இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Saturday, 3 November 2012

மருத்துவ அதிசயம் -டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் பப்பாளி இலை -பாகம் -1

மருத்துவ அதிசயம் — டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் பப்பாளி இலைச் சாறு!

பாகம் -1


மருத்துவ அதிசயம் — டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் பப்பாளி இலைச் சாறு!

பாகம் -1

ருத்துவ உலகிற்கே சவாலாக விளங்கும் டெங்கு காய்ச்சலை நம்ம பப்பாளி இலை சாறு குணப்படுகிறது என்றால் நம்பமுடிகிறதா? ஆனால் அது தான் உண்மை!!!

டெங்கு காய்ச்சலின் கொடூரம் குறித்து சமீபதிதில் படித்த செய்தி ஒன்று உண்மையில் நெஞ்சை உருக வைத்தது.  கட்டிய காதல் மனைவி டெங்கு காய்ச்சல் வந்து படும் துன்பத்தை பார்க்க சகிக்காமல் சேலத்தில் அவளது அன்புக் கணவன் மருத்துவமனை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாராம். டெங்குவின் உக்கிரம் எந்தளவு இருக்கும் என்று இதிலிருந்தே தெரிகிறதா?

திருவாளர் கொசுவின் துணையோடு டெங்கு என்னும் அரக்கன் இப்படி அனைவரையும் அச்சுறுத்தி வரும் இந்நேரம், கீழ்காணும் இந்த செய்தி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

டெங்குவை உருவாக்கும் DENV வைரஸ் இரத்தத்தின் பிளேட்லெட்ஸ் எனப்படும் ரத்தத்திசுக்களை உருவாக்கும் சக்தியை அழித்துவிடுகிறது. நார்மலாக சராசரி மனிதனுக்கு இரத்தத்தில் ஒரு மைக்ரோ லிட்டருக்கு 150,000 to 250,000 பிளேட்லெட்ஸ் இருக்கும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும்போது அது குறையத் துவங்கும். 50,000 க்கும் கீழே பிளேட்லெட்ஸ் குறையத் துவங்கும்போது அது உயிருக்கு ஆபத்தாய் முடிகிறது. காரணம், இரத்தத்தின் உறைதல் தன்மை பிளேட்லெட்ஸ் குறைந்தால் பாதிக்கப்படும். தொடர்ந்து உடலின் உள்ளேயும் வெளியேயும் இரத்தக் கசிவு ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும்.

இந்த டெங்குவுக்கு சரியான மருந்தோ தடுப்பூசியோ கிடையாது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இயற்கை நமக்கு ஒரு அரிய பொருளை வழங்கியிருக்கிறது. டெங்குவை குணப்படுத்தும் அதிசய பொருள் இது. நம் வீட்டிலேயே இதை தயாரிக்கலாம் என்பது தான் விசேஷமே. பப்பாளி இலையின் சாறு தான் அது.
பப்பாளி இலையை சாறு பிழிந்து அதை உட்கொள்வதன் மூலம் இரத்தத்தில் பிளேட்லெட்ஸ் அளவை அதிகரிக்கச் செய்ய முடியும். பப்பாளி இலைச் சாற்றில் உள்ள என்சைம்கள் டெங்குவை உருவாக்கும் வைரஸ்களை மட்டும் அல்ல… வேறு பல கொடிய வைரஸ்களையும் எதிர்த்து போரிடும் தன்மை கொண்டவை. மேலும் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் வெள்ளை அணுக்களின் வளர்ச்சியை தூண்டும் தன்மை கொண்டவை என்பது ஆராய்ச்சிப் பூர்வமாகவே நிரூபிக்கப்பட்ட ஒன்று.

பப்பாளி இலையை சாறு பிழிந்து அதை உட்கொள்வதன் மூலம் இரத்தத்தில் பிளேட்லெட்ஸ் அளவை அதிகரிக்கச் செய்ய முடியும். பப்பாளி இலைச் சாற்றில் உள்ள என்சைம்கள் டெங்குவை உருவாக்கும் வைரஸ்களை மட்டும் அல்ல… வேறு பல கொடிய வைரஸ்களையும் எதிர்த்து போரிடும் தன்மை கொண்டவை
.

பப்பாளி சாற்றை உட்கொள்வதன் மூலம் பல நோயாளிகள் குணமடைந்திருக்கிறார்கள் என்று மருத்துவர்களும் உறுதிப்படுத்துகிறார்கள். பப்பாளி ஜீரணத்துக்கு மிகச் சிறந்த ஒரு பொருளென ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஒன்று. அதில் நிறைந்திருக்கும் விட்டமின்கள் மற்றும் மினரல்களால் அது உடல் நலத்துக்கு இன்றியமையாத ஒரு பழமாக உள்ளது.


பப்பாளி இலையின் சாற்றில் உள்ள ‘கைமோபாப்பின்’ மற்றும் ‘பாப்பின்’ ஆகிய இரு என்சைம்கள் தான் இரத்தத்தில் பிளேட்லெட் அளவை அதிகரிக்க உதவுகின்றன.  புதிதாகக் பறிக்கப்பட்ட பப்பாளி இலையில் இருந்து தான் இந்த பப்பாளி இலைச் சாற்றை தயாரிக்கவேண்டும். இலையில் உள்ள நரம்புகளை தனியே உருவி அவற்றை நீக்கிய பின்பு, இலையை கூழாக அரைத்துக் கொள்ளவேண்டும். மிக்சியில் கூட போட்டு அடிக்கலாம். இதில் கிடைக்கும் பேஸ்ட் மிகவும் கசப்பாக இருக்கும். எனவே அப்படியே உட்கொள்ள முடியாது. ஆகவே ஏதாவது பழச்சாற்றில் இந்த பேஸ்ட்டை மிக்ஸ் செய்து பருகவேண்டும்.

ஒரு வேலைக்கு 20-25 ml என ஒரு நாளைக்கு இரு முறை உட்கொள்ளவேண்டும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பப்பாளி இலைச் சாற்றை உட்கொண்ட பிறகு, அவர்களின் உடல் நிலையில் கணிசமான அளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறுகிறார்கள்.


அபிஷேக் மஜூம்தார் என்னும் 21 வயது இளைஞருக்கு, டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. அப்போது அவரது இரத்தத்தில் இருந்த பிளேட்லெட்ஸ் எண்ணிக்கை 84,000. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அவர் பப்பாளி இலைச் சாற்றை உட்கொள்ள ஆரம்பித்த பின்னர் மூன்றே நாட்களில் அவர் இரத்தத்தில் பிளேட்லெட்ஸ் எண்ணிக்கை 1,00,000 ஆக உயர்ந்துவிட்டது. “பிளேட்லெட்ஸ் எண்ணிக்கை மட்டும் கூடவில்லை… அவருடைய உடல் நிலையிலும் கணிசமான அளவிற்கு முன்னேற்றம் ஏற்பட துவங்கிவிட்டது. படிப்படியாக குணமாகிவிட்டார்” என்று கூறுகிறார் அவரது தந்தை அபிஜித் மஜூம்தார்.

32 வயது மம்தா குப்தா – மற்றுமொரு டெங்கு நோயாளி. அவருடைய பிளேட்லெட்ஸ் எண்ணிக்கையும் இதே போல, பப்பாளி சாரை உட்கொண்ட பிறகு பன்மடங்காகிவிட்டதாம். அதாவது 70,000 த்திலிருந்து 450,000 ஆக உயர்ந்து விட்டதாம்.32 வயது மம்தா குப்தா – மற்றுமொரு டெங்கு நோயாளி. அவருடைய பிளேட்லெட்ஸ் எண்ணிக்கையும் இதே போல, பப்பாளி சாரை உட்கொண்ட பிறகு பன்மடங்காகிவிட்டதாம். அதாவது 70,000 த்திலிருந்து 450,000 ஆக உயர்ந்து விட்டதாம்.

டெங்கு முற்றிப் போய் பிளேட்லெட்ஸ்களை  கட்டாயம் TRANSFUSION செய்ய வேண்டிய நிலையில் இருப்பவர்கள், பப்பாளி சாற்றை உட்கொண்டாலே போதும். அவர்களுக்கு  TRANSFUSION தேவைப்படாது என்கிறார்கள் சில மருத்துவர்கள். “என்னுடைய பேஷன்ட்டுகளில் பலர் பப்பாளி இலைச் சாற்றை உட்கொண்டு பிளேட்லெட்ஸ் கவுண்ட்டை உயர்த்திக்கொண்டுவிட்டனர். ஆகவே என்னுடைய எல்லா பேஷன்ட்டுகளுக்கும் நான் அதை பரிந்துரைத்திருக்கிறேன்” என்கிறார் தொற்றுநோய் தடுப்பு மருத்துவர் தேபாஷிஷ் பாஸு.


பப்பாளி இலையில் உள்ள என்சைம்களுக்கு அபார மருத்துவ குணம் இருக்கிறது என்று ஒப்புக்கொள்கிறார் பிரபல புற்றுநோய் சிகிச்சை நிபுணர் முகோபாத்யாய். “இயற்கையான முறையில் பப்பாளி இலைச் சாறு இதை சாதிப்பதால் ரொம்ப முற்றிய சில கேஸ்களை தவிர அனைவருக்கும் நாங்கள் இதையே பரிந்துரைக்கிறோம்” என்கிறார்.

“பப்பாளி இலை நிச்சயம் இயற்க்கை தந்த ஒரு சிறந்த ஒளஷதம் (மருந்து) என்பதில் சந்தேகம் இல்லை. இது குறித்து மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்” என்று கூறுகிறார் பிரபல மருந்து நிபுணர் சுப்ரதா மைத்ரா.

இந்தப் பதிவை உங்கள் சுற்றத்திடமும் நட்பிடமும் பகிர்ந்து இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உதவியாய் இருங்க. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது உதவக்கூடும்!

[Source & Inspiration : டைம்ஸ் ஆப் இந்தியா, கோல்கட்டா &  தி ஸ்டார் மலேசியா, Tribune]

நன்றி !

நன்றி !
இமயகிரி சித்தர்...
www.siddharprapanjam.org  3 comments:

Bharathan Periasamy said...

thanks guruji


Barathan

Simple Sundar said...

எம் தளத்தில் நாம் வெளியிட்ட நல்ல செய்தியை இங்கு பகிர்ந்து மறக்காமல் எமது பெயரையும் அளித்ததற்கு மிக்க நன்றி ஐயா...!
தொடரட்டும் உங்கள் பணி! விலகட்டும் மக்கள் பிணி!!
- சுந்தர்
www.rightmantra.com

imayagiri siddhar said...

சுந்தர் ஐயா...!

நன்றி..!
இமயகிரி சித்தர்...
www.siddharprapanjam.org

பதிவுகளின் வகைகள்