வெள்ளெருக்கு வேர் விநாயகர் மகிமைகள் -
Vellerukku Ver Vinayakar
வெள்ளெருக்கு வேர் விநாயகர் மகிமைகள் -
Vellerukku
Ver Vinayakar
இறைவனின்
அருளைப் பூரணமாய் பெறுவதற்கும், நித்ய பூஜைகள்
செய்வ தற்கும், உகந்த மூலிகைகள் மற்றும் தெய்வீக தாவரங்களை சித்தர்கள் தங்கள் நூல்களில் விபரமாகக்
குறிப்பிட்டுள்ளனர்.
அவற்றில்
அருகு, வன்னி, அரசு, துளசி,
வில்வம், வெள்ளெருக்கு,
போன்ற வைகள் மிக முக்கியமானவைகள் ஆகும்.இவற்றில் விநாயகப் பெருமானின்
அருளைப் பூரணமாய்ப் பெறுவதற்கும், கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூன்யம் போன்ற தோஷங்கள் அனைத்தும் நீங்கி இல்லறம் சுபிட்சமாய் விருத்தி யடைய
விதிமுறைகளின்படி பூஜித்து எடுக்கப்பட்ட "வெள்ளெருக்கன் வேர்" பேருதவி புரிகின்றது.
பொதுவாக
மூன்று வருடத்திலிருந்து ஐந்து வருடங்கள் நன்கு வளர்ந்த வெள்ளெருக்கன் செடியைத்
தேடியடைந்து அதைச் சுற்றிலும் குழி பறித்து குழி நிரம்ப தண்ணீர் வார்த்து விடவும்.பிறகு
புனர்பூசம் அல்லது பூசம் நட்சத்திரமும் ஞாயிற்றுக் கிழமையும் சேர்ந்த தினத்தன்று மூலிகை சாப நிவர்த்தி விதிமுறைகளின் படி கன்னிநூல் காப்புக்கட்டி, படையலிட்டு,
பூஜை செய்து, பலி கொடுத்து,
தேங்காய் பருமன் அளவில் கிழங்கு போல் இருக்கும் பருமனான வேரை பறித்து வந்து சாஸ்த்திர
விதிகளின் படி விநாயகர்
உருவம் வடித்து சங்கடஹர சதுர்த்தி அன்று வீட்டில் இந்த விநாயகரின் திருவுருவத்திற்கு
மஞ்சள், குங்குமம், வைத்து புஷ்பம் சாற்றி அவல், பொறி, கடலை, பூந்தி, சர்க்கரைப் பொங்கல்
வைத்து படையலிட்டு தூபம், தீபம், காண்பித்து "ஓம் கங், கிங், குங், கெங் கணபதி தேவா பவ, சர்வ லோக வசீகராய நம”.
என 1028- உரு மந்திரம்
செபித்து மல்லிகைப் பூவில்
அர்ச்சனை செய்ய சித்தியாகும்.
இதனால்
கணவன் மனைவி ஒற்றுமை, தொழில் விருத்தி, சர்வஜன வசியம், உண்டாகி செல்வம் விருத்தி யடையும். மேலும் எதிரிகளால் ஏற்படும்
கண்திருஷ்டி, ஓமலிப்பு, ஏவல்,
பில்லி, சூன்யம்,
இவைகள் அணுக விடாமல் காக்கும். பக்தியுடன்
பூஜை செய்தல் அவசியம்.
நன்றி
!
இமயகிரி
சித்தர்...
சித்தர்
வேதா குருகுலம் - திருச்சி -5
செல்
: 9865430235 - 8695455549
1 comment:
Ayya, Thankalin Siddhapirabanjam web site padithen, thankal kooriya vellerukku vinayakar, (poojithu uru etriyathu yenku kidaikkum. Ithanai veettil vaithu valipadum muraikal patri sollavum. nandrikal.
Post a Comment