இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Sunday, 11 November 2012

தீபாவளி பண்டிகை -பாகம் -2 -அறிவியல் ஆய்வு விளக்கம் -Deepavali-2

தீபாவளி பண்டிகை -பாகம் -2 -அறிவியல் ஆய்வு விளக்கம் இந்தியா முழுவதிலும்  அனைத்து மாநிலங்களிலும் தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது.மேலும் பல நாடுகளிலும் கூட கொண்டாடப் படுகின்றது.

தீபாவளிப் பண்டிகை புராணங்களில் கூறப்படும் "நரகாசுர வதம்"என்பதற்கு மட்டுமல்லாமல்,மகா லட்சுமி அவதரித்த தினமாகவும்,குபேரன் சிவபெரு மானை வழிபட்டு சித்தி அடைந்த தினமாகவும், இமாச்சலத்தில் கோ பூஜை யும்,உத்திரப்பிரதேசத்தில் அன்னபூரணி வழிபாடும்,வங்காளத்தில் தாம்பூல திருவிழா ,துர்கா பூஜாவாகவும்,குஜராத்தில் குபேர பூஜையாகவும், மும்பை யில் லட்சுமி பூஜையாகவும் கொண்டாடப் படுகின்றது.

பொதுவாக நமது இந்து மத புராணங்களிலும்,இதிகாசங்களிலும்  அரக்கர் கள்,அசுரர்கள் வாழ்ந்தார்கள் என்பதை குறிப்பிடுகிறார்கள் அவர்களின் தோற்றமும் உருவமும் மிகப் பிரமாண்டமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள் ளனர். இக்கருத்தை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் இருக்கும்.

உண்மை என்னவென்றால் மனிதகுலத்தின்,மக்களின் நல்வாழ்விற்கு தீங்கு விளைவிப்பவைகள்  எதுவோ அதைத்தான் அசுரன்,அரக்கன் எனக் குறிப்பி ட்டுள்ளனர்.

இப்போது தீபாவளியைப் பற்றி விளக்கங்களைப் பார்ப்போம்.மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்க ளில் ஒன்றான வராக அவதாரத்தில் தோன் றிய  ஒரு அசுரனை பல்லாயிரம் வருடங்களுக்குப் பிறகு கிருஷ்ண அவதாரத் தில் தான் அழித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.இக்கருத்தில் ஒரு மிகப்பெரிய உண்மை உள்ளது.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா  நரகாசுனை அழித்ததைக் கொண்டாடும் விழாவே  தீபாவளி என நினைத்துக் கொண்டு இருக்கின்றோம்.உண்மை அதுவல்ல ஒவ்வொரு வருடமும் மக்கள் குலத்தை பெரும் துன்பத்தில் ஆழ்த்தும் நரகாசுரனை அழிக்கும் விழாவே தீபாவளி ஆகும்.

நரகாசுரன் விளக்கம் :-  நரக - கொடிய  + அசுரன் - வேதனைஅளிப்பவன் 

நரகாசுரன் வேறு விளக்கம் :- நரன் - மனிதன் +அசுரன் - கொடுமை செய்பவன் 

எனவே மனிதர்களுக்கு கொடும் துன்பம் செய்பவைகளை அரக்கன்,அசுரன் என வர்ணித்துள்ளனர்.

இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டு நம் இனத்தினரை பெரும் துன்பங்களுக்கு உட்படுத்தி கொடுமை செய்து கொண்டிருக்கும் கொடிய அசுரனான "நரகாசுரனை"  உங்களால் அறிந்து கொள்ள முடிகின்றதா ?நரகாசுரன் வேறு யாருமல்ல "கொசுக்கள்"தான்.இது வேடிக்கையாக சொல்லப்படும் கருத்தல்ல.மிகப்பெரிய உண்மையும் அதுதான்.பாகம் -1-ல் உள்ள புராணக்கதையை படித்து அதன் உள்அர்த்தத்தை ஆழ்ந்து கவனியு ங்கள் உண்மை விளங்கும்.

இன்று அரசாங்கமும் இந்த அசுரனை அழிப்பதற்காகவும்,இவனால் மக்களு க்கு ஏற்படும் துன்பங்களை போக்கவும் பல இலட்சக்கணக்காக பணம் செலவழித்து மக்களுக்கான விழிப்புணர்வும்,டெங்கு,மற்றும் வைரஸ் நோய்க ளைப் போக்க மருந்துகளும் அளித்து வருகின்றது.

இது போன்ற பருவகால கொடிய  நோய்களிலிருந்து மக்களை மீட்டெடுக்க நம் முன்னோர்களால் நமக்கு நாமே திட்டமாக தோற்றுவிக்கப்பட்டதுதான் தீபாவளித் திருநாள்.   

பருவ காலங்களில் ஒன்றான "ஐப்பசியில் அடைமழை" எனும் இம்மாதத்தில் தான் கொடிய நோய்களான மலேரியாடெங்கு, சிக்குன் குனியா,வைரஸ் காய்ச்சல் மற்றும் மழை கால நோய்கள் போன்றவைகளுக்கு மக்கள் பெருவாரியான துன்பங்களுக்கு ஆட்பட்டு உயிர் இழக்கும் அபாயத்திற்கு ஆளாகின்றனர்.

ஐப்பசி மாதத்தில் பெய்யும் தொடர் மழையால் வீட்டின் சுவர்ப்பகுதியிலும், வீட்டின் உட்புறங் களிலும்,ஏராளமான் பூஞ்சைகள் தோன்றி படிந்திருக்கும், இவை நாம் உடுத்தும் துணிகளிலும் படிந்து அதன் மூலம் உடலின் தோல் பகுதிகளில் படிந்து வைரஸ் நோய்களை தோற்றுவிக்கும்.

மேலும் மழை பெய்து தேங்கிய நீரில் கொடிய நோய்களைத் தோற்றுவிக்கும் பல்வேறு வகை கொசுக்கள் உற்பத்தியாகும்.இவைகளைத் தான் "அசுர சக்தி"எனக்குறிப்பிட்டு இவைகளை அழித்தால் தான் மனித குலம் நிம்மதியா கவும், சந்தோசமாகவும் வாழமுடியும் என்பதால் இவைகளை அழிக்கும் சூட்சுமத்தைக் கொண்ட ஒரு விழாவாக, தீபாவளி பண்டிகையை நம் முன்னோர்கள் வடிவமைத்தனர்.


இதற்கு மூன்று வகையான சுத்திகரிப்பு அவசியம் என்பதை உணர்ந்தனர்.
1 - உடல் சுத்திகரிப்பு 
2 - வசிக்கும் வீடு  சுத்திகரிப்பு 
3 - நம்மை சுற்றியுள்ள பகுதிகள் சுத்திகரிப்பு 

உடல் சுத்திகரிப்பு :- எண்ணைக் குளியல் 
உடல் சுத்திகரிக்க நாம் முதல் பாகத்தில் குறிப்பிட்ட "மிளகு தைலம்"தேய்த்து வெந்நீரில் குளித்தல் இதனால் உடலில் தோல் பகுதிகளில் தோற்று நோய் பூஞ்சைகளை நீக்கி,தோலில் இரத்த ஓட்டத்தை சீர்படச் செய்கின்றது. உடலை எப்படி முறையாக சுத்திகரிக்க வேண்டுமென பாகம் -1ல் மிகத் தெளிவாக விளக்கமளித்துள்ளோம்.  

வசிக்கும் வீடு சுத்திகரிப்பு :- அகல் தீபம் 
தீபாவளி எனும் சொல் "தீப - ஆவளி"  என்ற இரண்டு வார்த்தைகள் இணைந் தது.ஆவளி என்றால் வரிசை, வரிசையாக தீபங்களை ஏற்றி வழிபடுதல் ஆகும்.

நிறைய அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வீடு முழுக்க வைத்தல்.இதனால் ஏற்படும் வெப்பம், ஒளியினால் வீட்டிலுள்ள  பூஞ்சைகள் அழிகின்றன.இதை நீங்கள் அனுபவப் பூர்வ மாகவே உணரலாம்.மழை காலங்களில் வீட்டினுள் துணிகளில்,சுவர்களில் ஒரு துர்வாசனை இருக்கும் போது நிறைய எண்ணை தீபங்களை வீட்டின் அறைகளில் வைத்துப் பாருங்கள் துர்வாசனை அகன்று விடும்.

நம்மைச் சுற்றியுள்ள பகுதிகள் சுத்திகரிப்பு :- பட்டாசு ,வெடி வெடித்தல் 
பட்டாசுகள்,வெடிகளின் மூலமாக போன்றவைகள் மூலமாக அதாவது வெடிப்பொருட்களில் உள்ள மருந்துகளான வெடியுப்பு,கந்தகம்,அலுமினிய தூள்,போன்றவைகள் வெடிக்கும் போது அதில் வெளி வரும் புகை,சப்தம், தெரித்து விழும் மருந்துகள் மூலமாக சாக்கடை,நீர் தேங்கும் குழிகள்,செடி, கொடிகளில்,மரங்களில் மறைந்து வாழும் அனைத்து வகை கொசுக்களையும் அழிக்க தீபாவளி பண்டிகை ஒரு நல்ல காரணமாக உள்ளது. 


தீபாவளிப் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிய பின்பு அந்தப் பகுதிகளில் "கொசுக்கள் மற்றும் பூஞ்சைகள்" அழிந்து,அதன் தாக்கம் குறைந்து இவைகளால் ஏற்படும் நோய்களின் கொடுமையும் வெகுவாக குறைந்திருப்பதை கவனித்துப் பாருங்கள் உண்மை புரியும்


பாகம் -1-to -2  -இந்த இரண்டு பாகங்களையும் ஆழ்ந்து கவனித்துப் படித்து இதில் கூறிய முறைகளின் படி தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்து ஆரோக்யமாக வாழ வேண்டுமென "சித்தர் பிரபஞ்சம்" இணைய தளம் சார்பாக இறைவனின் அருளையும், சித்தர்களின் ஆசியையும் வேண்டி வாழ்த்துகின்றோம். 

நன்றி !

மெய்திரு, இமயகிரி சித்தர்
சித்தர் வேதா குருகுலம்
22, புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் P.O – திருச்சி D.T - 620006
தமிழ்நாடு இந்தியா

அகத்தியர் குருகுலம், யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம் , சிறுமலை புதூர்
திண்டுக்கல் – D.T - 624003
தமிழ்நாடு இந்தியா
செல் :9865430235  9095590855 – 9655688786 – 86954555497 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கம் அருமை... நன்றி...

குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

Krishnamurthi Sri said...
This comment has been removed by the author.
Krishnamurthi Sri said...

ஐயா தங்களின் தீபாவளி லேகியம் தாயாரிக்கும் முறை மற்றும் தீபாவளிக்கான அறிவியல் விளக்கவுரை மிக அருமை..... நான் தங்களிடம் ஒரு உதவி கேட்டு கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தேன்...அதனை தாங்கள் காணவில்லை என்று நினைக்கிறேன்... அதனை பார்த்து பதில் அனுப்பினால் நன்றாக இருக்கும்....
siddharprapanjam@gmail.com
siddharvedhagurukulam@gmail.com

சித்தமருத்துவம் கற்க்கும் ஆர்வம் எனக்கு சிறுவயதிலிருந்தே மிக அதிகம் ஆனால் அதற்க்கான வாய்ப்புகள் எனக்கு கிட்டவில்லை... தாங்கள் எனக்கு வழிக்காட்ட விரும்பினால் தங்களை தொடர்பு கொள்ள தங்களின் கைபேசி எண் மற்றும் நீங்கள் தினமும் பார்வையிடும் மின்னஞ்சல் முகவரியை என்னடைய மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள்....

imayagiri siddhar said...

எமது "சித்தர் வேதா குருகுலம்"மூலமாக பல அபூர்வ கலைகள்
இரகசிய முறைகளை பயிற்சி அளித்து வருகின்றோம்.

இவைகள் வேறு எங்கும் பெற முடியாத அபூர்வ முறைகள் ஆகும்
இவைகள் ஒவ்வொன்றுக்கும் கட்டணங்கள் தனித்தனியாக உள்ளது,

இது பற்றிய விபரங்கள் :www.siddharprapanjam.org இதில் உள்ளது.

Jiva Rasu said...

புல்லாமணக்கு மூலிகை என்றால் என்ன?அதன் படம் யாராவது கூறுங்கள்

jana said...

arummai

imayagiri siddhar said...

"புல்லாமணக்கு"எனும் இம்மூலிகையை இணைய
தளங்களில்முதன் முறையாக நமது "சித்தர் பிரபஞ்சம்"
தளத்தில் வெளியிட்டுள்ளோம்.

இதற்கான புகைப்படம் மற்றும் விளக்கங்கள் ஒரு பதிவாக
தனியாக வெளியிட்டுள்ளோம்.

நன்றி !
இமயகிரி சித்தர்...

பதிவுகளின் வகைகள்