இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Wednesday, 3 July 2013

வெற்றிலையின் மகத்துவம் மற்றும் நன்மைகள் - Betel Areca Nut

வெற்றிலையின் மகத்துவம் மற்றும் நன்மைகள் - Betel Areca Nut 




வெற்றிலையின் மகத்துவம் மற்றும் நன்மைகள் - Betel Areca Nut 

[ சித்தர்கள் கண்டறிந்த நோயில்லா வாழ்வு நெறிமுறைகள் பாகம் - 4 ]


பொதுவாக நமது இந்துமத கலாச்சார பழக்க வழக்கங்களில் அனைத்து காரியங்க ளிலும் முன்னிலை வகிக்கும் இன்றியமையாத ஒரு மங்கள பொருட்கள்தான்  வெற்றிலை, பாக்கு ஆகும்.வெற்றிலையில் ஐந்து தெய்வங்கள் உறைந்துள்ளன.

வெற்றிலையின் நுனியில் மூதேவியும் 
வெற்றிலையின் காம்பில் மகாலட்சுமியும் 
வெற்றிலையின் நரம்பில் பிரம்மாவும் 
வெற்றிலையின் முன் பகுதியில் சிவனும் 
வெற்றிலையின் பின் பகுதியில் சக்தியும் 
என ஐம்பெரும் தெய்வங்கள் உறைந்துள்ளனர்.

எனவே வெற்றிலை போடும்போது நுனியையும்,காம்பையும், நரம்பையும் நீக்கி விட்டு சுண்ணாம்பு தடவி போடுதல் நன்று.   

40 - வயதிற்கு மேல் மதிய உணவிற்குப் பின் வெற்றிலை,பாக்கு சேர்தது உண்ணுதல் மிகவும் அவசியம் ஆகும்.ஏனென்றால் இந்த வயதிற்குப் பிறகு செரிமான சக்திகள் குறைய தொடங்கும்.

நாம் உண்ணும் உணவு முறையாக செரிக்கப் பட்டு சத்துக்கள் உடலில் முழுமை யாய் சேருவதற்கும், உடலின் அனைத்து எலும்புகளுக்கு தேவையான 
சுண்ணாம்பு [Calcium] சத்தை சமன் செய்யவும் வெற்றிலை, பாக்கு போடுதல் மிகவும் தேவை யாகும்.

வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும்  நிறைந்துள்ளது.  இதில் கால்சியம், கரோட்டின்,  தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது.கலோரி அளவு 44.

தற்போதைய  ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.   வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல்  நீங்கும்.  நன்கு பசி உண்டாகும்.  வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.


வெற்றிலைக்கு முன்னம் பெறும் பாக்கை வாயிலிட்டால்
குற்றமுறும் உறவோர் கூட்டம்போம்-வெற்றிலையை
முன்னிட்டுப் பாக்கருந்த மூதறிவோர் தம் மார்பின்
மன்னிட்டு வாழும் பூ மாது..


வெற்றிலை, பாக்கு போடும்போது முதலில் பாக்கை மட்டும் போடக் கூடாது.இது குற்றமாகும்.பாக்கை மட்டும் வாயிலிட்டு மென்று உமிழ்நீரை விழுங்கும் போது இதன் துவர்ப்பினால் கழுத்துக் குழல் சுருங்கி நெஞ்சு அடைக்கும்.மயக்கம், மூர்ச்சை அடைய ஏதுவாகும். மேலும் சொந்த பந்த உறவினர்கள் பிரிந்து விடுவர் என சாஸ்திர விதிகள் கூறுகிறது.அதனால் முதலில் வெற்றிலையை மென்று பின்பு பாக்கை வாயிலிட்டு மெல்ல மகா விஷ்ணுவின் இடது மார்பில் வாழும் பூமகள் மகாலட்சுமியின் அருள் கிட்டும்.


அடைக்காய் தின்பதில் ஊறுமுதல் நீர் நஞ்சாம் அதி பித்தம்  
இரண்டாவதூறு நீரே கடையமிர்தம் மூன்றாவதூறு நீர் தான்
கனமதுர  நான்காவதூறு மந்நீர் மடையெனவே ஐந்தாறிற்
சுரந்துள் ஊறி வருநீர் களைச் சுகித்து தடையுருப் பித்தமொடு
மந்த நோயும் தளர்பாண்டு நோயும் உண்டாம் தரம் சொன்னோம்.

வெற்றிலை,பாக்கு,சுண்ணாம்பு சேர்த்து உண்ணும் போது முதலில் வாயில் ஊறும் உமிழ்நீர் நஞ்சாகும் இதனை உமிழ்ந்துவிட [துப்பி விட]வேண்டும். இரண்டாவது மெல்லும் போது ஊறும் உமிழ்நீர் அதிக பித்தமாகும். இதனையும்  உமிழ்ந்து விட வேண்டும்.மூன்றாவது மெல்லும் போது வாயில் ஊறும் உமிழ்நீர் அமிர்தமாகும். இதனை மட்டும் விழுங்க வேண்டும். நான்காவது ஊறும் உமிழ்நீர் அதிக இனிப்பாக இருக்கும் இதனை விழுங்கலாம்.இதன் பிறகு ஊறும் உமிழ்நீரை விழுங்கக்கூடாது அதனால் மந்தம்,பித்தம்,பாண்டு போன்ற நோய் உண்டாகும்.


வெற்றிலைக்கு 
நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு.  பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால் இதனை  நாக இலை என்றும் அழைக்கின்றனர். 


நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி - T.N 
mail :siddharprapanjam@gmail.com
cell : 9865430235 - 8695455549      



3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வீட்டில் பெரியவர்கள் இதே சொல்வார்கள்... பயன் தரும் விளக்கத்திற்கு நன்றி...

jana said...

iya vetrilail karupu matrum vellai enrdru ulladhu ethil ethu nalladhu

Unknown said...

பிரம்மச்சாரி வெற்றிலை போடலாமா?

பதிவுகளின் வகைகள்