இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Tuesday, 19 June 2012

சித்தர் பிரபஞ்சம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது

சித்தர் பிரபஞ்சம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது



சித்தர் பிரபஞ்சம் – அறிமுகம்

பதினெண் சித்தர் துதி        
கட்றாலுஞானக் கருத்தறிந்தோர்கள் கமலபாதம்  
பெற்றாலுஞ்சித்தி பேரின்பக்கல்வி பிரவாதமுக்தி 
வைத்தாலும்வெற்றிமருவியவர்பாதம்வணங்கவும் 
யான் சித்தாதிசித்தர் பதினெண்மர்தந்த திரவியமே 


அன்புடையீர் வணக்கம் !

சித்தர் பிரபஞ்சம் என்ற இந்த வலை தளத்தில் தமிழ்ச் சித்தர்களின் ஞானப் பெட்டகத்திலுள்ள பொக்கிஷங்களையும் குருகுல வழியில் யாம் பெற்ற அரிய சித்தர் கலை இரகசியங்களையும் ,மற்றும் பண்டைய கால ஓலைச் சுவடி களில் உள்ள சூட்சுமங்களையும் சித்தர் திறவு கோல் மூலம் திறந்து எடுத்து உலகிற்கு அர்ப்பணிக்க உள்ளோம்.

இதில் மூலிகைகளின் அரிய இரகசியங்கள் பாரம்பரிய சித்தமருத்துவ அனுபவ  முறை இரகசியங்கள், இரசமணி, முப்பு, இரச வாதம், காய கற்பம் ஞானம், மந்திர சாஸ்த்திர முறைகள், வர்மக்கலை, சரகலை, பஞ்சபட்சி , போன்ற அபூர்வ சித்தர் கலைகளின் உட்பிரிவு சூட்சுமங் களை  விளக்க மளிக்க உள்ளோம்.

இவைகளை உலக மக்களின் நலன் கருதி நற்காரியங்களுக்கு மட்டும் பயன் படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.மற்றும் சித்தமருத்துவர்கள், சித்தர் கலை ஆர்வலர்கள் யாவரும் மேற்கண்ட கலைகள் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டுப்பெறலாம்.  


நன்றி!
இமயகிரி சித்தர்... 
சித்தர் வேதா குருகுலம் – திருச்சி – 5 - T.N  
cell : 9865430235 - 8695455549 

No comments:

பதிவுகளின் வகைகள்