இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

பாரம்பரிய வர்ம மருத்துவ சிறப்பு பயிற்சி

வர்மக் கலை - வர்ம மருத்துவ சிறப்பு பயிற்சி – Varma kalai Training 








வர்மக் கலை - வர்ம மருத்துவ சிறப்பு பயிற்சி - Varma kalai Training

[பாரம்பரிய வர்ம ஆசானின் நேர்முக செய்முறை விளக்கப் பயிற்சி ]

ஆதி மருத்துவம் எனவும், தாய் மருத்துவம் எனவும், போற்றப்படும் தமிழ் மருத்துவமாம் - சித்த மருத்துவ முறையினில் உயர்நிலைப் பிரிவுகளில் ஒன்றான வர்மக்கலையின் சூட்சும இரகசிய மருத்துவ முறைகளை குருகுல வழியில் வர்ம ஆசான் மூலமாக நேர்முக பயிற்சி சித்தர் வேதா குருகுலம் -  திருச்சியில்  அளிக்கப்படுகின்றன.

மறைந்து வரும் அரிய கலைகளில் ஒன்றான பாரம்பரிய வர்மக்கலை யின் அனுபவப் பூர்வமான சூட்சும இரகசிய செயல் விளக்கங்களை வர்ம ஆசானிடம் நேர்முகமாக பயிற்சி பெறுவதால் மிகவும் சுலபமாக எலும்பு, நரம்பு, தசைகள் போன்ற பகுதிகளில் வரும் அனைத்து நோய்களையும் எளிதில் குணப்படுத்தலாம்.

வர்ம மருத்துவம் என்பது உடலிலுள்ள 108 - வர்ம இட ங்களைக் கண்டறிந்து, உடலில் நோய்கண்ட நிலையில் அடங்கல் தளங்களில் இளக்கு முறை செய்வது என்பது மட்டுமல்ல.

உடலில் நரம்பு மண்டலம், எலும்பு மண்டலம், தசை மண்டலம், என்ற மூன்று பகுதிகளிலும் நோய்கள் கண்ட நிலையில் இவற்றை முற்றிலும் குணப்படுத்துவதே உண்மையான வர்ம மருத்துவம் ஆகும்.இதன் சூட்சும இரகசியங்களை ஒளிவு மறைவின்றி கற்றுக் கொடுக்கும் வர்ம ஆசான்கள் மிகச் சிலரே இன்று தமிழகத்தில் உள்ளனர்.

வர்ம மருத்துவ பயிற்சி விபரம் :

பிரிவுகள் :
1 - எலும்புகள் 
2 - நரம்புகள் 
3 - தசைகள் 
4 - கட்டு  கட்டுதல் 
என்ற நான்கு பிரிவுகள் 

எலும்புகள் என்னும் பிரிவில் :
1 - மூட்டு நழுவுதல் ஒன்று சேர்த்தல் 
2 - சவ்வு  விலகுதல் ஒன்று சேர்த்தல் [சவ்வு கிழிதல்]
3 - மிதமான எலும்பு  முறிவு  ஒன்று சேர்த்தல் 

நரம்புகள் என்னும் பிரிவில் :
1 - வர்மம் என்றால்  என்ன ?
     வாத வர்மம் - 108
     பித்த வர்மம் - 108
     கப வர்மம் - 108  விளக்கங்கள் 
2 - 30 வகையான  வர்ம  நிலையங்களை  கண்டறிதல் 
3 - வர்மங்களை இளக்கும்  இரகசிய முறைகளான வர்ம  அடங்கல்      தலங்கள் 12 -கண்டறிதல்.

தசைகள் என்னும் பிரிவில் :
1 - தசைகள் தடவு முறைகள்  மற்றும்  இரத்தக் கட்டு  இளக்கு முறை  
2 - தனித்தனி  வர்மப்புள்ளிகள் தடவல் முறைகள் 
3 - கூட்டு  வர்மப்புள்ளிகள்  தடவல் முறைகள்  [4-5  வர்மப்புள்ளிகள்]  
4 - தொக்கணம் என்னும் வர்ம மசாஜ் முறைகள் 
5 - உழிச்சல் - தைல தாரை முறை 

கட்டுதல் என்னும் பிரிவில் :
1 - விலகிய சவ்வுகளை சேர்த்தல் [சவ்வு கிழிதல்]
2 - மூட்டு விலகியதை ஒன்று சேர்த்தல் 
3 - சிறிய எலும்பு முறிதலை ஒன்று சேர்த்தல் 
மேற்கண்ட மூன்று நிலைகளைக் கண்டறிந்து கட்டு கட்டுதல்.

மேலும் இவைகளுக்கான வர்ம கசாயம், வர்மத் தைலம், கட்டு கட்டுத லுக்குத் தேவையான பசை செய்முறை சூட்சுமங்கள் மற்றும் இவைக ளுக்குத் தேவையான இளக்குமுறை கருவிகள் பற்றிய விபரம் செயல் விளக்கம் நேரில் செய்து காண்பிக்கப்படும்.

வர்ம மருத்துவ பயிற்சியில் :
1 - மூட்டுவலி 
2 - முதுகுவலி 
3 - முதுகு தண்டுவட வலி 
4 - கழுத்து வலி 
5 - இடுப்பு வலி - [ Back  Pain ]  
6 - முக வாதம் 
7 - பக்க வாதம் 
8 - மூட்டு ஜவ்வு கிழிதல் 
9 - இரத்தக் கட்டு
10 - மூட்டு நழுவல் 
11 - தசை வலி,, தசைப் பிடிப்பு
12 - வர்மத் தடவல் [ வர்ம  மசாஜ் செய்தல்] 
13 - மிதமான எலும்பு  முறிவு 
போன்றவைகளைக் குணப்படுத்தும் முறைகள் கற்றுக் கொடுக்கப் படும்.

சித்த மருத்துவம் கல்வி பயிலும் மாணவர்கள், [ B.S.M.S., M.D] சித்த மருத்துவர்கள்மற்றும் பிசியோதெரபி மருத்துவர்கள் [B.P.T., M.P.T]  வர்ம மருத்துவம் கற்று சிறப்பாக மருத்துவ சேவை புரிய ஒரு அரிய வாய்ப்பு. 


பயிற்சி காலம் : 6 - மாதங்கள் 
மாதம் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மட்டும்   



பயிற்சி நடைபெறும் இடம் :

தொடர்பு மற்றும் விபரங்களுக்கு :
செல் : 9865430235 


முன் அனுமதி பெறுவது அவசியம்.


நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்
சித்தர் வேதா குருகுலம் 
புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் P.O திருச்சி  620006
தமிழ்நாடு இந்தியா

அகத்தியர் குருகுலம், யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம், [ சஞ்சீவி மலை ]
சிறுமலை புதூர் P.O
திண்டுக்கல் - 624003
தமிழ்நாடு இந்தியா

cell : 9865430235 - 9095590855 - 9655688786    
  
Mail : siddharprapanjam@gmail.com



No comments:

பதிவுகளின் வகைகள்