இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

இந்திய பாரம்பரிய சித்த மருத்துவர்கள் கூட்டமைப்பு

இந்திய பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மற்றும்  முப்புகாயகற்ப ஆய்வாளர்கள் கூட்டமைப்பு 












இந்திய பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மற்றும்  முப்புகாயகற்ப ஆய்வாளர்கள் கூட்டமைப்பு 
திருச்சி,   தமிழ்நாடு                                 பதிவு எண்.124/2011 

                            
அகில உலகில் ஆன்மீக நாடு என அழைக்கப்படும் நமது இந்தியத் திருநாட்டில்  பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இறைவனின் திருவரு ளாலும்மகத்துவம் வாய்ந்த சித்தர் பெருமக்களின் கருணையினாலும் மனித குலத்தின் உடல் நலனின் பொருட்டு அருளிய தெய்வீகத் தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவ முறையினைசித்தர் வழி பாரம்பரியமாக வும்குருகுலக் கல்வியாகவும்குடும்ப வழி பாரம்பரியமாகவும் மற்றும் சித்தமருத்துவக் கல்வி (பட்டப்படிப்பு) வழியாகவும் பயிற்சி பெற்று பல்லாயிரக்கணக்கான சித்த மருத்துவர்கள் நமது நாடு முழுவதும் மருத்துவ சேவை செய்து வருகின்றனர்.

மேலும் சித்த மருத்துவத்தின் உயர்நிலை ஆய்வு முறைகளான முப்புஇரசவாதம்காயகற்பம்போன்ற அரிய கலைகளையும் தென்னிந்தியா முழுவதும் ஏராளமான ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சித்த மருத்துவத்தின் புகழை உலகறியச் செய்யவும், பாரம்பரிய சித்த மருத்துவர்களின் ஆய்வுத் திறனை மேம்பபடுத்திக் கொள்ளவும் சித்த மருத்துவம்முப்புகாயகற்பம்போன்ற பிரிவுகளில் உள்ள அரிய இரகசிய செய்முறை நுணுக்கங்களை ஆராய்ந்து அரியவும் மற்றும் பகிர்ந்து கொள்ளும் விதமாக தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியில் இந்திய பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மற்றும் முப்புகாயகற்ப ஆய்வாளர்கள் கூட்டமைப்பு துவக்கப்பட்டு சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட சித்த மருத்துவர்கள்ஆய்வாளர்களுடன் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. 

இதில் கடந்த இரண்டு வருடங்களில் இருபத்தைந்து  ஆய்வுக் கருத்தரங்குகள் நடத்தியுள்ளது இதில் பரம்பரையாக கையாண்டுவரும் ஏராளமான அரிய சித்த மருத்துவ அனுபவ முறைகள்முப்பு பற்றிய ஆய்வு விளக்கங்கள்இரசவாத ஆய்வு முறைகள், காயகற்ப ஆய்வு முறைகள் மற்றும் இவைகளின் நேரடி செய்முறை விளக்கங்கள் செய்து காட்டப்பட்டது. மேலும் இவைகள் பற்றிய ஆய்வு நூல்கள்குறிப்பேடுகள் வெளியிடப்பட்டன.

கடந்த இரண்டு வருடங்களில் நடந்த கருத்தரங்கில் உரையாடல்கள் தலைப்பும் மற்றும் வெளியிடப்பட்ட ஏராளமான அனுபவ மருந்து செய்முறைகளின் தொகுப்பு விபரம்

1. மூட்டுவலிமுதுகுவலிக்கான மருத்துவ ஆய்வு விளக்கம் மற்றும் அனுபவ மருந்துகள் மற்றும் செய்முறைகள். பொதுச்செயலாளர், டாக்டர் எஸ். நாகராஜ்.

2. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பாரம்பரியமாக கையாண்டு வரும் மஞ்சள் காமாலை மருந்து செய்முறை இரகசியங்கள்.  பொதுச்செயலாளர், டாக்டர் எஸ். நாகராஜ்.

3. பாம்புக்கடி விஷம் நஞ்சு முறிய கைகண்ட சஞ்சீவி மூலிகை மருந்து செய்முறை இரகசியம். பொதுச்செயலாளர், டாக்டர் எஸ். நாகராஜ்.

4. மூலிகைகளை உயிர் நிலை நிறுத்தி எடுக்கும் அனுபவ முறைசாபம் நீக்கும் மந்திரம்உயிர் கொடுக்கும் மந்திரம்கன்னி நூல் சூத்திரம்சத்துரு மித்துரு விரல் படாமல் மூலிகை பறிக்கும் இரகசிய விளக்கம்.  பொதுச்செயலாளர், டாக்டர் எஸ். நாகராஜ்.

5. வர்மம்களரிமுத்திரை விளக்கங்கள் சூட்சும தியானம் செய்முறை விளக்கம். வர்ம ஆசான் வி.பிச்சைமணி

6. ஆண் மலடுபெண் மலடு குழைந்தையின்மைக்கான அறிவியல் ஆய்வு விளக்கம் மற்றும் இவைகளை குணப்படுத்தும் பல தலைமுறைகளாக கையாண்டு வரும் மருந்து செய்முறை இரகசியம்.

7. இரத்த அழுத்தம் (பிளட் பிரசர்) நோயின் அறிவியல் ஆய்வு விளக்கம் மற்றும் இதனை குணப்படுத்தும் கைகண்ட அனுபவ மருந்துகள் விளக்கம்.

8. சிறுநீரக கல் (கிட்னி ஸ்டோன்) உடலில் தோன்றும் வகைகளின் அறிவியல் ஆய்வு விளக்கம் மற்றும் சிறுநீரகக் கல் கரைந்து வெளியேற்றும் மருந்துகள் செய்முறை விளக்கம். பொதுச்செயலாளர், டாக்டர் எஸ். நாகராஜ்.

9. அனீமியா எனும் இரத்த சோகைக்கான ஆய்வு விளக்கம் மற்றும் இதனை குணப்படுத்தும் மருந்துகள் செய்முறை விளக்கம். பொதுச்செயலாளர், டாக்டர் எஸ். நாகராஜ்.

10. தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி பற்றிய ஆய்வு விளக்கம் இதனை குணப்படுத்தும் பல தலைமுறைகளாக கையாண்டு வரும் அரிய மருந்து முறைகள் விளக்கம். பொதுச்செயலாளர், டாக்டர் எஸ். நாகராஜ்.

11. ஆஸ்துமா நோயிக்கான உடற்கூறு விளக்கங்கள் நோயின் தன்மை இதற்கான அனுபவ மருந்துகள் விளக்கம். பொதுச்செயலாளர், டாக்டர் எஸ். நாகராஜ்.

12. மூக்கில் தோன்றும் பீனிச கழலை (சைனஸ் கிளாண்ட்ஸ்) வீக்கத்தினை மிக எளிய முறையில் குணப்படுத்தும் அற்புத தைல முறை விளக்கம். மருத்துவர் எம். கணேசன் அவர்கள் அனுபவ முறை.

13. பெண்களின் நோய்களும் சிறப்பான மருந்துகளும் என்ற தலைப்பில் சித்த மருத்துவர் எஸ். அழகுஇளமாறன் அவர்களின் 45 வருட அனுபவ இரகசிய மருந்துகள் விளக்கம்.

14. பாரம்பரிய விஷ வைத்திய முறைகள் என்ற தலைப்பில் பாம்பு கடி விஷம்தேள் கடி விஷம்நாய் கடி விஷம் போன்ற வகைகளுக்கு பரம்பரை வைத்தியர்கள் கையாண்டு வரும் இரகசிய முறை. டாக்டர் எஸ். நாகராஜ்.

15. அஷ்ட கர்மம்அஷ்ட யோகம்அஷ்டமா சித்து இவைகளின் சூட்சும விளக்கங்கள் அடிப்படை இரகசியங்கள். வர்ம ஆசான் வி.பிச்சைமணி அய்யா அவர்கள்.

16. நவீன ஆய்வுக் கூட பரிசோதனை முறைகள் என்ற தலைப்பில் நவீன முறையில் நோய்களை கணிக்கும் முறைகளின் விளக்கம்.  டாக்டர் செல்வராஜ் B,S,M,S., அவர்கள்

17. சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாற்பது வகையான நோய்களும் (தோஷ ங்கள்) இவைகளை கண்டறியும் குறி குணங்கள்வராமல் தடுக்கம் வழி முறைகள் இதற்கான கைகண்ட மருந்து செய்முறை விளக்கம். வர்ம ஆசான் வி.பிச்சைமணி அய்யா அவர்கள்.

18. முடக்கு வாதம்கனு சூலை (ருமாடீசம்ஆர்த்தரடீஸ்என்ற நோய்கள் தோன்றும் காரணங்கள் இதன் குறி குணங்கள் மற்றும் இதனை தீர்க்கும் கைகண்ட அனுபவ மருந்துகள் விளக்கம். சித்த மருத்துவர் டீ.சிவசங்கர் அவர்கள்

19. தீராத கர்ம வினை நோய்களை தீர்க்கும் மந்திர பூர்வாங்கமான நிவர்த்தி முறை விளக்கம். பொதுச்செயலாளர், டாக்டர் எஸ். நாகராஜ்.

20. பெண்களுக்கு ஏற்படும் உடல் பருமன் (கொழுப்பு-தைராய்டு) இது தோன்றும் ஒன்பது வகையான காரணங்கள் இவைகளை குணப்படுத்தும் மருந்து முறைகள் விளக்கங்கள். பொதுச்செயலாளர், டாக்டர் எஸ். நாகராஜ்.

21. அனைத்து உடல் வலிகளுக்கு காரணமான E.S.R அதிகரித்தலை குணப்படுத்தும் உடற்கூறு விளக்கங்கள் மற்றும் அனுபவ மருந்துகள் செய்முறை விளக்கம். சித்த மருத்துவர் ஸ்ரீ. இரா.து.சிவஜோதி சுவாமிகள்

22. அவர்களின் முப்பு, காயகற்பம் என்ற தலைப்பில் தனது பல்லாண்டுகள் அனுபவ ஆய்வு விளக்கங்கள் மற்றும் எளிய கற்ப முப்பு செய்முறை விளக்கம். சித்த மருத்துவ முப்பு ஆய்வாளர் திரு. ஏ. தங்கவேல்

23. அனுபவ நாடி பரிசோதனை பயிற்சி விளக்கம் (தொடர் வகுப்புகள்). டாக்டர், T.ரகு அவர்கள்.

24. சோரியாஸிஸ் நோய்க்கான  உடற்கூறு விளக்கம் அனுபவ மருந்துகள் செய்முறை விளக்கம்சிதம்பர இரகசியம் என்ற தலைப்பில் சித்தர்களின் மறை பொருள் இரகசிய விளக்கம் மற்றும் வள்ளல் பெருமானின் சாகாக் கலை விளக்கம். திருவருட்பாவிலுள்ள சூட்சம விளக்கங்கள். மு. வாசுதேவன்  அவர்கள்.  

25. சுவேத பற்பம்தீப்புண் ஆற எண்ணை வாய்வு வீக்கம் வடிய தைல முறைகள். சித்த மருத்துவர் பி. கலியமூர்த்தி அவர்கள்.


மருந்துகள் நேரடி செய்முறைப் பயிற்சியில் செய்து காண்பித்த மருந்துகள்


1. இஞ்சி சூரணம் உடனடி செய்முறை.

2. குங்கிலிய கழிம்பு.

3. கட்டிகழலைமூலத்தின் வீக்கம் நீங்க கழிம்பு செய்முறை.

4. கிட்னி ஸ்டோன்சதை அடைப்பு நீங்க பஸ்பம் உடனடி செய்முறை.

5. தோல் நோய் தீர கழிம்பு செய்முறை.

6. வெள்ளை வெட்டை தீர சூரணம் செய்முறை.

7. மூட்டு வலிவாத தைலம் செய்முறை.

8. உடல் உஸ்ணம்மேக நோய் நீங்க கற்றாலை ஜாம் செய்முறை.

9. மூலக் குடார தைலம் செய்முறை.

10. நேர்வாள பேதி மருந்து உடனடி செய்முறை.

11. குடிகாரர்களின் கைகால் வீக்கம் வடிய தைலம் மற்றும் பஸ்பம் செய்முறை.

12. மேக வெட்டைப் பிடிப்பு நீங்க லீங்க செந்தூரம் செய்முறை.

13. பாதரசத்தை இரசமணியாகக் கட்டும் நேரடி செய்முறை பயிற்சி விளக்கம் மற்றும் ஏராளமான மருந்துகள் செய்து காட்டப்பட்டன.


ஆய்வு நூல்கள் மற்றும் கையேடுகள் அறிமுகம் மற்றும் வெளியிடப்பட்ட விபரம்


1. காயகற்ப முப்பு செய்முறை மற்றும் இரசமணி செய்முறை விளக்க நூல்

2. பொக்கிஷம் - பாகம்-2,3  இரசவாத முறைகள் செய்முறை விளக்கப் படங்களுடன் தொகுப்பு நூல்.

3. சித்த மருத்துவத்தில் சிடுகா மருந்துகள் எனும் அனுபவ மருந்துகள் செய்முறை விளக்கங்கள்.

4பூநீர் அறிவியல் ஆய்வு  தமிழ் விளக்க கையேடு.

5. சித்தர்களின் இரசவாதத்தின் அடிப்படைகள் ஆய்வு விளக்க கையேடு.

6. அமுதசுரபி என்னும் அண்டக்கல் (கற்ப முப்பு குரு நூல்). நம் நாட்டு சித்தர்களும் வெளிநாட்டு ஞானிகளின் கற்ப முப்பு ஆய்வு விளக்கங்கள்.

7. கருணாமிர்த சாகரம் வைத்திய ரத்தினம் ஜட்ஜ் பலராமையாவின் குருநாதர் மகான். கருணாகர சுவாமிகளின் கையேட்டுப் பிரதிகளின் அபூர்வ தொகுப்பு நூல்.

8. மேலை நாட்டு சித்தர்களின் காயகற்ப முப்பு இரகசியங்கள். மேலை நாட்டு முப்பு ஆய்வாளர்களான பாராசெல்சஸ், பேசில்வாலன்டைன் போன்ற ஏராளமான ஞானிகளின் ஆய்வு விளக்க தமிழ் தொகுப்பு நூல்.


குறிப்பு : மேற்கண்ட ஆய்வுகள் மற்றும் விளக்கங்களுடன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் எமது கூட்டமைப்பின் கருத்தரங்குகள் திருச்சியில் நடைபெற்று வந்தது. தற்போது எமக்கு உள்ள அதிக வேலைப்பளுவின் காரணமாக ஆய்வு கருத்தரங்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நிறுவனர் : பொதுச்செயலாளர்
மெய்திரு, இமயகிரி சித்தர்
[Dr.S.நாகராஜ் R,M,P.,D,S,M,S.,H,P,T.,D,H,M.,]
இந்திய பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மற்றும் முப்பு,காயகற்ப ஆய்வாளர்கள் கூட்டமைப்பு  திருச்சி தமிழ்நாடு



பயிற்சி பெற மற்றும் நேரில் சந்திக்க முன் அனுமதி பெறுவது அவசியம்.


நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்
சித்தர் வேதா குருகுலம் 
புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் P.O திருச்சி  620006
தமிழ்நாடு இந்தியா

அகத்தியர் குருகுலம், யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம், [ சஞ்சீவி மலை ]
சிறுமலை புதூர் P.O
திண்டுக்கல் - 624003
தமிழ்நாடு இந்தியா

cell : 9865430235 - 9095590855 - 9655688786    
  
Mail : siddharprapanjam@gmail.com


No comments:

பதிவுகளின் வகைகள்