இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Thursday, 7 November 2013

இறைவன் நுழைந்த அதிசய குகை வீடியோ - சுருளிமலை அதிசயம் பாகம் - 3 - God Shiva Cave - Surulimalai [ Exclusive Video ]

இறைவன் நுழைந்த அதிசய குகை வீடியோ - சுருளிமலை அதிசயம் பாகம் - 3 God Shiva Cave - Surulimalai [ Exclusive Video ]




சித்தர்கள் வாழும் புண்ணிய தலங்களை தரிசனம் செய்யவும், அதிசய மூலிகைகளை கண்டறிந்து ஆய்வு செய்யவும் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான சுருளிமலையில் பயணம் மேற்கொண்ட போது பதிவு செய்த பிரத்யேக [ வீடியோ ]ஒளிப்பதிவு இது.

சுருளிமலை என்பது இந்தியாவில் புனிதமும்,தெய்வீகமும் வாய்ந்த பல்வேறு மலைகளில் வேறுபட்டு ஏராளமான தெய்வீக அமானுஷ்ய அதிசயங்களை தன்னகத்தே கொண்ட ஒரு அற்புத மலையாகும்.

நமது சித்தர் பிரபஞ்சம் இணைய தளத்தில் முன்பே சுருளிமலை பற்றிய அதிசய விபரங்களை இரண்டு பதிவுகள் செய்துள்ளோம்.    



இந்த இரண்டு பாகங்களை படித்து வியந்த ஏராளமான வாசகர்கள்  நன்றியும், பாராட்டுக்களும் தெரிவித்ததுடன் அடுத்த பாகம்  எப்போது என கேட்டு வந்தனர்.அதன் தொடர்ச்சி இப்போது 3 - வது பாகமாக ஒளிப்பதிவுடன்.  

மேற்கண்ட இரண்டு பதிவுகளில் குறிப்பிட்ட குகைகள் இரண்டும் ஒன்றுதான்.இந்த குகையில் ஆதியில் இமயகிரி சித்தர் தவம் செய்த போது இறைவன் சிவ பெருமான் குகையின் உள்ளே சென்று அவருக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்துள்ளார்.இந்தியாவில் வேறு எந்த ஒரு மலைகளின் குகைகளில் இல்லாத சிறப்பு இந்த குகைக்கு மட்டுமே உண்டு. 

தெய்வீக மகத்துவம் மிக்க இந்த அதிசய குகையின் பிரத்தியேக ஒளிப்பதிவு [ வீடியோ காட்சி ] இது.இணைய தளங்களில் முதல் முறையாக நமது சித்தர் பிரபஞ்சம் தளத்தில் வெளியிடுகின் றோம்.   

சுருளிமலை என்னும் இந்த தெய்வீக மலையில்தான் நான் குருகுல  கல்வியாக சித்தர் கலைகளின் அதீத இரகசியங்களை கற்றதும், தேர்ச்சி பெற்றதும்,சித்தர்களை நேரில் தரிசனம் செய்ததும், எனது சித்தர் நிலை மெய் குருவால் கைலாசநாதர் குகையின் உள்ளே தீட்சையின் போது எமக்கு இமயகிரி சித்தர் என்னும் பெயர் நாமம் சூட்டப்பட்டதும் இங்குதான்.

குறிப்பு : இந்த வீடியோ பதிவு செய்த  போது சப்த கன்னிமார் குகை பதிவின் போது அமானுஷ்யமாக கொலுசு சப்தம் கேட்கிறது. நன்கு கவனித்துப் பாருங்கள்.சப்தம் கேட்கும். இந்த பதிவின் போது அங்கு நான்கு ஆண்கள் மட்டுமே இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Youtube Video Link - http://youtu.be/T_tRqwibHxg

சுருளிமலை அதிசயங்கள் பாகம் - 4 -ல் தொடரும்.

நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி - T.N 
Cell No : 9865430235 - 8695455549

Friday, 6 September 2013

அகத்தியர் வனம் - ஜீவஜோதி மூலிகை விளக்கு எரியும் அதிசயம் - Jeeva jothi Herbal

அகத்தியர் வனம் - ஜீவஜோதி மூலிகை விளக்கு எரியும் அதிசயம் - Jeeva jothi Herbal 



அகத்தியர் வனம் - ஜீவஜோதி மூலிகை விளக்கு எரியும் அதிசயம் - Jeeva jothi Herbal 

பண்டைய காலங்களில்  சித்தர்கள், மலைகளிலும், காடுகளிலும் குகை களில், ஆசிரமங்களில் தவம் செய்து வாழ்ந்து வரும் போது இரவு நேரங்களில் விளக்கு,வெளிச்சம் தேவைப்படும் போது மூலிகைகளைப் பயன்படுத்தி விளக்கு எரித்துள்ளனர்.

ஜீவஜோதி மூலிகை என்னும் ஒரு அபூர்வ மூலிகையினை பறித்து ஆமணக்கு விதைகளை பாறைகளில் வைத்து கற்களைக் கொண்டு இடித்து நசுக்கும் போது அதிலிருந்து எண்ணை கசியும்.அதில் ஜீவஜோதி மூலிகையை தோய்த்து எரிக்க அது பஞ்சு திரி போல் அழகாக எரிந்து இரவு முழுதும் வெளிச்சம் கொடுக்கும்.இம் மூலிகையின் வாசனையினால் எந்த ஒரு விஷ ஜந்துக்களும் அருகில் வராது.

இதன் செயல் விளக்கம் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள சஞ்சீவி மலையின் ஒரு பகுதியான சிறுமலையில் அகத்தியர் பெருமான் தனது சீடர் தேரையர் உடன் தவம் செய்த புனித தலமான வெள்ளிமலையில் அகத்தியர் வனத்தில் பதிவு செய்தது.

இந்த வீடியோ பதிவில் அகத்தியர் பெருமான் தனது சீடர் தேரையரு டன் தவம் செய்யும் [நிஷ்ட்டையில் அமர்ந்த] திருக் கோலத்தில் காட்சியளிக்கின்றார். 

அன்று சித்தர்களின் பயன்பாட்டில் இருந்த அந்த அதிசய மூலிகை விளக்காக எரியும் செயல் விளக்கம் நமது சித்தர் பிரபஞ்சம் இணைய தளத்தில் காணொளியாக உங்கள் பார்வைக்கு...

ஜீவஜோதி மூலிகை என்னும் இந்த அபூர்வ மூலிகையினை வீடுகளிலும், கடைகளிலும், வியாபார நிறுவனங்களிலும் காலை,மாலையில் அரைமணி நேரம் விளக்காக எரித்துவர கிரக தோஷம், வாஸ்து தோஷம், எதிரிகளின் கண்பார்வை, திருஷ்டி,ஏவல் ,பில்லி, சூன்யம் போன்றவை நீங்கி குடும்ப விருத்தி,தொழில் விருத்தி உண்டாகும்.


ஜீவஜோதி மூலிகையின் செயல் விளக்கம் காணொளி இணைப்பு இதனை கிளிக் செய்யவும்.   http://youtu.be/Te4vcSElGVg



நன்றி !
இமயகிரி சித்தர்...
Siddhar Vedha Gurukulam – Trichy – T.N – INDIA
cell : 9865430235 - 8695455549  

     

 vvvvvv

Friday, 19 July 2013

இரண்டு முக ருத்ராட்சம் சுழலும் செயல் விளக்கம் - Original Two Face Rudraksham

இரண்டு முக ருத்ராட்சம் சுழலும் செயல் விளக்கம் - Original Two Face Rudraksham 






இரண்டு முக ருத்ராட்சம் சுழலும் செயல் விளக்கம் - Original Two Face Rudraksham 

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் எமது மூலிகைகள் ஆய்வு மற்றும் ஆன்மீக பயணத்தின் போது மூலிகை சாப நிவர்த்தி விதிகளின் படி சேகரிக்கப்பட்ட இரண்டு முக ருத்ராட்சம்.

இவை உண்மையான சக்தி கொண்ட ருத்ராட்சம் தானா என பரிசோதனை செய்ய இரண்டு செம்பு காசுகளின் நடுவில் வைக்க தானாகவே சுழலுகின் றது.

அதன் செயல் விளக்கம் மேலே உள்ள வீடியோவில் உள்ளது.

அதன் youtube இணைப்பு கிளிக் செய்யவும் : http://youtu.be/JG74gmf2u30

ருத்ராட்சம் மகிமைகளும் அதன் பயன்களும் அடுத்த பதிவில் வெளியிடு கின்றோம்.


நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி 
www.siddharprapanjam.org
siddharprapanjam@gmail.com
cell : 9865430235 - 8695455549    


Wednesday, 3 July 2013

வெற்றிலையின் மகத்துவம் மற்றும் நன்மைகள் - Betel Areca Nut

வெற்றிலையின் மகத்துவம் மற்றும் நன்மைகள் - Betel Areca Nut 




வெற்றிலையின் மகத்துவம் மற்றும் நன்மைகள் - Betel Areca Nut 

[ சித்தர்கள் கண்டறிந்த நோயில்லா வாழ்வு நெறிமுறைகள் பாகம் - 4 ]


பொதுவாக நமது இந்துமத கலாச்சார பழக்க வழக்கங்களில் அனைத்து காரியங்க ளிலும் முன்னிலை வகிக்கும் இன்றியமையாத ஒரு மங்கள பொருட்கள்தான்  வெற்றிலை, பாக்கு ஆகும்.வெற்றிலையில் ஐந்து தெய்வங்கள் உறைந்துள்ளன.

வெற்றிலையின் நுனியில் மூதேவியும் 
வெற்றிலையின் காம்பில் மகாலட்சுமியும் 
வெற்றிலையின் நரம்பில் பிரம்மாவும் 
வெற்றிலையின் முன் பகுதியில் சிவனும் 
வெற்றிலையின் பின் பகுதியில் சக்தியும் 
என ஐம்பெரும் தெய்வங்கள் உறைந்துள்ளனர்.

எனவே வெற்றிலை போடும்போது நுனியையும்,காம்பையும், நரம்பையும் நீக்கி விட்டு சுண்ணாம்பு தடவி போடுதல் நன்று.   

40 - வயதிற்கு மேல் மதிய உணவிற்குப் பின் வெற்றிலை,பாக்கு சேர்தது உண்ணுதல் மிகவும் அவசியம் ஆகும்.ஏனென்றால் இந்த வயதிற்குப் பிறகு செரிமான சக்திகள் குறைய தொடங்கும்.

நாம் உண்ணும் உணவு முறையாக செரிக்கப் பட்டு சத்துக்கள் உடலில் முழுமை யாய் சேருவதற்கும், உடலின் அனைத்து எலும்புகளுக்கு தேவையான 
சுண்ணாம்பு [Calcium] சத்தை சமன் செய்யவும் வெற்றிலை, பாக்கு போடுதல் மிகவும் தேவை யாகும்.

வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும்  நிறைந்துள்ளது.  இதில் கால்சியம், கரோட்டின்,  தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது.கலோரி அளவு 44.

தற்போதைய  ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.   வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல்  நீங்கும்.  நன்கு பசி உண்டாகும்.  வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.


வெற்றிலைக்கு முன்னம் பெறும் பாக்கை வாயிலிட்டால்
குற்றமுறும் உறவோர் கூட்டம்போம்-வெற்றிலையை
முன்னிட்டுப் பாக்கருந்த மூதறிவோர் தம் மார்பின்
மன்னிட்டு வாழும் பூ மாது..


வெற்றிலை, பாக்கு போடும்போது முதலில் பாக்கை மட்டும் போடக் கூடாது.இது குற்றமாகும்.பாக்கை மட்டும் வாயிலிட்டு மென்று உமிழ்நீரை விழுங்கும் போது இதன் துவர்ப்பினால் கழுத்துக் குழல் சுருங்கி நெஞ்சு அடைக்கும்.மயக்கம், மூர்ச்சை அடைய ஏதுவாகும். மேலும் சொந்த பந்த உறவினர்கள் பிரிந்து விடுவர் என சாஸ்திர விதிகள் கூறுகிறது.அதனால் முதலில் வெற்றிலையை மென்று பின்பு பாக்கை வாயிலிட்டு மெல்ல மகா விஷ்ணுவின் இடது மார்பில் வாழும் பூமகள் மகாலட்சுமியின் அருள் கிட்டும்.


அடைக்காய் தின்பதில் ஊறுமுதல் நீர் நஞ்சாம் அதி பித்தம்  
இரண்டாவதூறு நீரே கடையமிர்தம் மூன்றாவதூறு நீர் தான்
கனமதுர  நான்காவதூறு மந்நீர் மடையெனவே ஐந்தாறிற்
சுரந்துள் ஊறி வருநீர் களைச் சுகித்து தடையுருப் பித்தமொடு
மந்த நோயும் தளர்பாண்டு நோயும் உண்டாம் தரம் சொன்னோம்.

வெற்றிலை,பாக்கு,சுண்ணாம்பு சேர்த்து உண்ணும் போது முதலில் வாயில் ஊறும் உமிழ்நீர் நஞ்சாகும் இதனை உமிழ்ந்துவிட [துப்பி விட]வேண்டும். இரண்டாவது மெல்லும் போது ஊறும் உமிழ்நீர் அதிக பித்தமாகும். இதனையும்  உமிழ்ந்து விட வேண்டும்.மூன்றாவது மெல்லும் போது வாயில் ஊறும் உமிழ்நீர் அமிர்தமாகும். இதனை மட்டும் விழுங்க வேண்டும். நான்காவது ஊறும் உமிழ்நீர் அதிக இனிப்பாக இருக்கும் இதனை விழுங்கலாம்.இதன் பிறகு ஊறும் உமிழ்நீரை விழுங்கக்கூடாது அதனால் மந்தம்,பித்தம்,பாண்டு போன்ற நோய் உண்டாகும்.


வெற்றிலைக்கு 
நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு.  பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால் இதனை  நாக இலை என்றும் அழைக்கின்றனர். 


நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி - T.N 
mail :siddharprapanjam@gmail.com
cell : 9865430235 - 8695455549      



Tuesday, 2 July 2013

காலையில் பசும்பால் உண்பதால் வரும் நன்மைகள் - Cow Milk Drinking

காலையில் பசும்பால் உண்பதால் வரும் நன்மைகள் - Cow Milk Drinking 






காலையில் பசும்பால் உண்பதால் வரும் நன்மைகள் - Cow Milk Drinking 

[ சித்தர்கள் கண்டறிந்த நோயில்லா வாழ்வு நெறிமுறைகள் - பாகம் - 3 ] 


தற்போது மேலை நாடுகளில் பசும்பாலை நெருப்பில் வைத்து காய்ச்சாமல் பச்சை பால் உண்ணும் முறை என்பது வேகமாக பரவி வருகின்றது.இதில் ஏராளமான நன்மைகள் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். 

பொதுவாக இன்று நம்மிடையே பால் என்பது பாக்கெட்டுகளில் அடைக்கப் பட்டு இரசாயண முறையில் பதப்படுத்தப்பட்டு நமது தேவைக்கு விற்கப் படுகின்றது. இதில் சில  தீமைகளும் சேர்ந்தே உள்ளது.அதாவது  Pasteurization என்னும் சுத்தி கரிப்பு என்பது குறிப்பிட்ட அளவில் பாலை கொதிக்க வைத்து பாக்டீரியாவை அளிக்கும் முறையாகும்.இம்  முறையால் பாலில் உள்ள Vitamin C - 20% சதவீதம், Vitamin B1 10% சதவீதம் அழிந்து விடுகின்றது. மேலும் பாலில் உடலுக்குத் தேவை யான  நன்மை செய்யும் பாக்டீரியாவும் அழிந்து விடுகின்றது. இதனை உணர்ந்த மேலை நாட்டினர் Pasteurization முறையில் சுத்தி செய்யாத பாலை உண்ண விரும்புகின்றனர்.

ஆனால் இது சுகாதாரத்திற்கு கேடு என அமெரிக்க உணவு மற்றும் நிர்வாகம் FDA  -23 மாநிலங்களில் தடை விதித்துள்ளது.பச்சை பால்  விரும்பிகள்  சங்கம் இதனை எதிர்க்கின்றது.


பச்சை பசும்பால் உண்பதால் வரும் நன்மைகள் பற்றி சித்தர்கள்  பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே கூறியுள்ளனர்.

அப்பான் முகூர்த்தத்து ளைங்கடிக்குள் ளுண்பது 
மிப்பான மனுதர் விழிதாகு மூப்பாயி 
கஞ்சத்தான் காண்டற் கரியனகிலமுன் 
தஞ்சத்தானுண்ட விருந்தாம்.

பசும்பால் கறந்த ஐந்து நாழிகைக்குள் [2- மணி நேரம்]உண்பது நன்று. அவ்வாறு உண்டால் அப் பால் தேவாமிர்தத்துக்கு ஒப்பாகும். ஐந்து  நாழிகைக்கு மேல் உண்டால் கைலாசபதி உண்ட ஆலகால விஷத்திற்கு ஒப்பாகும்.


காலையில் காய்ச்சாத பசும்பால் உண்பதால் வரும் நன்மைகள் 

சூரிய உதய காலத்தில் பச்சை புல் மேய்ந்த ஆரோக்யமான பசுவின் பசும்பால் உண்பதால் கை கால் எரிச்சல், திரேக எரிச்சல், மஞ்சள் காமாலை,பாண்டு,இரத்த பித்தம், மார்பு சளி, போன்ற நோய்கள் தீரும்.தேகம் ஒளிவிடும், தாது புஷ்டி உண்டாகும்,மேலும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மிஞ்சிய வலிமை தரும். பாலை கரந்து சுத்தமான துணியில் 3 முறை வடிகட்டி சூடு ஆறுவதற்கு முன்பு உண்பது மிகவும் உத்தமம்.

சித்த மருத்துவ முறையில் மூலநோய், இரத்த மூலம், மஞ்சள் காமாலை, குடற்புண், தோல் நோய்கள், போன்ற நோய்களை குணப்படுத்த பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மூலிகைகளை அரைத்து காய்ச்சாத பசும்பாலில் கலந்து கொடுத்து இன்றும் குணப்படுத்தி வருகின்றனர்.  



நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி - T.N 
mail :siddharprapanjam@gmail.com
cell : 9865430235 - 8695455549      




  








Thursday, 13 June 2013

சுருளிமலை அதிசயம் பாகம் – 2 - இறைவன் நுழைந்த அதிசயக் குகை – God cave

சுருளிமலை அதிசயம் பாகம் – 2 -இறைவன் நுழைந்த  அதிசயக்  குகை  – God cave




சுருளிமலை அதிசயம் பாகம் – 2 -இறைவன் நுழைந்த  அதிசயக்  குகை  – God cave

சுருளிமலை தேவலோக கிரி கைலாசப் புடவு - இமயகிரி சித்தர்   வனம் 

எம்பெருமான் ஈசனின் இறை அருள் நிறைந்த கைலாயத்தில்  [இமயமலை  கைலாயம்இமயகிரி சித்தர் என்றொருவர்  இருந்தார். அவர்  சிவபெரு மானைத் தினமும்  நேரில் பூசிக்கப்  பெற்றவர்.  அவர் மீது  சிவபெரு மானுக்கு மிகவும் பிரியமுண்டு.

அப்படியிருக்கின்ற காலத்தில் துர்வாச மகரிஷி, கண்ணுவ  மகரிஷி  முதலான ரிஷிகள் சதுரகிரி மலை அடிவாரத்தில் தபோவனம் என்னும் மாவூற்றில் யாகங்கள், எக்கியங்கள் வளர்த்து  இறைவனை  நோக்கித்  தவம்  செய்தார்கள்.

அத் தவத்தைக் கண்டு சிவபெருமான் தவம் செய்த முனிவர்,  ரிஷிகளுக்கு தேவலோக வாழ்வைக் கொடுத்து தாமும்  "மகா லிங்க" சொரூபமாய்  அங்கேயே அமர்ந்திருந்தார்.அந்த சொரூபந்தான் இப்போது இருக்கின்ற  சதுரகிரி மலை மூலவராகிய மகாலிங்கமாகும்.

பின்பு தேவலோக வாழ்வைப் பெற்ற ரிஷிமுனிவர்கள்  மன  மகிழ்வோடு  "ககன குளிகை" இட்டு ஆகாய வெளியில் பறந்து போகும் போது சுருளி  மலையை கடக்கும் போது அங்கு ஏராளமான ரிஷிகளும்முனிவர்களும்,சித்தர்களும் அருந்தவம் செய்து கொண்டிருப்பதையும்அந்த வனத்தின் அழகும்,தேவலோக கானல்களையும்வனப்பூஞ் சோலைகளும்சப்த கன்னிமார்கள் சிவபெருமானுக்கு புஷ்பம் எடுத்துப் போகின்ற நேர்மைகளும், உதகநீர் அங்காங்கு மிகுதியாய் இருப்பதும், அந்த உதக நீரில்   இறங்கிய மனிதர்கள் கல்லாக மாறி இருப்பதும்போன்ற ஏராளமான அதிசயங்கள் நிறைந்த இம் மலையில் தவம் செய்வது  முக்கியம் எனத் தெரிந்து  அங்கு  இறங்கி சில காலம் தவம் செய்து பின்பு கைலாயம் செல்கின்றனர்.

கைலாயத்தில் உள்ளே துர்வாச மகரிஷி,கண்ணுவ மகரிஷி முதலான ரிஷி கள் செல்லும் போது எதிரே இமயகிரி சித்தர் வருகின்றார்ரிஷிகளை  வணங்கி சுவாமி தாங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள் என்று கேட்க அதற்கு  ரிஷிகள் கூறியது நாங்கள் சதுரகிரி தபோவனம் என்னும் மாவூற்றில் அருந் தவம் செய்து இறைவன் சிவபெருமானால் கைலாய வாழ்வைப் பெற்று  இங்கு வருகை யில் சுருளிமலையின் பெருமைகளை அறிந்து அங்கு சில  காலம் தவம் செய்துஇப்போது தான் இங்கு வருகின்றோம் என்றனர்.

இதனைக் கேட்ட இமயகிரி சித்தர் மனம் மகிழ்ந்து உடனே புறப்பட்டு  சுருளிமலைக்கு வந்து அங்கு தவம் செய்யும் ரிஷி,முனிவர்,சித்தர் களைப்  பார்த்து தவம் செய்ய விரும்பி அங்கிருந்த சித்தர்களில் ஒருவரான "பூத நாராயண சித்தரைஅழைத்து மலையில் இருக்கின்ற பூஞ்சோலைகளை கண்டு  மகிழ்ந்து குகை வாசம் செய்வதற்கு புடவு செய்ய  இடம் பார்த்து  ஆற்றோரம்  இருக்கின்ற குண்டு மலையில் தலை மட்டும் நுழையும்  படியாகவும்   உள்ளே விசாலமாகவும்  புடவு செய்து  [குகைகுகைக்கு  முன் பூத நாராயண  சித்தரை காவலிருக்க  வைத்துச் சொன்னதாவது ,

இந்த குகைக்குள் வரவேண்டுமென்ற விருப்பம் உள்ளவர்கள்  தவ சிரேஷ் டர்களாக இருந்தால் மட்டும் உள்ளே நுழைய இடம் கொடுக்கும்.உள்ளே வரலாம்,இவை அல்லாதவர்கள் குகைக்குள்ளே தலையை விட்டால் தலை நுழையாது என்று சொல்லி  குகைக்குள் நுழைந்து தவம் செய்து கொண்டிருக்கும்  காலத்தில்,

கைலாயத்தில் சிவபெருமானார் நம்மை தினந்தோறும் பூசிக்கின்ற  இமயகிரி சித்தரை காணோம் என்று ஞான திருஷ்டியால் பார்க்க அவர்  சுருளி மலையில் தவம் செய்வதை அறிகின்றார். சித்தருக்கு வரம் கொடுக்க  விரும்பி அம்மை உமையவளுடன் இறைவனும் சுருளி மலைக்கு எழுந்தருள்கின்றார்.

சுருளிமலையில் தவம் செய்கின்ற ரிஷிகள்முனிவர்சித்தர்கள்இறைவனை கண்டு தரிசனம் செய்கின்றனர்.அப்போது சிவபெருமான் அவர்களைப் பார்த்து ,அருந்தவ ரிஷி,முனி,சித்தர்களே  உங்கள் தவம் முடிந்தவுடன்  கைலாய  வாழ்வு கொடுப்போம் என்று சொல்லி விட்டு மாயா சொரூபமாய் இமயகிரி சித்தர் இருக்கின்ற குகைக்குள் நுழைந்தார்.

அந்த புடவுக்குள்ளே வந்த சிவபெருமானைக் கண்டு இமயகிரி சித்தர்  மெய் பதறி அடி வணங்கி தெண்டனிட அவரை அழைத்துக் கொண்டு இறைவன்  வெளிவருகின்றார்.

வெளியே வந்த இறைவன் சித்தரிடம் என்ன வரம் வேண்டும்  என்று கேட்க  அவர் சுவாமி அடியேன் இந்த சுருளிமலையில் புடவில் சில காலம் வசிக்க  விரும்புகின்றேன்.ஆகையால் தங்களை யான் கைலா யத்தில் தினமும் பூசித்த  வழக்கப் படி இங்கேயும் பூசிக்கும் வரம் வேண்டும் என்று கேட்க அதற்கு சிவபெருமானும்,அம்மையும் அப்படியே கொடுத்தோம் என வாக்கருளிசுவாமி லிங்க சொரூபமாயும்,  தாய் அம்மை சொரூபமாயும்  அமர்ந்தனர்.
                                                             

அப்போது அங்கிருந்த ரிஷி,முனி,சித்தர்கள் அனைவரும்  பார்த்து  இறைவன் சிவபெருமானே இந்தப் புடவுக்குள் [குகைக்குள்] நுழைந்த மையால்  இந்தப் புடவுக்கு "கைலாசப் புடவு" என்ற பெயருடன் விளங் கட்டும் என்று பெயரிட்டனர். அன்று முதல் இந்தப் புடவு என்ற "கைலாச புடவு"கைலாசநாதர்  குகை" என்ற பெயருடன் இன்று வரை விளங்கு கின்றது
                                                              [ கோரக்கர் மலை வாகடம் ]  


இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லாத சிறப்பு மிக்க இறைவன்  நுழைந்த அதிசயக்குகை இது ஒன்றுதான்நாம் சென்ற பதிவில் குறிப்பிட்ட சித்தர்கள் வாழும் மர்மக்குகை என்ற தலைப்பில் குறிப்பிட்ட  குகையும்   இதுவும் ஒன்றே.மேலும் சுருளிமலையின் நாம் கண்ட நேரடி அதிசய ஆய்வு விபரங்கள் தொட ரும்… 
                                               
                                                நன்றி !  சித்தர் பொக்கிஷம் குழு – blog



எமது இணைப்பு தளமான சித்தர் பொக்கிஷம் இணையதளத்தில்  பதிவு செய்த சுருளிமலையின் அதிசயம் பாகம் - இதனை பார்வையிடாத நமது சித்தர் பிரபஞ்சம் வாசகர்களுக்காக...  



நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி - T.N 
cell : 9865430235 - 8695455549  


   


பதிவுகளின் வகைகள்