பருவகால நோயாக மாறிய வாந்தி, பேதியும். எளிமையாக மீண்டு வர, அனுபவ சித்தா மூலிகை மருந்துகளும் – Vomiting – Diarrhea
நாம் வாழும் பூமியில் இயற்கையாய் நடைபெற
வேண்டிய பருவ காலங்களில் வெயில், காற்று, மழை,பனி போன்றவைகள் முறையாக நடைபெறாமல் மனிதனின் சுயநலத்தினாலும், பேராசையினாலும் இயற்கை வளங்கள் அளிக்கப்படுவதால் பருவங்கள் முறைதவறி நடைபெறுகின்றது.இதனால்
மனிதர்களிடமும், விலங்குகளிடமும் புதுவிதமான வியாதிகள் தோன்று கின்றன.
இதில் குறிப்பாக கோடைகாலங்களில் மட்டும்
மனிதர்களை பெரும் பான்மையாக வாட்டி வதைக்கும் நோய்களான வியர்க்குரு, அக்கி, அம்மை,
கொப்புளம், விடாத சுரம், சிக்குன்குனியா, டெங்கு சுரம், மலேரியா போன்றவைகளினால் மக்கள்
பெரிதும் பாதிப்படைகின்றனர். இது போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கும், நோய்களிலிருந்து
எளிதில் மீண்டுவரவும் மூலிகை மருந்துகளும், சித்த மருந்துகளும் பெரிதும்
உதவுகின்றது.என்பது காலமறிந்த உண்மை.
சென்ற 2006,ம் வருடத்தில் தமிழக மக்களை பெரிதும்
பாதிப்புக்குள் ளாக்கிய சிக்குன்குனியா என்னும் மூட்டுவாத சுரத்தைப் போக்க 9,வகை யான மூலிகைகள் கலந்த சித்த மருத்துவமுறை
சூரணமான “நிலவேம்பு குடிநீர்” பெரிதும் உதவியது.
இதனை உணர்ந்த நம் தமிழகஅரசும், நிலவேம்பு
குடிநீரைப்பற்றி தொலைகாட்சி வாயிலாகவும், அரசுமருத்துவமனைகள் மூலமாகவும். மக்களிடையே மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதன்
மூலமாக சிக்குன்குனியா நோயினால் பாதித்த பல்லாயிரக்கணக்கான மக்கள் நிலவேம்பு
குடிநீர் கசாயத்தினால் மிக எளிதாக மீண்டு வந்தனர்.
இதேபோல் 2012,ம் ஆண்டு மக்களை பெரிதும்
பாதிப்புக்குள்ளாக்கிய உயிர்க்கொல்லி நோயான டெங்கு காய்ச்சல் நோய்க்கு பப்பாளி
இலைச்சாறு மிகப்பெரிய அளவில் உதவியது.இதன் மூலம் டெங்கு சுரத்தால் பாதித்த பல்லாயிரக்கணக்கானவர்கள்
மிக எளிதில் குணமடைந்தனர்.பப்பாளி இலைச்சாறு பற்றிய உண்மைகளை 2012,ம் ஆண்டில் நமது “சித்தர் பிரபஞ்சம்” வலைப்பூவில் மிக விபரமாக 2,பாகமாக
வெளியிட்டிருந்தோம்.
தற்போது 2017,ம் வருடத்தில் மழைநீர்
சரிவர பெய்யாததால் கோடைகால நோயாக வாந்தி, பேதி, காய்ச்சல் உருவெடுத்துள்ளது.தமிழகத்தின்
பல்வேறு மாவட்டங்களிலும் இதன் பாதிப்பு பரவலாக உள்ளது.
இன்றைய சூழலில் வாந்தி பேதியினால் பாதித்த
நபர்களுக்கு உண்ட உணவுகள் சீரணமாகாமல், அஜீரணமாக மாறி [Food Poison] உணவு நஞ்சாக மாறி
வாந்தி, பேதி, காய்ச்சல் உண்டாவதாக மருத்துவர்கள் நினைக்கின்றனர்.ஆனால் உண்மை
அதுவல்ல. இது பருவகால சூழலால் ஏற்படும் நோய் என்பதை அனைவரும் உணரவில்லை என்பதே
உண்மை.கோடைகால வெப்பத்தினால் உடலில் வாத, பித்த, கபம் என்ற மூன்று நாடிநிலைகளில்
ஏற்படும் மாற்றங்களினால் வாந்தி, பேதி, காய்ச்சல் உண்டாகின்றது.
வாந்தி, பேதி, காய்ச்சலை குணமாக்கும் அனுபவ
சித்த மருத்துவ முறைகள் :
வாந்தியை நிறுத்தும் மருந்து :
மயில் இறகை நெருப்பில் சுட்டு கருக்கி
திரிகடி அளவு எடுத்து தேன் ஒரு ஸ்பூன் அளவு இரண்டையும் குழைத்து 3,வேளை சாப்பிடவும்.
வாந்தி வருவது நிற்கும். அல்லது நாட்டுமருந்து கடைகள் மற்றும் சித்தா மருந்து
கடைகளில் “மயிலிரகாதி
சூரணம்” என்ற பெயரில் சூரணம் கிடைக்கும்.இதனை கால் டீஸ்பூன் அளவு எடுத்து தேன் ஒரு
ஸ்பூன் அளவு இரண்டையும் குழைத்து சாப்பிடவும். இது போல் மூன்று வேளை சாப்பிட
வாந்தி வருவது நிற்கும்.
வாயிற்று கோளாறை சரி செய்ய : Stomach Infection
விரலி மஞ்சள் - ஒரு துண்டு அளவு [ 2, இன்ச்
அளவு]
ஓமம் - ஒரு
டீஸ்பூன் அளவு
தேன் – 2, டீஸ்பூன் அளவு
விரலி மஞ்சளை எண்ணெய் தீப விளக்கில் காட்டி
எரித்து சுட்டு கரியாக்கவும்.இதனை பொடித்து இதனுடன் ஓமத்தையும் அரைத்து தேனில்
குழைத்து சாப்பிட வயிற்றில் உள்ள உணவு நஞ்சுகள் வெளியேறும்.
இதில் குறிப்பிட்டுள்ள அளவு பெரியவர்களுக்கு.சிறியவர்களுக்கு
இதில் பாதி அளவு கொடுக்கலாம்.
பேதி, கழிச்சல் , வயிற்றோட்டம் குணமாக :
சுண்டை வற்றல் சூரணம் செய்முறை :
உப்பில் ஊற வைக்காத சுண்டைவற்றல், ஓமம், வெந்தயம், நெல்லிவற்றல், மாங்கொட்டை பருப்பு, கருவேப்பிலை,
மாதுளை ஓடு, இந்த 7,வகையும் சம அளவில்
எடுத்து இளம் வறுப்பாக வறுத்து இடித்து தூள் செய்யவும்.
இதனை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து ஒரு தம்ளர்
மோரில் கலந்து காலை, மாலை இரண்டு வேளை குடித்துவர பேதி, செரியாக் கழிச்சல் குணமாகும்.
வாந்தி பேதியினால் உண்டாகும் காய்ச்சலுக்கு :
நிலவேம்பு குடிநீர் சூரணம் ஒரு டீஸ்பூன் அளவு
எடுத்து, இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி காய்ச்சி அரை தம்ளர் அளவு கசாயம்
வற்றியவுடன் வடிகட்டி குடிக்கவும்.இது போல் ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்துவர
அனைத்து வகையான வைரஸ் காய்ச்சலும் குணமாகும்.
கவனிக்க :
நிலவேம்பு குடிநீர் சூரணம் என்பது நிலவேம்பு,
வெட்டிவேர், சுக்கு, மிளகு, கோரைக்கிழங்கு, பேய்ப்புடல், விலாமிச்சைவேர், சந்தனத் தூள்,
பற்படாகம் என்ற ஒன்பது வகை மூலிகை மருந்துகள் ஒன்று சேர்ந்தவை ஆகும். [ தனி நிலவேம்பு பொடி மட்டும் அல்ல ]
2006,ம் வருடத்தில் “மதுரை
சித்த வைத்திய சங்கத்தில்” மேற்கண்ட நிலவேம்பு குடிநீர் செய்முறையில் குறிப்பிடும் ஒன்பது
வகை மூலிகை மருந்துகளுடன் பாரம்பரிய சித்த
மருத்துவர்களின் அனுபவ முறையாக மேலும் இரண்டு முக்கியமான மூலிகைகள் சேர்த்து நோயாளர்களுக்கு கொடுத்தோம். தினமும்
600,லிருந்து 700,பேர் வரை மருந்துகள் வாங்கிச்
செல்வார்கள். அனைவரும் மூன்றே நாட்களில்
ஆறு வேளை மருந்தில் சிக்குன் குனியா நோயிலிருந்து பூரணமாக குணமடைந்தனர்.என்பது
குறிப்பிடத்த க்கது.
நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்
அகத்தியர் குருகுலம் யோக ஞான பீடம்
அகத்தியர் புரம் – [ சஞ்சீவிமலை ]
சிறுமலை புதூர், சிறுமலை,
திண்டுக்கல் – 624003
தமிழ்நாடு – இந்தியா
சித்தர் வேதா குருகுலம்
22,புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் – P.O
திருச்சி – 620006
Cell : 9865430235 – 9095590855 – 9655688786 – 8695455549
Web site : www.siddharprapanjam.org
Mail : siddharprapanjam@gmail.com
Face book : imayagiri siddhar
No comments:
Post a Comment