இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Saturday, 30 June 2012

ஜாதிகள் நான்கு உண்மை விளக்கம்






ஜாதிகள் நான்கு உண்மை விளக்கம்

 

ஜாதிகள் பற்றிய உண்மையை விளக்கும் இந்த அரிய கட்டுரை பழைய "மூலிகை மணி"1965-மாத இதழில் வெளி வந்ததாகும் .


 இந்து மத வேதத்தின் மிகப்பெரிய அடிப்படை உண்மையை மிக எளிதாக விளக்குகின்றது இக்கட்டுரை.ஜாதிகள் என்பது தனித்தனியாக தோன்றிய  இனம் அல்ல என்பதும்,பிராமணன், வைசியன்,சத்திரியன்,சூத்திரன் என்ற நான்கு வித ஜாதிகளும் ஒவ்வொரு மனிதனிடம் இருந்துதான் தோன்றுகிறது என்ற இரகசிய விளக்கத்தையும் பிரம்மன் என்பது மனிதன்தான் என்ற உண்மையையும் விளக்கமளித்துள்ளது.

நன்றி : மூலிகை மணி

இமயகிரி சித்தர்         

www.siddharprapanjam.org   

சிறுநீரக கல் (kidney stone)பஸ்பம் -செய்முறை



சிறுநீரக கல் (kidney stone)பஸ்பம் -செய்முறை 


இன்றைய கால சூழ்நிலையில் உடலில் மிக சுலபமாகத்   தோன்றும் நோய்களுள் ஒன்றுதான் சிறுநீரகக்கல் இது தினமும் நம் உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் பருகா ததாலும்,உடலில் அதிக உஷ்ணம் தோன்றுவதாலும்,அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதாலும் வரும் நோயாகும்.


மற்றும் 92 % சிறுநீரகக் கற்கள் கால்சியத்தால் (சுண்ணாம்பு சத்து) உருவாகின்றன.எனவே கால்சியம் மாத்திரைகள்,பால், சீஸ்,வெண்ணை,முட்டை,போன்றவற்றை குறைக்கவும் 


சிறுநீரகக் கற்கள் 5,வகை உண்டு,0.5-m.m முதல் 6,7-m.m,வரை பெரிதாகவும் காணப்படும்.அந்நிலையில் வலி,வேதனை அதிகம் தோன்றும். இவைகளை மிக எளிதாகக் குணப்படுத்தக் கூடிய ஏராளமான மருந்துமுறைகள் சித்த மருத்துவ முறையி          னில் உள்ளது 


பாரம்பரிய சித்த மருத்துவர்களிடம் உள்ள ஒரு அனுபவ செய் முறைதான் மேலே காணும் வீடியோ பதிவில் உள்ளது.இது "இந்திய பாரம்பரிய சித்த மருத்துவம்,முப்பு,காயகற்ப ஆய்வா ளர்கள் கூட்டமைப்பு"வில் செய்முறை பயிற்சியில் பதிவு செய்தது.நன்றி!


இமயகிரி சித்தர் 

www.siddharprapanjam.org                

Friday, 29 June 2012

மூலிகை மாயா ஜாலம்



மூலிகை மாயா ஜாலம் 

இந்த மூலிகை ஜாலம் செய்முறை மிக எளிதான ஒன்று.இதை மாந்த்ரீகம் தொழில் செய்பவர்கள் தனது வாடிக்கையாளரிடம் செய்து காண்பித்து சுயநலத்திற்காக பயன் படுத்தி வந்து ள்ளனர்.


இதைக்காணும் நீங்களும் பிறரை மகிழ்விக்க மட்டும் பயன் படுத்திகொள்ளுங்கள்.இது போன்ற "சித்தர் கலைகள்" மிக       இரகசியமாக பாதுகாக்கப்பட்டவைகள் ஆகும்.


இவைகளை உலகெங்கும் உள்ள நம் தமிழர்கள் அறிந்து கொள்ளும் விதமாக "சித்தர் பிரபஞ்சம்"வலை தளத்தில் பதிவு செய்து வருகின்றோம்.நன்றி!


இமயகிரி சித்தர் 

www.siddharprapanjam.org   

                                                                                                                                                                                                        

இரசமணி செய்முறை ஓலைச்சுவடி


 


இரசமணி செய்முறை "ஓலைச்சுவடி முறை"

 

இந்த ஓலைச்சுவடி சித்தர்களின் வழித்தோன்றலாய் வந்த எனது பாட்டனாரின் பயன்பாட்டில் இருந்ததாகும்.இதில் .இரசமணி, வசிய மை,சிதம்பர ரகசிய சக்கரம்,அனுபவ  மருத்துவ முறைகள் போன்ற ஏராளமான பல அரிய செய் முறைகள் உள்ளது.

 

இதிலிருந்து ஒரு இரசமணி செய்முறையும்,பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நோய்க்கான ஒரு மூலிகை மருந்து செய்முறையும் மேற்கண்ட வீடியோ பதிவில் வெளி யிட்டுள்ளோம் நன்றி!

 

இமயகிரி சித்தர்  

www.siddharprapanjam.org     

Thursday, 28 June 2012

சித்த மருத்துவ பழமொழிகள்-1

சித்த மருத்துவ பழமொழிகள்

தமிழர் மருத்துவமான சித்த மருத்துவத்தில் உள்ள கருத்துக்களை மக்களின் பயன்பாட்டிற்கு எளிதில் கொண்டு செல்ல சித்தர்கள் எளிய நடையில் மருத்துவ பழமொழிகளை உருவாக்கினர்

.

மருத்துவம் என்னும் கலையை மக்களுக்கான அறிவியலாக மாற்றவும் விரும்பினர் அவ்வழியில் தோன்றியதுதான் மருத்துவ பழமொழிகள். ஆனால் காலப்போக்கில் அவற்றின் அர்த்தங்கள் கற்பிக்கப்படாமல் வெறும் சிலேடைப்பேச்சுக்களாக வெறும் வார்த்தைகள் அளவில் இருந்து   வருகின்றன.


இவைகள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய மருத்துவ இரகசியங்களை உள்ள டக்கம் கொண்டவைகளாகும்.இவைகளை உலகெங்கும் வாழும் நம் தமிழ் மக்கள் அறிந்து கொண்டு பயன்பெற எமது "சித்தர் பிரபஞ்சம்"இன்றைய  நடைமுறை   பயன்பாட்டில் உள்ள அனுபவ முறைகளையும் தொகுத்து வெளியிடுகின்றது.


"வெட்டை முற்றினால் கட்டை"என கேள்விப்பட்டு இருப்பீர்கள் 


அதாவது "வெள்ளை வெட்டை"(V.D)நோய் முற்றினால் இறப்பு நேரிடும் பின் சுடுகாட்டில் கட்டையில் (விறகு) வைத்து எரிப்பார்கள் என விளக்கம் கூறுவர்.உண்மை அதுவல்ல.

முதலில் மேற்கண்ட பழமொழியே அரைகுறை ஆகும்.முழுமையான பழமொழி இதுதான்,

                                                                                                                                                                  

மேகம் முற்றினால் வெள்ளை,                                                                 வெள்ளை முற்றினால் வெட்டை,                                         வெட்டை முற்றினால் கட்டை.


மேகம் என்றால் சூடு, உஷ்ணம் என்று பொருள்.  உடலில் உஷ்ணம் அதிகரித்தால்  பெண்களுக்கு வெள்ளைப்படுதல் தோன்றும்.இந்நிலை நீடித்தால் வெள்ளை,வெட்டையாக மாறும். இந்நிலை நீடித்தால் உடல் மெலிந்து வேறு பல நோய்கள் தோன்றி இறக்கும் நிலை உருவாகும்

.

சரி இதற்கு பழமொழியில் உள்ள மருத்துவம் எது என்றால்,இதில் உள்ள கடைசி வார்த்தைதான் மருந்து,அதாவது கட்டை இது சந்தனக்கட்டையை  குறிப்பதாகும்.இன்று சராசரியாக அதிகமாக பெண்களிடம் காணப்படும் நோய்களில் இதுவும் ஒன்று ஆனால் பெண்கள் வெட்கம்,கூச்சம் காரண மாக இதை வெளியில் (அம்மாவிடம் கூட)சொல்ல தயங்குகின்றார்கள் 


இதை ஆரம்ப நிலையிலேயே சுலபமாக குணப்படுத்திக்கொள்ளலாம் சித்த மருத்துவ முறையில் ஏராளமான மருந்துகள் உள்ளன .முற்றிய நிலை வெள்ளை வெட்டைக்கு தரமான சந்தன கட்டையை சிறிது பன்னீர் விட்டு அம்மியில் தேய்க்க தேய்க்க விழுது போல் வரும்.அதில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து ஒரிஜினல் சந்தன அத்தர் மூன்று சொட்டு விட்டு ஒரு தம்ளர் பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும் 


இப்படி மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட அதிக நாள்பட்ட வெள்ளை வெட்டை நோய் குணமாகும் இது பாரம்பரிய சித்த மருத்துவர்கள் சிலர் கையாண்டு வரும் இரகசிய முறையாகும் நன்றி!


இமயகிரி சித்தர் 

www.siddharprapanjam.org            

          

சித்தர் மாயாஜால சித்துக்கள்


சித்தர் மாயாஜால சித்துக்கள் 

சித்தர்கள் தோற்றுவித்த கலைகளுள் மாயா ஜாலங்கள்,சித்து க்களும் ஒன்றாகும்.இதிலிருந்து ஒரு செய் முறையைத்தான் மேற் கண்ட வீடியோ பதிவில் வெளியிட்டுள்ளோம்.


இதைப்போன்ற பல்வேறு ஆய்வுகள் மற்றும் செய்முறை களை எமது "சித்தர் பிரபஞ்சம்" http//:siddharprapanjam.blogspot.in  என்ற வலை தளத்தில் பார்வையிடலாம்.


நண்பர்களே எமது வலைதளம் பற்றிய உங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி!


இமயகிரி சித்தர்

www.siddharprapanjam.org         

    

மூல நோய் கழிம்பு (Piles cure paste)



மூல நோய் கழிம்பு (Piles cure paste)

இன்றைய கால சூழ்நிலையில் பரவலாக 100-க்கு,70-வது சத வீதம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் பரவலாக உள்ள நோய் "மூலநோய்"ஆகும்.இது மலச்சிக்கல் உள்ளவர்க்கும், ஆசனங் களில் அதிக நேரம் உட்கார்ந்து இருப்போர்க்கும்,உணவில் காரம் சுவை அதிகம் உண்போர்க்கும்,காம இச்சையில் அதிகம் நாட்டம் உள்ளோர்க்கும்,மற்றும் பெண்களின் குழந்தைப்பேறு கால சமையத்தில் மூச்சடக்கி முக்குவதாலும்,இந்நோய் தோன்றும்.


இதை சித்த மருத்துவத்தில் "நவமூலம்"என ஒன்பது வகையாக குறிப்பிட்டுள்ளனர்.அதாவது உள்மூலம்,வெளி மூலம்,இரத்தமூலம்,சீல்மூலம்,குருத்துமூலம்,என ஒன்பது வகையாக பிரித்து உள்ளனர்.


ஆனால் நவீன மருத்துவத்தில் மூலநோயை மூன்று வகையாக குறிப்பிடுகின்றனர்,

1-internal piles,

2-external piles,

3-Bleeding piles,

என மூன்று வகையாக மட்டும்.


இந்நோயை சித்த மருத்துவ முறையினில் மிக எளிதில் குண மாக்கும் மருந்துகள் பல உண்டு.அதில் ஒன்றுதான் மேலே உள்ள வீடியோ பதிவில் காணும் "மூலநோய் கழிம்பு"ஆகும் இது மதுரையில் ஒரு பாரம்பரிய சித்த மருத்துவர் கையாண்டு வந்த இரகசிய முறையாகும் இதை உலக மக்கள் நலன் கருதி "சித்தர் பிரபஞ்சம்''(www.siddharprapanjam.org)வெளியிடு கின்றோம்.

நன்றி!


இமயகிரி சித்தர் 

www.siddharprapanjam.org

சித்தர் வேதா குருகுலம் தென் இந்தியா                    




Monday, 25 June 2012

பாதரச சுத்தி - Mercury clean "siddhar prapanjam"

பாதரச சுத்தி -  Mercury clean "siddhar prapanjam"


1- தோசமுள்ள பாதரசம் (mercury)  


2 - பாதரசத்தின் தோஷங்களை போக்கும் சுத்த கங்கை-ஜெயநீர்   



3 - சுத்த கங்கையில் பாதரசம் சேர்த்தவுடன் தோஷம் நீங்கு கின் றது (அடியில் பாதரசம் உள்ளது )

4 - நீரில் கருப்பாக உள்ளதுதான் பாதரசத்தின் தோஷங்கள்

   

5 - தோஷம் நீங்கிய பாதரசம் துணியில் வைத்து பிழிந்தபோது  






6 - சுத்தியான பாதரசம் (பாதரச சுத்தி)  Mercury clean 



சித்த மருத்துவ முறையினில் தேவைப்படும் முக்கியமான மூலப் பொருள்களில் ஒன்றுதான் பாதரசம்.(mercury)இது சர்வ வல்லமை படைத்ததாகும்.இதை சித்தர்கள் சிவவிந்து என குறிப்பிடுகிறார்கள். இதைக்கொண்டுதான் அஷ்டமாசித்திகளை அடைந்து   உள்ளனர். இரசவாதம் எனும் கலையே பாதரசத்தை அடிப்படையாகக்  கொண்டு உருவானதுதான்.

இப்படி மகத்துவம் வாய்ந்த பாதரசத்தில் 7" வகை தோஷங்களும் 8"வகை குற்றங்களும் உள்ளது.இவைகளை நீக்கினால்தான் பாதரசம் சுத்தியாகும். பிறகுதான் இரசமணி,இரசகுளிகை,இரசவாதம் செய்ய இயலும். 

பாதரசத்தை சுத்தி செய்ய பல வித இரகசிய முறைகள் பாரம்பரிய சித்த மருத்துவர்களிடம் உள்ளது அதில் ஒரு முறைதான் மேலே உள்ள படங்களில் காட்டப்பட்டுள்ளது.

குறிப்பு : நண்பர்களே எமது "சித்தர் பிரபஞ்சம்"வலை தளத்தைப் பற்றிய  உங்களது மேலான கருத்துக்களை பதிவுசெய்யவும்   


நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் – திருச்சி  - தமிழ்நாடு
அகத்தியர் குருகுலம் – சஞ்சீவிமலை – தமிழ்நாடு
Mobile : 9865430235 - 9095590855              


ஸ்ரீ சனீஸ்வர தோஷ நிவர்த்தி மூலிகை (கொல்லிமலை)


ஸ்ரீ சனீஸ்வர தோஷ நிவர்த்தி மூலிகை (கொல்லிமலை)

இந்த மூலிகை கொல்லிமலையில் உள்ளது. இதை "சனீஸ்வர தோஷம்" உள்ளவர்கள் அதாவது ஏழரைச்சனி,அஷ்டமத்து சனி,கண்டச்சனி, போன்ற  அனைத்து சனீஸ்வர தோஷங்களுக்கும் இம் மூலிகையை தேய் பிறையில் சனிக்கிழமை அன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு தினமும் இதை அரைத்து உடல் முழுதும் பூசி ஒரு மணி நேரம் கழித்து குளிக்கவும்

 

இப்படி மூன்று நாட்கள் தொடர்ந்து செய்தால் போதும் அனைத்து சனீஸ்வர தோஷமும் நீங்கி தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.இம்மூலிகையை மேற்கண்ட வீடியோ பதிவில் பார்க்கலாம் நன்றி !


இமயகிரி சித்தர்

www.siddharprapanjam.org    

சித்தர் வேதா குருகுலம் ,தென் இந்தியா 

ஈமெயில்:siddharvedhagurukulam@gmail.com

Saturday, 23 June 2012

விராலி மூலிகை-கட்டுக்கொடி-நின்றால் சுருங்கி

 விராலி மூலிகை -Viraali (Dodonaea viscosa,Linn.)       

இரசவாத மூலிகை -அடிபட்ட வீக்கம் ,கட்டிகளை போக்கும் 

---------------------------------------------------------------------------------


கட்டுக்கொடி-Kattukodi [Cocculus hirsutus(Linn)Diels]  

தண்ணீரை அல்வா போல் மாற்றும் தன்மை கொண்டது          

---------------------------------------------------------------------------------

   

நின்றால் சுருங்கி (Nindraal suringi)

நமது நிழல் பட்டால் சுருங்கும் தன்மை உள்ளது 

---------------------------------------------------------------------------------

பாறையுப்பு -முப்பூ Paaraiuppu-Muppoo



சித்தர் பாடல்களில் குறிப்பிடும் முப்பூ செய்வதற்கு தேவைப்படும் பாறையுப்பு 

இது ஒரு சில இடங்களில் மட்டுமே பூர்க்கும் அபூர்வ வகை பாறையுப்பு 

பாறையுப்பு -முப்பூ Paaraiuppu-Muppoo  

Friday, 22 June 2012

நத்தைச்சூரி மூலிகை -Naththaichoori (Original)



     நத்தைச்சூரி மூலிகை -Naththaichoori (Original) 

முபபூ -பூநீர்- அண்டக்கல் Muppu -Pooneer -Andakkal

1.முப்பூ  செய்யத்தேவையான அண்டக்கல்
    Muppu seiyaththevayaana Andakkal   


   2. பூநீர் களத்தில் பூர்த்து வரும் அண்டக்கல்

           Pooneer  kalaththil poorththu varum Andakkal     

3.       தை மாத பௌர்ணமியில் பூமியிலிருந்து

          Thai  Maatha   Pournamiyil          Boomiyilirunthu  

          பொங்கி மேலே வருகின்றது அண்டக்கல்

             Pongi     Mele     Varukindrathu  Andakkal      

4.       பூநீர் தச தீட்சை செய்யத்தேவையான நீர் 

         Pooneer Thasa Theetchai Seiyaththevayaana Neer  

5.     அகத்தியர் கூறும் பூநீர் களமான ஆசனூர்  

        Agaththiyar Koorum Pooneer  Kalam    Aasanoor 

 முப்பூ -பூநீர்- அண்டக்கல் Muppu -Pooneer -Andakkal  


Thursday, 21 June 2012

கொல்லிமலை அதிசய மூலிகை ஆய்வு பயணம் -3 (Kollimalai Miracle Herbal Research Tour)

                                                                                                                                                                                   
இந்த வீடியோ பதிவு "தென் இந்திய பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மற்றும் சித்தர் கலை ஆய்வாளர்களும்" இணைந்து கொல்லிமலையில் உள்ள அபூர்வ மூலிகைகளை இனம் கண்டறியவும் மற்றும் சித்தர்கள் வாசம் செய்த அரிய குகைகளை நேரடி தரிசனம் செய்யும் ஒரு ஆன்மீக பயணமாக (5-6-மே மாதம் 2012)நந்தன வருடம் சித்ரா பௌர்ணமி அன்று நாங்கள் (DR.நாகராஜ் -திருச்சி , DR.T.ரகு.தஞ்சை) ஏற்பாடு செய்த சிறப்பு பயிற்சி முகாம் இதில் நாங்கள் மலைப்பகுதிகளில் சுமார் 60மைல் தூரம் தேடி கண்டறிந்த அபூர்வ மூலிகைகள் மற்றும் சித்தர் குகைகளை 6-பாகமாக வெளியிட்டுள்ளோம் நன்றி!

இமயகிரி சித்தர் 

சித்தர் வேதா குருகுலம் தென் இந்தியா 


பாம்பாட்டி சித்தர் குகை (கொல்லிமலை) Paampaatti Siddhar Gukai (Kollimalai)


இந்த வீடியோ பதிவு "தென் இந்திய பாரம்பரிய சித்த மருத்துவர்கள்  மற்றும் சித்தர் கலை ஆய்வாளர்களும்" இணைந்து கொல்லிமலையில் உள்ள அபூர்வ மூலிகைகளை இனம் கண்டறியவும் மற்றும் சித்தர்கள் வாசம் செய்த அரிய குகைகளை நேரடி தரிசனம் செய்யும் ஒரு ஆன்மீக பயணமாக (5-6-மே மாதம் 2012)நந்தன வருடம் சித்ரா பௌர்ணமி அன்று நாங்கள் (Dr.நாகராஜ் -திருச்சி , Dr.T.ரகு.தஞ்சை)  ஏற்பாடு செய்த சிறப்பு பயிற்சி முகாம் இதில் நாங்கள் மலைப்பகுதிகளில் சுமார் 60மைல் தூரம் தேடி கண்டறிந்த அபூர்வ மூலிகைகள் மற்றும் சித்தர் குகைகளை 6-பாகமாக வெளியிட்டுள்ளோம் நன்றி!

இமயகிரி சித்தர் 

"சித்தர் வேதா குருகுலம்" தென் இந்தியா 

 

                                                                                         

கல்வம் (நன்னி கல்வம்) Nanni Kalvam






வேம்பு கற்பம் (காயகற்பம்) vempu karpam (kayakarpam)

வேம்பு கற்பம் (காயகற்பம்)             

நந்தீசர் சகலகலை ஞானம் -1000

    புகல்பெறவே நூற்றாண்டின் வேம்பைப்பர்த்து
    ஆமாப்ப பட்டையைத்தான்  வெட்டிவந்து
    அப்பனே நிழல்தனிலே யுலர்த்திபின்பு
    காமப்பா யிடித்து நன்றாய்ச் சூரணமே செய்து
    கரிசாலை மல்லிகையின் சாறு வார்த்து
    நேமப்பா அஞ்சுதரம் பாவினையே செய்து
    சிறப்பான வெருகடிதூள் கொண்டிடாயே
    கொண்டிடவே யனுபான வகையைக்கேளு 


     மத்தித்து தேனதிலே குடிப்பாயே நாற்பதுநாள்
    விண்டிடவே யந்திசந்தி கொள்ளுகொள்ளு
    மெய்யெல்லாங் கருங்கல்லின் வைரம்போலாம்
    துண்டிடவே நரை திரையு மேல்லாம்போகும்
    சுக்கிலந்தான் மேலேறும் கீழோடாது
    கண்டிடவே யாருதளம் வெளியே காணும்
    காலனுமே அஞ்சிடுவான் காணுங்கானே                                 
                                        

நாம் காயகற்ப மருந்துகளைத்தேடி எங்கேயும் காடு மலைகளில் அலைந்து திரியாமல் வீட்டிலிருந்தபடி சுலபமாக செய்து சாப்பிட்டு உடலைக் கற்ப தேகமாக மாற்றிக்கொள்ள நந்தீசர் பெருமான் அருளியுள்ளார் 
                                   
தமிழ் நாட்டில் எங்கும் சாதாரணமாக காணக்கிடைக்கும் வேப்பமரத்தை நூறாண்டு சென்ற வயதான மரத்தை தேடி அதன் பட்டையை வெட்டிவந்து மேலே உள்ள கடினமான பகுதியை நீக்கி விட்டு  உள்ளே உள்ள வெண் சதைப் பகுதியை எடுத்து நிழலிலேயே நன்கு காய வைத்து  உரலிலிட்டு இடித்து தூள் செய்து கொள்ளவும் இதில் வெண் கரிசலாங்கண்ணி சாறு ,கொத்தமல்லி இலையை இடித்த சாறு  இரண்டும் சமமாகக்கலந்து வேம்பு பட்டை தூளில் கலந்து அது முழுகும் அளவு சாறு விடவும்  இதை வெயிலில் வைத்து காயவிடவும் இந்த மூலிகை சாறுகள் நன்கு வற்றியவுடன் மீண்டும் மேற்கண்ட சாறுகளை ஊற்றிக்கலந்து வெயிலில் காயவிடவும் 

இப்படி ஐந்து முறை செய்யவும் இதற்க்கு பாவனை என்று  பெயர் இந்த முறையில் தயார் செய்த சூரணத்திற்கு "வேம்பு கற்பசூரணம்"என்று பெயர் இதனை பாட்டிலில் பதனம் செய்யவும் இதனை வெருகடியளவு என்பது ஐந்து விரல் கூட்டி எடுத்து (ஒரு டீ ஸ்பூன் அளவு)எடுத்து தரமான தேனில் கலந்து அந்தி சந்தி (காலை -மாலை)என நாற்பது நாள் உண்ணவும் 

இதனால் தேகம் வைரம் போல் இறுகி நாடி நரம்புகள் முறுக்கேறும், தசைகள் இறுகும், தலைமுடி நரை மாறும் ,பார்வைத்திறன் அதிகரிக்கும், உடல் இள 
வயது தோற்றம் பெரும், மற்றும் சுக்கிலம் எனப்படும் விந்து திடப்படும், உடல் உறவில் அதிகநேரம் நீடிக்கும் குண்டலினி யோகப்பயிற்சி செய்வோருக்கு 
பேரின்பசித்தி கிட்டும் மற்றும் ஞானத்தின் ஆறு நிலைகளையும் கண்டு உணரலாம் எனவும் இந்த "வேம்பு கற்பம்"உண்டவனைக்கண்டு காலன் என்ற எமன் அஞ்சுவான் என குறிப்பிடுகின்றார்

 இப்படி மகத்துவம் வாய்ந்த "வேம்பு கற்ப சூரணம்"செய்து உண்டு அனைவரும் பெரும் பயனடையலாமே 
நன்றி!

இமயகிரி சித்தர் 
சித்தர் வேதா குருகுலம் தென் இந்தியா 
                                                                       

கொல்லிமலை அதிசய மூலிகை ஆய்வு பயணம் பாகம் -2



இந்த வீடியோ பதிவு "தென் இந்திய பாரம்பரிய சித்த மருத்துவர்கள்


மற்றும் சித்தர் கலை ஆய்வாளர்களும்" இணைந்து கொல்லிமலை


யில் உள்ள அபூர்வ மூலிகைகளை இனம் கண்டறியவும் மற்றும்


சித்தர்கள் வாசம் செய்த அரிய குகைகளை நேரடி தரிசனம் செய்யும்


ஒரு ஆன்மீக பயணமாக (5-6-மே மாதம் 2012)நந்தன வருடம் சித்ரா


பௌர்ணமி அன்று நாங்கள் (Dr.நாகராஜ் -திருச்சி , Dr.T.ரகு.தஞ்சை)


ஏற்பாடு செய்த சிறப்பு பயிற்சி முகாம் இதில் நாங்கள் மலைப்பகுதி


களில் சுமார் 60மைல் தூரம் தேடி கண்டறிந்த அபூர்வ மூலிகைகள்


மற்றும் சித்தர் குகைகளை 6-பாகமாக வெளியிட்டுள்ளோம்.
                       
நன்றி!


இமயகிரி சித்தர்


www.siddharprapanjam.org                                                                                           


கொல்லிமலை அதிசய மூலிகைகள் ஆய்வு பாகம்-1

             

இந்த வீடியோ பதிவு "தென் இந்திய பாரம்பரிய சித்த மருத்துவர்கள் 

மற்றும் சித்தர் கலை ஆய்வாளர்களும்" இணைந்து கொல்லிமலை
 
யில் உள்ள அபூர்வ மூலிகைகளை இனம் கண்டறியவும் மற்றும்
 
சித்தர்கள் வாசம் செய்த அரிய குகைகளை நேரடி தரிசனம் செய்யும்
 
ஒரு ஆன்மீக பயணமாக (5-6-மே மாதம் 2012)நந்தன வருடம் சித்ரா

பௌர்ணமி அன்று நாங்கள் (Dr.நாகராஜ் -திருச்சி , Dr.T.ரகு.தஞ்சை)

ஏற்பாடு செய்த சிறப்பு பயிற்சி முகாம் இதில் நாங்கள் மலைப்பகுதி
 
களில் சுமார் 60மைல் தூரம் தேடி கண்டறிந்த அபூர்வ மூலிகைகள்
     
மற்றும் சித்தர் குகைகளை 6-பாகமாக வெளியிட்டுள்ளோம்.
                        
நன்றி!

இமயகிரி சித்தர்

www.siddharprapanjam.org                                                                                            

கொல்லிமலை பாம்பாட்டி சித்தர் குகையின் அருகில் உள்ள நீரோடை அருவி 

கோரக்கர் சித்தர் குகையின் முன் புறம் கொல்லிமலை         

Wednesday, 20 June 2012

முப்பு-பூநீர்-அண்டக்கல்-கல்லுப்பு



சித்த மருத்துவத்தில் மணிமாகுடமாகப் போற்றப்படும் மருந்துகளில்
முக்கிய இடம் வகிப்பது முப்பூ வாகும் இம்மருந்து செய்து அனைத்து வகையிலும் சூரணம் ,லேகியம்,பஸ்பம்,செந்தூரம்,போன்றவற்றில் சிறிது சேர்த்தால் மருந்துகள் அனைத்தும் வீர்யமாக நோய்களைக்குணப்படுத்தும் என சித்தர்கள் வலியுறுத்துகின்றார்கள்


இது செய்வதற்கு மூன்று முக்கிய பொருள்கள் தேவை அது பூநீர்"அண்டக்கல்"கல்லுப்பு" என்பவை ஆகும் இவைகளை அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாக இந்த வீடியோ பதிவில் முதல் முறையாக வெளியிட்டுள்ளோம் நன்றி 


இமயகிரி சித்தர் 

"சித்தர் வேதா குருகுலம்" தென் இந்தியா 

         

சித்தர் பிரபஞ்சம்                            

நவ பாசாணக்கட்டு ,இரசக்கட்டு ,இரசகுளிகை

நவ பாசாணக்கட்டு ,இரசக்கட்டு ,இரசகுளிகை



நவ பாசாணக்கட்டு ,இரசக்கட்டு ,இரசகுளிகை

சித்த மருத்துவ முறையினில் மணி மகுடமாகப்போற்றப்படும் மருந்து வகை யினில் முப்பூ,பாஷாணக்கட்டு வகைகளும் ஒன்று.இதில் பஞ்ச பாஷாண கட்டு,நவபாசாணக்கட்டு போன்றவைகள் ஆகும். இது வேறு எந்த ஒரு மருத்துவ முறையிலும் இல்லாத சிறப்பாகும். 

இதில் லிங்கக்கட்டு,தாளகக்கட்டு,வீரக்கட்டு,பூரக்கட்டு,பஞ்ச பாசாணக் கட்டு,நவபாசாணக்கட்டு,போன்ற பாஷாணக்கட்டுகளும் ஆகும்.மேலும்   இரசக்கட்டு,இரசகுளிகை,நாகக்கட்டு,இரசமணி,விந்து தம்பன குளிகை, போன்ற உலோக கட்டு வகைகளும் உண்டு 

இந்த அபூர்வ வகை கட்டு மருந்துகளை இன்று நடைமுறையில் செய்யக் கூடிய பாரம்பரிய சித்த மருத்துவர்கள் தமிழகத்தில் மிகச்சிலரே உள்ளனர் இதைப்பற்றிய விளக்கம் மேலே உள்ள வீடியோ பதிவில் உள்ளது

நன்றி! 
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் – திருச்சி – T.N
cell : 9865430235 - 9095590855   



Tuesday, 19 June 2012

சித்தர் பிரபஞ்சம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது

சித்தர் பிரபஞ்சம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது



சித்தர் பிரபஞ்சம் – அறிமுகம்

பதினெண் சித்தர் துதி        
கட்றாலுஞானக் கருத்தறிந்தோர்கள் கமலபாதம்  
பெற்றாலுஞ்சித்தி பேரின்பக்கல்வி பிரவாதமுக்தி 
வைத்தாலும்வெற்றிமருவியவர்பாதம்வணங்கவும் 
யான் சித்தாதிசித்தர் பதினெண்மர்தந்த திரவியமே 


அன்புடையீர் வணக்கம் !

சித்தர் பிரபஞ்சம் என்ற இந்த வலை தளத்தில் தமிழ்ச் சித்தர்களின் ஞானப் பெட்டகத்திலுள்ள பொக்கிஷங்களையும் குருகுல வழியில் யாம் பெற்ற அரிய சித்தர் கலை இரகசியங்களையும் ,மற்றும் பண்டைய கால ஓலைச் சுவடி களில் உள்ள சூட்சுமங்களையும் சித்தர் திறவு கோல் மூலம் திறந்து எடுத்து உலகிற்கு அர்ப்பணிக்க உள்ளோம்.

இதில் மூலிகைகளின் அரிய இரகசியங்கள் பாரம்பரிய சித்தமருத்துவ அனுபவ  முறை இரகசியங்கள், இரசமணி, முப்பு, இரச வாதம், காய கற்பம் ஞானம், மந்திர சாஸ்த்திர முறைகள், வர்மக்கலை, சரகலை, பஞ்சபட்சி , போன்ற அபூர்வ சித்தர் கலைகளின் உட்பிரிவு சூட்சுமங் களை  விளக்க மளிக்க உள்ளோம்.

இவைகளை உலக மக்களின் நலன் கருதி நற்காரியங்களுக்கு மட்டும் பயன் படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.மற்றும் சித்தமருத்துவர்கள், சித்தர் கலை ஆர்வலர்கள் யாவரும் மேற்கண்ட கலைகள் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டுப்பெறலாம்.  


நன்றி!
இமயகிரி சித்தர்... 
சித்தர் வேதா குருகுலம் – திருச்சி – 5 - T.N  
cell : 9865430235 - 8695455549 

பதிவுகளின் வகைகள்