இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Monday, 1 October 2012

சஞ்சீவி மூலிகை இரகசியம் -ஆய்வு விளக்கம் (பாம்பு விஷகடி - முறிவு) பாகம் -1

சஞ்சீவி மூலிகை இரகசியம் - ஆய்வு விளக்கம்                      பாம்பு விஷகடி - முறிவு  -பாகம் -1

நமது தமிழகத்தின் கிராமப்புறங்களில் ‘சஞ்சீவி’ மூலிகையைப் பற்றி, செவிவழிச் செய்திகள் பலவற்றை கேள்விப்பட்டிருப்போம். அந்த மூலிகை பல அதிசய சக்திகள் கொண்டது என்றும் கூறப்பட்டிருக்கும். ஆனால், எத்தனைப் பேருக்கு அது பற்றி விவரம் தெரியும்?

அந்தப் பகுதிக்கு செல்ல வேண்டும். தாய் கழுகு இதை தேடி செல்லும் வரை நாம் காத்திருந்து, அதன் பின்னர் நாம் கூட்டில் இருக்கும் குஞ்சுக் கழுகின் கால்களில் சிறிய இரும்புச் சங்கிலியைக் கட்டிப் போட்டு விட்டு, மறைந்து கொள்ள வேண்டும். இரையுடன் திரும்பிய தாய்க் கழுகு, தனது குஞ்சுகள் சங்கிலியால் கட்டப்பட்டதை உணர்ந்து, அதிலிருந்து விடுவிப்பதற்காக, சஞ்சீவி மூலிகையை தேடிச் செல்லும். சிறிது நேரத்திலேயே அதைக் கொண்டு வந்து தனது குஞ்சுகள் கட்டப்பட்ட இரும்புச் சங்கிலி மீது வைக்க அவை இரண்டாக தெறித்து விடுபடும். அதன் பிறகு, மீண்டும் அது இரை தேடி புறப்படும் வரை நாம் காத்திருந்து, பின்னர் மேலே ஏறி கூட்டில் பார்த்தால், பச்சை நிறத்தில் ஒரு மூலிகை வேர் இருக்கும். அதை எடுத்து வந்து நெருப்பில் போட்டால் வேகாது எனவும், ஓடும் நீரில் போட்டால் எதிர்த்துச் செல்லும் எனவும், இதை பூட்டிய பூட்டின் மேல் வைக்க அது திறந்து விடும் எனவும் கூறக் கேட்டிருப்போம்.

இம் மகத்துவம் வாய்ந்த சஞ்சீவி மூலிகையின் வேரை நமது காலின் தொடைப் பகுதியில் வைத்து தைத்து விட்டால், நம் உடலுக்கு ஒரு அபூர்வ சக்தி வந்து விடும். பிறகு உடலின் எந்தப் பகுதியிலும் கத்தியால் குத்தினாலும், வெட்டினாலும், அந்தச் சதைப் பகுதி கூடி விடும்: காயமும் உடனே ஆறி விடும் எனவும் பெரியோர்கள் சொல்லியிருப்பர்.

ஆனால், இன்றைய நவீன விஞ்ஞான உலகில் மேற்கண்ட விவரங்களை எல்லாம் நமப முடியுமா? இதெல்லாம் சாத்தியமா? என்றெல்லாம் நமக்குள் கேள்வி எழலாம். முதலில் இதன் அடிப்படையைப் பற்றி சற்று ஆராய்வோம்.

“இல்லாமல் புகையாது: அள்ளாமல் குறையாது” என்று ஒரு பழமொழி உண்டு. எந்த ஒரு விஷயமும், கருத்தும் உண்மையிலிருந்து தோன்றியவையாகத் தான் இருக்கும். அவை காலப் போக்கில் பல கற்பனைகள் கலந்து பல்வேறு உருவம் பெற்றிருக்கும்.

இக்கருத்தின் படி பார்த்தால் சஞ்சீவி மூலிகை இருப்பது உண்மையா? என்றால் உண்மை தான் என்று சொல்ல சில சான்றுகள் உரைக்கின்றேன்.

சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு, எனது நண்பர்களில் ஒருவராகிய மதுரை வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் அவர்கள் (இவர் தான் ஷங்கர் டைரக்ஷனில் கமலஹாசன் நடித்த ‘இந்தியன்’ திரைப்படத்திற்காக வர்மக்கலை பயிற்சி அளித்தவர்) ஓலைச் சுவடி ஒன்றில் சஞ்சீவி மூலிகையை பல்வேறு முறைகளில் எடுப்பது பற்றிய விவரம் இருப்பதைக் கண்டறிந்தார். அதன்பிறகு சித்தர்கள் சங்கம் அமைத்து வாழ்ந்து வந்த ‘சதுரகிரி’ மலையில் பல வருடம் மூலிகை ஆராய்ச்சியில் ஈடுபட்டடு, ஒரு மூலிகையானது, சஞ்சீவியின் செயலில் பாதி உள்ளதாக கண்டறிந்தார். அதை வைத்து பத்திரிகை நிருபர்களுக்கு முன் பூட்டிய புட்டை திறந்து காண்பித்தார். அவர்களும் திரும்ப சோதித்து பார்த்து ஆச்சரியத்துடன் ஒப்புக் கொண்டனர். “ஜோதிப்புல்” என்ற மூலிகை தான் அது. இது பற்றிய செய்தி -20 -வருடங்களுக்கு முன்பு “பாக்யா” வார இதழில் வெளி வந்துள்ளது.

இது பற்றிய விளக்கம் ஒரு தனிப்பதிவாக இதே தளத்தில் 
"அதிசய சஞ்சீவி மூலிகை செயல் விளக்கம்" என்ற தலைப்பில் 
முன்பே வெளியிட்டுள்ளோம் .

எனது ஆய்வில், பல்வேறு சித்தர் நூல்களை ஆராய்ந்ததில் சஞ்சீவி மூலிகையின் அடையாளம், அதை எப்படி சோதித்து அறிவது போன்ற விவரங்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில், சேலம் மாவட்டம் மோகனூர் வைத்தியர் பெருமாள் சேர்வை என்பவரிடமிருந்த “கொல்லிமலைக் கலிங்கம்” என்ற ஓலைச் சுவடியில் சஞ்சீவி மூலிகையைப் பற்றிய அபூர்வ தகவல்கள் கிடைத்தது. அதன் விவரம் வருமாறு:

“சதுரகிரி” பர்வதத்திற்கு மேல் மூலையாக குதிரை மலை உண்டு. அதன் மத்தியில் பெருமாள் கோயில் உண்டு. அந்தக் கோவிலின் தென்மேற்கு மூலையாக சின்ன சிகரம் உண்டு. அதற்கு தென் மேற்காக சுனை உண்டு. இதற்கு தெற்காக “சஞ்சீவி” உண்டு.

கருப்பு நிறமாய் இருக்கும். இலை வேப்பிலை போல் இருக்கும். அந்த மரத்தை வெட்டினால் உடனே வளரும். மரப் பட்டையை பொடி செய்து மரணமடைந்தவருக்கு வாசங் காட்ட எழுந்திருப்பான். இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டுக் கிடந்தாலும் பொடியை வாசங் காட்ட எழுந்திருப்பான். இந்த வித்தை கை கண்டது. ஒரு நாளைக்கு ஐந்து வர்ணமாவான் எனச் சுவடியில் உள்ளது. (சித்தர்களின் அருள் பெற்றோருக்கு இம் மூலிகை கிட்டும்)

பாம்பு விஷ கடி சஞ்சீவி மூலிகையின் இரகசிய விளக்கம் பாகம் -2-ல் 

நன்றி !

இமயகிரி சித்தர் ...
siddharprapanjam@gmail.com
www.siddharprapanjam.org
சித்தர் பிரபஞ்சம் குழு -face book

2 comments:

Jiva Rasu said...

நன்றி

Jiva Rasu said...

பாதரசம் செயற்கையாக தயாரிப்பது எப்படி?
எதாவது மிகவும் எளிய முறை உள்ளத
மற்றும்
பாதரசம் ஒரு கலவை யோடு இருக்கும் பொது எப்படி பிரிப்பது
சித்தர்கள் எதாவது எளிய முறை கூறி இருக்காங்களா

பதிவுகளின் வகைகள்