சித்தர்கள் கண்டறிந்த நோயில்லா வாழ்வு நெறிமுறைகள் பாகம் - 1
சித்தர்கள் கண்டறிந்த நோயில்லா வாழ்வு நெறிமுறைகள் பாகம் - 1
சித்தர்கள் தங்கள் ஞானத்தால் கண்டறிந்த பல அரிய கலைகளை
மிக எளிய முறையில் வடிவமைத்து மனிதகுல நலனுக்காக அர்ப்பணித்துள்ளனர்.
அவைகளில் ஒன்றுதான் மனித வாழ்விற்கு மிகவும்
அவசியத் தேவையான, நோய்களே உடலில் தோன்றாமல் என்றும் ஆரோக்கியமாக வாழும் நெறிமுறை இரகசிய விளக்கங்கள்
ஆகும்.
இவைகளை வாழ்க்கையின் நெறிமுறைகளாக போதிக்கும் ஆசான்கள்
இல்லாததால் உலகெங்கும் நோய்களும் ,நோயாளர்களும் பெருகி கடுமையான துன்பங்களுக்கு
ஆட்பட்டு வேதனைகளை அனுபவித்து வருகின்றனர்.நமது பண்டைய கலாச்சார
நெறிமுறைகளை புறக்கணித்ததன் விளைவுதான் இது.
நாம் காலையில் தூங்கி எழுவது
முதல் மீண்டும் படுக்கையில் படுப்பது வரை
நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் ஒரு வாழ்வியல் நெறிமுறை
விளக்கம் உள்ளது.அவைகளை சித்தர்கள் பாடல்கள் வடிவில் அளித்துள்ளனர். அவைகளை ஆராய்ந்து
பார்த்தால் அறிவியல் பூர்வமான அர்த்தங்களை கொண்டதாக இருக்கும்.இவைகளை ஒவ்வொன்றாக
அறிந்து கொள்வோம்.
காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் பார்க்க வேண்டிய விதி
நித்திரை செய்து விழிக்கும் போது முதலில் பார்க்க வேண்டியது தனது
வலது கை,தாமரைப்பூ,தங்கம்,தீபம்,கண்ணாடி,சூரியன், புகையில்லாத நெருப்பு, பணம்,கடல்,வயல்,சிவலிங்கம்,முகில்
சூழ்ந்த மலை,கன்று உடன் பசு, மனைவி, தென்னைமரம்,இவை களில் ஏதாவது
ஒன்றை பார்ப்பது உத்தமம். அன்று முழுதும் வாழ்க்கை சந்தோசமாகவும்,தொட்ட
காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.இது
போல் தினமும் கடை பிடித்து வர குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும்.
பல் துலக்கும் விதி :
வேலுக்குப் பல்லிறுகும் வேம்புக்குப் பல் துலங்கும்
பூலுக்குப் போகம் பொழியுங் காண் ஆலுக்கு
தண்டாமரை யாளும் சார்வாளே நாயுருவி
கண்டால் வசீகரமாங் காண்
இதன் விபரம் :-
கருவேல மர குச்சியில் பல் துலக்கினால் பற்கள்
வலுவாக இறுகும் .
வேப்பமரத்தின் குச்சியில் பல்துலக்கினால் பற்கள்
வெண்மையாய் பளிச்சிடும்.
நீர்ப் பூலா மர குச்சியில்
பல் துலக்கினால் வீரிய விருத்தி (ஆண்மை) ஏற்படும்.
ஆலமர விழுதில் பல் துலக்கினால் லட்சுமி கடாட்சம்
ஏற்ப்படும்.
நாயுருவி வேரினால் பல் துலக்கினால் முகவசீகரம்
ஏற்படும்.
பல் துலக்கக் கூடா விதி :
கல்லு மணலுங் கரியுடனே பாளைகளும்
வல்லதொரு வைக்கோலும் வைத்து நிதம்
பல்லதனை தேய்த்திடு வாராமாயின் சேராளே
சீதேவி வாய்த்திடுவாள் மூதேவி வந்து
இதன் விபரம் :-
செங்கல்மாவு,மணல்,கரி,தென்னம்பாளை,வைக்கோல்,இவைகளால்
தினமும் பல் துலக்குவோரிடத்தில் மகாலட்சுமி
நீங்கி, மூதேவி வந்து சேர்வாள். பொன், பொருள்,நீங்கி
தரித்திரம் வந்து சேரும்.
பாகம் 2 -ல் தொடரும்
நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம்
www.siddharprapanjam.org
cell :09865430235 - 08695455549
No comments:
Post a Comment