இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Tuesday, 31 July 2012

சாகா வரம் தரும் முப்பு -(குரு மருந்து )

சாகா வரம் தரும் முப்பு -(குரு மருந்து )


இன்றைய நடை முறையில் உள்ள மருத்துவ முறைகளில் தலை 

சிறந்த தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவ முறையில் உள்ள சிறப்பு 

வேறு முறைகளில் இல்லாதவை  ஆகும்.முப்பு,இரசவாதம்,காயகற்பம்,

போன்ற உயர் நிலை ஆய்வுகள் இதில் மட்டுமே உள்ளன.சித்தர்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு கூறிய இவ்வரிய ஆய்வு 

கள் இன்றும் நடை பெறுகிறதா என சந்தேகம் எழலாம்.இதற்கான விளக்

கம் மேலே உள்ள கட்டுரையில் உள்ளது.சித்த மருத்துவ முறையினில் 

மணி மகுடமாகப் போற்றப்படும் "முப்பு"செய்யத் தேவையான மூலப் 

பொருள்களில் "பூநீர்" மற்றும்  "அண்டக்கல்"மிக முக்கியமானவை.


இதைக் கொண்டு தயாரிக்கப்படும் முப்பூவை சித்த மருந்துகளில் 

சேர்த்துக்கொடுக்கும் போது மருந்துகள் பன்மடங்கு வீர்யத்துடன் செயல் 

பட்டு நாட்பட்ட நோய்களையும் விரைவில் குணப்படுத்தும். 


 

இதனை  எந்த இடங்களில்,எந்த மாதங்களில்,எந்த திதிகளில் எப்போது 

சேகரிக்க வேண்டும் என்பதனை சித்தர்கள் தங்கள் நூல்களில் விபரமாக

கூறியுள்ளனர்.இதனை பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மற்றும் ஆய்வா

ளர்கள் தொன்று தொட்டு ஒவ்வொரு வருடமும் சேகரித்து பயனடைந்து 

வருகின்றனர்.இது போன்ற ஆய்வுகளை இப்போது   சித்த மருத்துவ 

கல்லூரியில் படிக்கும் பட்டதாரி மருத்துவர்களும் ஆய்வு செய்யத் 

தொடங்கி உள்ளனர்.அகத்தியர் பெருமான் முப்புவை சேகரிக்க அவர்  

சிறப்பாகக் குறிப்பிடும் தளமான சிவகங்கை கோவானூரில் சென்ற  

வருடம் நாங்கள் குழுவுடன் பூநீர், அண்டக்கல் சேகரிக்கச்சென்ற பொது 

"குமுதம் ரிப்போர்ட்டர் "நிருபர்கள் கண்ட நேரடிக்காட்சி மற்றும் பேட்டி 

இவைகளின் விளக்கம்.

  

                                                                        நன்றி:குமுதம் ரிப்போர்ட்டர்

                                                                 இமயகிரி சித்தர்...                    

Sunday, 29 July 2012

பாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்

பாம்பு  விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள் 

பாம்பு  விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள் 

உலகில் ஆயிரக்கணக்கான பாம்பு வகைகள் உள்ளன.அதில் -246-வகை பாம்பு கள் இந்தியாவில் உள்ளன.அயர்லாந்து, நியூசிலாந்து, ஆர்ட்டிக் போன்ற பகுதி களைத் தவிர உலகின் அனைத்து பகுதிகளிலும் பாம்புகள் காணப்படுகின்றன.
பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது சில  வகைப் பாம்புகளைத் தவிர  பெரும்பான்மையான பாம்புகள் விஷ  மற்ற வையே. இந்தியாவில் வாழக்கூடிய நச்சுப் பாம்புகளில் ஆறு வகைப் பாம்புகள் தான் மிகவும் அபயமளிக்கக் கூடியவை அவை,

1.நல்ல பாம்பு  - 2.கட்டு வீரியன்- 3.கண்ணாடி வீரியன்,4.சுருட்டை பாம்பு - 5.கரு நாகம் - 6. ராஜ நாகம்.

மேற்கூறிய ஆறு வகைகளில் முதல் நான்கு வகைகளே நம் நாட்டில் பெருமளவு காணப்படுகின்றன.பாம்பு விஷக் கடிக்கான முறிவு மருந்து "சீர நஞ்சு" (anti -venum) இந்த நான்கு வகை பாம்பு விஷத்தை சேகரித்து கலந்து அதைக் குதிரை க்கு சிறிது சிறிதாக ஊசி மூலம் செலுத்தி பிறகு அதன் இரத்தத்தில் இருந்து சீரம் பிரித்து எடுக்கின்றனர்.இதுவே அலோபதி மருத்துவத்தில் அனைத்து பாம்பு கடிக்கும் விஷ  முறிவு மருந்தாக பயன் படுத்தப் படுகின்றது .ஒருவருக்கு பாம்பு கடித்து விஷம் ஏறிய நிலையில்  இந்த "சீர நஞ்சு" நல்ல குணமளிக்கும் மருந்து தான்  ஆனால் பாம்பு கடிக்காத நிலையில் இந்த ஊசி மருந்தைப் போட்டால் இதுவே விஷமாகி அந்த மனிதர் இறந்து விடக்கூடும். 

பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்   
      
நல்லபாம்பு கடித்து விட்டால் மருந்து :

கடிவாய் எரியும்,வாந்தி வரும், நடை தளரும்,மயக்கம் வரும், மூக்கில் நுரை வரும், உயிர்ப்பு தடை படும்,இறப்பு நேரிடும்,வேப்பிலை கசக்காது,மிளகு காரம் இருக்காது,ஆடு தீண்டாப்பாளை வேர் இனிக்கும்,  இரு பற்கள் தடம் இருக்கும் குருதி பெரும்பாலும் வராது இதற்க்கு அரை மணி நேரத்தில் மருந்து கொடுத்து விட வேண்டும் .

வாழை மட்டையைப் பிழிந்து அதன் சாற்றை 200-மி.லி.கொடுக்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம்.நினைவற்று இருந்தால் உடைகளைக் களைந்து வாழை மட்டையில் படுக்க வைக்கவும் ,வாய் திறக்கும் வாழைப் பட்டை சாற்றை ஊற்றலாம். விஷம் முறிந்து பிழைத்துக் கொள்வார் கள்.

வீரியன் பாம்பு கடித்து விட்டால் மருந்து :

இது  கடித்து விட்டால் கடி வாய் தொடர்ந்து எரியும்,குருதி தொடர்ந்து வரும்,கடி வாய் சதை வீங்கி நீல நிறமாக மாறும்,வாயில்,மூக்கில் குருதி வரும்,சிறு நீரும் குருதியாகும்,ஆடு தீண்டாப் பாளை வேர் உப்புக்கரிக்கும் சிரியா நங்கை,வேம்பு கசக்காது.இது கடித்த அரை மணி நேரத்தில்  சிரியா நங்கையை அரைத்து நெல்லி அளவு கொடுத்தால் விஷம் இறங்கி வரும் ,10-நிமிடம் கழித்துக் சிறிது கொடுத்தால் கசக்காத மூலிகை சிறிது கசக்கும்,மீண்டும் பத்து நிமிடம் கழித்துக் கொடுத்தால் கசப்பு நன்றாகத் தெரியும் விஷம் படிப் படியாக இறங்குவது தெரியும்.

ஆங்கில மருத்துவம் நம் பூமியில் கால் பதிக்கும் முன் இது போன்ற சித்த பாரம்பரிய மூலிகை மருந்துகள் தான் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றி வந்துள்ளது. 


நன்றி !

மெய்திரு, இமயகிரி சித்தர்
அகத்தியர் குருகுலம் யோக ஞான பீடம்
அகத்தியர் புரம்,
சிறுமலை புதூர் P.O
திண்டுக்கல் - 624003

சித்தர் வேதா குருகுலம்
22,புஷ்பக் நகர் - A.M ரோடு
ஸ்ரீரங்கம் - 620006
திருச்சி  DTMobile : 9865430235 - 9095590855 - 9655688786   

Friday, 27 July 2012

பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள்

பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் 


கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன் உலகோர்க்

கெல்லாம் காரமா மூலியடா பங்கம்பாளை கொண்டு

வந்து உன் மனையில் வைத்திருந்தால் கொடிய விடம் 

அணுகாது குடியோடிப்போம் நன்றான நாகதாளிக் கிழங்கு 

தானும் நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா அன்றான 

ஆகாசகருடன் மூலி அம்மனையிலிருக்க விடமற்றுப்போம் 

                                                                                 சித்தர் பாடல்


பாடல் விளக்கம்:

ஆடு தீண்டாப்பாளை ,நாகதாளிக் கிழங்கு,ஆகாச கருடன் 

கிழங்கு,சிறியா நங்கை,இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து

வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள், பாம்புகளை 

நெருங்க விடாது.


பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் :

சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை

அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது 

கலந்து பாம்பு இருக்கும் பகுதியில் சுற்றி தெளித்து விட பாம்பு 

சீராது ,கடிக்காது, ஓடாது அங்கேயே மயங்கி கிடக்கும்.

எளிதில் பிடித்து அடித்து விடலாம் .  

    

  நன்றி !

      இமயகிரி சித்தர்...

Wednesday, 25 July 2012

அதிசய சஞ்சீவி மூலிகை செயல் விளக்கம்

அதிசய சஞ்சீவி மூலிகை செயல் விளக்கம் 


அதிசய சஞ்சீவி மூலிகை செயல் விளக்கம் 

மகத்துவம் வாய்ந்த சித்தர்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே நம்ப முடியாத பல அதிசய,அமானுஷ்ய  கருத்துக்களை தங்கள் நூல்களில் பதிவு செய்துள்ளனர்.

அவை இன்றைய அறிவியல் உலகில் சாத்தியமா என்ற  கேள்விக்கான விடைகள் மற்றும் ஆதாரங்களை நாமறிந்தவரையில் ஒவ்வொன்றாக வெளியிடுகின்றோம்.

இதுவரை நாம் செவி வழிக் கதைகளாகவே கேட்டு வந்த  பூட்டைத்திறக்கும் அதிசய "சஞ்சீவி மூலிகை"பற்றிய அறிய செயல் விளக்கம்தான் இது. பாக்யா வார இதழில்  சுமார் 21- வருடங்களுக்கு முன் வெளி வந்த சிறப்புக் கட்டுரை இதை நிருபர்களுக்கு முன் நேரடி செயல் விளக்கம்  அளித்தவர் எமது நண்பர் மதுரை "வர்ம ஆசான் திரு R.ராஜேந்திரன்" அவர்கள்.

இவர்தான்  இயக்குனர் திரு.ஷங்கர்அவர்கள் இயக்கி நடிகர் திரு கமலஹாசன் அவர்கள் நடித்து மாபெரும் வெற்றியடைந்த  "இந்தியன்" திரைப்படத்திற்கு "வர்ம முத்திரைகள் மற்றும்  வர்மத் தாக்குதல்"செயல் விளக்கப்பயிற்சி அளித்தவர்.

இந்த திரைப்படத்திற்குப் பிறகுதான் வர்மக் கலை யின் மகத்துவம்  உலகெங்கும் அறியப்பட்டது .சில மாதங்களுக்கு முன்பு ஜீ  தமிழ் தொலைக்காட்சியில்  திரு வர்ம ஆசான் R.ராஜேந்திரன் அவர்கள் செயல் விளக்க மளித்த "நோக்கு வர்மத் தாக்குதல்"பரபரப்பாகப் பேசப்பட்டது .

                                                                    நன்றி ! பாக்யா வார இதழ்…

நன்றி !
இமயகிரி சித்தர் ...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி - T.N 
cell : 9865430235 - 8695455549               

Sunday, 15 July 2012

கொல்லிமலை கலிங்கம் ஓலைச்சுவடி-இரசவாத,காயகற்ப,அதிசய, மூலிகைகள்

கொல்லிமலை கலிங்கம் ஓலைச்சுவடி

இரசவாத,காயகற்ப,அதிசய, மூலிகைகள் ஆய்வு -அடையாளம் செய்முறை   விபரம் -பாகம்-1

கொல்லிமலை கலிங்கம் ஓலைச்சுவடி

இரசவாத,காயகற்ப,அதிசய, மூலிகைகள் ஆய்வு -அடையாளம் செய்முறை   விபரம் -பாகம்-1சித்தர்கள் தங்கள் இறை ஞானத்தால் கண்டறிந்தவைகளை தங்களின் சீடர்களும்,உலக மக்கள் அனைவரும் பயன் பெரும் வகையில் ஓலைச்சுவடிகளில் பதிவு செய்துள்ளனர். இவைகளில்    பல வழி வழியாக தொன்று தொட்டு வரும் பாரம்பரிய சித்த மருத்துவர்களிடமும்,ஆன்மீக மடாலயங்களிலும், ஜோதிடர்களிடமும்,சித்தர் கலை ஆய்வாளர்களிடமும் இரகசியமாக இருந்த சுவடிகளில் பல சரியான முறையில் பராமரிக்காமல் அழிந்து போனது போக இன்றும் ஏராளமான ஓலைச்சுவடிகள் பலரிடம் உள்ளன.


அவைகளில் ஒன்றுதான் "கொல்லிமலை கலிங்கம்" என்னும் பெயருடையது, இந்த ஓலைச்சுவடி சேலம் மாவட்டத்தைச்சேர்ந்த "பெருமாள் சேர்வை"  என்ற பாரம்பரிய  சித்த வைத்தியரிடம் இருந்து பெறப்பட்டது. இதில் கொல்லிமலையில் கிடைக்கக் கூடிய பல அரிய மூலிகைகளின் இருப்பிடம், அவைகளை இரசவாதம்,காயகற்பத்திற்க்கு எப்படி பயன் படுத்தலாம் என்ற இரகசிய செய்முறை விளக்கங்களும் விபரமாக கூறப்பட்டுள்ளது.


இந்தசுவடியில் உள்ளவைகளை சித்தமருத்துவர்களுக்கும், சித்தர்கலை ஆய்வாளர் களுக்கும் பயன் பெரும் விதத்தில் எளிய முறையில் பதிவு செய்கின்றேன். இதில் காணப்படும் விபரங்கள் பல நமது அறிவுக்கு எட்டாதவையாக உள்ளன.


"கொல்லி" என்பது சேர மன்னன் ஆட்சி செய்த மலைகளில் ஒன்று."கலிங்கம்" என்ற சொல் இம்மலையில் உள்ள ஊர் ஒன்றை குறிக்கும்.இக் கலிங்கத்திற்கு வடக்கே ஒரு பரந்த பாறை உண்டு.இந்த பாறையில் நின்று மேற்கு திரும்பி ஒரு நாழிகை தூரம் நடந்து செல்ல ஊசிக்கல்,நெரிக்கல் நிறைந்திருக்கும்.
அங்கு "அழு கண்ணி" உண்டு அதனுடைய இலை சன்னமாயும்,பூ மஞ்சள் நிறமாகவும் எந்நேரமும் நீர் கசிந்து கொண்டு இருக்கும்.அதன் காய் கெட்டியாய் இருக்கும்.

அதற்க்கு அடுத்த மேல் புறத்தில் "தொழு கண்ணி" உண்டு.இதன் இலை நீண்டதாய் பசுமையாய் இருக்கும்.சூரியன் திரும்பும் திசையில் திரும்பும்,புத்துளிர் கருப்பாய் இருக்கும். இலை வெள்ளி போலும் பூ மை போல் இருக்கும்.

ஒரு கரண்டியில் மூன்று வராகன் எடை பாதரசம் விட்டுஅழு கண்ணியும், தொழு கண்ணியும், இடித்து  பிழிந்த சாற்றை விட்டு சுருக்கு கொடுக்க இரசம் கட்டி மணியாகும் (இரசமணி) இதனுடன் கெந்தியைச்சேர்த்து உருக்க செம்பாகும்.இதை வெள்ளியுடன் சேர்த்து உருக்க பொன் மாற்றாகும்.

அழுகண்ணியும் ,தொழுகண்ணியும் சாபம் நீக்கி பறித்து நிழலில் காய வைத்து இடித்து சூரணம் செய்து வெறுகடி அளவு மலைத்தேனில் குழைத்து எந்த சப்தமும் இல்லாத அமைதியான இடத்தில் இருந்து   ஒரு மண்டலம் உண்ண நரை, திரை, மாறும். இரு மண்டலம் உண்ண முன்னூறு வருடம் இருப்பான். ஆறு மாத காலம் உண்ண அனேக காலம் இருப்பான். 

மேலே சொல்லிய பாறையில் அமாவாசை இரவில் இருந்து  தென் மேற்கு மூலையில் பார்த்தால்   "ஜோதிவிருட்சம்" தெரியும் இதன் பட்டையை கல் கொண்டு தட்டி எடுத்து வந்து எருமைப்பாலில் ஊரப்போட்டு பருத்தி விதைப்பிரமாணம் கந்தகம் கூட்டி இருபத்தோரு நாள் அரைத்து தேற்றான் விதைஅளவு உருண்டை செய்து நிழலில் உலர்த்தி, காலை, மாலை பசுவின் பாலில் அருந்த காயசித்திஉண்டாகி அனேக அனேக காலம் வாழ்வான்.

அந்த பர்வதத்திற்குதென் மேற்கு திசையிலிருந்து வடகிழக்கு திசை நோக்கி ஒரு ஆறு ஓடும் .அதன் ஓரத்தில் "எருமைக் கணை விருட்சம்"உண்டு அந்த மரத்தை சுற்றி வந்து குத்தினால் பால் வடியும்.அந்த பாலுடன் தேன் கலந்து உட்கொள்ள மூர்ச்சையாய் விடும். மூன்றே முக்கால் நாழிகை (90-நிமிடம்) அப்படியே விடவும்.பிறகு பசும்பாலுடன் தேன் கலந்து அவன் வாயில் ஊற்றிக்கொண்டு இருக்க அப்பால் எழுந்திருப்பான்.நரை, திரை மாறி   காயசித்தியாகி அனேககாலம் இருப்பான்.

இந்த ஓலைச்சுவடியில் "சதுரகிரி மலையில்" உள்ள அபூர்வ மூலிகைகள் பற்றிய விபரம் ஏராளமாக உள்ளது. அதை பாகம்-2,ல் தொடர்வோம் 


நன்றி !
இமயகிரி சித்தர்...   
சித்தர் வேதா குருகுலம் - தென் இந்தியா
www.siddharprapanjam.org 
cell no :09865430235 - 08695455549  
        

Friday, 13 July 2012

ஆண்மைக்குறைவு நீக்கும் கீரைகள் சித்த மருத்துவ பழமொழிகள் விளக்கம் -2

சித்த  மருத்துவ பழமொழிகள் விளக்கம் -2


ஆண்மைக்குறைவு நீக்கும் கீரைகள்

  

நறுந்தாளி  நன்முருங்கை தூதுளை பசலை 

வாளிளறு கீரை நெய்வார்த்துண்ணில் யாழிஎன 

விஞ்சுவார் போகத்தில் பெண்களெல்லாம் 

பின் வாங்கிக் கேள் 

 

இந்தியாவில் சுகாதாரத்துறை ஆய்வு கணக்கெடுப்பில் இன்றைய ஆண்களிடம் 75% வீதம் ஆண்மைக்குறைவு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


"கொக்கோகம்" என்ற காம சாஸ்த்திரத்தை முனிவர்களால் உருவாக்கப்பட்டு  உலகிற்கு அளித்த நமது இந்தியாவில் இப்படி ஒரு நிலை,இன்றைய கலாச்சார  சீரழிவு,மற்றும் past food எனப்படும் உணவு வகைகளாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது.ஆண்மைக்குறைவினால் பல குடும்பங்களில் கணவன் மனைவியிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி விவகாரத்து வரை செல்ல இதுவும் ஒரு காரணமாக உள்ளது

ஆண்மைக் குறைவைப் போக்கும் அற்புதமான வழிமுறைகளை சித்தர்கள் வகுத்து அளித்துள்ளனர்.இவற்றுக்கான உணவுகள் மற்றும் மருந்து முறைகள் ஏராளமாக உள்ளது அதில் ஒரு முறைதான் மேலே உள்ள பாடலில் உள்ளது.

நறுந்தாளி என்பது தாளிக்கீரை ஆகும் 

நன்முருங்கை என்பது முருங்கைக்கீரை 

அடுத்து தூதுவேளை -பசலை கீரை -அரைக்கீரை 

இந்த ஐந்து வகை கீரைகளை பசு நெய் ஊற்றி சமைத்து உண்டு வர யாழி என்ற (பத்து சிங்கத்தின் பலம் கொண்டது) விலங்கின் பலம் உடலுக்கு கிடைக்கும் என சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவைகளை சமைத்து உண்டு அனைவரும் உடல் பலத்துடன் வாழலாமே 


நன்றி!

இமயகிரிசித்தர்           

Wednesday, 11 July 2012

நோய்கள் தோன்றும் விதம் , நோயனுகா விதி - Noikal Anuga Vithi

நோய்கள் தோன்றும்  விதம்  - நோயனுகா விதி 


நோய்கள் தோன்றும்  விதம் 

தன் மனையாலுந் தானுமிருக்கையில்
தாவி வேறுமனை தேடிப்புகுந்தாலும்
நன் மனைவியின் போகமிகுந்தாலும்
நல்லுனவென்றதிகம்  புசித்தாலும்
வன்மையாகக் குறைத்துப் புசித்தாலும்
மாலையி லெண்ணெய்முழுகி குளித்தாலும்
சின்னமா மலச்சிக்க லிருந்தாலும்
தேடிப்பாரில் வியாதிகள் வருமே
                       யாகோபு வைத்தியம் -300

தனக்குத் துணையாகிய மனைவியை விட்டு வேறு பெண்களிடம் தொடர்பு கொண்டாலும், தன் மனைவியிடம் அதிகம் போகம் கொண்டாலும், ருசியான உணவு வகைகளை அதிகம் உண்டாலும், காலம் தவறி உணவுகளை குறைத்து உண்பதாலும்,மாலை நேரத்தில் எண்ணெய் தேய்த்து முழுகி குளித்தாலும்மலச்சிக்கல் இருந்தாலும் அவர்களுக்கு வியாதிகள் தேடி வரும் 

இவைகள் மட்டும் அல்லாமல் உடலில் வாதம்,பித்தம்,கபம் என்ற மூன்று வித நாடிகளின் வேறுபாடுகளாலும்,இயற்கையின் கால சூழ்நிலைகளின் வேறுபாடுகளாலும்,நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாலும் நோய்கள் வரும்.

---------------------------------------------------------------------------------------

நோயனுகா விதி
நாளி ரண்டு
வாரமிரண்டு
மாதமிரண்டு
வருடமிரண்டு
என்பது சித்தர்கள் வகுத்த மருத்துவ மொழியாகும்

நாளிரண்டு  :   ஒவ்வொரு நாளும் இருமுறை மலம் கழிக்க வேண்டும். 
வாரமிரண்டு வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
மாதமிரண்டு:மாதம் இருமுறை மட்டும் உடல் உறவு கொள்ள வேண்டும்.
வருடமிரண்டு:ஆறு மாதத்திற்கு ஒரு முறை பேதி மருந்து உட்கொண்டு வயிற்றை சுத்தம் செய்யவேண்டும்.

இவற்றை கடை பிடித்தால் நோய்கள் உடலில் தோன்றாது.இவைகள் மட்டும் இல்லாமல் கர்ம வினைகளாலும் நோய்கள் தோன்றும் என்று அகத்தியர் பெருமான் கூறுகின்றார்.அதைப் பற்றிய விளக்கங்களை அடுத்த பதிவில் காணலாம் .


நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி - T.N 
cell : 9865430235 - 8695455549     

Tuesday, 10 July 2012

சித்தர் மூலிகை ஜாலம்- மருத்துவம் (பெரு நெரிஞ்சில்)
மூலிகை ஜாலம்- மருத்துவம் (பெரு நெரிஞ்சில்)

சித்தர்கள் தங்கள் ஞானத்தால் கண்டறிந்த மூலிகைகள் ஏராளம் அவைகளில் மக்கள் பயன் பாட்டிற்க்காக உள்ளவை களை ஒவ்வொன்றாக "சித்தர் பிரபஞ்சம்"வலைதளத்தில் அறிமுகம் செய்கின்றோம்.  நன்றி! 

இமயகிரி சித்தர் 

www.siddharprapanjam.org   

சித்தர் குதிக்கால் பாத வெடிப்பு களிம்பு செய்முறைசித்தர் குதிக்கால் பாத வெடிப்பு களிம்பு செய்முறை மருத்துவம் என்பது மக்களுக்கான அறிவியலாக அறிய       வைக்கும் முயற்சியாக  பாரம்பரிய சித்த மருத்துவர்கள் கையாண்டு வரும் அனுபவ செய்முறைகளையும்,"சித்த மருத்துவ" முறைகளில் உள்ள அரிய விளக்கங்களையும் அனைவரும் அறிந்து பயன் பெரும் வகையில் எளிய முறையில் புரிந்து கொள்ளும் வகையில் "சித்தர் பிரபஞ்சம்"வலைப் பதிவில் பதிவு செய்து வருகின்றோம்.


மிகவும் சுலபமாக தயாரித்து பயன்படுத்தும் வகையில் உள்ள இம்மருந்துகளை செய்து நீங்களும் உங்களை சுற்றி உள்ளோர்க்கும் கொடுத்து பயன் பெறுங்கள். 
மேற்கண்ட மருந்து செய்முறைகளில் விளக்கம் வேண்டுவோர் தொடர்பு கொள்ளலாம். மற்றும் இவைகள் பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி!
  இமயகிரி சித்தர்
www.siddharprapanjam.org  


சித்தர் தீப்புண் தைலம் செய்முறை-(fire burn oinment make)
தீப்புண் தைலம் செய்முறை-(fire burn oinment make)

மருத்துவம் என்பது மக்களுக்கான அறிவியலாக அறிய       வைக்கும் முயற்சியாக  பாரம்பரிய சித்த மருத்துவர்கள் கையாண்டு வரும் அனுபவ செய்முறைகளையும்,"சித்த மருத்துவ" முறைகளில் உள்ள அரிய விளக்கங்களையும் அனைவரும் அறிந்து பயன் பெரும் வகையில் எளிய முறையில் புரிந்து கொள்ளும் வகையில் "சித்தர் பிரபஞ்சம்"வலைப் பதிவில் பதிவு செய்து வருகின்றோம்.


மிகவும் சுலபமாக தயாரித்து பயன்படுத்தும் வகையில் உள்ள இம்மருந்துகளை செய்து நீங்களும் உங்களை சுற்றி உள்ளோர்க்கும் கொடுத்து பயன் பெறுங்கள். 


மேற்கண்ட மருந்து செய்முறைகளில் விளக்கம் வேண்டுவோர் தொடர்பு கொள்ளலாம். மற்றும் இவைகள் பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி!  


இமயகிரி சித்தர்

www.siddharprapanjam.org  


Sunday, 8 July 2012

சித்தர்கள் தோற்றம் -வயது -தலைமுறை,விபரம்

சித்தர்கள் தோற்றம் -வயது -தலைமுறை,விபரம் 


சித்தர் பெருமக்கள் தோன்றிய நட்சத்திரம்,குலம்,வயது, தலை முறை பற்றிய விபரங்களின் தொகுப்பு இது.


இதை சேகரித்து தொகுத்து அளித்தவர் மேன்மை தாங்கிய மதுரை சித்த வைத்திய குருகுல ஆசான் "பண்டிட் P.முத்துக் கருப்ப பிள்ளையவர்கள்"இக்குறிப்பு :முதல் சித்தன் எனும் மாத இதழில் 1968.ல் வெளி வந்தது.


சித்தர்கள் வாழ்ந்த காலங்கள்,யுகங்களின் வருடக் கணக்கு களைக்கண்டால் மிகவும் பிரமிப்பு அடைவீர்கள்.நன்றி !


இமயகிரி சித்தர்... 

WWW.Siddharprapanjam.org   

          


Thursday, 5 July 2012

மனைக்கு ஆகா விருட்சங்கள் - இரவிற்கு ஆகா போசனங்கள்

மனைக்கு ஆகா விருட்சங்கள் - இரவிற்கு ஆகா போசனங்கள் மனைக்கு ஆகா விருட்சங்கள் - இரவிற்கு ஆகா போசனங்கள் 

தமிழகத்தில் தோன்றிய அருட்பெருஞ் சித்தர்கள் தங்கள் ஞானத்தால்  கண்டறிந்த பிரபஞ்ச இரகசிய விதிகளின் உண்மைகளை, உலக மக்களெல்லாம் அறிந்து கொண்டு பயன்பெறவும்,அறம், பொருள், இன்பம்,என்ற மூன்று வகைப் பேரினையும் பெற்று வாழ்வாங்கு வாழட்டும், என்ற  பேரருள் எண்ணங்களுடன் வாழ்வியல் தத்துவங் களையும்,கோட்பாடுகளையும்  வகுத்து சுவடிகளில் பதிப் பித்துள்ளனர்.

இன்றைய வாழ்வியல் சூழ்நிலைக்கு உகந்த,மிகவும் தேவையான இரண்டு வித தலைப்புகளில் விளக்கம் காணலாம். 

1 -  மனைக்கு ஆகா விருட்சங்கள்
2 - இரவில் ஆகா போசனங்கள்

பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு 
வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு
கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும்
பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும் 
வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர
வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும் 
நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே 

குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும்
குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி
குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி                                                        
ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு 
இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு
குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே
பரதேசியாயிருப்பார் பாரே 
                                அகத்தியர் புனசுருட்டு - 500

இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில்  பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின் றனர்.மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள் வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம், வருவாய் இழப்பு, கடன் தொல்லை, மனக்குழப்பம் போன்றவற்றிக்கு ஆட்பட்டு தனது வீட்டையே இழக்கும் சூழல் உருவாகும்.இதுபோன்ற சூழ்நிலை களில் பாதிப்படைவோர் தனது கிரகம் சரியில்லை, வீட்டின் வாஸ்து சரியில்லை என குழம்பிக் கொண்டி ருப்பார்கள்.எனவே இதில் கண்ட செடி,மரங்களை உடனேஅகற்றி நலம் பெறுங்கள்.

மேற்கண்ட செடி , மரங்களின்  வகைகள் :
1.பருத்தி, 2.அகத்தி, 3.பனை, 4.நாவல், 5.அத்தி, 6.எருக்கு, 7.வெள்ளெருக்கு 8.புளியமரம், 9.கருவேலன், 10.முருங்கை, 11,கல்யாண முருங்கை, 12.கள்ளி 13.கருவூமத்தை, 14.இலவம்,15.வில்வம், 16.உருத்திராட்சம்,17.உதிரவேங்கை இந்த 17,வகைகளை வீட்டில் வளர்க்கவே கூடாது.

அடுத்து இரவில் ஆகாத உணவுகள் பற்றிய பாடல் :

இஞ்சிவெண்டயிர்இலைக்கறிபாகற்காய்                                             கொஞ்சுங்காட்டுக்கிளாக்காயருநெல்லி                                                         துஞ்சுமே புளியங்காய் துவையலும்                                                                  மிஞ்சு ராவில்லருந்தும் மனிதர்க்கு 

அஞ்சிலட்சுமி அகன்றுமே போய்விடும்
தஞ்சமாஞ் சேட்டை தன்னிலடைகு வாள்
எஞ்சில் துக்கமுமெய்திடுந் தப்பாது
கஞ்சனானை கருத்தாயுரைத்ததே 

மேற்கண்ட பாடலில் அகத்தியர் பெருமான் மிகத்தெளிவாக விளக்கம்  அளிக்கின்றார்.  


இரவில் விலக்க வேண்டிய உணவு வகைகள் : 

இஞ்சி -தயிர்- கீரை வகைகள்-பாகற்காய்-கிளாக்காய்-அருநெல்லி- மற்றும் புளிதுவையல் போன்றவற்றை இரவில் உண்பவர்களிடம் இருந்து மகாலட்சுமி பயந்து விலகுவாள். மற்றும் மூதேவி வந்து குடியேறுவாள். துக்கம் வரும் இறைவன் ஆணை என்கிறார்.

அறிவியல் பூர்வமாக பார்த்தாலும் மேற்கண்ட உணவு வகைகள் நமது உடலில் சுரக்கும் பித்த நீரை ஊக்குவிப் பவை மேலும் இரைப்பையில் சேதம்விளைவிக்கும். அதனால் குடற்புண்,நெஞ்சு எரிச்சல்,அஜீரணம் போன்றவைகளை தோற்றுவிக்கும்.

எனவே இவ்வகை உணவுகளை நீக்கி நலம் பெறுவோமே.

நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி - T.N 
cell : 9865430235 - 8695455549     பதிவுகளின் வகைகள்