இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Sunday, 15 July 2012

கொல்லிமலை கலிங்கம் ஓலைச்சுவடி-இரசவாத,காயகற்ப,அதிசய, மூலிகைகள்

கொல்லிமலை கலிங்கம் ஓலைச்சுவடி

இரசவாத,காயகற்ப,அதிசய, மூலிகைகள் ஆய்வு -அடையாளம் செய்முறை   விபரம் -பாகம்-1





கொல்லிமலை கலிங்கம் ஓலைச்சுவடி

இரசவாத,காயகற்ப,அதிசய, மூலிகைகள் ஆய்வு -அடையாளம் செய்முறை   விபரம் -பாகம்-1



சித்தர்கள் தங்கள் இறை ஞானத்தால் கண்டறிந்தவைகளை தங்களின் சீடர்களும்,உலக மக்கள் அனைவரும் பயன் பெரும் வகையில் ஓலைச்சுவடிகளில் பதிவு செய்துள்ளனர். இவைகளில்    பல வழி வழியாக தொன்று தொட்டு வரும் பாரம்பரிய சித்த மருத்துவர்களிடமும்,ஆன்மீக மடாலயங்களிலும், ஜோதிடர்களிடமும்,சித்தர் கலை ஆய்வாளர்களிடமும் இரகசியமாக இருந்த சுவடிகளில் பல சரியான முறையில் பராமரிக்காமல் அழிந்து போனது போக இன்றும் ஏராளமான ஓலைச்சுவடிகள் பலரிடம் உள்ளன.


அவைகளில் ஒன்றுதான் "கொல்லிமலை கலிங்கம்" என்னும் பெயருடையது, இந்த ஓலைச்சுவடி சேலம் மாவட்டத்தைச்சேர்ந்த "பெருமாள் சேர்வை"  என்ற பாரம்பரிய  சித்த வைத்தியரிடம் இருந்து பெறப்பட்டது. இதில் கொல்லிமலையில் கிடைக்கக் கூடிய பல அரிய மூலிகைகளின் இருப்பிடம், அவைகளை இரசவாதம்,காயகற்பத்திற்க்கு எப்படி பயன் படுத்தலாம் என்ற இரகசிய செய்முறை விளக்கங்களும் விபரமாக கூறப்பட்டுள்ளது.


இந்தசுவடியில் உள்ளவைகளை சித்தமருத்துவர்களுக்கும், சித்தர்கலை ஆய்வாளர் களுக்கும் பயன் பெரும் விதத்தில் எளிய முறையில் பதிவு செய்கின்றேன். இதில் காணப்படும் விபரங்கள் பல நமது அறிவுக்கு எட்டாதவையாக உள்ளன.


"கொல்லி" என்பது சேர மன்னன் ஆட்சி செய்த மலைகளில் ஒன்று."கலிங்கம்" என்ற சொல் இம்மலையில் உள்ள ஊர் ஒன்றை குறிக்கும்.இக் கலிங்கத்திற்கு வடக்கே ஒரு பரந்த பாறை உண்டு.இந்த பாறையில் நின்று மேற்கு திரும்பி ஒரு நாழிகை தூரம் நடந்து செல்ல ஊசிக்கல்,நெரிக்கல் நிறைந்திருக்கும்.
அங்கு "அழு கண்ணி" உண்டு அதனுடைய இலை சன்னமாயும்,பூ மஞ்சள் நிறமாகவும் எந்நேரமும் நீர் கசிந்து கொண்டு இருக்கும்.அதன் காய் கெட்டியாய் இருக்கும்.

அதற்க்கு அடுத்த மேல் புறத்தில் "தொழு கண்ணி" உண்டு.இதன் இலை நீண்டதாய் பசுமையாய் இருக்கும்.சூரியன் திரும்பும் திசையில் திரும்பும்,புத்துளிர் கருப்பாய் இருக்கும். இலை வெள்ளி போலும் பூ மை போல் இருக்கும்.

ஒரு கரண்டியில் மூன்று வராகன் எடை பாதரசம் விட்டுஅழு கண்ணியும், தொழு கண்ணியும், இடித்து  பிழிந்த சாற்றை விட்டு சுருக்கு கொடுக்க இரசம் கட்டி மணியாகும் (இரசமணி) இதனுடன் கெந்தியைச்சேர்த்து உருக்க செம்பாகும்.இதை வெள்ளியுடன் சேர்த்து உருக்க பொன் மாற்றாகும்.

அழுகண்ணியும் ,தொழுகண்ணியும் சாபம் நீக்கி பறித்து நிழலில் காய வைத்து இடித்து சூரணம் செய்து வெறுகடி அளவு மலைத்தேனில் குழைத்து எந்த சப்தமும் இல்லாத அமைதியான இடத்தில் இருந்து   ஒரு மண்டலம் உண்ண நரை, திரை, மாறும். இரு மண்டலம் உண்ண முன்னூறு வருடம் இருப்பான். ஆறு மாத காலம் உண்ண அனேக காலம் இருப்பான். 

மேலே சொல்லிய பாறையில் அமாவாசை இரவில் இருந்து  தென் மேற்கு மூலையில் பார்த்தால்   "ஜோதிவிருட்சம்" தெரியும் இதன் பட்டையை கல் கொண்டு தட்டி எடுத்து வந்து எருமைப்பாலில் ஊரப்போட்டு பருத்தி விதைப்பிரமாணம் கந்தகம் கூட்டி இருபத்தோரு நாள் அரைத்து தேற்றான் விதைஅளவு உருண்டை செய்து நிழலில் உலர்த்தி, காலை, மாலை பசுவின் பாலில் அருந்த காயசித்திஉண்டாகி அனேக அனேக காலம் வாழ்வான்.

அந்த பர்வதத்திற்குதென் மேற்கு திசையிலிருந்து வடகிழக்கு திசை நோக்கி ஒரு ஆறு ஓடும் .அதன் ஓரத்தில் "எருமைக் கணை விருட்சம்"உண்டு அந்த மரத்தை சுற்றி வந்து குத்தினால் பால் வடியும்.அந்த பாலுடன் தேன் கலந்து உட்கொள்ள மூர்ச்சையாய் விடும். மூன்றே முக்கால் நாழிகை (90-நிமிடம்) அப்படியே விடவும்.பிறகு பசும்பாலுடன் தேன் கலந்து அவன் வாயில் ஊற்றிக்கொண்டு இருக்க அப்பால் எழுந்திருப்பான்.நரை, திரை மாறி   காயசித்தியாகி அனேககாலம் இருப்பான்.

இந்த ஓலைச்சுவடியில் "சதுரகிரி மலையில்" உள்ள அபூர்வ மூலிகைகள் பற்றிய விபரம் ஏராளமாக உள்ளது. அதை பாகம்-2,ல் தொடர்வோம் 


நன்றி !
இமயகிரி சித்தர்...   
சித்தர் வேதா குருகுலம் - தென் இந்தியா
www.siddharprapanjam.org 
cell no :09865430235 - 08695455549  
        

No comments:

பதிவுகளின் வகைகள்