலை நாட்டு ஞானிகளும் ஏராளமான ஆய்வுகள் செய்து வெற்றி கண்டுள்ளனர். தமிழகத்தில் இன்றும் பலர் முப்பூ ஆய்வு செய்து வருகின்றனர்.ஆனால் இவர்கள் தங்களைப் பற்றியோ தான் ஆய்வு செய்யும் மூலப்பொருள் பற்றிய இரகசியங்களை வெளியிடுவதில்லை.

இது போன்ற முப்பு  ஆய்வாளர்களையும்,பாரம்பரிய சித்த மருத்துவர் களையும் ஒருங்கிணைத்து திருச்சியில் "இந்திய பாரம்பரிய சித்தமருத்து வர்கள் மற்றும் முப்பூ ஆய்வாளர்கள் கூட்டமைப்பு"எனும் அமைப்பை தொடங்கி கடந்த மூன்று வருடங்களில் 25 –ஆய்வுக்  கருத்தரங்குகள் நடத்தியுள்ளேன்.இக் கருத்தரங்குகளில் ஏராளமான ஆய்வு இரகசியங்கள், மற்றும் சித்த மருத்துவ அனுபவ முறை இரகசியங்கள் பகிர்ந்து கொள்ளப் பட்டது.

மேற்கண்ட முப்பூ வகைகளில் ஒன்றை இப்போது பார்ப்போம் :

நமது இந்துமத புராணங்களில் குறிப்பிடப்படும் ஒரு நிகழ்வு அதில் தேவர்களும்,அசுரர்களும்,இணைந்து சாகாவரம் வேண்டி திருப்பாற்கடல் கடைந்து என்றும் சாகாமல் வாழும் அமிர்தத்தை பெற்றனர்.என்பது ! இதனைப் பற்றி வள்ளலார் பெருமான் தனது "திரு அருட்பா -உரைநடைப் பகுதி" எனும் நூலில் 381 -ம் பக்கத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார்.



                                                                                                   


33. பாற்கடல் கடைந்தது 
திருப்பாற்கடல் கடைந்து அமுதபானம் தேவர்கள் செய்யும் பொருட்டு விஷத்தை ருத்திரர் (சிவபெருமான்)உட்கொண்டார் என்பதற்குப் பொருள் :-திருப்பாற்கடல் என்பது தேங்காய்,அமுதமென்பது அதன் ஜலம்.தேங்காயின் பாலிலுள்ள எண்ணையே விஷம்.மேற்படி எண்ணையாகிய விஷத்தைப் போக்குவது ,முப்பூ வாகிய ருத்திரன்.ஆதலால் தேங்காய்ப் பாலிலுள்ள விஷமாகிய எண்ணையை முப்பூவால் போக்குவது ருத்திரன் விஷம் சாப்பிட்டது.இவ்வாறு அண்டத்திலும்,பிண்டத்திலும்,பெளதிகத்திலும், தாதுக்களிலும் கடல்கள் உள்ளன.

கருப்பஞ்சாற்றுக் கடல் என்பது - கரும்பு 
மதுக்கடல் என்பது - தேன் 




இது போன்ற அமிர்த நீரினை தயார் செய்து சித்தமருந்துகளில் சேர்த்து அரைத்து மருந்துகளை வீரியமாக சக்தி ஏற்றி நீடித்த நாட்பட்ட நோய்களுக்கு அளிக்கும் போது நோயாளர்கள் விரைவில் குணம் பெறுகின்றனர்.மேற்கண்ட வள்ளல் பெருமான் குறிப்பிடுவதை செயல் விளக்கங்களாக பாருங்கள் :





தேங்காயை அரைத்து பிழிந்து வடித்த தேங்காய்ப் பால் 





ருத்திரன் எனப்படும் முப்பூ 



இதன் அளவு ருத்திர முப்பூ தேங்காய் பாலில் போடுவது





தேங்காய் பாலில் உள்ள எண்ணையாகிய விஷம் பிரிந்து எடுத்த அமிர்த நீர்.



தேங்காய் பாலில் உள்ள எண்ணையாகிய விஷம் பிரிந்து எடுத்த அமிர்த நீர். இதுவே சித்தர்கள் நூலில் கூறும் "சுத்த ஜலம்" மேலும் சித்தர் நூல்களில் குறிப்பிடும் “அமுரி நீர்” என்பதுவும் இதற்குப் பொருந்தும். அமுரி என்பது சிறுநீர் அல்ல.

இது போன்ற அமிர்த நீரினை தயார் செய்து சித்தமருந்துகளில் சேர்த்து அரைத்து மருந்துகளை வீரியமாக சக்தி ஏற்றி நீடித்த நாட்பட்ட நோய்களுக்கு அளிக்கும் போது நோயாளர்கள் விரைவில் குணம் பெறுகின்றனர்.


நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி
www.siddharprapanjam.org
cell :09865430235 - 08695455549  


4 comments:

ஈஸ்வரி said...

ருத்திர முப்பூ...என்றால் என்ன?..விளக்கவும் .. :)

Karthik said...

ருத்திர முப்பூ...என்றால் என்ன? guruji...

இமயகிரி சித்தர் said...

//ருத்திர முப்பூ...என்றால் என்ன?..விளக்கவும் .. //

இதற்கான விளக்கம் "முப்பூ பற்றிய விளக்கம்"என்ற தலைப்பில்
விபரமாக அளிக்கப்பட்டுள்ளது.அதில் சென்று வாசிக்கவும்.

நன்றி !
இமயகிரி சித்தர்...
www.siddharprapanjam.org

Anonymous said...

Ebola வுக்கு மருந்து கண்டுபிடிக்கலாமே !
ஏன் தாமதம் .

பதிவுகளின் வகைகள்