இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Tuesday 29 July 2014

முடவாட்டுக்கால் கிழங்கு - Mudavattukal Rhizome

முடவாட்டுக்கால் கிழங்கு - Mudavattukal Rhizome 





முடவாட்டுக்கால் கிழங்கு - Mudavattukal Rhizome 

சித்தர்கள் கண்டறிந்த மகத்துவம் மிக்க காயகற்ப மூலிகை களில் ஒன்றுதான் முடவாட்டுக்கால் ஆகும்.இம்மூலிகையில் கிழங்கு பகுதியில் மட்டுமே அபூர்வ மருத்துவ குணம் அடங்கியுள்ளது.

இம்மூலிகை கிழங்கு மலைப்பகுதியில் உள்ள பாறைகளில் மட்டுமே வளரும் தன்மை கொண்டது.இது கொல்லிமலை, மற்றும் சதுரகிரி மலையில் கிடைக்கின்றது.

இம்மூலிகை கிழங்கு செம்மறி ஆட்டின் கால்களைப் போன்ற தோற்றத்துடன் இரண்டடி நீளம் வரை வளரும்.

முடவாட்டுக்கால் என்பதன் விளக்கம் :

முடவன் - ஆட்டும் - கால் என்பதாகும்.அதாவது மூட்டுவாதம் வந்து முடங்கிப் போனவர்களுக்கு இக் கிழங்கு மூலமாக லேகியமாக மருந்து அல்லது கசாயம் [ சூப் ] செய்து கொடுத்தால் மூட்டுவலி,முடக்கு வாதம்  [ Arthritis ] நீங்கி குணமடைவார்கள்.  


சிறு வயது குழந்தைகளுக்கு வரும் வாதநோய் களுக்கு முடவாட்டுக் கால் கிழங்கை கொதிக்கும் நீரில் போட்டு வைத்து இளம் சூட்டில் உடலில் ஊற்றி தினம் குளித்து வர இரண்டு,மூன்று மாதத்தில் வாத நோய்கள் குணமாகும்.


முடவாட்டுக்கால் [மூலிகை] சூப் செய்முறை :

முடவாட்டுக்கால் கிழங்கு     - 50 - கிராம் 
மிளகு                                    - 20 - No
சீரகம்                                    - 1/4- டீஸ்பூன் 
பூண்டு                                   - 3  பல் 
தக்காளி                                 - 1

அனைத்தையும் ஒன்றிரண்டாய் இடித்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து 300 மிலி அளவு கொதித்து வற்றியவுடன் வடிகட்டி சிறிது உப்பு,சிறிது வெண்ணெய் சேர்த்து இளம் சூட்டில் குடிக்கவும்.சுவையாக இருக்கும்.

இது போல் தினமும் செய்து குடித்துவர மூட்டு வலி, முடக்கு வாத நோய்கள் விரைவில் குணமாகும்.  


2006 ம் வருடத்தில் தோன்றிய சிக்குன் குனியா என்னும் மூட்டுவாத காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் பலர்  முடவாட்டுக்கால் [சூப்] கசாயத்தினால் எளிதில் குணமடைந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி !
மெய்திரு :இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம்
சிவராம் நகர்,
திருவானைக்கோவில் - P.O
திருச்சி - 620005
செல் :9865430235 - 9095590855

No comments:

பதிவுகளின் வகைகள்