இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Thursday, 20 September 2012

ஆதளை மூலிகை - வெண்ணெய் -சூட்சும விளக்கம் - (மாயமாய் மறையும் வித்தை)

ஆதளை மூலிகை - வெண்ணெய் -சூட்சும விளக்கம்      (மாயமாய் மறையும் வித்தை)  பொதுவாக சித்தர் நூல்களில் உள்ள கருத்துக்கள் பல அமானுஷ்யமும்,ஆச்சரியமும், இன்றைய விஞ்ஞானத்திற்கு சவால் விடக்கூடிய வகையில் நிறைய உள்ளன.ஆனால்  இவ்வகையான அரிய கலைகள் தீயவர்கள் கையில் கிடைத்து உலக மக்களுக்கு எதிராக பயன்படுத்தி விடக் கூடாது  எனக் கருதி சித்தர் பெருமக்கள் இவைகளை பரிபாசை சொற்களாக (மறை பொருளாக)வும்,பல்வேறு நூல்களில் இங்கொன்றும்,அங்கொன்றுமாக இவ்வகை இரகசியங்களை பிரித்து பதிவு செய்துள்ளனர்.

சித்தர்கள் தங்களிடம் சீடனாக  பணிந்து -12-லிருந்து -16-வருடம் வரை உண்மை சீடனாக தொண்டு செய்தவர்களுக்கே அரிய இரகசிய கலைகளை பயிற்றுவித்துள்ளனர்.
  
குரு சீட வழி முறையில் தீட்சை பெற்று சித்தர்  இலக்கியங்களின் வழி முறைகளைப் பின்பற்றுபவர்களுக்கு சித்தர் பாடல்களின் பரிபாசை  உண்மை விளக்கங்கள் மிக எளிதில் புரியும்.

கருவூரார் பலதிரட்டு -300-என்னும் நூலில் ஆதளை மூலிகையின் மூல மாக மாயமாய் மறையும் வித்தை ஒன்றை "கருவூரார் சித்தர்"குறிப்பிட்டு ள்ளார். இதன் விபரங்களை முந்தைய பதிவில் பதிவு செய்துள்ளோம்.

"கருவூரார் பலதிரட்டு"-300-என்ற இந்த நூல் "தாமரை நூலகம்"எஸ்.பி ராமச்சந்திரன் அவர்களால் -1994-ல் (முதல் பதிவு) பதிப்பிக்கப் பட்டது.

இந்த நூலின் மூலப்பிரதியையும்,ஓலைச்சுவடியையும் கொடுத்து இதற்கான விளக்க உரையும் எழுதிக் கொடுத்தவர் சேலத்தைச் சேர்ந்த சித்தர் இலக்கிய ஆய்வாளர் திரு கே.லட்சுமணன் என்பவர் ஆவர்.

இந்த நூலில் ஆதளை மூலிகையின் பால்,வெண்ணெய்,தேன் இந்த மூன்றையும் சேர்த்துக் கலந்து பொட்டு (திலதம்) வைக்க நமது உருவம் மறைந்து விடும் என குறிப்பிட்டுள்ளார்.இதில் உள்ள உண்மை என்ன வென்றால் வெண்ணெய் என்பது பசு வெண்ணையோ அல்லது எருமை வெண்ணையோ அல்ல இந்த வெண்ணெய் செய்முறையைப் பற்றி சிவபெருமானே அன்னை உமயவளுக்கு உபதேசித்ததாகும்.என்றால் இதன் மகத்துவம் எவ்வளவு அளப்பரியது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.இதன் செய்முறை மிகவும் கடினமானதாகும்.

மிகவும் அனுபவம் வாய்ந்த சித்தமருத்துவர்களின் துணையுடனோ அல்லது முப்பு,இரசவாத ஆய்வாளர்கள் துணையுடன் இருந்தால் மட்டுமே இந்த வெண்ணையை செய்து முடிக்க முடியும்.எனவேதான் இதனைப் பற்றிய முந்தய பதிவில் 

 குறிப்பு :-
இந்தப் பாடலில் சில பரிபாசை சூட்சுமங்கள் உள்ளது எனவே தக்கதொரு குருவின் வழிகாட்டுதலுடன் முயற்சி செய்யவும். 

என்ற விளக்கம் கொடுத்திருந்தோம்.இதனைப் புரிந்து கொள்ளாமல் சிலர் முக நூலில் (face book) எமது தளத்தில் விவாதம் நடத்தியுள்ளனர் . அவர் களும் புரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு . 

கருவூரார் பலதிரட்டு -300-ல் பாடல் -49-லிருந்து -53-ம் பாடல் வரை உள்ள ஐந்து பாடல்களை மிகவும் கவனமாகப் படித்து இதன்படி முறையாகச் செய்தோமானால் இந்த சிறப்பு வாய்ந்த வெண்ணையை செய்ய முடியும்.

இந்த வெண்ணையின் மகத்துவம்:

இதனைக் கடைந்து எடுக்கும் போது கையின் மேல் பட்டால் வெந்து விடும்.அதாவது திராவகம் (ஆசிட்)போன்று இருக்கும்.

இந்த வெண்ணையை நவ பாசாணங்களிலும்,உப்புச் சரக்குகளிலும் தடவி வாட்ட கட்டும்.(பாசாணக் கட்டு-உப்புக் கட்டு)

இந்த வெண்ணையுடன் பாதரசம் சேர்த்து அரைத்து எட்டு முறை சாரணை செய்தால் "ககன மணியாகும்"நமது உடலை உயரே தூக்கும் என்கிறார்.

இந்த வெண்ணையை எடுத்த பிறகு உள்ள நீரில்  நவலோகங்களை ஊரப் போட்டால் களிம்பு நீங்கி உயர்ந்த உலோகமாகும். 

இந்த வெண்ணையுடன் ,ஆதளை பால்,தேன் மூன்றும் சேர்த்து மத்தித்து (கடைதல்)நெற்றியில் பொட்டு வைக்க நமது உடல் மறைந்து பிறர் கண்களுக்கு தெரியாது.இந்த பொட்டுவை (திலதம்) அழித்து  விட்டால் நமது உருவம் மீண்டும் தோன்றும்.

முந்தய பதிவில் குறிப்பிட்ட "முன் சொன்ன வெண்ணை" இதுதான். 

இதர விபரங்களை இந்த நூலைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.

நன்றி !

இமயகிரி சித்தர்...

சித்தர் பிரபஞ்சம் குழு -(face book)
siddharprapanjam@gmail.com                 
    

3 comments:

s mosaas said...

அய்யா,

தகவலுக்கு நன்றி . நங்கிலி கீரை பற்றி விளக்கம்.....

Anonymous said...

மூலிகை செடியின் சாப நிவர்த்தி மந்திரங்கள் தயவு செய்து அளிக்கவேண்டும்
harijo27@gmail.com

prabu m .prabu m said...

mayamai maraiyum viddai,aathalai mooligai(kattamankku) vennai velakkam.
karuvurar palatheraattu-300-book details."thamarai nulagam",S.P RAMACHANDHARAN-1994(FIRST EDTION) pathipikkapatthathu.

i want to salem-siddhar eilakkaia aaivallar K.LAKSHMANNAN (VELLKKAVOORAI)
SONG 49 TO 53 END.BOOK,HOW TO PRICE THIS BOOK? WHERE IS THIS BOOK SALES ADDRESS DETAILS TELL TO ME PLEASE GIVE YOU HELP ME SIR.

MY EMAIL ID DETAILS:plone.12345@gmail.com

பதிவுகளின் வகைகள்