இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Friday, 13 July 2012

ஆண்மைக்குறைவு நீக்கும் கீரைகள் சித்த மருத்துவ பழமொழிகள் விளக்கம் -2

சித்த  மருத்துவ பழமொழிகள் விளக்கம் -2


ஆண்மைக்குறைவு நீக்கும் கீரைகள்

  

நறுந்தாளி  நன்முருங்கை தூதுளை பசலை 

வாளிளறு கீரை நெய்வார்த்துண்ணில் யாழிஎன 

விஞ்சுவார் போகத்தில் பெண்களெல்லாம் 

பின் வாங்கிக் கேள் 

 

இந்தியாவில் சுகாதாரத்துறை ஆய்வு கணக்கெடுப்பில் இன்றைய ஆண்களிடம் 75% வீதம் ஆண்மைக்குறைவு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


"கொக்கோகம்" என்ற காம சாஸ்த்திரத்தை முனிவர்களால் உருவாக்கப்பட்டு  உலகிற்கு அளித்த நமது இந்தியாவில் இப்படி ஒரு நிலை,இன்றைய கலாச்சார  சீரழிவு,மற்றும் past food எனப்படும் உணவு வகைகளாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது.ஆண்மைக்குறைவினால் பல குடும்பங்களில் கணவன் மனைவியிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி விவகாரத்து வரை செல்ல இதுவும் ஒரு காரணமாக உள்ளது

ஆண்மைக் குறைவைப் போக்கும் அற்புதமான வழிமுறைகளை சித்தர்கள் வகுத்து அளித்துள்ளனர்.இவற்றுக்கான உணவுகள் மற்றும் மருந்து முறைகள் ஏராளமாக உள்ளது அதில் ஒரு முறைதான் மேலே உள்ள பாடலில் உள்ளது.

நறுந்தாளி என்பது தாளிக்கீரை ஆகும் 

நன்முருங்கை என்பது முருங்கைக்கீரை 

அடுத்து தூதுவேளை -பசலை கீரை -அரைக்கீரை 

இந்த ஐந்து வகை கீரைகளை பசு நெய் ஊற்றி சமைத்து உண்டு வர யாழி என்ற (பத்து சிங்கத்தின் பலம் கொண்டது) விலங்கின் பலம் உடலுக்கு கிடைக்கும் என சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவைகளை சமைத்து உண்டு அனைவரும் உடல் பலத்துடன் வாழலாமே 


நன்றி!

இமயகிரிசித்தர்           

6 comments:

தேடல் said...

அன்புள்ளம் கொண்ட இமயகிரிசித்தர் அவர்களுக்கு என் உளம்கனிந்த வணக்கங்கள்,தங்களின் பதிவுகளை கடந்த வாரங்களில் தொடர்ச்சியாக படித்து வருகிறேன், கட்டுரை மிகப்பயனுள்ளதாக இருந்தது மூலிகைகளைப்பற்றியும் அவற்றை உண்ணக்கூடிய முறைகளையும் பற்றி அறிந்துகொள்ள பதிவுகளை எதிர்நோக்கி ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.

நந்தா
தாம்பரம்

BalajiNatesan said...

I need to know the details of disease
"vericocele" hot treat in siddha and what is the medicine procedure and details. Kindly provide the details.

Siva Ram said...

Sir, Thali kerrai chennaiyil engu kedaikkum endru koora mudiyuma please.

Rajini Kanth said...

Anmai kuraivuku mooligai tell me

Kumar said...

அன்புள்ளம் கொண்ட இமயகிரிசித்தர் அவர்களுக்கு என் வணக்கம். தாளிக்கீரை எது என்பதை புகைப்படத்துடன் தெரியபடுத்தவும். எனக்கு தெரிந்தவர்கள் யாருக்கும் தாளிக்கீரை பற்றிய தகவல்கள் தெரியவில்லை. நன்றி!

Kannan Rose said...

thaalik keerai enbathan tharppothaiya peyar matrum athanudaiya padam irunthal anuppungal

nandri

பதிவுகளின் வகைகள்