இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Monday, 27 May 2013

மூன்று மூலிகை காயகற்பம் - அகத்தியர் - Herbal Kayakarpam


மூன்று மூலிகை காயகற்பம் - அகத்தியர் - Herbal Kayakarpam

வல்லாரை மூலிகை


சிறு செருப்படை மூலிகை


வெள்ளை கரிசலாங்கண்ணி மூலிகை


மூன்று மூலிகை காயகற்பம் - அகத்தியர் - Herbal Kayakarpam

பஞ்சபூத சக்திகளின் இயற்கை விதிகளுக்கு உட்பட்டு இயங்கும் மனித உடலில் நரை, திரை, மூப்பு என்னும் முப்பெரும் பிணிகளை அணுக விடாமல் காத்து என்றும் இளமையாய் வாழ வைக்கும் அதிசய மருந்துகள் தான் காயகற்ப மருந்துகள் ஆகும்.

மனிதன் நீண்ட நாட்கள் வாழ்வதற்கான காயகற்ப மருந்துகள் பற்றிய ஆய்வுகளை இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள ஞானிகள் [ Pilosophers ] பல்லாயிரம்  வருடங்களுக்கு  முன்பே  ஆய்வு  செய்துள்ள னர்.ஆனால் இந்தியாவில் தமிழகத்தில் சித்தர்கள் தங்கள் ஞானத்தால் கண்டறிந்து இவற்றை வகைப்படுத்தி எளிய வகையில் ஏராளமான முறைகளை நூல்களில் பதிவு செய்துள்ளனர்.

இவற்றில் மூலிகைகளைக் கொண்டு மிக எளிய முறையில் செய்து உண்ணக் கூடிய ஒரு காயகற்ப மருந்தைப் பற்றி அகத்தியர் பெருமான் தனது நூலில் விளக்கமளிக்கின்றார்.

போனபின்பு யின்னுமொரு கற்பங் கேளு
புகழான திருமேனி சிறுசெருப் படையும் 
மானகருங் கரிசாலை மூன்றும் வேறாய் 
அடைவாகச் சூரணித்துச் சமனாய் சேர்த்து 
கானில் வாழ் கற்கண்டு நாலத் தொன்று 
கலந்து வெருகடி தேனில் நெய்யிற் கொள்ளு 
மானமுட னிருகாலு மண்டலந்தான் கொள்ள 
மந்தமதி மந்தபுத்தி மயக்கம் போமே 

மயக்கம் போம் லோகமெல்லாம் வசியமாகும் 
மனமுண்டாங் குணமுண்டா மயக்கம் போகும் 
மயக்கபித்தம் சோகை யெரி பித்த நீர்க்கட்டு 
மலபந்தம் யாவற்றும் நீங்கிப் போகும் 
மயக்கு பித்த வெறிமூர்ச்சை மாறுமாறும் 
மூதறிவா மேனிகண்கள் சிவப்பு  மாகும் 
தியக்கம்போம் காமப்பால் மிகவுண்டாகும் 
ஸ்திரீகளுட வாசனையில் சேராமல் நில்லே 

மேற்கண்ட பாடல் விளக்கம் :
வல்லாரை, சிறுசெருப்படை, வெள்ளை கரிசலாங்கண்ணி இம் மூன்றும் வெவ்வேறாய் தேவையான அளவு சேகரித்து நிழலில் உலர்த்தி இடித்து சூரணம் செய்து மூன்றும் சம அளவில் ஒன்று சேர்த்து கலந்து இந்த எடையில் கால் பங்கு கல்கண்டு பொடி செய்து சேர்த்து கலந்து கொள்ளவும்.

காலை உணவிற்கு பின்பு  இந்த மூன்று மூலிகை சூரணம் வெருகடி அளவு எடுத்து தேனில் குழைத்து உண்ணவும்.இதே போல் இரவு உணவிற்கு பின்பு இதே போல் தேனில் குழைத்து உண்ணவும்.இந்த முறையில் 12 - நாட்கள் உண்ணவும்.

இதன் பின்பு 12 - நாட்களுக்கு இதே மூன்று மூலிகை சூரணத்தை காலை - மாலை நெய்யில் குழைத்து உண்ணவும்.

[வெருகடி என்பது - ஐந்து விரல் கூட்டி எடுப்பது - பூனையின் பாதம் அளவு ]  

இதனால் தீரும் நோய்கள் விபரம் :
அறிவு மந்தம், ஞாபக சக்தி குறைவு, பித்த மயக்கம், இரத்த சோகை, கைகால் எரிச்சல், நீர்க்கட்டு, மலச்சிக்கல்,பித்தவெறி, மூர்ச்சை இவைகள் நீங்கும்.

இரத்தம் பெருகி கண்கள் நன்கு சிவக்கும்.தெளிவான மனமும், இனிமையான குணமும் உண்டாகும்.ஆண்மைத் தன்மையும், காமம் பெருகும்.ஆனால் பெண்களுடன் சேராமல் இருந்தால் தேகம் காயகற்பமாக மாறும்.சில மாதங்கள் தொடர்ந்து உண்ணவும். 

நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்
சித்தர் வேதா குருகுலம்
புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் P.O – திருச்சி D.T - 620006
தமிழ்நாடு – இந்தியா

அகத்தியர் குருகுலம் யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம் , சிறுமலை புதூர்
திண்டுக்கல் – D.T
தமிழ்நாடு – இந்தியா

செல் :98654302359095590855 - 9655688786






வர்மக் கலை - வர்ம மருத்துவ சிறப்பு பயிற்சி - Varma kalai Training

வர்மக் கலை - வர்ம மருத்துவ சிறப்பு பயிற்சி – Varma kalai Training -
[பாரம்பரிய வர்ம ஆசானின் நேர்முக செய்முறை விளக்கப் பயிற்சி ]









வர்மக் கலை - வர்ம மருத்துவ சிறப்பு பயிற்சி - Varma kalai Training
[பாரம்பரிய வர்ம ஆசானின் நேர்முக செய்முறை விளக்கப் பயிற்சி ]

ஆதி மருத்துவம் எனவும், தாய் மருத்துவம் எனவும், போற்றப்படும் தமிழ் மருத்துவமாம் - சித்த மருத்துவ முறையினில் உயர்நிலைப் பிரிவுகளில் ஒன்றான வர்மக்கலையின் சூட்சும இரகசிய மருத்துவ முறைகளை குருகுல வழியில் வர்ம ஆசான் மூலமாக நேர்முக பயிற்சி சித்தர் வேதா குருகுலம் - திருச்சியில்  அளிக்கப்படுகின்றன.

மறைந்து வரும் அரிய கலைகளில் ஒன்றான பாரம்பரிய வர்மக்கலை யின் அனுபவப் பூர்வமான சூட்சும இரகசிய செயல் விளக்கங்களை வர்ம ஆசானிடம் நேர்முகமாக பயிற்சி பெறுவதால் மிகவும் சுலபமாக எலும்பு, நரம்பு, தசைகள் போன்ற பகுதிகளில் வரும் அனைத்து நோய்களையும் எளிதில் குணப்படுத்தலாம்.

வர்ம மருத்துவம் என்பது உடலிலுள்ள 108 - வர்ம இட ங்களைக் கண்டறிந்து, உடலில் நோய்கண்ட நிலையில் அடங்கல் தளங்களில் இளக்கு முறை செய்வது என்பது மட்டுமல்ல.

உடலில் நரம்பு மண்டலம், எலும்பு மண்டலம், தசை மண்டலம், என்ற மூன்று பகுதிகளிலும் நோய்கள் கண்ட நிலையில் இவற்றை முற்றிலும் குணப்படுத்துவதே உண்மையான வர்ம மருத்துவம் ஆகும்.இதன் சூட்சும இரகசியங்களை ஒளிவு மறைவின்றி கற்றுக் கொடுக்கும் வர்ம ஆசான்கள் மிகச் சிலரே இன்று தமிழகத்தில் உள்ளனர்.

வர்ம மருத்துவ பயிற்சி விபரம் :

பிரிவுகள் :
1 - எலும்புகள் 
2 - நரம்புகள் 
3 - தசைகள் 
4 - கட்டு  கட்டுதல் 
என்ற நான்கு பிரிவுகள் 

எலும்புகள் என்னும் பிரிவில் :
1 - மூட்டு நழுவுதல் ஒன்று சேர்த்தல் 
2 - சவ்வு  விலகுதல் ஒன்று சேர்த்தல் [சவ்வு கிழிதல்]
3 - மிதமான எலும்பு  முறிவு  ஒன்று சேர்த்தல் 

நரம்புகள் என்னும் பிரிவில் :
1 - வர்மம் என்றால்  என்ன ?
     வாத வர்மம் - 108
     பித்த வர்மம் - 108
     கப வர்மம் - 108  விளக்கங்கள் 
2 - 30 வகையான  வர்ம  நிலையங்களை  கண்டறிதல் 
3 - வர்மங்களை இளக்கும்  இரகசிய முறைகளான வர்ம  அடங்கல்      தலங்கள் 12 -கண்டறிதல்.

தசைகள் என்னும் பிரிவில் :
1 - தசைகள் தடவு முறைகள்  மற்றும்  இரத்தக் கட்டு  இளக்கு முறை  
2 - தனித்தனி  வர்மப்புள்ளிகள் தடவல் முறைகள் 
3 - கூட்டு  வர்மப்புள்ளிகள்  தடவல் முறைகள்  [4-5  வர்மப்புள்ளிகள்]  
4 - தொக்கணம் என்னும் வர்ம மசாஜ் முறைகள் 
5 - உழிச்சல் - தைல தாரை முறை 

கட்டுதல் என்னும் பிரிவில் :
1 - விலகிய சவ்வுகளை சேர்த்தல் [சவ்வு கிழிதல்]
2 - மூட்டு விலகியதை ஒன்று சேர்த்தல் 
3 - சிறிய எலும்பு முறிதலை ஒன்று சேர்த்தல் 
மேற்கண்ட மூன்று நிலைகளைக் கண்டறிந்து கட்டு கட்டுதல்.

மேலும் இவைகளுக்கான வர்ம கசாயம், வர்மத் தைலம், கட்டு கட்டுத லுக்குத் தேவையான பசை செய்முறை சூட்சுமங்கள் மற்றும் இவைக ளுக்குத் தேவையான இளக்குமுறை கருவிகள் பற்றிய விபரம் செயல் விளக்கம் நேரில் செய்து காண்பிக்கப்படும்.

வர்ம மருத்துவ பயிற்சியில் :
1 - மூட்டுவலி 
2 - முதுகுவலி 
3 - முதுகு தண்டுவட வலி 
4 - கழுத்து வலி 
5 - இடுப்பு வலி - [ Back  Pain ]  
6 - முக வாதம் 
7 - பக்க வாதம் 
8 - மூட்டு ஜவ்வு கிழிதல் 
9 - இரத்தக் கட்டு
10 - மூட்டு நழுவல் 
11 - தசை வலி,, தசைப் பிடிப்பு
12 - வர்மத் தடவல் [ வர்ம  மசாஜ் செய்தல்] 
13 - மிதமான எலும்பு  முறிவு 
போன்றவைகளைக் குணப்படுத்தும் முறைகள் கற்றுக் கொடுக்கப் படும்.

சித்த மருத்துவம் கல்வி பயிலும் மாணவர்கள், [ B.S.M.S., M.D] சித்த மருத்துவர்கள், மற்றும் பிசியோதெரபி மருத்துவர்கள் [B.P.T., M.P.T]  வர்ம மருத்துவம் கற்று சிறப்பாக மருத்துவ சேவை புரிய ஒரு அரிய வாய்ப்பு. 


பயிற்சி காலம் : 6 - மாதங்கள் 
மாதம் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மட்டும்   


பயிற்சி நடைபெறும் இடம் :
சித்தர் வேதா குருகுலம் 
ஸ்ரீ சற்குரு இராஜயோகத் திருமடம் 
சிவராம் நகர் - திருவானைக்கோவில் 
திருச்சி - 5

தொடர்பு மற்றும் விபரங்களுக்கு :
செல் : 9865430235 

நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - T.N 
cell : 9865430235 - 8595455549     

  







           

       


Saturday, 25 May 2013

ஸ்ரீ சற்குரு மாமுனிவரின் 98-ம் ஆண்டு மகா குருபூஜை பெருவிழா

ஸ்ரீ சற்குரு மாமுனிவரின் 98-ம் ஆண்டு மகா குருபூஜை பெருவிழா 










ஸ்ரீ சற்குரு மாமுனிவரின் 98-ம் ஆண்டு மகா குருபூஜை பெருவிழா 

ஸ்ரீ அகஸ்திய மாமுனிவரின் மரபில்  9 -வது முனிவராகத் தோன்றிய
ஸ்ரீ சற்குருநாத மாமுனிவரின் 98-ம் ஆண்டு குருபூஜை பெருவிழா திருச்சி திருவானைக்கோவில் தென்புறம் சிவராம் நகரில் அமைந்துள்ள 
ஸ்ரீ சற்குரு இராஜயோகத் திருமடத்தில் விஜய ஆண்டு வைகாசி மாதம் 16-ம் நாள் - 30-5-2013 வியாழக்கிழமை நடைபெறுகின்றது.

ஸ்ரீ சற்குருநாத மாமுனிவர் 1910-ம்  வருடத்தில்  இங்கு  திருமடத்தில்  கருங்கல்லினால் 16 -அடி ஆழத்தில் கிணறு போன்ற வடிவில் அமைத்து அதனுள் 48 -நாள் பூமி தவம் இருந்து அருள் புரியும் தலம்.ஒவ்வொரு வருடமும் குருபூஜையின் போது மட்டும் இதன் தரிசனம் கிட்டும்.

ஸ்ரீ சற்குருநாத மாமுனிவர் தமிழகத்தில் இது போன்ற வெவ்வேறு இடங்களில் ஆறு ஆசிரமங்கள்  அமைத்துள்ளார்.

1 - நீலகிரி 
2 -திருச்சியில் 2 - இடங்கள் 
3 - துறையூர் 
4 - பழனி 
5 -தேனி 

அருள்நெறி சார்ந்த அன்பர்களும்,ஆன்மீக அன்பர்களும் பொதுமக்க ளும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து ஸ்ரீ சற்குரு நாத மாமுனிவரின் திருவருட் பேறினைப் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டுகிறோம்.


ஈசா யோகா மையம் சத்குரு ஜாக்கி வாசுதேவ் அவர்கள் கடவுள் எங்கே இருக்கின்றார் ? என்ற நூலில் தனது முற்பிறவியாக குறிப்பிடும் சற்குரு பரப்பிரம்மா ஸ்ரீ சற்குருநாத மாமுனிவர் அவர்களைத்தான்.

நமது சித்தர் வேதா குருகுலம் மூலமாக அபூர்வ சித்தர் கலைகளின் நேரடிப் பயிற்சி  நடை பெறுவதும் இங்குதான்.


நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா  குருகுலம் - திருச்சி -T.N  
cell : 9865430235 - 8695455549
    



Friday, 24 May 2013

வாலை ரசம் பிரித்தல் - தீநீர் தயாரித்தல் விளக்கம் - siddha medicine - pugai neer

வாலை ரசம் பிரித்தல் - தீநீர் தயாரித்தல் விளக்கம்




















வாலை ரசம் பிரித்தல் - தீநீர் தயாரித்தல் விளக்கம் 

ஆதியில் தோன்றிய மருத்துவமாம் சித்த மருத்துவ முறையில் வேறு எந்த ஒரு மருத்துவ முறைகளிலும் இல்லாத அபூர்வமான செய்முறைகள் ஏராளமான வகைகள் இதில் மட்டுமே உண்டு.

அவைகளில் ஒன்றுதான் "வாலை ரசம்" பிரித்தல், மற்றும் "தீநீர் தயாரித்தல்" என்ற செய்முறைகள் ஆகும்.இது போன்ற முறைகளை இன்றும் தமிழகத்தில் சித்த மருத்துவர்களும், இரசவாத ஆய்வாளர்கள் போன்றோர் கையாண்டு வருகின்றனர்.

வாலை ரசம் பிரித்தல் :
சித்த மருந்துகள் செய்முறையில் தேவைப்படும் மூலப்பொருள்களில் முதன்மைப் பொருளாகக் கருதப்படுவது "பாதரசம்" ஆகும். இதனை நவ பாஷாணங்களில் ஒன்றான ஜாதி லிங்கத்திலிருந்து பாதரசத்தைப் பிரித்து எடுத்து சித்தர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

ஜாதிலிங்கத்தில் உள்ள பாதரசத்தை பிரித்து எடுக்க "பதங்க பாத்திரம்" என்னும் முறையில் எடுக்கலாம்.நமக்குத் தேவையான அளவில் சற்று சிறியது,பெரியது என்ற அளவில் இரண்டு மண்பானைகள் வாங்கி வந்து இதன் வாய் சரியாக பொருந்த வேண்டும்.இதில் சிறிய பானையில்  ஜாதி லிங்கத்தை பொடித்துப் போட்டு இதன் எடைக்கு நான்கு பங்கு சித்திரமூலவேர்ப் பட்டையை இடித்துப் போட்டு கலந்து மேலே பெரிய பானையை கவிழ்த்து மூடி காற்று புகாமல் சீலை மண் செய்து அடுப்பிலேற்றி இரண்டு ஜாமம் நிதானமாக எரித்து எடுக்க மேல் பானையில் பதங்கம் படிந்துள்ளதை சுரண்டி எடுத்துப் பிழிய பாதரசம் கிடைக்கும்.இதுவே வாலைரசம்  எனப்படும்.

இந்த வாலை ரசத்தினால் மருந்துகள் செய்து கொடுக்கும் போது எயிட்ஸ் மற்றும் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை  நன்கு குணப்படுத்து கின்றது.

வாலை ரசத்தினால் தயாரிக்கப்படும் ரசமணி தெய்வீக குணங்களுடன் நன்றாக வேலை செய்யும்.

தீநீர் தயாரித்தல் விளக்கம் :
பாஷாணங்கள் 64 -வகைகள் உண்டு.உலோகங்கள் 9 -வகைகள் உண்டு. 
 தீராத நாட்பட்ட கொடிய நோய்களைத் தீர்க்க சித்த மருந்துகள் செய்யும் போது மேற்கண்ட பாஷாண,உலோகங்களை அணுப்பிராமணமாக மாற்ற உதவுவது தீநீர் ஆகும். 

தீநீர்  :   நெருப்பு தன்மையை தன்னுள் கொண்ட நீர் [ திராவகம் - Acid ] 

படிகாரம், வெடியுப்பு, பூநீர் போன்றவைகளை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து ஆவியாக வடித்து எடுப்பது தீநீர் ஆகும்.

இதற்கான செய்முறை விளக்கப் படங்கள் மேலே உள்ளது.


நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி -T.N
cell : 9865430235 - 8695455549  
       



Friday, 17 May 2013

அதிசய புல் சஞ்சீவி மூலிகை தானாக சுற்றும் செயல் விளக்கம் - Miracle Pul Sanjeevi Herbal

அதிசய புல் சஞ்சீவி மூலிகை தானாக சுற்றும் செயல் விளக்கம் 

Miracle Pul Sanjeevi Herbal






அதிசய புல் சஞ்சீவி மூலிகை தானாக சுற்றும் செயல் விளக்கம் - 

Miracle Pul Sanjeevi Herbal

சித்தர் பிரபஞ்சம் இணைய தளம் மூலமாக சித்தர் கலைகள் பற்றிய  அரிய இரகசியங்களை அனுபவப் பூர்வமான ஆதாரங்களுடன் விளக்கமளித்து வருகின்றோம்.அதன் தொடர்ச்சியாக இன்று நாம் காணப்போவது சஞ்சீவிப் புல் என்னும் அதிசய மூலிகையைப் பற்றிய அரிய செயல் விளக்கம்.


இந்த அதிசய மூலிகை கொல்லிமலை, மற்றும் பச்சை மலையில் கிடைக்கின்றது.இம் மூலிகையைப் பற்றிய விபரம் சித்தர் நூல் களில் காணக் கிடைக்க வில்லை. ஆனால் அனுபவ முறையில் மாந்திரீகம் தொழில் புரிபவர்களின்  பயன் பாட்டில் இது உள்ளது.


வேர் போன்ற தோற்றமுள்ள இம் மூலிகையை முறைப்படி சாப நிவர்த்தி செய்து உயிர் கொடுத்து ஆண் வசியம், பெண் வசியம், தொழில் வசியம், மற்றும் அனைத்து வித மாந்திரீக, தாந்திரீக எந்திரங்களில் நடுவில் வைத்து ரட்சையாகவோ, அல்லது  தாயத்து போன்றவைகளில் கொடுக்கும் போது நன்றாக பலன் அளிக்கின்றது.


இம் மூலிகையின் அதிசய செயல் விளக்கம் மேற்கண்ட வீடியோவில் உள்ளது. கீழே உள்ள youtube இணைப்பை கிளிக் செய்யவும்.


இது போன்ற அதிசய மூலிகைகள் பற்றிய செயல் விளக்கம் தொடரும் 


நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் -திருச்சி -T .N 
cell : 9865430235 - 8695455549  

   

பதிவுகளின் வகைகள்