இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Wednesday, 11 July 2012

நோய்கள் தோன்றும் விதம் , நோயனுகா விதி - Noikal Anuga Vithi

நோய்கள் தோன்றும்  விதம்  - நோயனுகா விதி 


நோய்கள் தோன்றும்  விதம் 

தன் மனையாலுந் தானுமிருக்கையில்
தாவி வேறுமனை தேடிப்புகுந்தாலும்
நன் மனைவியின் போகமிகுந்தாலும்
நல்லுனவென்றதிகம்  புசித்தாலும்
வன்மையாகக் குறைத்துப் புசித்தாலும்
மாலையி லெண்ணெய்முழுகி குளித்தாலும்
சின்னமா மலச்சிக்க லிருந்தாலும்
தேடிப்பாரில் வியாதிகள் வருமே
                       யாகோபு வைத்தியம் -300

தனக்குத் துணையாகிய மனைவியை விட்டு வேறு பெண்களிடம் தொடர்பு கொண்டாலும், தன் மனைவியிடம் அதிகம் போகம் கொண்டாலும், ருசியான உணவு வகைகளை அதிகம் உண்டாலும், காலம் தவறி உணவுகளை குறைத்து உண்பதாலும்,மாலை நேரத்தில் எண்ணெய் தேய்த்து முழுகி குளித்தாலும்மலச்சிக்கல் இருந்தாலும் அவர்களுக்கு வியாதிகள் தேடி வரும் 

இவைகள் மட்டும் அல்லாமல் உடலில் வாதம்,பித்தம்,கபம் என்ற மூன்று வித நாடிகளின் வேறுபாடுகளாலும்,இயற்கையின் கால சூழ்நிலைகளின் வேறுபாடுகளாலும்,நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாலும் நோய்கள் வரும்.

---------------------------------------------------------------------------------------

நோயனுகா விதி
நாளி ரண்டு
வாரமிரண்டு
மாதமிரண்டு
வருடமிரண்டு
என்பது சித்தர்கள் வகுத்த மருத்துவ மொழியாகும்

நாளிரண்டு  :   ஒவ்வொரு நாளும் இருமுறை மலம் கழிக்க வேண்டும். 
வாரமிரண்டு வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
மாதமிரண்டு:மாதம் இருமுறை மட்டும் உடல் உறவு கொள்ள வேண்டும்.
வருடமிரண்டு:ஆறு மாதத்திற்கு ஒரு முறை பேதி மருந்து உட்கொண்டு வயிற்றை சுத்தம் செய்யவேண்டும்.

இவற்றை கடை பிடித்தால் நோய்கள் உடலில் தோன்றாது.இவைகள் மட்டும் இல்லாமல் கர்ம வினைகளாலும் நோய்கள் தோன்றும் என்று அகத்தியர் பெருமான் கூறுகின்றார்.அதைப் பற்றிய விளக்கங்களை அடுத்த பதிவில் காணலாம் .


நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி - T.N 
cell : 9865430235 - 8695455549     

5 comments:

தேடல் said...

வணக்கம்

அய்யா


தங்களுடய அனைத்து பதிவுகலையும் படித்து வருகின்றேன்.மிகவும் பயனுளாதாக இருக்கிற்து .தஙகளின் ஸெவயை மனதார பாராட்டுகின்றென்.
இறை அரூள் துனை நிற்க.

நன்றி

நந்தா

imayagiri siddhar said...

இறைவன் அருளாலும்,சித்தர்கள் ஆசியாலும்
மேலும் தொடர்வோம் நன்றி !

இமயகிரி சித்தர்

Sivamjothi said...

Nice article

imayagiri siddhar said...

சிவம் ஜோதி ஐயா !
இது போன்ற சித்தர்களின் வாழ்வியல்
தத்துவங்கள் மேலும் தொடரும்
நன்றி !
இமயகிரி சித்தர்

Anonymous said...

வணக்கம் நண்பர்களே சித்தர் தொலைகாட்சி முதல் கட்டமாக தனது ஒலி பரப்பை தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற ஆடி மாதம் ஆரம்பிக்க உள்ளது . ஆன்மீக தொலைகாட்சி என்பதால் யாரும் விளம்பரம் தர முன்வருவதில்லை . இந்த ஆன்மீக சேனலை நடத்துவதற்க்கு ஒரு நாள் ஆகும் செலவு ரூபாய் 16500 இந்தபணம் அதாவது வருடத்தில் 6000000 ஆகிறது . ஒரு நாளைக்கு 16500 விதம் 365 நாளுக்கு 365 நன்கொடையாளர்கள் சேர்ந்தால் நமக்கென ஒரு ஆன்மீக இந்து தொலைகாட்சி கிடைக்கும் . விளம்பரங்களை நம்பாமல் நாமே இதை தங்கு தடை இன்றி நடத்தலாம் . ஆன்மீக அன்பர்கள் கைகொடுங்கள் நமக்கென ஒரு தொலைக்காட்சியை உருவாக்குவோம் . ஒரு அமைப்பாகவோ , குழுக்களோ , நண்பர்களோ , இணைத்து கூட ஒருநாள் ஆகும் செலவை தாங்கலாம் இந்துக்களே கைகொடுங்கள் .
தொடர்புக்கு
பிரபஞ்சத்தின் சூரியனின் சித்தர் தொலைகாட்சி
அரசு பதிவு எண்522/2010
73m சிவன் கோவில் தெரு
தூத்துக்குடி -628001
தொலைபேசியில்
ஜோசப்@ருத்ரன் (பிரபஞ்சத்தின் சூரியனின் நிறுவனர்)
9442815669

பதிவுகளின் வகைகள்