இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Saturday, 22 September 2012

மூலம் - இரத்தமூலம் ( piles - bleeding piles ) கடுக்காய் தைலம் - செய்முறை

மூலம் - இரத்தமூலம் ( piles - bleeding piles )                                                கடுக்காய் தைலம் - செய்முறை 

காயத்தில் மூலங் கண்ட விதங்கேளு
பாயொத்த தீபனம் பரிந்தேயடக்கினும் 
மாயை மயக்க மலத்தையடக்கினும்
ஓயுற்ற குண்டலினுக்குட் புகும் வாயுவே

என்று திருமூலர் மூல நோயின் உற்பத்தியை விவரிக்கின்றார் தீவிரமான பசியைத் தாங்கி சரியான நேரத்தில் சாப்பிடாதிரு ந்தாலும் ,உடலுறவின் போது சிறுநீர்,மலம் அடக்குவதாலும் , ஒரே இடத்தில் ஆசனங்களில் அமர்ந்து தொழில் புரிவோர்க் கும் மூலாதாரம் எனப்படும் ஆசன வாய்ப்பகுதியில் வெப்பம் மிகுந்து இந்நோய் தோன்றுகிறது .

மற்றும் உணவில் நார்ச்சத்து வகைகளை குறைத்து உண்பதா லும் மலச்சிக்கல் ஏற்பட்டு மூலநோய் ஏற்படும்,அடிக்கடி நீர் அருந்தாமையினாலும் குடல் இளக்கமின்றி இந்நோய் தோன் றும். அதிக உடலுறவு ,அதிக காரமான உணவுஉண்போருக்கும் பெண்களின் குழந்தைப்பேறு கால சமயங்களில் குழந்தை வெளி வரும் போது முக்குவதாலும் மூல நோய் தோன்றும். 

மூலநோயை சித்தர்கள் 21-வகையாகப் பிரித்துள்ளனர். ஆங்கில மருத்துவத்தில் இதனை மூன்று வகையாகக் கூறு கின்றனர்.வெளிப்படையாக நமக்கு புலப்படுவதும் இவைகள் தான்.

1- உள் மூலம்,-ஆசன வாயின் உட்பகுதியில் குருத்து போல் வளர்வது.
2- வெளி மூலம்,-ஆசனவாயின் தசைப்பகுதிகள் பிதுங்கி வெளி வருவது .
3- இரத்த மூலம்,-மலம் வெளிவரும் போது இரத்தம் கசிவது.

கடுக்காய் தைலம் - செய்முறை 
தேவையான பொருட்கள் :
1 - பிஞ்சு கடுக்காய் - 250-கிராம் 
2 - சுத்தமான விளக்கெண்ணை - 1-கிலோ கிராம் 

செய்முறை ;

படம் ;- 1- பிஞ்சு கடுக்காய் 

படம் :- 2 - பிஞ்சு கடுக்காயில் -விளக்கெண்ணை -2-டீஸ்பூன் அளவு ஊற்றி                  பிசறி விடவும்.

படம் :- 3 - எண்ணையுடன் பிசறிய கடுக்காயை வாணலியில் போட்டு இளம் சூட்டில் வறுக்கவும். இது போன்று கடுக்காய் பெரிதாகும்.

படம் :- 4 - வறுத்த கடுக்காயை ஒன்றிரண்டாக இடித்து பொடியாகவும்.

படம் :- 5 - பிறகு மிக்சியில் போட்டு நன்கு பொடியாக்கி சல்லடையில் மிகவும் மென்மையான தூளாக சலித்து எடுக்கவும்.

படம் :- 6 - சுத்தமான விளக்கெண்ணையை - 400 -மிலி அளவு எடுத்து ஒரு பாடலில் ஊற்றவும்.

படம் :- 7 - அதில் கடுக்காய் பொடி - 100 - கிராம் அளவு எடுத்து சிறிது சிறிதாக தூவி ஒரு கரண்டியால் கலக்கவும் .

படம் : - 8-9-10 -   400-மிலி விளக்கெண்ணையில் - கடுக்காய் பொடி -100-கிராம் அளவும் போட்டு நன்கு கலந்து விடவும்.

சாப்பிடும் முறை :
தினமும் இரவு மட்டும் 1- அல்லது  2 -டீஸ்பூன் அளவு எடுத்து ஒரு தம்ளர் பாலில் கலந்து படுக்கும் போது சாப்பிடவும்.

காலையில் மலம் இலகுவாக வெளியேறும்.  மூலச்சூடு தணியும்.சிறிது நாட்கள்  தொடர்ந்து உண்டு வர மூலநோய் மற்றும் இரத்த மூலம் குணமாகும்.

மிகவும் எளிதான இந்த முறை சித்த மருத்துவத்தில் மருத்துவர்கள் மூல நோய்க்கு பரிந்துரை செய்யும் மிகவும் பிரபலமாக உள்ள "மூலக்குடார தைலம்"இது தான்.  

நன்றி !
இமயகிரி சித்தர்...
www.siddharprapanjam.org 
siddharprapanjam.blogspot.in  


2 comments:

Puvi said...

people are saying that we should remove the seed from kadukkai before using it, You didnt tell that thing here, Is it ok to have with seed?

imayagiri siddhar said...

Puvi
people are saying that we should remove the seed from kadukkai

before using it, You didnt tell that thing here, Is it ok to have with seed?/மக்கள் கடுக்காய் பயன்படுத்தும் போது அதனுள் உள்ள விதை
கொட்டையை நீக்க வேண்டும்.அதைப் பற்றி நீங்கள் சொல்ல

வில்லை இது சரியா? என puvi -என்பவர் மேற்கண்ட கேள்வி

கேட்டுள்ளார்.சித்த மருத்துவத்தின் அரிச்சுவடியே மருந்து செய்வதற்கான

மூலப்பொருட்கள் அனைத்திலும் அமிர்தமும் நஞ்சும் கலந்

துள்ளது என்றும் இவைகளில் உள்ள நஞ்சுவை சுத்தி முறை

யில் நீக்கிய பிறகு தான் மருந்துகள் செய்ய வேண்டும் என்பது.

இது வேறு எந்த மருத்துவ முறையிலும் இல்லாத ஒரு சிறப்பாகும்.இதன் படி "சுக்குக்கு புற நஞ்சு" "கடுக்காய்க்கு அக நஞ்சு"

என்ற பாடல் வரிகளின் படி கடுக்காயில் அக நஞ்சு என்ற

உள்புறம் உள்ள கொட்டை நஞ்சு எனவே கொட்டையை நீக்கி

பின் மருந்துகள் செய்ய வேண்டும்.என்பது மிகப்பெரிய உண்மைஆனால் மேலே உள்ள "கடுக்காய் தைலம்" செய்முறையில்

குறிப்பிடப்படும் "பிஞ்சு கடுக்காய்"உள்ளே கொட்டையே (விதை)

இருக்காது.அதனால் மேலே பாடல் வரி "பெரிய கடுக்காய்க்கு"

மட்டுமே பொருந்தும்.நன்றி !

இமயகிரி சித்தர்...

www.siddharprapanjam.org

பதிவுகளின் வகைகள்