இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Monday, 11 August 2014

பில்லி சூன்யம் ஏவல் தீர - ஓலைச்சுவடி அனுபவ முறை

பில்லி சூன்யம் ஏவல் தீர - ஓலைச்சுவடி அனுபவ முறை

பில்லி சூன்யம் ஏவல் தீர ஓலைச்சுவடி அனுபவ முறை 


இறைவன் மீதும், உழைப்பின் மீதும் முழுமையாய் நம்பிக்கை வைத்து தொழில் மற்றும் அலுவலகங்களில் உண்மையாய் உழைத்து வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வரும் போது வளர்ச்சியை முடக்கவும்முன்னேற்றத்தை தடுக்கவும்,வாழ்க்கையை சீர்குலைக்கவும், மேலும் சொந்த பந்தம் பிரச்சனை, சொத்து பிரச்சனைக்காகவும், எதிரிகளால் ஏவப்படுவதே பில்லி, சூன்யம், ஏவல் ஆகும்.

இன்றைய விஞ்ஞான யுகத்தில் இது சாத்தியமா என்றால் இந்த தீவினைகளால் பாதிப்படைந்து துன்பங்கள் அனுபவிப்பவர்களுக்கே இது உண்மை என்று புரியும்.

பில்லி, சூன்யம், ஏவல் என்பது துன்மார்க்க மாந்திரீக முறைகளில் ஒன்றாக உள்ளது.

பில்லி, சூன்யம், ஏவல் இவைகளால்  ஏற்படும் தீவினைகளை முற்றிலும் அழிப்பதற்கான மந்திரம், எந்திரம் போன்ற சக்தி வாய்ந்த சூட்சும அனுபவ முறைகள் தெய்வீக மாந்திரீக முறைகளில் உள்ளன.இவைகள் சித்தர் வழி பாரம்பரிய குருகுல முறையில் ஓலைச்சுவடிகளில் பதிவு செய்யப் பட்டு பலநூறு வருடங்களாக பாதுகாக்கப்பட்டு எங்களது பயன்பாட்டில் உள்ளவைகள் ஆகும்.  

இந்த ஓலைச்சுவடி மாந்திரீக அனுபவ முறைகளை மக்களின் நன்மைக்காக வெளியிடுகின்றோம்.


1 - மேலே உள்ள முதல் ஓலைச்சுவடியில் உள்ள மந்திரம் :

பில்லி சூன்யம் மீளும் மந்திரம் 

ஓம் நமோ நாராயணா இறங்கு இறங்கு 
செம்பொன்னுடுத்தி செம்பொன்னால் குடையிட்டு வருகிற 
கால கால சர்வ பூத பிரேதப் பிசாசு சர்வ அற்ப பிசாசு 
சர்வ விடுவையும் சர்வ பில்லியும் சர்வ சூன்யமும் 
உன்னடி கண்டு உன்னடி வணங்கினாப் போலே 
என்னடி கண்டு என்னடி வணங்கச் சிவாகா 

மந்திரம் முற்றும் உரு 1008 செபிக்க சித்தியாகும்.


2 - எந்திரத்தில் உள்ளே வரையும் அட்சரங்கள் : இரண்டாம் ஓலைச்சுவடி

ஓ ம் சி வ ய 
ந ம சி வ ய 
ஓ ம் சி வ ய
ந ம சி வ ய
ஓ ம் சி வ ய

இரண்டாம் ஓலைச்சுவடியில் உள்ள எந்திரம் ஒரு தாமிர தகட்டில் எந்திர விதிமுறைப்படி வரைந்து மேற்கண்ட மந்திரம் கிரகணம் பிடிக்கும் வேளையில் உரு 1008 செபிக்க சித்தியாகும்.

மேற்கண்ட முறையில் செபித்து சித்தி செய்யப்பட்ட எந்திரத்தை உடலில் அணிந்து கொள்ள,அல்லது இல்லங்களில் பூஜை அறையில் வைத்து பூஜித்து வர பில்லி, சூன்யம், ஏவல் இவைகளால்  ஏற்படும் தீவினைகளை முற்றிலும் அழிந்து தெய்வீக அருள் பூரணமாக நிறைந்து விடும்.


முன் அனுமதி பெற்று வரவும்

நன்றி !

மெய்திரு, இமயகிரி சித்தர்
சித்தர் வேதா குருகுலம்
22, புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் P.O – திருச்சி D.T - 620006
தமிழ்நாடு – இந்தியா

அகத்தியர் குருகுலம், யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம் , சிறுமலை புதூர்
திண்டுக்கல் – D.T - 624003
தமிழ்நாடு – இந்தியா
செல் :98654302359095590855 – 9655688786 - 8695455549
2 comments:

Jayaseelan said...

அற்புதம். மிக்க நன்றி!

muralidharan said...

I have got the words of OLAI CHUVADI for prosperity and success.

Thank you. I feel blessed!

பதிவுகளின் வகைகள்