அன்புடையீர் !
ஸ்ரீ அகத்தியர் மாமுனிவரின் மரபில் 9,வது முனிவராக அவதரித்த ஸ்ரீ பரபிரம்மா சற்குரு நாத மாமுனிவரின் 100,ம் ஆண்டு மகா குரு
பூஜை பெருவிழா தமிழகத்தின் திருச்சி மாநகரத்தில் திருவானைக்கோவில் தென்புறம்
ரயில்வே மேம்பாலத்தின் மேற்கு புறத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சற்குரு இராஜயோகத் திருமடத்தில்,மன்மத ஆண்டு வைகாசி மாதம் 24,ம் நாள் [ 7 - 6
- 2015 ,ஞாயிற்றுக்கிழமை ] மிகச்சிறப்பாக
நடைபெற உள்ளது.
6 - 6 - 2015,சனிக்கிழமை அன்று மாலை 5, மணி அளவில் ஸ்ரீ பரப்ரம்மா
சற்குரு சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு 100,ம் ஆண்டு மகா குருபூஜை விழா
சிறப்பு மலர் வெளியீடு நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
விழா சிறப்பு மலர் வெளியிடுபவர் : மெய்திரு, இமயகிரி சித்தர் [
Dr.S.நாகராஜ் R.M.P.,
D.S.M.S., பொதுச்செயலாளர் - இந்திய பாரம்பரிய சித்த மருத்துவர்கள்
மற்றும் முப்பு ஆய்வாளர்கள் கூட்டமைப்பு ]
விழா சிறப்பு மலர் பெறுபவர் : திரு சற்குரு மல்லையா சாமி அவர்கள் - எடப்பள்ளி ஆஷ்ரமம்
7 - 6 - 2015 , ஞாயிறு காலை 10,மணி முதல் 12, மணி வரை சித்தி விநாயகப் பெருமானுக்கு
16,வகை அபிஷேக ஆராதனையும்,ஸ்ரீ பரபிரம்மா சற்குரு நாதர் 48,நாட்கள் தவம் இயற்றிய
நிருவிகற்ப சமாதி குகையில் அர்ச்சனையும், ஆராதனையும்
நடைபெறும்.
மதியம் 1,மணி முதல் 4,மணி வரை அடியார்களுக்கும் பக்தர்களுக்கும் உணவு வழங்குதல் நடைபெறும்.,
குறிப்பு : ஸ்ரீ பரபிரம்மா சற்குரு நாதர் 48,நாட்கள் தவம் இயற்றிய நிருவிகற்ப சமாதி குகை இன்று ஒருநாள் மட்டும்
பக்தர்களின் பார்வைக்கு திறக்கப்பட்டு பூஜிக்கப்படும்.என்பது குறிப்பிடத்தக்கது.
அருள்நெறி சார்ந்த அன்பு பெருமக்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு
விழாவினை சிறப்பித்து ஸ்ரீ பரப்ரம்மா சற்குரு சுவாமிகளின் திருவருட்பேற்றினைப் பெற்று
பெருவாழ்வு வாழ வேண்டுகிறோம்.
நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம்
சிவராம் நகர், திருவானைக்கோவில்
திருச்சி - 620005
siddharprapanjam@gmail.com
mobile : 9865430235 - 9095590855