இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Monday, 3 September 2012

ஆதளை மூலிகை - மாயமாய் மறைய திலதம் -

ஆதளை மூலிகை - மாயமாய் மறைய திலதம் - 

சித்தர்கள் நூலில் சில இடங்களில் மாயமாய் மறைவதைப் பற்றி குறிப் பிடுகின்றனர்.இதில் மூலிகைகள்,விலங்குகள் போன்றவற்றின் மூலமாக      மறையும் வித்தையை செயல் படுத்தும் முறைகள் உள்ளன.

ஆனால் இவற்றை தக்கதொரு குருவின் துணையுடன் முயற்சி செய்து பார்க்க வேண்டுகிறோம்.இந்த முறை கருவூரார் பல திரட்டில் உள்ளவை.


ஆமாப்பா வெண்ணையிலே தேனைத்தேய்த்து
ஆதளையின் பால் கூட்டி அடைவாய்த் தேய்த்து 
ஓமப்பா திலதமிட தன்னைக் காணார் 
ஓங்கிநின்ற உருமாற்றம் ஒருவர் காணார் 
போமப்பா வெண்டிசையுங் கால் வேகங் கொண்டு 
பூமிதனில் மறைந்ததெல்லாம் பொலிவாய்க் காண்பர் 
வேமப்பா அண்டரண்டம் வழலை பட்டால் 
வேதாந்த பஞ்சகர்த்தா ளெனச்சொன்னாரே


விளக்கம் :

முன்பு கூறப்பட்ட வெண்ணையுடன் ,தேன் ,ஆதளை மூலிகையின் பால், இவைகளைக் கூட்டி மத்தித்து திலதமிட தன உருவம் மறைந்து விடும் . ஒருவரும் உருவத்தைக் காண முடியாது.

எட்டு திசையும் காற்றின் வேகத்தில் சென்று வரலாம்.மேலும் பூமியில் மறைந்துள்ள பொருட்களெல்லாம்,புதையலெல்லாம் கண்ணில் தோன் றும்.வழலைச் சுண்ணம் பட்டால் அண்டரண்டம் நீறிப் போகும்.

குறிப்பு :-

இந்தப் பாடலில் சில பரிபாசை சூட்சுமங்கள் உள்ளது எனவே தக்கதொரு குருவின் வழிகாட்டுதலுடன் முயற்சி செய்யவும். 

"ஆதளை மூலிகை" என்றால் என்ன என்று என்னிடம் ஏராளமானோர் தொடர்பு கொண்டு கேள்வியாகக் கேட்டுள்ளனர்.மேலும் இணைய தளங் களில் இந்த மூலிகையைத் தேடி வருகின்றனர் அவர்களுக்காகவே இந்த படங்கள் மற்றும் விளக்கங்கள்.மேலும் 

அடுத்த பதிவில் கரும் பூனையைக் கொண்டு மறையும் வித்தையைப் பற்றி விளக்கம் அளிக்கின்றேன் .   

நன்றி !

இமயகிரி சித்தர் ...        


  
  

5 comments:

பாவா ஷரீப் said...

அன்புள்ள ஐயா,

மாயமாய் மறைந்தபின் மீண்டுன் உண்மை (மனித உருவத்திற்கு) நிலைக்கு திரும்பி வருவதற்கு என்ன செய்ய வேண்டும்.

பாவா ஷரீப் said...

//வழலைச் சுண்ணம் பட்டால் அண்டரண்டம் நீறிப் போகும்.//

ஐயா இதன் அர்த்தம் என்ன?

nanri

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்க சொல்லித்தான் தெரியும்... நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

சின்ன வேண்டுகோள் : Comment Approval வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Comment Moderation-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... நன்றி... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை publish செய்ய முடிந்தது...)

(New Interface : Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')

தவறாயின் மன்னிக்கவும்... நன்றி...

acer said...

மாயமாய் மறைந்தபின் மீண்டுன் உண்மை (மனித உருவத்திற்கு) நிலைக்கு திரும்பி வருவதற்கு என்ன செய்ய வேண்டும்.

மாயமாய் மறைவது எப்படி.

ஆதளை மூலிகை எங்கு கிடைக்கும்.

ஆதளை மூலிகையின் பெயர் என்ன.

ஆதளையை எப்படி பயன்படுத்துவது தெளிவாக சொல்ல வேண்டும்.

பதிவுகளின் வகைகள்