இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Thursday, 21 June 2012

வேம்பு கற்பம் (காயகற்பம்) vempu karpam (kayakarpam)

வேம்பு கற்பம் (காயகற்பம்)             

நந்தீசர் சகலகலை ஞானம் -1000

    புகல்பெறவே நூற்றாண்டின் வேம்பைப்பர்த்து
    ஆமாப்ப பட்டையைத்தான்  வெட்டிவந்து
    அப்பனே நிழல்தனிலே யுலர்த்திபின்பு
    காமப்பா யிடித்து நன்றாய்ச் சூரணமே செய்து
    கரிசாலை மல்லிகையின் சாறு வார்த்து
    நேமப்பா அஞ்சுதரம் பாவினையே செய்து
    சிறப்பான வெருகடிதூள் கொண்டிடாயே
    கொண்டிடவே யனுபான வகையைக்கேளு 


     மத்தித்து தேனதிலே குடிப்பாயே நாற்பதுநாள்
    விண்டிடவே யந்திசந்தி கொள்ளுகொள்ளு
    மெய்யெல்லாங் கருங்கல்லின் வைரம்போலாம்
    துண்டிடவே நரை திரையு மேல்லாம்போகும்
    சுக்கிலந்தான் மேலேறும் கீழோடாது
    கண்டிடவே யாருதளம் வெளியே காணும்
    காலனுமே அஞ்சிடுவான் காணுங்கானே                                 
                                        

நாம் காயகற்ப மருந்துகளைத்தேடி எங்கேயும் காடு மலைகளில் அலைந்து திரியாமல் வீட்டிலிருந்தபடி சுலபமாக செய்து சாப்பிட்டு உடலைக் கற்ப தேகமாக மாற்றிக்கொள்ள நந்தீசர் பெருமான் அருளியுள்ளார் 
                                   
தமிழ் நாட்டில் எங்கும் சாதாரணமாக காணக்கிடைக்கும் வேப்பமரத்தை நூறாண்டு சென்ற வயதான மரத்தை தேடி அதன் பட்டையை வெட்டிவந்து மேலே உள்ள கடினமான பகுதியை நீக்கி விட்டு  உள்ளே உள்ள வெண் சதைப் பகுதியை எடுத்து நிழலிலேயே நன்கு காய வைத்து  உரலிலிட்டு இடித்து தூள் செய்து கொள்ளவும் இதில் வெண் கரிசலாங்கண்ணி சாறு ,கொத்தமல்லி இலையை இடித்த சாறு  இரண்டும் சமமாகக்கலந்து வேம்பு பட்டை தூளில் கலந்து அது முழுகும் அளவு சாறு விடவும்  இதை வெயிலில் வைத்து காயவிடவும் இந்த மூலிகை சாறுகள் நன்கு வற்றியவுடன் மீண்டும் மேற்கண்ட சாறுகளை ஊற்றிக்கலந்து வெயிலில் காயவிடவும் 

இப்படி ஐந்து முறை செய்யவும் இதற்க்கு பாவனை என்று  பெயர் இந்த முறையில் தயார் செய்த சூரணத்திற்கு "வேம்பு கற்பசூரணம்"என்று பெயர் இதனை பாட்டிலில் பதனம் செய்யவும் இதனை வெருகடியளவு என்பது ஐந்து விரல் கூட்டி எடுத்து (ஒரு டீ ஸ்பூன் அளவு)எடுத்து தரமான தேனில் கலந்து அந்தி சந்தி (காலை -மாலை)என நாற்பது நாள் உண்ணவும் 

இதனால் தேகம் வைரம் போல் இறுகி நாடி நரம்புகள் முறுக்கேறும், தசைகள் இறுகும், தலைமுடி நரை மாறும் ,பார்வைத்திறன் அதிகரிக்கும், உடல் இள 
வயது தோற்றம் பெரும், மற்றும் சுக்கிலம் எனப்படும் விந்து திடப்படும், உடல் உறவில் அதிகநேரம் நீடிக்கும் குண்டலினி யோகப்பயிற்சி செய்வோருக்கு 
பேரின்பசித்தி கிட்டும் மற்றும் ஞானத்தின் ஆறு நிலைகளையும் கண்டு உணரலாம் எனவும் இந்த "வேம்பு கற்பம்"உண்டவனைக்கண்டு காலன் என்ற எமன் அஞ்சுவான் என குறிப்பிடுகின்றார்

 இப்படி மகத்துவம் வாய்ந்த "வேம்பு கற்ப சூரணம்"செய்து உண்டு அனைவரும் பெரும் பயனடையலாமே 
நன்றி!

இமயகிரி சித்தர் 
சித்தர் வேதா குருகுலம் தென் இந்தியா 
                                                                       

4 comments:

Kithiyon said...

ஐயா வேம்பு கற்பம் செய்து தரும் மருத்துவரின் முகவரி தரவும். நன்றி

Mail. kithiyon@gmail.com
Cell : 9942996161

Gowtham Gp said...

Sir please give the meaning for this song on vapam karpam
கருவூரார் வேம்பு கற்பம்

தானவனாம் வேம்பினோட கற்பம்தன்னை
தாரணியில் சித்தர்களே சாற்றக்கேளும்
ஆனதொரு கார்த்திகையாம் மாதம்தன்னில்
வால்மிருக சிரீஷமும் பூசம்தன்னில்

ஏனமுதற் ஜலமிக்கக் கொழுந்தைக்கிள்ளி
இன்பமுடன் தின்றுவா இருபத்தேழ்நாள்
ஆனதொரு சர்ப்பங்கள் தீண்டினாலும்
அதுபட்டு போகுமப்பா அறிந்துகொள்ளேன்

கொள்ளப்ப மாதமொன்று கொண்டேயாகில்
குஷ்டமென்ற பதினெட்டு வகையுந்தீரும்
துள்ளுகின்ற பூதமொடு பிசாசுதானும்
துடிதுடித்து கண்டவுடன் ஓடிபோகும்


விள்ளுகின்றேன் பொடிசெய்து கொளுந்துதன்னை
வெருகடியாய்தேனில் அரைவருடம் கொண்டால்
வள்ளலே நரையொடு திரையுமாறும்
வாலிபம்முன்னூறு வயதிருப்பான் கானேன்

இருப்பதொரு வேம்பினை துளைத்துதானே
இன்பமுடன் மேல்நோக்கி சிலாகைத்தாக்கி
திருப்பாணி மாகுமப்பா மற்றொண்றாக
திதங்கீழ் மற்றதோர் பாண்டம்வைத்து

மறுப்பிலா துபாயமதனை மூடி
மண்டலம்தான் சென்றபின்பு தைலம்தானும்
விருப்பமுடன் தைலமங்கே இறங்கினிற்கும்
மீண்டும்நீ தைலமதை எடுத்துக்கொள்ளேன்

எடுத்துவந்த தைலமப்பா கலஞ்சிமூன்று
இந்தயிடை தேன்கூட்டி குழப்பிக்கொண்டு
திடமாக மண்டலமே கொண்டேயானால்
திரையுமில்லை நரையுமில்லை செப்பக்கேளு

அடவாக அதிசயங்கள் அநேகம்கானும்
ஆறுஆதாரங்கள் எல்லாம் வெளியாய்கானும்
இடமாக காரியங்கள் ஜெயம்கொள்வாய்நீ
இன்ப மனோகரனாய் இருப்பாயென்னே

என்னேகேள் வண்ணந் தானேயாவாய்
இயல்பாக அரைவருடம் கொண்டேயானால்
உன்னிலே பதினாறு வயதுபோல
உறுதியாய் வைரசடம் உமிழ்நீர்வேதை

மன்னனே யாகாச கெளனசித்தி
வல்லமையால் பூவுலகில் வசிக்கலாகும்
சொன்னபடி ஒருவருடம் கொண்டேயாகில்
தொலையாத காயசித்தி வேம்பிங்கற்பம்

Unknown said...

ayya nandry enda vembu karppam enge kidaikkum pls solringla 09323589505

Unknown said...

வேம்பு கற்பம் உண்ணும் போது
பத்தியங்கள் கடைப்பிடிக்க வேண்டுமா?

பதிவுகளின் வகைகள்