இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. "இமயகிரி சித்தரின்" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

Translate

Sunday, 24 March 2013

புனித தீர்த்தம் - punitha theertham - panja pathiram

நோய் தீர்க்கும் புனித தீர்த்தம் செய்முறை விளக்கம் - punitha theertham




நோய் தீர்க்கும் புனித தீர்த்தம் செய்முறை விளக்கம்

இந்தியாவில் ஆன்றோர்கள் புனித ஆலயங்களின் வழிபாடுகள் மூலம் சூட்சுமமாக உடல்நோயும் ,உளநோயும் நீங்கி நலம்பெற வழி வகுத்துள்ளனர்

ஆலயங்களை வலம்வருதல், அங்கங்கள் பூமியில் பட விழுந்து வணங்குதல், அங்கப்பிரதட்சணம் செய்தல், காவடி எடுத்தல், திருமண் இடுதல், திருநீறு , சந்தனம், குங்குமம்அணிதல், திருத்துழாய்(துளசி), வில்வம், பயன்படுத்துதல் போன்ற ஆன்மீக செயல்பாடுகள் அனைத்தும் உடலும்,உள்ளமும் நலம்பெற அமைந்துள்ளன.

ஆலய வழிபாட்டு முறைகளில் தலைசிறந்ததாகப் புனித தீர்த்தம் வழங்குதல் அமைந்துள்ளது.           

வைணவ திருத்தலங்களில் வழங்கும் "துளசி தீர்த்தம்" இரத்தத்தை சுத்தம் செய்வதுடன், உடலில் பிராணசக்தி மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை  அதிகரி த்து உடலை வலுப்படுத்துகின்றது. துளசி தீர்த்தம் தொடர்ந்து அருந்தி வருபவர்களுக்கு கேன்சர் எனப்படும் புற்று நோய் வராது என்பது மருத்துவ உண்மையாகும்.

சைவத்திருத்தலங்களில்  வழங்கும் "வில்வ தீர்த்தம்" குன்மம், வயிற்றுக் கடுப்புமேகவாயுபோன்றவைகளைப்  போக்குகின்றது. அல்சர் எனப்படும் குடல் புண்ணையும்  போக்குகின்றது.

ஆலயங்களில் வழங்கப்படும் மேற்கண்ட இரண்டு தீர்த்தங்களும் முறைப் படி தயார் செய்தால் இம்மருத்துவ குணங்கள் நிச்சயம் உண்டு.

நாம் வீட்டிலேயே செய்து உண்டு பயன்பெறக்கூடிய ஒரு புனித தீர்த்தம் முறையை இப்போது பார்ப்போம்.இப்புனித தீர்த்தம் காய கற்ப சஞ்சீவியைப் போல பற்பல நோய்களை நீக்கி நல்வாழ்வு  அளிக்கும் குணம் கொண்டது.

புனித தீர்த்தம் செய்முறை :

1,ஏலம், - 2,இலவங்கம்,- 3,வால்மிளகு,-4,ஜாதிப்பத்திரி,- 5,பச்சைக் கற்பூரம், இவைகளில் முதல் நான்கும் வகைக்கு ஒரு  பங்கும், பச்சைக் கற்பூரம் கால் பங்கு சேர்க்கவும்.

முதல் நான்கு பொருள்களையும் உலர்த்தி இடித்து பொடித்துக்கொள்ளவும். பிறகு பச்சைக் கற்பூரத்தையும் பொடித்து இதனுடன் கலந்து கொள்ளவும்.  இதனை பாட்டலில் பதனம் செய்து பூஜை அறையில் வைக்கவும்.

இந்த  தீர்த்தப் பொடியை திரிகடி [மூன்று விரல் அளவு] அளவு எடுத்து ஒரு தாமிர தம்ளரில் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு வைத்து மறு நாள்  காலை வெறும் வயிற்றில் பூஜை முடித்தவுடன்  அருந்த சகல நோய்களும் எளிதில் நீங்கி உடல் பலம் பெறும்.

இதனுடன் சைவ வழிபாட்டில் உள்ளவர்கள் வில்வம் சேர்த்து  அருந்தலாம். வைணவ வழி பாட்டில் உள்ளவர்கள்  துளசி சேர்த்து  அருந்தலாம்.   

இருதயம்,இரைப்பை பலம் பெரும்,கண்கள் பற்றிய நோய் யாவும்  நீங்கும், நரம்புத்தளர்ச்சி, சளி, சுவாசகாசம் நீங்கும், இரத்தம்  சுத்தியாகும்,பித்த ரோகங்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய்க்கசப்பு, மூச்சடைப்பு, வயிற்று வலி, கழிச்சல், மார்புவலி, மாரடைப்பு, போன்றவைகள் நீங்கும். இரத்தம் பெருகும் .

இது  உடலைப் பற்றிய நோய்களை நீக்கும் வல்லமை கொண்ட சஞ்சீவி மருந்து முறையாகும்.  இது அனுபவத்தில்  கை கண்ட அரிய முறையாகும்.


நன்றி !
மெய்திரு, இமயகிரி சித்தர்
சித்தர் வேதா குருகுலம்
புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் P.O – திருச்சி D.T - 620006
தமிழ்நாடு – இந்தியா

அகத்தியர் குருகுலம் யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம் , சிறுமலை புதூர்
திண்டுக்கல் – D.T - 624003
தமிழ்நாடு – இந்தியா

செல் :98654302359095590855 - 9655688786





Saturday, 16 March 2013

முப்பூ பற்றிய விளக்கம் - muppu

முப்பூ பற்றிய விளக்கம் - muppu





முப்பூ பற்றிய விளக்கம் 

          சித்தர்கள் தங்கள் ஞானத்தால் கண்டறிந்த கலைகள் ஏராளம் . அவற்றில் உயர்நிலைப்  பிரிவுகளான  மருத்துவம் ,மாந்திரீகம் ,இரசவாதம் , யோகம் ,ஞானம் ,காயகற்பம் போன்றவைகளாகும் 
        
இக்கலைகளை  எளிதில் சித்தி  அடைவதற்கு அதிசய சக்திகளை தன்னகத்தே கொண்ட மெய்பொருள் ஒன்று  இறைவனால் படைக்கப்பட்டு பூமியில்  வைக்கப்பட்டுள்ளதை , சித்தர்கள்  தங்கள்  மெய்யறிவால் இதனை கண்டறிந்து இவற்றின்  மூலமாக  மேற்கண்ட  கலைகளில் வெற்றியடைந்து பூரணத்துவம்  பெற்றனர் .இம் மகத்துவம்  வாய்ந்த  மெய்பொருளே முப்பூ  என்பதாகும் . இதில் ஐந்து வகைகள் உள்ளன.
          
1 -வைத்திய முப்பூ  :-
      அனைத்து சித்த மருந்துகளிலும் பத்தில் ஒரு  பங்கு முப்பூ   சேர்த்து கலந்து கொடுக்கும்போது பல மடங்கு வீரியத்துடன்  செயல்பட்டு  நாட்பட்ட நீடித்த  நோய்களும்  விரைவில்  குணமடையச்  செய்கின்றது . இந்த வைத்திய முப்பூவிலும் இரண்டு  வகை  உண்டு .ஒன்று “சூரண முப்பூ” , இன்னொன்று "வைத்திய குரு முப்பூ"என்பது இதனை பஸ்பம், செந்தூரம், லேகியம், போன்ற  மருந்துகளில் சிறிதுஅளவு மட்டுமே  கலந்து கொடுக்க வேண்டும்.சூரண முப்பூ பற்றிய விளக்கம் ஒரு பதிவாக இடப்பட்டுள்ளது.   

இதில் சொடுக்கி பார்க்கவும் – 
2 -மாந்திரீக முப்பூ :-
     மாந்திரீக அஷ்டகர்மப் பிரயோகங்களில் பயன்படும் மூலிகைகளில், மை வகைகளில், எந்திரங்கள் போன்றவற்றில் மாந்திரீக முப்பூவை ஒரு மிளகு வைத்து மந்திர உச்சாடணங்கள்  செய்யும் போது தெய்வ சக்தி , தேவதை சக்திகள்,மற்றும் பஞ்சபூத சக்திகள் முன்னின்று நாம்  கோரிய  காரியங்கள் , வசியம் , மோகனம் ,தம்பனம் ,போன்ற காரியங்கள் அஷ்ட கர்ம பிரயோகங்களை எளிதில் செய்து முடிக்கும். 
      
3 -வாத முப்பூ :-
       இரசவாத  ஆய்வுகளில்  பயன்படும் செம்பு ,வெள்ளி, பாதரசம், போன்றவைகளில் உள்ள கழிம்புகளை நீக்கி உயர்ந்த   உலோகமான  தங்கமாக  மாற்றும்  வல்லமை கொண்டது. இரசவாத முப்பூ வாகும்.

4 -கற்ப முப்பூ :-
      நமது உடலில் தினமும் பலகோடி செல்கள் தோன்றி,அழிந்து கொண்டுள்ளது.இப்படி அழியும் செல்களை காத்து உடலில் முதுமையை வரவிடாமல் என்றும் இளமையாக வாழ வகை செய்வது "காயகற்ப முப்பூ" வாகும்.மேலும் நோயெதிர்ப்பு செல்களை அதிகரித்து நோய்களே வரவிடாமல் காக்கும் வல்லமை கொண்டது இம் முப்பூவாகும்."ருத்திர முப்பூ"என்பது இந்த வகையை சார்ந்தது ஆகும்.

5 -ஞான முப்பூ :-
    பிரபஞ்ச இரகசிய விதிகளின் உண்மைகளை அறிந்து கொள்ளும் ஆற்றலையும்,பஞ்சபூத சக்திகளை கட்டுப் படுத்தும் வல்லமையும்,எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பேரருள் கொண்ட இறைவனை காணும் ஆற்றலை அளிக்க வல்லது ஞான முப்பூ வாகும்.

   மேற்கண்ட ஐந்து வித முப்பூ பற்றிய ஆய்வுகளை செய்து வரும் ஆய்வாளர்கள் நமது தமிழகத்தில் சிலர் மட்டுமே உள்ளனர். இவர்களில் ஒருவரும் தங்களை வெளியில் அடையாளம் காட்டிக்கொள்ள விரும்புவதில்லை.

   மேற்கண்ட ஐந்து வித முப்பூ செய்வதற்கு வெவ்வேறு வகையான மூலப்பொருள்கள் உள்ளன.மெய்ப்பொருள் என்னும் பிளாசபர் ஸ்டோன் [Philosophers stone] ஒன்று உள்ளது, இவைகளை தக்கதொரு குருவின் துணையுடன் கண்டறிந்து நியம விதிகளின்படி சேகரித்து சித்தர்கள் வழிமுறைப்படி தீட்சைகள் செய்து முடிப்பதே முப்பூ வாகும்,

   முப்பூ பற்றிய ஆய்வுகளை அனைவரும் எளிதாகச் செய்யக்கூடிய ஆய்வுகள் அல்ல.பூர்வஜென்ம விட்டகுறை, தொட்ட குறை உள்ளவர் களுக்கும், இறைவனின் கருணையும்,சித்தர்களின் ஆசியும்,குருவின் அருளும் பூரணமாய் கிடைக்கப் பெற்ற வர்களுக்கு மட்டுமே முப்பூ என்னும் மாயக்கலை சாத்தியமாகும்.


நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி 
www.siddharprapanjam.org
cell :09865430235 - 08695455549       



Thursday, 14 March 2013

வள்ளலார் பெருமான் கூறும் முப்பூ செயல் விளக்கம் -Muppu

வள்ளலார் பெருமான் கூறும் முப்பூ செயல் விளக்கம் -Muppu

சித்தர்கள் நூல்களில் பல இடங்களில் முப்பூ பற்றிய விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் எந்த ஒரு நூலிலும் முப்பூ பற்றிய முழு விபரங்கள் மற்றும் செய்முறை விளக்கங்கள் முழுமையாக பதிவு செய்யப் படவில்லை.இவை அனைத்தும் ஏராளமான பரிபாஷை சொற்களாகவே உள்ளன.

முப்பூ என்பதில் பல வகைகள் உள்ளன.

1 - வைத்திய முப்பூ 
2 - இரசவாத முப்பூ 
3 - ஞான முப்பூ 
4 - காயகற்ப முப்பூ 
5 - மாந்திரீக முப்பூ

போன்ற ஐந்து வகை உள்ளன.ஆனால்  இதில் இரண்டு வகைதான் என வாதிடுவோரும் உண்டு.வைத்திய முப்பூ பற்றிய விபரம் நமது “சித்தர் பிரபஞ்சம்” தளத்தில் முன்பே பதிவு செய்துள்ளோம்.

பொதுவாக முப்பூ பற்றிய ஆய்வுகளை நமது இந்திய சித்தர் பெருமக்கள் மட்டும் ஆய்வு செய்யவில்லை,உலகம் முழுதும் மேலை நாட்டு ஞானிகளும் ஏராளமான ஆய்வுகள் செய்து வெற்றி கண்டுள்ளனர். தமிழகத்தில் இன்றும் பலர் முப்பூ ஆய்வு செய்து வருகின்றனர்.ஆனால் இவர்கள் தங்களைப் பற்றியோ தான் ஆய்வு செய்யும் மூலப்பொருள் பற்றிய இரகசியங்களை வெளியிடுவதில்லை.

இது போன்ற முப்பு  ஆய்வாளர்களையும்,பாரம்பரிய சித்த மருத்துவர் களையும் ஒருங்கிணைத்து திருச்சியில் "இந்திய பாரம்பரிய சித்தமருத்து வர்கள் மற்றும் முப்பூ ஆய்வாளர்கள் கூட்டமைப்பு"எனும் அமைப்பை தொடங்கி கடந்த மூன்று வருடங்களில் 25 –ஆய்வுக்  கருத்தரங்குகள் நடத்தியுள்ளேன்.இக் கருத்தரங்குகளில் ஏராளமான ஆய்வு இரகசியங்கள், மற்றும் சித்த மருத்துவ அனுபவ முறை இரகசியங்கள் பகிர்ந்து கொள்ளப் பட்டது.

மேற்கண்ட முப்பூ வகைகளில் ஒன்றை இப்போது பார்ப்போம் :

நமது இந்துமத புராணங்களில் குறிப்பிடப்படும் ஒரு நிகழ்வு அதில் தேவர்களும்,அசுரர்களும்,இணைந்து சாகாவரம் வேண்டி திருப்பாற்கடல் கடைந்து என்றும் சாகாமல் வாழும் அமிர்தத்தை பெற்றனர்.என்பது ! இதனைப் பற்றி வள்ளலார் பெருமான் தனது "திரு அருட்பா -உரைநடைப் பகுதி" எனும் நூலில் 381 -ம் பக்கத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார்.



                                                                                                   


33. பாற்கடல் கடைந்தது 
திருப்பாற்கடல் கடைந்து அமுதபானம் தேவர்கள் செய்யும் பொருட்டு விஷத்தை ருத்திரர் (சிவபெருமான்)உட்கொண்டார் என்பதற்குப் பொருள் :-திருப்பாற்கடல் என்பது தேங்காய்,அமுதமென்பது அதன் ஜலம்.தேங்காயின் பாலிலுள்ள எண்ணையே விஷம்.மேற்படி எண்ணையாகிய விஷத்தைப் போக்குவது ,முப்பூ வாகிய ருத்திரன்.ஆதலால் தேங்காய்ப் பாலிலுள்ள விஷமாகிய எண்ணையை முப்பூவால் போக்குவது ருத்திரன் விஷம் சாப்பிட்டது.இவ்வாறு அண்டத்திலும்,பிண்டத்திலும்,பெளதிகத்திலும், தாதுக்களிலும் கடல்கள் உள்ளன.

கருப்பஞ்சாற்றுக் கடல் என்பது - கரும்பு 
மதுக்கடல் என்பது - தேன் 




இது போன்ற அமிர்த நீரினை தயார் செய்து சித்தமருந்துகளில் சேர்த்து அரைத்து மருந்துகளை வீரியமாக சக்தி ஏற்றி நீடித்த நாட்பட்ட நோய்களுக்கு அளிக்கும் போது நோயாளர்கள் விரைவில் குணம் பெறுகின்றனர்.மேற்கண்ட வள்ளல் பெருமான் குறிப்பிடுவதை செயல் விளக்கங்களாக பாருங்கள் :





தேங்காயை அரைத்து பிழிந்து வடித்த தேங்காய்ப் பால் 





ருத்திரன் எனப்படும் முப்பூ 



இதன் அளவு ருத்திர முப்பூ தேங்காய் பாலில் போடுவது





தேங்காய் பாலில் உள்ள எண்ணையாகிய விஷம் பிரிந்து எடுத்த அமிர்த நீர்.



தேங்காய் பாலில் உள்ள எண்ணையாகிய விஷம் பிரிந்து எடுத்த அமிர்த நீர். இதுவே சித்தர்கள் நூலில் கூறும் "சுத்த ஜலம்" மேலும் சித்தர் நூல்களில் குறிப்பிடும் “அமுரி நீர்” என்பதுவும் இதற்குப் பொருந்தும். அமுரி என்பது சிறுநீர் அல்ல.

இது போன்ற அமிர்த நீரினை தயார் செய்து சித்தமருந்துகளில் சேர்த்து அரைத்து மருந்துகளை வீரியமாக சக்தி ஏற்றி நீடித்த நாட்பட்ட நோய்களுக்கு அளிக்கும் போது நோயாளர்கள் விரைவில் குணம் பெறுகின்றனர்.


நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி
www.siddharprapanjam.org
cell :09865430235 - 08695455549  


Saturday, 9 March 2013

சித்தர்கள் கண்டறிந்த நோயில்லா வாழ்வு நெறிமுறைகள் பாகம் - 1

சித்தர்கள் கண்டறிந்த நோயில்லா வாழ்வு நெறிமுறைகள் பாகம் - 1





சித்தர்கள் கண்டறிந்த நோயில்லா வாழ்வு நெறிமுறைகள் பாகம் - 1

சித்தர்கள் தங்கள் ஞானத்தால் கண்டறிந்த பல அரிய கலைகளை மிக எளிய முறையில் வடிவமைத்து  மனிதகுல நலனுக்காக அர்ப்பணித்துள்ளனர். அவைகளில் ஒன்றுதான் மனித வாழ்விற்கு மிகவும் அவசியத் தேவையான,  நோய்களே உடலில் தோன்றாமல் என்றும்   ஆரோக்கியமாக வாழும் நெறிமுறை இரகசிய விளக்கங்கள் ஆகும்.

இவைகளை வாழ்க்கையின் நெறிமுறைகளாக போதிக்கும் ஆசான்கள் இல்லாததால் உலகெங்கும் நோய்களும் ,நோயாளர்களும் பெருகி கடுமையான துன்பங்களுக்கு ஆட்பட்டு வேதனைகளை அனுபவித்து வருகின்றனர்.நமது பண்டைய கலாச்சார நெறிமுறைகளை புறக்கணித்ததன் விளைவுதான் இது. 

நாம் காலையில் தூங்கி எழுவது முதல் மீண்டும் படுக்கையில் படுப்பது வரை நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் ஒரு வாழ்வியல் நெறிமுறை விளக்கம் உள்ளது.அவைகளை சித்தர்கள் பாடல்கள் வடிவில் அளித்துள்ளனர். அவைகளை ஆராய்ந்து பார்த்தால் அறிவியல் பூர்வமான அர்த்தங்களை கொண்டதாக இருக்கும்.இவைகளை ஒவ்வொன்றாக   அறிந்து கொள்வோம். 


காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் பார்க்க வேண்டிய விதி 

நித்திரை செய்து விழிக்கும் போது முதலில் பார்க்க வேண்டியது தனது வலது கை,தாமரைப்பூ,தங்கம்,தீபம்,கண்ணாடி,சூரியன், புகையில்லாத நெருப்பு, பணம்,கடல்,வயல்,சிவலிங்கம்,முகில் சூழ்ந்த மலை,கன்று உடன் பசு, மனைவி, தென்னைமரம்,இவை களில் ஏதாவது ஒன்றை பார்ப்பது உத்தமம். அன்று முழுதும் வாழ்க்கை சந்தோசமாகவும்,தொட்ட காரியங்கள் அனைத்தும்  வெற்றிகரமாக முடியும்.இது போல் தினமும் கடை பிடித்து வர குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும். 


பல் துலக்கும் விதி :

வேலுக்குப் பல்லிறுகும் வேம்புக்குப் பல் துலங்கும் 
பூலுக்குப் போகம் பொழியுங் காண் ஆலுக்கு 
தண்டாமரை யாளும் சார்வாளே நாயுருவி 
கண்டால் வசீகரமாங் காண் 

இதன் விபரம் :-
கருவேல மர குச்சியில் பல் துலக்கினால் பற்கள் வலுவாக இறுகும் . 
வேப்பமரத்தின் குச்சியில் பல்துலக்கினால் பற்கள் வெண்மையாய்  பளிச்சிடும்.
நீர்ப் பூலா மர குச்சியில்  பல் துலக்கினால் வீரிய விருத்தி (ஆண்மை)  ஏற்படும்.
ஆலமர விழுதில் பல் துலக்கினால் லட்சுமி கடாட்சம் ஏற்ப்படும்.
நாயுருவி வேரினால் பல் துலக்கினால் முகவசீகரம் ஏற்படும்.


பல் துலக்கக் கூடா விதி :

கல்லு மணலுங் கரியுடனே பாளைகளும் 
வல்லதொரு வைக்கோலும் வைத்து நிதம் 
பல்லதனை தேய்த்திடு வாராமாயின் சேராளே
சீதேவி வாய்த்திடுவாள் மூதேவி வந்து

இதன் விபரம் :-
செங்கல்மாவு,மணல்,கரி,தென்னம்பாளை,வைக்கோல்,இவைகளால் தினமும் பல் துலக்குவோரிடத்தில் மகாலட்சுமி நீங்கி, மூதேவி வந்து சேர்வாள். பொன், பொருள்,நீங்கி தரித்திரம் வந்து சேரும்.


பாகம் 2 -ல் தொடரும் 

நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் 
www.siddharprapanjam.org 
cell :09865430235 - 08695455549     
            



பதிவுகளின் வகைகள்