இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Friday, 27 July 2012

பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள்

பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் 


கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன் உலகோர்க்

கெல்லாம் காரமா மூலியடா பங்கம்பாளை கொண்டு

வந்து உன் மனையில் வைத்திருந்தால் கொடிய விடம் 

அணுகாது குடியோடிப்போம் நன்றான நாகதாளிக் கிழங்கு 

தானும் நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா அன்றான 

ஆகாசகருடன் மூலி அம்மனையிலிருக்க விடமற்றுப்போம் 

                                                                                 சித்தர் பாடல்


பாடல் விளக்கம்:

ஆடு தீண்டாப்பாளை ,நாகதாளிக் கிழங்கு,ஆகாச கருடன் 

கிழங்கு,சிறியா நங்கை,இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து

வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள், பாம்புகளை 

நெருங்க விடாது.


பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் :

சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை

அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது 

கலந்து பாம்பு இருக்கும் பகுதியில் சுற்றி தெளித்து விட பாம்பு 

சீராது ,கடிக்காது, ஓடாது அங்கேயே மயங்கி கிடக்கும்.

எளிதில் பிடித்து அடித்து விடலாம் .  

    

  நன்றி !

      இமயகிரி சித்தர்...

13 comments:

Hari Haran PS said...

சோத்து kattraalai வீட்டில் இருந்தால் பாம்பு வராது என்கிறார்களே ..! இது உண்மையா ???

இமயகிரி சித்தர் said...

சோற்றுக் கற்றாலையை திருஷ்டி,தோஷங்களுக்கு
வீடுகளில் கட்டி விடுவார்கள்.ஆனால் பாம்பை வர
விடாமல் தடுக்கும் என சித்தர் நூல்களில் குறிப்புகள்
இல்லை.நன்றி !

vaithiyanathan said...

சோற்றுக்கத்தாழை இதன் அடியிலும் செடியின் மேலும் பாம்புகள் சர்வசாதரணமாக ஓடும் .

Dineshkumar said...

இன்றைக்கு காலம் மாறிவிட்டதனால் ஒருசில விசயங்கள் சாத்தியம்இல்லை இதுமறுக்கமுடியாதஉண்மை நன்றி

Dineshkumar said...

இன்றைக்கு காலம் மாறிவிட்டதனால் ஒருசில விசயங்கள் சாத்தியம்இல்லை இதுமறுக்கமுடியாதஉண்மை நன்றி

Dineshkumar said...

இன்றைக்கு காலம் மாறிவிட்டதனால் ஒருசில விசயங்கள் சாத்தியம்இல்லை இதுமறுக்கமுடியாதஉண்மை நன்றி

Unknown said...

உங்களை வாழவைக்கும் இயற்கையை காப்பதற்காக தங்கள் பணம், பொருள், இளமை இவை யாவையும் அர்பணித்த இவர்களுக்காக சில நிமிடங்கள் ஒதுக்குங்களேன் !

"பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்" என்ற பழமொழியை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் "கிரீன் கிராஸ் இந்தியா" (GREEN CROSS IND
IA) அமைப்பை சேர்ந்த இவர்கள் சற்றே மாறுபட்டவர்கள்.. ( Profile - http://www.facebook.com/media/set/?set=a.184170231657190.47525.100001926423853&type=3 )
நம்மை பொறுத்தவரை பாம்பைக் கண்டால் தலை தெறிக்க போடுவோம் (அல்லது) தடி எடுக்க ஓடுவோம் இவர்கள் அப்படியல்ல !
அவற்றையும் சக உயிராக பாவித்து, மதிப்பளித்து உயிருடன் மீட்டு, காயம்பட்டிருப்பின் முறையான சிகிச்சையும் உணவுமளித்து மனித நடமாட்டமில்லா வனங்களில் விடுவித்து வருகின்றனர்.
-- இவர்களது அறிய சேவையை பாராடுங்கள் நண்பர்களே - "கிரீன் கிராஸ் இந்தியா" (GREEN CROSS IND
IA) - 90036 33054
www.greencrossindia.net
http://www.facebook.com/greencrossclub?ref=ts&fref=ts

Unknown said...

எளிதில் பிடித்து அடித்து விடலாம் .

roczzz said...

helo bro pambai adikaudathu enru solluranga adithal pavam enru solranga kurippa friday

avm said...

சோற்றுக் கஞ்சி(உணவு கஞ்சி), சோற்றுக் கற்றாலை
இரண்டும் வேறு,வேறு...!!??

Unknown said...

Thanks for the valuable blog...www.pcdpharmacompanies.com

Unknown said...

siruneeraga kal karaya ethanenum marunthu ullatha. naan sila varudangalaga siruneeraga kal pirachanayal avathi padukiren. thayavu seithu ungal padhilai thevikkavum nanri

Unknown said...

sothukatrazhai endraal ennaga,aiyaa?

பதிவுகளின் வகைகள்