கொல்லிமலை அதிசய மூலிகைகள் ஆய்வு பயணம் - 2013 Kolli hills Miracle Herbal Research Tour
"இந்திய பாரம்பரிய சித்தமருத்துவர்கள் மற்றும் முப்பூ ஆய்வாளர்கள் கூட்டமைப்பு"
மற்றும் "கொல்லிமலை அறப்பளீசுவரர் மூலிகை மருந்தகம்" இணைந்து
நடத்தும் அதிசய மூலிகை பயிற்சி முகாம்.
தமிழகத்தின் பாரம்பரிய சித்த மருத்துவர்கள்,மற்றும்
சித்தர் கலை ஆர்வலர்கள், மூலிகை ஆய்வாளர்கள் போன்றோர் பயன்
பெரும் விதமாக ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் கொல்லிமலை யில் மூலிகை ஆய்வு
பயணம் மேற்கொள்ளப் பட்டு ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர்.
கொல்லிமலையில் 2 -நாள்
அதிசய மூலிகைகள் ஆய்வு பயிற்சி மற்றும் பார்வையிடும் இடங்கள் விபரம்.
கொல்லிமலையில் உள்ள மூலிகைப் பண்ணை, தாவரவியல் பூங்கா, வன ஆராய்ச்சி மையம்,ஆகிவற்றில்
உள்ள மூலிகைகள், ஜோதிப்புல், சாய்ந்தாடும் பாவை,கருநெல்லி,சிவப்புக் கற்றாழை, கருவாழை,சிவப்பு கடுக்காய்,சர்க்கரை வேம்பு,உதிர
வேங்கை, ரோம விருட்சம், போன்ற அபூர்வ மூலிகைகளையும் சித்தர்கள்
வழிபட்ட அறப்பளீசுவரர் கோயில், சேரமடையான் கோயில், கொல்லிப் பாவை
என்னும் எட்டுக்கை காளி அம்மன் கோயில்,பெரியண்ன சுவாமி கோயில் மற்றும் சித்தர்கள் தவம்
செய்த காளங்கி நாதர் குகை, பாம்பாட்டி சித்தர் குகை,கோரக்கர் குண்டம் என்னும்
கோரக்கர் குகை, அதனைச் சுற்றியுள்ள மூலிகைகள் காணும் பயிற்சிக்கு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொல்லிமலையில் உள்ள அதிசய மூலிகைகளை நேரில் கண்டறியும் ஆய்வு பயணம்
இந்த வருடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு வாகனங்கள் 60-பேர்
மட்டும் அனுமதி வெள்ளிக்கிழமை இரவு 10 -மணி அளவில் திருவையாறு
ஊரிலிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் - திருச்சி
வழியாக நாமக்கல் சென்றடையும்.
சனிக்கிழமை காலை 6-மணி அளவில் நாமக்கல்லிலிருந்து புறப்பட்டு 10 -மணி அளவில்
கொல்லிமலையில் அறப்பளீசுவரர் கோயில் அருகில் தங்கும் இடம் சென்றடையும்.
சென்னை போன்ற பகுதிகளில் இருந்து வருபவர்கள் நாமக்கல்லில் சனிக்கிழமை காலை 6-மணி அளவில் இணைந்து கொள்ளலாம்.
நாள் : 11 - 12- 5 - 2013 சனி - ஞாயிறு [ May ] -ஆகிய இரண்டு நாட்கள் மட்டும்.
புறப்படும் இடம் -நேரம் : திருவையாறு - தஞ்சாவூர்
- திருச்சி
வெள்ளிக்கிழமை இரவு 10 -மணி அளவில்
மொத்தம் : 60-பேர் மட்டும் [முன் பதிவு செய்து கொள்ளவும் ]
கட்டணம் :இரண்டு நாள் சென்று வர வாகன
வசதி , தங்கும் இடம், உணவு அனைத்திற்கும் ரூபாய்
-1200 /- ஆயிரத்து இருநூறு மட்டும்.
முன் பதிவுக்கு :- Dr.T ரகு அவர்கள்
- 9443548924 - 9842496418
குறிப்பு
:- மூலிகைகள் மற்றும் சித்தர் கலைகளில் ஆர்வமும், ஆன்மீகத்தில்
ஈடுபாடு உள்ள
யாவரும் கலந்து கொள்ளலாம்.
நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி
www.siddharprapanjam.org
cell :09865430235 - 8695455549
5 comments:
பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...
//பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்... //
நன்றி ஐயா ....
ennaiyum unngal payanathi seethukoovigalah?
மூலிகைகள் மற்றும் சித்தர் கலைகளில் ஆர்வமும்,ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ள யாவரும் கலந்து கொள்ளலாம்.
enakku antha vaaippu kidaikkumaa..?
Post a Comment