இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Thursday, 7 November 2013

இறைவன் நுழைந்த அதிசய குகை வீடியோ - சுருளிமலை அதிசயம் பாகம் - 3 - God Shiva Cave - Surulimalai [ Exclusive Video ]

இறைவன் நுழைந்த அதிசய குகை வீடியோ - சுருளிமலை அதிசயம் பாகம் - 3 God Shiva Cave - Surulimalai [ Exclusive Video ]
சித்தர்கள் வாழும் புண்ணிய தலங்களை தரிசனம் செய்யவும், அதிசய மூலிகைகளை கண்டறிந்து ஆய்வு செய்யவும் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான சுருளிமலையில் பயணம் மேற்கொண்ட போது பதிவு செய்த பிரத்யேக [ வீடியோ ]ஒளிப்பதிவு இது.

சுருளிமலை என்பது இந்தியாவில் புனிதமும்,தெய்வீகமும் வாய்ந்த பல்வேறு மலைகளில் வேறுபட்டு ஏராளமான தெய்வீக அமானுஷ்ய அதிசயங்களை தன்னகத்தே கொண்ட ஒரு அற்புத மலையாகும்.

நமது சித்தர் பிரபஞ்சம் இணைய தளத்தில் முன்பே சுருளிமலை பற்றிய அதிசய விபரங்களை இரண்டு பதிவுகள் செய்துள்ளோம்.    இந்த இரண்டு பாகங்களை படித்து வியந்த ஏராளமான வாசகர்கள்  நன்றியும், பாராட்டுக்களும் தெரிவித்ததுடன் அடுத்த பாகம்  எப்போது என கேட்டு வந்தனர்.அதன் தொடர்ச்சி இப்போது 3 - வது பாகமாக ஒளிப்பதிவுடன்.  

மேற்கண்ட இரண்டு பதிவுகளில் குறிப்பிட்ட குகைகள் இரண்டும் ஒன்றுதான்.இந்த குகையில் ஆதியில் இமயகிரி சித்தர் தவம் செய்த போது இறைவன் சிவ பெருமான் குகையின் உள்ளே சென்று அவருக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்துள்ளார்.இந்தியாவில் வேறு எந்த ஒரு மலைகளின் குகைகளில் இல்லாத சிறப்பு இந்த குகைக்கு மட்டுமே உண்டு. 

தெய்வீக மகத்துவம் மிக்க இந்த அதிசய குகையின் பிரத்தியேக ஒளிப்பதிவு [ வீடியோ காட்சி ] இது.இணைய தளங்களில் முதல் முறையாக நமது சித்தர் பிரபஞ்சம் தளத்தில் வெளியிடுகின் றோம்.   

சுருளிமலை என்னும் இந்த தெய்வீக மலையில்தான் நான் குருகுல  கல்வியாக சித்தர் கலைகளின் அதீத இரகசியங்களை கற்றதும், தேர்ச்சி பெற்றதும்,சித்தர்களை நேரில் தரிசனம் செய்ததும், எனது சித்தர் நிலை மெய் குருவால் கைலாசநாதர் குகையின் உள்ளே தீட்சையின் போது எமக்கு இமயகிரி சித்தர் என்னும் பெயர் நாமம் சூட்டப்பட்டதும் இங்குதான்.

குறிப்பு : இந்த வீடியோ பதிவு செய்த  போது சப்த கன்னிமார் குகை பதிவின் போது அமானுஷ்யமாக கொலுசு சப்தம் கேட்கிறது. நன்கு கவனித்துப் பாருங்கள்.சப்தம் கேட்கும். இந்த பதிவின் போது அங்கு நான்கு ஆண்கள் மட்டுமே இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Youtube Video Link - http://youtu.be/T_tRqwibHxg

சுருளிமலை அதிசயங்கள் பாகம் - 4 -ல் தொடரும்.

நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி - T.N 
Cell No : 9865430235 - 8695455549

3 comments:

Subash S.p said...

ஐயா
பேருறை என்பது என்னமூலிகை என
தெரியப்படுத்தவும்.

Subash S.p said...


பேருறை என்பது என்னமூலிகை என
தெரியப்படுத்தவும்.

subash.sps5@gmail.com

senthil said...

ayya vanakkam sidha maruthuvathil udal uyaramaka valara ethum marunthu ullatha?

பதிவுகளின் வகைகள்