இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Monday, 25 June 2012

பாதரச சுத்தி - Mercury clean "siddhar prapanjam"

பாதரச சுத்தி -  Mercury clean "siddhar prapanjam"


1- தோசமுள்ள பாதரசம் (mercury)  


2 - பாதரசத்தின் தோஷங்களை போக்கும் சுத்த கங்கை-ஜெயநீர்   



3 - சுத்த கங்கையில் பாதரசம் சேர்த்தவுடன் தோஷம் நீங்கு கின் றது (அடியில் பாதரசம் உள்ளது )

4 - நீரில் கருப்பாக உள்ளதுதான் பாதரசத்தின் தோஷங்கள்

   

5 - தோஷம் நீங்கிய பாதரசம் துணியில் வைத்து பிழிந்தபோது  






6 - சுத்தியான பாதரசம் (பாதரச சுத்தி)  Mercury clean 



சித்த மருத்துவ முறையினில் தேவைப்படும் முக்கியமான மூலப் பொருள்களில் ஒன்றுதான் பாதரசம்.(mercury)இது சர்வ வல்லமை படைத்ததாகும்.இதை சித்தர்கள் சிவவிந்து என குறிப்பிடுகிறார்கள். இதைக்கொண்டுதான் அஷ்டமாசித்திகளை அடைந்து   உள்ளனர். இரசவாதம் எனும் கலையே பாதரசத்தை அடிப்படையாகக்  கொண்டு உருவானதுதான்.

இப்படி மகத்துவம் வாய்ந்த பாதரசத்தில் 7" வகை தோஷங்களும் 8"வகை குற்றங்களும் உள்ளது.இவைகளை நீக்கினால்தான் பாதரசம் சுத்தியாகும். பிறகுதான் இரசமணி,இரசகுளிகை,இரசவாதம் செய்ய இயலும். 

பாதரசத்தை சுத்தி செய்ய பல வித இரகசிய முறைகள் பாரம்பரிய சித்த மருத்துவர்களிடம் உள்ளது அதில் ஒரு முறைதான் மேலே உள்ள படங்களில் காட்டப்பட்டுள்ளது.

குறிப்பு : நண்பர்களே எமது "சித்தர் பிரபஞ்சம்"வலை தளத்தைப் பற்றிய  உங்களது மேலான கருத்துக்களை பதிவுசெய்யவும்   


நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் – திருச்சி  - தமிழ்நாடு
அகத்தியர் குருகுலம் – சஞ்சீவிமலை – தமிழ்நாடு
Mobile : 9865430235 - 9095590855              


23 comments:

ATOMYOGI said...

வணக்கம்! தற்செயலாக உங்கள் வலைப்பூவில் நுழைந்தேன். வியந்து போனேன். தஙகளது முயற்சிகளும் அதை மற்றவர்களுடன் பரிந்து கொள்ளும் தங்களது எண்ணம் பாராட்டிற்குரியது.

இமயகிரி சித்தர் said...

நன்றி!
மாயாவி ஐயா,
எமது "சித்தர் பிரபஞ்சத்தின்"தொடக்கம் தான் இது,மேலும் பல அற்புதங்களை இனி வரும் பகுதிகளில் தொடர்ந்து காணலாம் எமது வலைத்தளம் பற்றி உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்
இமயகிரி சித்தர்

sankar said...

நண்பரே !
உங்களது பதிவுகள் மிக அருமையாக உள்ளன
சுத்த கங்கை ஜெயநீர் என்றால் என்ன ?

இமயகிரி சித்தர் said...

சுத்த கங்கை ஜெய நீர் என்பது சித்த மருத்துவ பாரம்பரிய
வழி முறைகளில் தயாரிக்கப்படும் ஒரு வகை உப்பு நீர்.
இது பூமியில் தோன்றும் பல்வேறு வகையான இயற்கை
உப்புக்களைக் கொண்டு தயாரித்தல் ஆகும்
.
சுத்த கங்கை :சகல மாசுக்களை அகற்றும் புனித நீர்
ஜெய நீர் :நெருப்பை வெல்லும் (ஜெயிக்கும்)நீர்

இவை செய்முறை மிக இரகசியமாக உள்ளவை.

நன்றி !
இமயகிரி சித்தர்...

தேடல் said...

அன்புள்ளம் கொண்ட இமயகிரிசித்தர் அவர்களுக்கு என் உளம்கனிந்த வணக்கங்கள்,இந்த மாபெரும் ரகசியத்தை சர்வ சாதாரணமாக சொல்லி விட்டீர்கள் ஆச்சரியமாக இருக்கிறது.

வளர்க உங்கள் சித்தர் தொண்டு.

நந்தா
தாம்பரம்

இமயகிரி சித்தர் said...

வணக்கம் நந்தா ஐயா !

சித்தர்களின் குருமுறை வழி வழியாகவும்,பாரம்பரிய
சித்த மருத்துவ அனுபவ முறைகளிலும் இது போன்ற
ஏராளமான அரிய மருந்து செய்முறை இரகசியங்கள்
இன்றும் நம் தமிழகத்தில் பரவலாக உள்ளது.

அவைகளை உலகிற்கு அடையாளம் காட்டும் முயற்சியாக
இது போன்ற பதிவுகளை எமது "சித்தர் பிரபஞ்சம்"வலை
தளத்தில் வெளியிட்டு வருகின்றோம்.நன்றி !

இமயகிரி சித்தர்...

தேடல் said...

அன்புள்ளம் கொண்ட இமயகிரிசித்தர் அவர்களுக்கு என் உளம்கனிந்த வணக்கங்கள்
சுத்த கங்கையை உணவாக மருந்தாகவும் எடுத்து கொள்ளலாமா அதனால் என்ன நன்மைகள் உண்டாகும்

நன்றி

நந்தா

இமயகிரி சித்தர் said...

வணக்கம் நந்தா ஐயா !

மேலே குறிப்பிட்டுள்ள "சுத்த கங்கை ஜெயநீர்"என்பது
சித்தர் வழி பாரம்பரிய முறையில் இரசம்,பாஷாணம்
போன்றவைகளில் உள்ள நஞ்சுவையும்,தோஷங்களை
யும் நீக்குவதற்கேன்றே உருவாக்கப் பட்டவை.

இறை அருள் ஆற்றல் கொண்ட,பஞ்ச பூத சக்திகளை
தன்னுள் அடங்கிய நீர் ஒன்று உண்டு. அதுதான்
"அமிர்த கற்ப கங்கை நீர்" என்ற பெயர் கொண்டது.

இதை சித்தர்கள் இறைவனிடம் வேண்டி, தங்கள் ஞானத்
தால் கண்டறிந்து உண்டு தங்களின் தேகத்தை கற்பதேகமாக
மாற்றி பல நூற்றாண்டுகள் வாழ்ந்துள்ளனர்.மேலும்

இந்த "அமிர்த கற்ப கங்கை நீர்"சகல பாபங்களையும்,பிறவி
தோஷங்களையும்,நவக் கிரகங்களின் தோஷங்களையும்,
நீக்கி, இறைஞானப் பேரருளைக் கண்டறியும் ஆற்றலையும்
அளித்து,தேகத்தை கற்பமயமாக்கும் ஆற்றல் கொண்டது.

பிறவிப் பயனை அளிக்க வல்ல இப்புனித நீரை அறிந்த
மகான்கள்,மெய்ஞானம் பெற்ற குரு ஒரு சிலரே உள்ளனர்
இன்றைய பலகோடி மக்களில் உண்மை குரு யாரென அறிந்து
கொள்ளும் ஆற்றலை அளிக்க இறைவனை வேண்டுங்கள்.

மெய்குரு யாரென கண்டறிந்து தொண்டுகள் செய்து வேண்டி
இப்புனித நீரை உண்டால் பிறவி முக்தி நிச்சயம் உண்டு !

நன்றி !

இமயகிரி சித்தர்

தேடல் said...

அன்புள்ளம் கொண்ட இமயகிரிசித்தர் அவர்களுக்கு என் உளம்கனிந்த வணக்கங்கள்
இறை அருளும் ,குரு அருளும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற உண்மையை உணர்தியதற்கு நன்றி

நந்தா

தேடல் said...

அய்யா ,
தங்களின் பர்சனல் மெயில் id தர வேண்டுகிறேன்
நன்றி

நந்தா

Unknown said...

சித்தர்கள் எழுதியது உண்மைகள் அழிந்து விட கூடாது முடிந்த வரை அதை புதுமை செய்யுங்கள். அவர்கள் அரும்பாடு பட்டு எழுதியது வீனாக போக கூடாது.
உங்கள் பனி மிகவும் அருமை, வாய்புக்கு நன்றி.

இமயகிரி சித்தர் said...

ஆம் நண்பரே !

சித்தர் பெருமக்கள் உலக நலனுக்கு அர்ப்பணித்த
அரிய கலைகள், கருத்துக்கள் ஏராளம். அவைகளில்
இன்றைய நடைமுறையில் சாத்தியமான அனுபவ
முறை விளக்கங்களை தொடர்ந்து அளிப்போம்.
நன்றி !

இமயகிரி சித்தர்...

தேடல் said...

அய்யா,

ஜெய நீர் என்பது ஒரு வகையில் மிதமான கந்தகக் காடி (Sulfuric அசிட்) என்பதா தெளிவு படுத்த வேண்டுகிறேன்
நன்றி

நந்தா

இமயகிரி சித்தர் said...

கந்தக காடி -சல்புரிக் ஆசிட் ,என்பது "கந்தக திராவகம்" ஆகும்
இது வேறு ,நாம் குறிப்பிடும் ஜெயநீர் என்பது வேறு ஆகும் .

இமயகிரி சித்தர் said...

நண்பர்களே ஒரு வேண்டுகோள் !

நமது "சித்தர் பிரபஞ்சம்" தளத்தில் கேள்விகள் கேட்க
விரும்புபவர்கள் இதில் உறுப்பினராக இணைந்து
கொண்டு பின்பு கேள்வி கேட்க வேண்டுகிறோம்.

சித்தர் கலைகள் என்பது பல வருடம் குருவிடம் தொண்டு
செய்து பெறக்கூடிய அரிய விசயங்கள் ஆகும்.எனவே
இதன் உண்மை நிலைகளை அரிய வேண்டுமானால்
இவைகள் அறிந்த பெரியோர்களை நீங்கள் நாடும்போது
உங்களை முழுமையாக அறிமுகம் செய்து கொள்ளுங்கள்

நன்றி !
இமயகிரி சித்தர்...

muthu said...

வனக்கம் , நான் உங்களிடம் நிறைய பேச வேண்டும் என்று நினைக்கறேன் . உங்களுடன் பேச வாய்ப்பு உள்ளதா .............? maiil id : nmrmuthu@gmail.com, nmrmuthu@yahoo.com

R.Mani said...

Can any one teach me how to prepare ''Jayaneer''
I am willing to learn in their center.
regards
R.Mani B.E
Chennai

karthi said...

அன்புள்ளம் கொண்ட இமயகிரிசித்தர் அவர்களுக்கு என் உளம்கனிந்த வணக்கங்கள்,
I Saw about RASAMANI, Now urgently I want that RASAMANI, what can i do sir? antha RASAMANI Anivathal nan ninaitha kaariyam udanea enakku nirai vearuma? nan entha oru kaariyam seithalum athu enakku avamanangal than micham.. ennai yarum mathikka maatranga.. nan oru ponnai virumbukirean. antha ponnu enakku ellorum sammathathodu enakku kidaikkanum..en aasai niraivearuma? pls comment sir..

karthi said...

அன்புள்ளம் கொண்ட இமயகிரிசித்தர் அவர்களுக்கு என் உளம்கனிந்த வணக்கங்கள்,
I Saw about RASAMANI, Now urgently I want that RASAMANI, what can i do sir? antha RASAMANI Anivathal nan ninaitha kaariyam udanea enakku nirai vearuma? nan entha oru kaariyam seithalum athu enakku avamanangal than micham.. ennai yarum mathikka maatranga.. nan oru ponnai virumbukirean. antha ponnu enakku ellorum sammathathodu enakku kidaikkanum..en aasai niraivearuma? pls comment sir..
"OM SIVAYA NAMAHA"

Unknown said...

i love this blog,it explore and visualize the truth and our expertise in this universe.

i need more people and our generation need to visit this blog.

Unknown said...

karthi sir rasamani aninthal nanmai nitchayam undu, ninaithathu nadakum aanal athai seiya therintha periyavargal seiya vendum illai endral antha rasamani palan harathu, pakkuavap patta periyavargal athai vilaiku vitka maattargal, so ungal manam kavarntha pen ungalidam enna ethir paakuranga nu therinthu avanga manasai kavara try pannunga athan best.

Unknown said...

ஐயா செயநீர் செய்முரை பற்றி தயவிசெய்து கூறுங்கள் தங்களை நேரில் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தால் காலிவிழுந்து வணங்குகிறேன்

SIVA said...

வணக்கம்! தற்செயலாக உங்கள் வலைப்பூவில் நுழைந்தேன். வியந்து போனேன். தஙகளது முயற்சிகளும் அதை மற்றவர்களுடன் பரிந்து கொள்ளும் தங்களது எண்ணம் பாராட்டிற்குரியது.

பதிவுகளின் வகைகள்